- Thread Author
- #1
52. புவனா ரிஷ்வந்த் ஊடலும்...
சஞ்சனா கூட்டத்தில் இணையும் ருத்ரா....
ருத்ர அலுவலகத்தில்...
புவனா தன் டீம் ஆட்களோடு வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அந்த சமயம் ரிஷ்வந்திடமிருந்து ஃபோன் வந்தது.
அட்டென்ட் பண்ணியவள் என்ன டா இப்ப தான் காலையில் வீட்டில் பார்த்து விட்டு தானே வந்தோம். ஆபீஸ்க்குள் வந்து நுழைந்து அரை மணி நேரத்தில் மறுபடியும் கூப்பிடுகிறாய் என்ன விஷயம் என்று கேட்டாள் புவனா.
புவி... அது வந்து... உஉஉஉஉ... என்று இழுத்துக் கொண்டே இருந்தவனிடம் பேச பொறுமை இல்லாமல்...
நீ பொறுமையா வந்துட்டு சொல்ல வந்தது சொல்லு இப்ப நான் போன கட் பண்ணிட்டு என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டாள் புவனா.
ச்சே... மனுஷன் எவ்வளவு பீலிங்கா கூப்பிடுறேன் என்ன ஏதுன்னு கேக்குறாளா பாரு... என்று திட்டிக் கொண்டே முனங்கிக் கொண்டு இருந்தான் ரிஷி.
அப்போது அங்கு வந்த மிதுனா... என்ன டா காலையில் வேலை பார்க்காமல் இங்கு நின்று கொண்டு தனியா என்ன கனவு கண்டுக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டாள்.
ஆமா டூயட் பாடுவதற்கு ஆள் இல்லை.. கொஞ்சம் நீ வரியா சேர்ந்து டான்ஸ் ஆடுவோம் என்று கூப்பிட்டான்.
ஓஹோ தாராளமாக வருகிறேன்... ஆனால் இங்கே இருக்கிறவரும் அங்க இருக்கிறவளும் நம்ம ரெண்டு பேரையும் கிழி... கிழின்னு... கிழிச்சுடுவாங்க உனக்கு ஓகே வா என்று கேட்டாள் மிதுனா.
ஏய் நீ என்ன டி புது ட்ரக் ஓட்ற.... உனக்கு ஆள் இருக்கா ??.. அதுவும் இந்த ஆபீஸ்.... யாரடி அந்த துரதிஷ்டசாலி என்று கேட்டான் ரிஷி...
ஓஹோ எனக்கு வாய்க்கும் அடிமைக்கு பெயர் துரதிர்ஷ்டசாலியா?... இந்த சந்தேகத்தை இப்பவே தீர்த்து வைத்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய கேபினுக்கு சென்று தன்னுடைய போனை எடுத்து வந்தவள்....
போனை ஆன் செய்து டயல் செய்ய போகும் போது... அப்போது அங்கு வந்த மிதுன் ...
ஓஹோ இந்த ஆபீஸில் இந்த வேலை தான் நடந்து கொண்டு இருக்கிறதா?... மற்ற பிரான்ச் எல்லாரும் அவர்கள் வேலையை சிறப்பாக செய்கிறார்கள். மெயின் ப்ரான்சாக இருந்து கொண்டு இங்கு தான் ... அதுவும் எனக்கு வந்து வாய்த்ததெல்லாம் சரியான வேஸ்ட் பீஸ் ஆக இருக்கிறது என்று திட்டிக் கொண்டு இருந்தான்.
திட்டிக்கொண்டு இருந்த மிதுனை ஒரு நொடி பார்த்து விட்டு ரிஷ்வந்தை ஒரு முறை முறைத்தவள்... வெளில வாடா உனக்கு இருக்கு என்று மெதுவாக ஆனால் மிதுனுக்கும் கேட்பது போலவே சொல்லி விட்டு, அவன் திட்டிக் கொண்டு இருந்ததையோ, அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றோ... எந்த சிந்தனையும் இல்லாமல், சரி தான் போடா என்பது போல் இரு ஆண்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டாள் மிதுனா.
