• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
60
54. கவிப்பிரியாவிற்கு பழனிவேல் போட்டு தரும் திட்டம்...

நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடுதல்...

பழனிவேல் இடம் தான் விரும்புவது கடைசியாக போகும் ருத்ரா என்று சொல்ல...

ஆனால் உனக்கும் அவனுக்கும் ஏதேனும் பிரச்சனையா என்று கேட்ட பழனிவேலிடம், நடந்த அனைத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லி முடித்தவள் எனக்கு அவன் வேண்டும் என்றும் சொன்னாள்.

சரி பாப்பா நீ சொல்வது எனக்கு புரிகிறது. அவன் மீது உனக்கு அளவு கடந்த காதல் இருக்குன்னு நீ பேசுவதில் இருந்தே தெரிகிறது. ஆனால் நான் என்ன கேட்கிறேன் என்றால் பிறகு ஏன் அவனை தேவை இல்லாமல் வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்தாய் என்று கேட்டான் பழனி... அவளின் மனதில் உள்ள எண்ணங்கள் என்ன என்று அறிவதற்காக அவன் நோட்டம் பார்க்கிறான் என்று அறியாமல்....

கவிப்பிரியாவோ அவன் எனக்கு வேண்டும். ஏனோ அவனுக்கு என்னை பார்த்து நிமிடத்தில் இருந்தே பிடிக்கவில்லை ??!??.... ஆனால் எனக்கு.. அவனைப் பார்ப்பதற்கு முன்பு அந்த காரில் யார் இருந்தாலும் அவன் எனக்கு தான் என்று நான் முடிவே செய்து இருந்தேன். என் எண்ணம் போலவே அதில் இருந்தவன் இந்த ஆணழகன் தான். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான். என்ன.. நடந்த பிரச்சினையை எனக்கு சாதகமாக்கி அதில் அவனை மாற்ற வைத்து பிறகு நான் அதில் இருந்து அவனை சால்வ் பண்ணினால்.. அவனிடம் நான் நெருங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதுவும் நல்ல விதமாக இருக்கும் என்று நினைத்து செய்தேன், ஆனால் அது அத்தனையும் தவிடு பொடியாக்கி விட்டான் அவங்க அண்ணன் சனாதன்.

மேற்கொண்டு எனக்கும் சஞ்சனாவிற்கும் இருக்கும் பகைகளும் தெரிந்து கொண்டான். இது நாள் வரை அவள் மீது நான் பகைமை பாராட்டுகிறேன் என்று அவளுக்கு கூட தெரியாது. ஆனால் அதையும் ஒரு ராத்திரி என்று கூட சொல்ல முடியாது எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து விட்டான் அவன்... என்று புலம்பி தள்ளினாள் கவிப்பிரியா.

அறுபது வயதிலும் அவளின் புலம்பல்களை ரசித்து கொண்டும், அவளின் இளமையின் குவியலை பார்க்க பார்க்க அவனுக்கு அதை அனுபவிக்க... ஆசைப்பட்டாலும் ... ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் அதை காயப்படுத்தும் எண்ணமே மேலோங்கி நிற்க..

இந்த வயதிலும் கவி பிரியாவை யாருக்கும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் மட்டும் அவனுக்கு சிறிதும் வரவில்லை... அழகியை விட இவள் மிகவும் அழகு என்பதையும் காட்டிலும், அவளை விட இவள் மிகவும் பணக்காரியும் கூட... அதனால் இவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் மனதில் வேரூன்றியது பழனியின் நெஞ்சத்தில்.

முதலில் இவளுக்கு நல்லது செய்வது போல் செய்து இவளை அந்த வீட்டில், ஒன்றாக்கி பிறகு, இருக்கும் அனைவரையும் வெறுக்க வைத்து இவளை எவ்வளவு சீக்கிரம் வாழ்க்கையை வெறுக்க வைக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நமக்கு நல்லது. இருக்கும் காலங்களில் இனி வேலை செய்து எல்லாம் சுகமாக வாழ முடியாது..

