• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
60
53. மிதுன் மனநிலையை கண்டுபிடிக்கும் மிதுனா....

பழனிவேலின் திட்டம் யார் வீழ்வார்கள்???...

சஞ்சனா, மிதுனா, புவனா, ரிஷ்வந்த் நால்வர் கூட்டணியில் முதலில் சனாதன் இணைய ... இப்பொழுது ருத்ராவும் இணைந்து ஆறு பேரும் ஆக சந்தோஷத்தோடு தங்களது பிரண்ட்ஷிப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிறிது நேரம் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்து விட்டு, சரி நேரமாயிடுச்சு நாம் அனைவருமே இப்படி உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தோம் என்றால் ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ண முடியாது. ஓகே இனி ப்ராஜெக்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் இது போல அவுட்டிங் வந்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு, சனாதன் சஞ்சனாவை பார்க்க...

ஆமாம் எல்லோரும் இப்போதைக்கு கிளம்புவோம்... ப்ராஜெக்ட் சக்சஸ் ஃபுல்லா எல்லாம் முடிச்சதுக்கு பிறகு கண்டிப்பா நம்ம எல்லாரும் எங்கேயாவது வெக்கேஷன் போகணும் என்று சொன்னாள் சஞ்சனா.

ஏய்... சஞ்சு உனக்கு என்ன டி... உன் பிரான்ச் ஹெட் தனா சார் உனக்கு இப்ப பிரின்ட் ஆயிட்டாரு... சோ உனக்கு லீவு கிடைக்கும்... எங்களோட ஹெட் மிதுன் சார் பாத்திருக்கியா... ???... நம்ம விநாயகம் அங்கிள் பார்த்து இருக்கியா? எவ்ளோ பெரிய மனிதர்... அவர் இந்த பிசினஸ் வெல்டில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் பார்த்திருப்பார் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்து இருப்பார் ஆனால் அவர் முகத்தில் என்றாவது சிரிப்பு இல்லாமல் இருந்திருக்குமா?.. ஆனால் இந்த சிடு மூஞ்சி சித்தப்பாவை பார்த்து இருக்கியா???..

நீ வேணா இதோ அவருடைய உடன்பிறப்புகள் ரெண்டு பேர் இருக்காங்க தானே அவங்கள whatsapp கால் போட்டு வீடியோ கால்ல கூப்பிட சொல்லேன் போன் எடுக்கும் போதே அவர் முகத்தை பாரேன்... அப்படி ஒரு பிரெஷா இருக்கும் அதை பார்த்த உடனே நமக்கு அப்படியே எனர்ஜி பொங்குற மாதிரி இருக்கும் என்று கலாய்க்க...

ஏய் வாயாடி உனக்காகவே நான் இப்ப என் அண்ணனுக்கு போன் பண்றேன்.. அவன் எவ்வளவு எனர்ஜிடிக்கா வேலை பார்த்துட்டு இருக்கான்... எந்த டென்ஷனும் இல்லாமல் எவ்ளோ கூலா இருக்கான்னு, உனக்கு காட்டுறேன் என்று சொல்லிக் கொண்டே ருத்ரா வீடியோ காலில் தன் அண்ணன் மிதுனுக்கு கூப்பிட...

முதல் ரிங் முழுவதும் போய் கட்டாகியது.
ஐயோ இவன் வேறு ஃபோன் எடுக்காமல் மனத்தை வாங்குகிறானே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே திரும்பவும் போன் செய்ய, இந்தமுறை அட்டென்ட் செய்தவன் என்ன ருத்ரா இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கிறாய் என்று கேட்டான். அப்பவும் வீடியோ கால் என்பது மூளைக்கு தெரிந்தாலும்... மனதில் வேலையை நினைத்து கொண்டு தன் கணினியில் வேலை பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் எப்போதும் மூத்த மகன் என்பதாலோ இல்லை அவன் குணம் அமைதி என்று இவ்வளவு நாட்கள் நினைத்து கொண்டு இருந்த தனா, ருத்ரா இருவருமே முதல் முறையாக... அவனை கவனித்து பார்த்தனர்.

உண்மையில் இப்போது மிதுனின் முகத்தில் இருக்கும் அமைதி.... அமைதி இல்லாமல் ஏதோ ஒரு இறுக்கத்தோடு இருப்பது போல் உணர்ந்தார்கள். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.. மிதுன் இன்னைக்கு லஞ்ச் வீட்டுக்கு போகாம வெளியில எங்கேயாவது போகலாமா என்று கேட்டான் சனாதன்.

ஏன் யாருக்கும் எதுவும் உடம்பு சரியில்லையா சரோஜா அத்தைக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையா?.. மெய் இன்னும் அலுவலகத்திற்கு போகவில்லையா??.. உடல்நிலை அவளுக்கும் இன்னும் சரியில்லையா என்று படபடப்போடு கேட்டான் மிதுன்.

ஏய் மிதுன் என்ன ஆச்சு எதுக்கு இவ்வளவு படபடப்பு.. நான் சும்மா ஜாலியா வெளியில போயிட்டு வரலாம், அதுவும் இங்கு வந்ததில் இருந்து அபிஷியலாவே இருக்கோம் அதனால கேட்டேன்... என்று சனாதன் கேட்டான்.