ரிஷ்வந்த் தான் பாவமாக நின்று கொண்டு இருந்தான். மிதுனாவின் அலட்சியமும் ரிஷ்வந்தின் பாவமான தோற்றத்தையும் கண்டு கடுப்பாகிய மிதுன்...
அவன் நிற்பதை பார்த்து விட்டு.... ஏன் சாருக்கு போய் வேலையை பாருங்க என்று வெற்றிலை பாக்கு வைத்து சொல்ல வேண்டுமா இல்லை பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமா என்று கேட்டான் மிதுன்.
ரிஷ்வந்தும் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று தன் வேலையை பார்க்கப் போனான்.
அங்கு ருத்ரா ஆபீஸில் புவனா சின்சியராக வேலை செய்து கொண்டு இருந்தாள். ஆனால் அவளின் மனம் முழுவதும் எதற்காக அவன் போன் செய்தான் என்ற சிந்தனையிலேயே இருக்க... அவள் வரைந்த ஓவியங்களில் முழுவதிலும் ரிஷி என்று எழுதி இருந்தாள்...
ருத்ரா டிசைன் கேட்கவும்... அவசரத்தில் அதை கவனிக்காமல் அப்படியே எடுத்துக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து விட்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் புவனா.
ருத்ரா டிசைனிங் பார்த்து விட்டு, அழகாக இருக்கிறது மிஸ் புவனா ஆனால் இந்த டிசைனில் இருக்கும் பெயர் மட்டும் தான் இந்த டிசைனுக்கு ஷுட் ஆகும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டான்.
இதுவரை ரிஷ்வந்தின் நினைப்பில் இருந்தவள்... சார் என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியவில்லை என்று கேட்டாள் ... என்ன பெயர்??.. என்ன டிசைனிங் என்று கேட்டாள் புவனா.
நீ வேண்டும் என்றால் மெயின் பிரான்ஸ்க்கு போகிறாயா? இங்கே உனக்கு வேலை பார்ப்பது ரொம்ப டிஸ்டப்பன்ஸா இருக்கா என்று கேட்டான் ருத்ரன்.
அப்படி எல்லாம் ஒன்றுமில்லையே சார், ஏன் சார் இன்று இப்படி கேட்கிறீர்கள்?.. அது மட்டும் இல்லாமல் நீங்கள் ஏன் புரியாத மாதிரியே பேசுகிறீர்கள்????! எனக்கு ஒன்னும் புரியல என்று கேட்டாள் புவனா.
நீ இப்ப கடைசியா கொண்டு வந்து கொடுத்தியே டிசைன்... இதை நீயே பாரு... நான் கேட்கும் கேள்விகளுக்கு உனக்கே பதில் தெரியும் என்று அவள் வரைந்த ஓவியத்தை அவளிடமே கொடுத்தான் ருத்ரா.
அது வாங்கி பார்க்கும் போது தான் தெரிந்தது... ரிஷி ரிஷி என்று எழுதி வைத்து இருந்தது...
முதல் முறையாக புவனா ஐயோ என்று வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றாள்...
அவளின் அவஸ்தையை பார்த்து ருத்ரா... ஹே.. சில்... ரிலாக்ஸ் ப்ளீஸ்...
என்ன ஆச்சு நான் உன்னை பார்த்த வரை, இது போல் இதுவரை நடந்து கொண்டதே இல்லை. என்னை ஒரு நண்பனாக நினைத்தால் என்னிடம் பகிர்ந்து கொள் என்று சொன்னான் ருத்ரா.
ருத்ரா இயல்பாக பேச ஆரம்பித்தவுடன், தன்னை சமன் செய்து கொண்ட புவனா... அது ஒன்னும் இல்ல சார் என்று பேச்சை ஆரம்பித்தவளிடம்...