இந்த வீட்டில் இவள் அம்மாவோ இவள் அப்பாவோ கொடுக்கும் சில்லறைக்காகவும் மூன்று வேளை உணவுக்காகவும் இவர்களிடம் அடிமைப்பட்டு இருக்க கூடாது. எங்கு இருந்தாலும் நான் ராஜாவாகத் தான் இருக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டவன் கவிப்பிரியாவிற்கு சில விஷயங்களை எடுத்து கூறினான்..

அவன் சொல்லிய விஷயங்களை கேட்டவளுக்கு.. சரி என்று படவும் ஓகே அங்கிள் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்... இன்று மதியமே நீங்கள் சொன்னது போல் நான் அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு, இருவரும் அங்கு இருந்து கிளம்பினர்.

இங்கே அலுவலகத்திற்கு வந்த அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து முடிக்க மணி ஒரு மணி ஆகியது. சரி அனைவரும் லஞ்சுக்கு சென்று விட.. அவரவர் பிராஞ்சில் இருந்து அவரவர் காலையில் கிளம்பியது போலவே ஜோடியாகவே கிளம்பி வந்தனர். அதோடு கர்ணா, லீனா இருவரும் கர்ணாவின் காரிலும்,

அழகியின் பைக்கில் லிபின் மெய் இருவரும் வந்தார்கள்.

சரணும் வினையின் அண்ணன் பைக் வாங்கிக் கொண்டு தனியாக வந்து இருந்தான்.

சனாதன் அனைவருக்குமே ஹோட்டலின் லொகேஷன், புக் பண்ணி இருந்த டேபிளின் நம்பரையும் அனுப்பி வைத்து இருந்தான்.

இதில் மிதுனுக்கு மட்டும் அனைவரும் வருவது தெரியாது. தன் தம்பிகள் மட்டும் என்று நினைத்து அவன் அங்கு வந்து இருக்க... ஆனால் அங்கு வந்து இருந்தவர்களை பார்த்ததும் ஒரு நொடி எப்படி ரியாக்ட் செய்வது என்பதையும் மறந்து நின்று விட்டு.... பிறகு அனைவரும் ஹாய் மிதுன் சார் என்று அழைத்ததில் சுயம் வந்தவன்....

அனைவரையும் பார்த்து ஹாய் காய்ஸ், இங்க கூட எதுக்கு சார்?.. வேண்டாமே... என்று தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயற்சி செய்தான் மிதுன்.

அவனின் முயற்சி புரிந்து கொண்ட அனைவருமே ஓகே என்று கோரசாக கத்தினர்.

ஆனால் மிதுனா மட்டும் வேண்டும் என்றே அது எப்படி சார்.. என்ன இருந்தாலும் நீங்கள் எங்கள் அனைவரையும் விட, அதாவது எங்க செட்டு பெண்கள் மட்டும் இல்லாமல் உங்கள் தம்பிகள் உட்பட அனைவரையும் விட நீங்கள் வயதில் மூத்தவர்.. அப்படி இருக்கும் போது உங்களை போய் நாங்கள் அனைவரும் பெயர் சொல்லி அழைத்தாலோ இல்லை வேறு என்ன சொல்லி அழைப்பது... என்று யோசிப்பது போல் யோசித்து விட்டு... அது தடுமாற்றமாக இருக்கும் அல்லவா என்று பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு ஒன்றும் அறியாப்பிள்ளை போல் அவனிடம் வம்பு வளர்த்தாள்.