ஓஓஓ.... ஆமாம் டா, ஏனோ இங்கு நாம் வந்ததில் இருந்து என் மனது ஒரு நிலையில் இல்லை. எங்கே இந்த மனநிலையோடு அம்மாவிடம் பேசினால் அம்மா கண்டுபிடித்து வருத்தப்படுவார்கள் என்று அம்மாவிற்கு இதுவரை நான் அழைத்து பேசவே இல்லை. அதனால் கூடவே கொஞ்சம் டிஸ்டபன்ஸா தான் டா இருக்கு. ஓகே எல்லார்கிட்டயும் சொல்லிடுறியா, கர்ணா , லிபின், மெய்யழகி அனைவரையும் வர சொல்லு டா. எல்லோரும் சேர்ந்து இன்று லஞ்சுக்கு வெளியே போகலாம் என்று சொன்னான்.

ஓகே உனக்கு இன்னைக்கு லஞ்ச் டைம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... ஷார்ப்பா 2 ஓ கிளாக் நான் உனக்கு லொகேஷன் அனுப்புறேன் நீ கிளம்பி வந்துடு என்று சொன்னான் சனாதன்.

மிதுனோ சரி ருத்ரா என்று சொல்லவும்... ஒரு நொடி இங்கு அனைவரும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் அதை கூட அவன் உணராமல் மிதுன் போனை கட் செய்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

போன் வந்தது ருத்ராவின் நம்பர் அது ஒரு விஷயம் மட்டும் தான் அவர் மனதில் பதிந்திருக்கிறது தவிர... தான் யாரிடம் பேசுகிறோம் என்று கூட உணரும் மனநிலையில் அவர் இல்லை.. இப்போது புரிகிறதா அவர் மனதில் ஏதோ ஒரு பிராப்ளம் இருக்கிறது என்று மிதுனா சொன்னாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ருத்ராவும் தனாவம் ஒரு சேர சொன்னார்கள் அதற்கு காரணம்.... தேவி எங்க சித்தப்பாவின் பெண் அவள் இப்போது உலகத்திலேயே இல்லை.

அவளின் இறப்பில் இருந்து அவனை வெளிக்கொண்டு வருவதற்காக தான்.. நாங்கள் இப்பொழுது இவ்வளவு அவசரமாக இந்தியாவிற்கே வந்தோம்.

தேவியும் ருத்ரவும் ஒரே செட்... அவள் என்றால் மிதுனுக்கு மிகவும் பிரியம்... என்று சொல்லிக் கொண்டே வந்த சனாதன் அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாற...

ஹேய் சில்... பா.... இன்னைக்கு தான் நம் அனைவரும் பிரண்ட்ஸா ஒன்று சேர்ந்து இருக்கிறோம். ப்ளீஸ் நோ மோர் செண்டிமெண்ட்ஸ்.. மிதுன்சாரை கண்டிப்பா உங்களைப் போல் நம் கேங்கில் சேர்த்து அவரையும் இயல்பாக மாற்றி விடலாம்... ஓகே வா. அதற்கு முதலில் இந்த சோக சீன்களை எல்லாம் ஒதுக்கி வையுங்கள்.

ஆனால் அதற்கு நீங்கள் இருவரும் எனக்கு ஒரு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள் மிதுனா தனாவையும் ருத்ராவையும் பார்த்து...

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு என்ன சொல் என்று கேட்டார்கள்.

அது வா உங்கள் இருவரிடமும் எப்படி நான் பிரண்ட்ஸாக பேசிக்கொண்டு இயல்பாக இருக்கிறேனோ.... அப்படித் தான் அவரிடமும் இருப்பேன். கொஞ்சம் அவரை சீண்டி விடவும் செய்வேன். அதற்காக அப்போது என்னிடம் போர் கொடி தூக்கிட்டு வரக்கூடாது.

அது மட்டும் இல்லாமல் அந்த சமயம் எனக்கு ஆதரவாக தான் நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் சொன்னாள்.

சனாதன் அவளின் முயற்சியை புரிந்து கொண்டு மௌனமாக சிரிக்க..

போச்சு உனக்கு ஒரு புது அடிமை சிக்கிக்கிட்டானா??.. பாவம் மிதுன் ப்ரோ... அம்மாடி எங்க தேவ் வம்சத்தின் முதல் மகன்... எதற்காகவும் கலங்காதவன், தற்போது காலக்கிரகம் சரியில்லாமல்... உனக்கு எல்லாம் அடிமையாக போகிறான்... பாவம் பிள்ளையை கொஞ்சம் பார்த்து செய் என்று சொன்னான் ருத்ரா.

அப்படியே ஆகட்டும் மகனே... விதி வலியது ஒன்னும் பண்ண முடியாது... சரி ஓகே எங்கே அனைவரும் ஒன்றாக என்னோட செல் ஃபிரேம்குள் வாருங்கள் என்று அனைவரையும் இணைத்து செல்பி எடுத்தாள்.