ஒரு நிமிஷம் புவனா நான் இங்கு வந்ததிலிருந்து என்னுடைய பிரண்ட்ஸ் அனைவரையும் மிகவும் மிஸ் பண்றேன், ப்ரோ எல்லாம் பிரெண்ட்ஸ் மாதிரி தான் பழகிக்குவோம் இருந்தாலும் வெளியில் யாரையும் எனக்கு தெரியாது... ஸோ ஃப்ரெண்ட்ஸ் என்று கை நீட்டினான் ருத்ரா.
புவனா ஒரு நிமிடம் அவன் நீட்டிய கையை பார்த்து விட்டு, அதில் கைகளை கோர்க்காமல் அவன் கையில் ஒரு பட்டென்று அடி வைத்து விட்டு... ருது வெளியில் போய் பேசலாமா என்று கேட்டாள்.
சட்டென்று மாறிய அவள் இயல்பில், ஒரு நிமிடம் தடுமாறினாலும்... சுதாரித்து சிரித்தவன், பாவம் மச்சி ரிஷி என்று சொல்லி கொண்டே, சரி நீ போய் உன் டீம் மெம்பர்ஸ் கிட்ட வேலையை சொல்லி விட்டு வா என்று சொல்லி விட்டு தன் கார் எடுப்பதற்காக பார்க்கிங் சென்றான்.
புவனாவும் சென்று வேலைகளை பிரித்துக் கொடுத்து விட்டு, கீழே வந்தவள் ருது ப்ளீஸ் என்னோட பைக்ல வரியா என்று கேட்டாள்.
ம்ம்.. ஓகே வா என்று சொல்ல... பைக் சாவியை அவனிடம் தூக்கி போட்டாள் புவனா.
இருவரும் இணைந்து ஒரே பைக்கில் வெளியே சென்றார்கள்.
ஓகே, எங்க மச்சி போகலாம் என்று கேட்டான் ருத்ரன்.
ருது, ரொம்ப தூரம் வேணா பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு அங்க போயிட்டு.. ஒரு கோல்ட் காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து, ரிஷ்வந்துக்கு அனுப்பி விட்டுட்டு அப்புறம் ஆபீஸ் போகலாம் என்று சொன்னாள். சொன்னதோடு அல்லாமல் பக்கத்தில் இருந்த காபி ஷாப் வந்ததும் வண்டியை நிறுத்த சொன்னாள்..
வண்டியை நிறுத்திய ருத்ரா, அடிப்பாவி நான் கூட எனக்கு தான் முதன் முதலில் பிரண்ட்ஸானதுக்கு ட்ரீட் கொடுக்கிற அப்படின்னு நினைச்சா, கடைசியில் ரிஷ்வந்தை வம்பு இழுக்கறதுக்காக என்னை யூஸ் பண்ணிக்கிறியா???..!!! உன்னை என்று அவள் தலையில் செல்லமாக கொட்டினான் ருத்ரா.
ஐயோ ருது.. இது நம்ம பிரண்ட்ஷிப்காக நான் கொடுக்கும் ட்ரீட் தான். பட் காலையில் அவன் ஏதோ என்கிட்ட பீலிங்கா பேச வந்தானா... நான் தான் வேலையின் மும்மரத்தில் அவனிடம் சரியாக பேசாமல் வைத்து விட்டேன் என்று சொல்லி கொண்டே போனவளின் பேச்சை இடையில் நிப்பாட்டிய ருத்ரா....
அடிப்பாவி நீ சொல்றத பார்த்தா அவனை தான், இப்ப நீ காபி ஷாப் கூட்டிட்டு வந்து சமாதானம் படுத்தனும். அதை விட்டுட்டு அவனை வெறுப்பேத்துற மாதிரி இப்ப என்னோட இங்க வந்து காபி குடிச்சிட்டு... செல்பி எடுத்து போஸ்ட் பண்ண போறேன்னு வேற சொல்ற என்று சொல்லிக் கொண்டே இருக்க அங்கு வந்த பேரரிடம் இருவரும் தங்களுக்கு விருப்பமான பானத்தை சொல்லி விட்டு.. காத்திருக்க...