அவளின் முயற்சியை அங்கு இருந்த தேவ் குரூப்ஸ் பிரதர்ஸ் புரிந்து கொண்டதாலும், இவள் எப்போதும் இப்படித்தான் விளையாட்டாக பேசுவாள் என்று தெரிந்தாலும் மிதுனா சட்டென்று யாரிடமும் இது போல் ஒட்டிக் கொள்ள மாட்டாள், அதோடு கம்பெனியின் முதலாளி இவர்... என்ன தான் இது ஒரு பிரண்ட்ஸ் மீட்டாக இருந்தாலும், இப்படி இவள் பேசுவாளா என்று கொஞ்சம் சந்தேகமாகவே பார்த்தனர் லீனாவும், சரணும்... ஆனால் சஞ்சனா, புவனா இருவருமே எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு,

சரி ஏதோ ஒன்று இருக்கு போல் என்று நினைத்துக் கொண்டு அவர்களும் அமைதியாக மிதுன் என்ன சொல்வான் என்றே காத்து இருந்தனர்.

மிதுன் தம்பிகள் மட்டும் இல்லாமல் இங்கு இருந்த மற்றவர்களையும் பார்த்து முதலில் கடுப்பு தான் வந்தது. இருந்தாலும் தனக்காக தான் இவர்கள் இது போல் அனைவரையும் அழைத்து வந்து இருப்பார்கள் என்று தன் மனதை தேற்றிக்கொண்டவன், சரி இவர்களோடு ஜாலியாக இருக்க முயற்சி செய்வோம் என்று நினைக்கும் பொழுது.... மிதுனாவின் கேள்வியால் மிதுனின் பொறுமை என்னும் பெரிய பாறாங்கல்லை தன் கேள்விக்கணைகளால் வெடிகுண்டு இல்லாமல், ட்ரில் மிஷின் இல்லாமல் உடைத்துக் கொண்டு இருந்தாள்.

சரி இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கவில்லை வந்தவுடனே எதற்கு... சரி கோபப்படக்கூடாது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், எனக்கு ஒன்றும் தடி ஊன்றி கொண்டு போகும் அளவுக்கு வயசாகவில்லை... ஜஸ்ட் 29 வயது தான் ஆகிறது. அதனால் உங்கள் விருப்பப்படி அனைவரும் என்னை பெயர் சொல்லிக் கூட அழைத்தாலும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை... எந்த கோபமும் இல்லை என்று பல்லை கடித்துக் கொண்டு, ஆனால் வெளியே சிரித்த முகமாக சொன்னான் மிதுன்.

மற்றவர்களுக்கு அவனின் நிலைமை நன்றாக புரிந்தது நேற்று வந்த சரண், லீனா இருவருக்கும் கூட அவனுடைய நிலைமை புரிந்தது.

இப்போது அழகி அங்கு இருந்த சஞ்சனாவை பார்த்து... ஹாய் சஞ்சு நீங்க தான், தனா மாமா பிராஞ்சில் ஒர்க் பண்றீங்க என்று கேட்டாள்.

ஆமாம் உங்கள் பெயர் என்ன எனக்கு உங்களை பற்றி தெரியவில்லை. ப்ளீஸ் சாரி தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கேட்டாள் சஞ்சனா.

இதற்கு நீங்கள் என்னிடம் சாரி சொல்லக்கூடாது... உங்கள் அருகில் உட்கார்ந்து இருக்கும் தனா மாமா தான் சாரி சொல்ல வேண்டும். வந்ததும் உங்கள் அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தி இருக்க வேண்டாம் என்று இயல்பாக சொன்னவளை பார்த்து...

அழகி அது என்ன தனா மாமா சொல்கிறாய் அப்போ இவர்கள் எல்லாரும் உனக்கு மாமாவா என்று கேட்டாள் புவனா. அதாவது நான் தப்பாக நினைக்கவில்லை ரிலேஷனா நீங்கள் அனைவரும் என்று கேட்க வந்தேன் என்று கேட்டாள் புவனா.

ஆமாம் புவனா என்னுடைய பெரியம்மா இவர்களுடைய அத்தை... என்றும் நாங்கள் அனைவரும் ஒரே ஊர்காரர்கள் என்றும் சொன்னாள் அழகி.