அதே நேரம் தங்களின் அனைவரின் வாழ்க்கையிலும் பூகம்பங்களை வெடிக்க வைப்பதற்கு, இரண்டு ஜீவன்கள் வெவ்வேறு விதமாக பல திட்டங்களை திட்டிக் கொண்டு இருக்கிறது தெரியாமல், அவர்களுக்கான அந்த அழகான நிமிடத்தை ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டு... சந்தோஷமாக ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு, அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

வரும் பொழுது ருத்ரன் பைக் ஓட்ட, புவனா பின் அமர்ந்து வந்தாள். ஆனால் இப்பொழுது புவனா ஹே ருது நான் ஓட்டுகிறேன் என்று கேட்க...

ருத்ராவும் ஓகே மச்சி என்று சாவியை அவளிடம் தூக்கி போட்டான்.

இவ்வளவு நேரமும் அவர்கள் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள் என்று மட்டும் தான் தெரிந்தது. ஆனால் இப்பொழுது அவர்கள் கிளம்பும் போது, மற்றவர்கள் அனைவரும் முன்னாடியே சென்று விட, இவர்கள் இருவரும் பின்னே செல்லும் பொழுது... இவர்களுக்கு பின் மறைந்து வந்து பார்த்த கவிப்பிரியா இவர்களது நெருக்கமான பேச்சிலும் செயலிலும் வெந்து தணிந்தவள்...

புவனா வண்டியை ஓட்ட பின்னே அமர்ந்து ருத்ரா அவளின் தோளில் கை போட்டு ஓகே மச்சி ரெடி ஜூட் என்று சொல்ல...

வண்டி சீறி பாய்ந்தது....

கவி பிரியாவின் நிலையோ????¿¿¿¿????...

அவளின் நிலையைப் பார்த்த பழனிவேல்.... ஆக அங்கு இருந்த மூன்று பேரில் இவன் தான் உன் மனதிற்கு பிடித்தவனா?.. விட்டால் பார்வையாலேயே இருவரையும் எரித்து விடுவாள் போலவே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்...

மனதிற்குள் அவளின் அங்கங்களை பார்வையால் தவறாக நினைத்துக் கொண்டு, வெளியில் பாப்பா என்ன ரொம்ப நேரமாக இந்த காபி ஷாப்லையே இருக்கிறாய்.. நானும் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன் அங்கு இருந்த சிலரை பார்த்துக் கொண்டே இருந்தாய். உன்னுடைய தோழர்களா?.. தோழர்களாக இருந்தால் அவர்களிடம் சென்று பேசி இருக்கலாமே... என்று அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டே இருக்கும் என்று அவளின் முக பாவனையிலேயே தெரிந்து இருந்தாலும், அவள் வாயாலே கேட்பதற்காக அவளிடம் போட்டு வாங்கினான் பழனி என்கிற பழனி வேல்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள்.. பிறகு ஆமாம் மாமா அதோ இப்போது அங்கே பேசிக்கொண்டு இருந்தார்களே சிலர் ..
அதில் இப்போது கடைசியாக சென்றார்கள் பார்த்தீர்களா இருவர் அதில் இருந்த அந்த பையனை தான் நான் விரும்புகிறேன் என்று சொன்னாள் கவிப்பிரியா.

சரி பாப்பா ஆனால் அந்த பையனுக்கு உன்னை தெரியுமா?.. நீ அவனை விரும்புகிறேன் என்று அவனிடம் சொல்லி விட்டாயா என்று கேட்டான் பழனி.

என்னை அவனுக்கு நன்றாக தெரியும் ஆனால்??? என்று அவள் சொல்லாமல் தயங்கவும்..

என்ன ஆச்சு பாப்பா உனக்கும் அந்த பையனுக்கும் எதுவும் சண்டையா என்று கேட்டான் பழனி.

சண்டை என்று கிடையாது ஆனால் அவனை நான் பார்த்து நொடியில் இருந்து வெறுப்பேற்றிக் கொண்டே தான் இருந்திருக்கிறேன்.‌

அது மட்டும் இல்லாமல் என்னால் அவன் ஸ்டேஷன் வரைக்கும் வந்து சில பல பிரச்சனைகள் ஆகிவிட்டது என்று, ஆரம்ப முதல் கடைசி வரை சொல்லி முடித்தால் கவிப்பிரியா.

அவள் சொல்வதை பொறுமையாக கேட்ட பழனி ஆஹா அப்போ இவன்கள் அனைவரும் கொஞ்சம் வில்லங்கமான பேர்வழிகளோ... அதுவும் இந்த காலத்து பசங்களாக இருக்கிறார்கள்... வெளிநாட்டில் வேறு படித்து வந்து இருக்கிறார்கள்..

நல்ல வேளை மிக கவனமாக இவர்களை கையாள வேண்டும்... என்று மனதில் குறித்துக் கொண்டு..,

கண்ணு நான் ஒரு ஐடியா
சொல்வேன் கேட்கிறாயா?...
திட்டங்கள் போடப்பட்டது...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top