அங்கு சனாதன், சஞ்சனா... மிதுனா, ரிஷ்வந்த், நால்வருமே வந்தனர்.
அப்போது அந்த இடத்தில் சனாதனையை எதிர்பார்க்காத ருத்ரா..
ஹே தனா நீ எங்கே எங்கே என்று கேட்டான்.
டேய் எங்கள் அனைவரையும் வர சொன்னது உன்னுடைய புது தோழி புவனா தான் என்று சொல்லிக்கொண்டே, நால்வரும் வந்து அமர...
அனைவருக்குமே பேரரும் வந்து விருப்பமான பானங்களை கேட்டு வந்து கொடுத்து விட்டு போனார்.
தனா உன்னிடம் இந்த மாற்றத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று ருத்ரன் சொல்லவும்...
ஏன் சார் எங்க எல்லாரையும் பார்த்தால் அவ்வளவு பயமாகவா இருக்கிறது என்று கேட்டாள் சஞ்சனா.
சத்தியமா உங்கள் மூன்று பேரையும் தனித்தனியாக பார்க்கும் போது பயமே இல்லை. ஆனால் நீங்கள் மூன்று பேரும் ஒரே இடத்தில் இருக்கும் போது பார்த்தால் ... எனக்கு கொஞ்சம் லைட்டா பயமா தான் இருக்கு என்று ருத்ரன் சொல்லவும், அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது.
இவர்கள் அனைவரும் ஒன்றாக பேசி சிரித்துக் கொண்டு இருக்க... அவர்களின் அடுத்தடுத்த டேபிள்களில் அதுவும் தூண்களுக்கு அந்தப் பக்கமாக அமர்ந்து இருந்ததால்.. அங்கு அமர்ந்து இருந்த கவிப்பிரியாவும், பழனிவேலும் இங்கு இருப்பவர்களுக்கு தெரியாமல் போயிற்று.
பழனிவேலை அங்கு இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது ஆனால் கவி பிரியாவை... ரிஷ்வந்த் தவிர அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக தெரியும்.. அதனாலேயே என்னவோ அவள் தன்னை மறைத்து அமர்ந்து கொண்டாள்.
ஆனாலும் அங்கு இருந்தவர்களின் பேச்சும்.. சிரிப்பும் .. கும்மாளமும் அவளுக்கு எண்ணெய் இல்லாமல், பெட்ரோல் இல்லாமல்... அதுவும் ருத்ரா, புவனா அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கமான சிரிப்பும் சிநேகமும் அவளுக்குள் ஏதேதோ செய்ய... உடல் முழுவதும் செந்தனலாக எறிவது போல் இருந்தது.
அதற்கு ஏற்றார் போல்... மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் என்று ஜோடி போட்டு அமர்ந்து இருக்க... கோபத்தில் அவளுக்கு கண்கள் கூட கலங்கியது.. ஆனால் கலங்கும் கண்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் வெறுப்போடு அங்கு இருப்பவர்கள் அனைவரையுமே பார்க்க...
பழனிவேல் அவளை முதலில் அசிங்கமாக பார்த்துக் கொண்டு இருந்தாலும், அங்கு இவர்கள் வந்து அமர்ந்ததில் இருந்து கவிப்பிரியாவின் முகத்தில் தோன்றிய அனைத்து மாறுதல்களையும் பார்த்துக் கொண்டே இருந்தவன்... அவனுக்குள் பல திட்டங்களை தீட்டி இருந்தான்.
கவி பிரியாவும் தன் அருகில் உட்கார்ந்து தன்னை வைத்தே பல திட்டங்களை போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று உணராமல், அவளோ அவள் மனக்கணக்கில் சில திட்டங்களை போட்டுக்கொண்டு இருந்தாள்.
இவர்களின் சதி வேலைகளை அறியாத நண்பர்கள் குழு.. ..
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...