உன் தனா மாமா சொல்லக்கூடாது அப்படின்னு எங்க கிட்ட உன்னை பத்தி சொல்லாமல் இல்லை. என்ன விஷயம் அப்படின்னா நானும் உன் தனா மாமாவுமே இந்த இரண்டு நாட்களாக தான் பழம் இட்டுக் கொண்டோம். அதுவரைக்கும் நாங்கள் இருவருமே காய் விட்டு சின்ன பிள்ளைகள் போல் சண்டைக்காரர்களாகத்தான் இருந்தோம்.

இதற்கு நடுவில் உன்னை பற்றி என்னிடம் சொல்வதற்கு நேரம் எங்கே?.. அது தான் உன்னை பற்றி எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் உனக்கு எங்கள் அனைவரையும் தெரிந்து இருக்கிறது. அது எப்படி என்று கேட்டாள் மிதுனா... கேட்டுக்கொண்டே ஆமாம் உனக்கு சஞ்சனா மட்டும் தான் தெரியுமா? எங்களையும் கூட உனக்கு தெரியுமா என்று கேட்டாள் சந்தேகமாகவே மிதுனா.

ஐயோ மிதுனா நீ ரொம்ப கேள்வி கேக்குற.. எப்படா காலேஜ் முடிப்போம் இந்த கொஸ்டின் ஆன்சர் ரிசல்ட் என்ற வார்த்தைகளை கேட்கக்கூடாது எப்போது டா ரிலீஸ் கிடைக்கும்னு வெளியில் வந்த பொண்ணு என்று அழகி சொல்லியதுவும்...

என்னது நீ படிப்புக்கு பயந்தவளா?.. பொய் ... பொய்... சொல்றா மிதுனா. இது சரியான புத்தக புளு... கோல்ட் மெடல் லிஸ்ட் என்று லிபின் அவளைப் பற்றி பெருமையாக சொன்னான்.

நிஜமாகவா... அப்ப அழகி என்ன தன்னடக்கமா... ஆ...‌ என்று கேட்டாள் புவனா.

அச்சச்சோ அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அழகி.

சரி அனைவரும் பேசிக்கொண்டே இருந்தால் நேரம் ஆகிவிடும்... கொஞ்சம் இருங்க நானே அனைவருக்கும் எல்லோரையும் இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி விட்டு சஞ்சனா எழுந்து நின்று..

இவர்தான் எங்கள் புது எம்டி மிதுன் தேவ் சார், இவருக்கு அடுத்து இதோ தானா சார் ..‌சனாதன் தேவ் என்று அறிமுகப்படுத்தினாள். அடுத்து நம்ம ருத்ரா சார் ருத்ரதேவ். அடுத்து கர்ணா லிபின் ... இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள்... அப்புறம் உங்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரையும் தெரியும் இருந்தாலும் தெரியாதவர்கள் இருவர் தான் இதோ இவர்கள் இருவரும் எங்களுடைய அண்ணன், அக்கா இவர் பெயர் சரண். இவங்க பெயர் லீனா. ஓகே இந்த நிமிடத்தில் இருந்து அனைவரும் பிரெண்ட்ஸ். அவங்க அவங்களுக்கு எப்படி எப்படி யாரை கூப்பிடனும் தோணுதோ... அப்படி கூப்பிடுங்க. இது ஒரு பெரிய விஷயமா ஆர்கியூமென்ட் பண்ண வேண்டாம். ஓகே இப்ப என்னோட குட்டி வயிறு பசிக்குது ஃபுட் ஆர்டர் பண்ணலாமா என்று கேட்டாள் சஞ்சனா.

சரியாக அப்போது பேரர்ஸ் அங்கு வந்து அருமையான அசைவ உணவுகளை கொண்டு வந்து பரிமாறினர்...

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நேரம்... மிதுன் போனில் அழைப்பு வர அதை ஏற்றவன்...

என்ன அப்படியா ஓகே இதோ வந்து விடுகிறோம் என்று சொல்லி விட்டு....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top