• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
57
51. பழனிவேல் வருகையால் பிரச்சினையில் சிக்க போகும் நபர்கள் யார் யார்?...

மெய் பூஜை அறையில் சுவாமி படம் விழுந்து உடைந்ததில் அழுக ஆரம்பித்தவள் அழுகையை நிப்பாட்டாமல் அழுது கொண்டே இருக்க எங்கே அவளை விட்டு போன காய்ச்சல், மறுபடியும் வந்து விடுமோ என்ற பயத்தில் அவளிடம் வம்பு வளர்த்து... அவளின் கவனத்தை திசை திருப்பி அவளை சீண்டி விட்டுக் கொண்டு இருந்தான் கர்ணா...

அவனின் பேச்சில் தன்னை மறந்து அவளும் இயல்பாக பேசிக் கொண்டே வந்ததில், அவன் மாத்திரை போட்டு விட்ட விதத்திலும், அதே சமயம் அதை இப்போது அவனிடமே தானே கூறிய விதத்திலும் வெட்கம் வர.. அவனிடம் இருந்து நகர்ந்து திரும்பி அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு வெட்கப்பட,

அய்யய்யோ இவள் இப்படி வெட்கப்பட்டு கொண்டு இருந்தால், என் நிலைமை மிகவும் மோசமாகி விடும் சரி இங்கு இருந்து செல்லலாம் என்றால் பிறகு இவள் நிலைமை மோசமாகி விடும், என்ன செய்யலாம் என்று நினைத்தவன் அவளை மறுபடியும் சீண்டி விட்டான்..

என்ன மெய்... உன்னை பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நினைத்தால் இப்படி வெட்கப்பட்டுக் கிட்டு என் நினைப்பை பொய்யாக்கி விட்டாயே என்று கிண்டல் செய்தான்... அப்ப இவ்வளவு நாட்களும் என்னிடம் நீ நடித்து ஏமாற்றி இருக்கிறாய் அப்படித் தானே, அப்ப நீ அழகான கிராமத்து பைங்கிளி தான் என்று கிண்டல் செய்தவனை கண்டு..

கோபப்பட்டு நான் என்ன நடித்தேன்.... எப்போ உங்களை ஏமாற்றினேன், நான் என் இயல்பில் தான் இருக்கிறேன். நான் ஒன்னும் அடங்காப்பிடாரியாக யாரிடமும் நடந்து கொண்டதும் இல்லை. அதே போல் யாரிடமும் குழைந்து பேசி நடித்ததும் இல்லை என்று கோபமாக பேசினாள்.

அவளின் கோபத்தை கண்டவன் அடடா வண்டி பாதையை விட்டு வேற பக்கம் போகுதே... பிரேக்க போடு டா கைப்பிள்ளை என்று சொல்லி கொண்டே.... தாய்க்குலமே அமைதி... அமைதி....

நான் ஒன்று சொல்ல நீ ஒன்று சொல்ல அது வேறு விதமாக போய்விட்டது... சமாதானம் சமாதானம் என்று சரண்டர் ஆனவனை பார்த்து... லேசாக சிரித்தாள்.

ஆனால் அப்போது அங்கு வந்த லிபின் கர்ணா .. பூஜை அறை சுத்தம் செய்து விட்டார்கள். இனி அழகிய கூட்டிட்டு போய் பூஜை ஏற்பாடுகளை பண்ணு என்று சொல்லி விட்டு சென்றான்.

இவ்வளவு நேரமும் கர்ணா தன்னிடம் பேசியதற்கான அர்த்தம் புரிந்து கொண்ட அழகி அவனைப் பார்த்து தேங்க்ஸ் மாமா என்று சொன்னாள்.

அவள் மாமா என்ற அழைத்து தன்னிடம் பேசியதிலேயே அவள் பழையபடி ஆகிவிட்டாள் என்று புரிந்து கொண்டவன்..

ஆனால் தான் வழக்கமாக கூப்பிடுவது போலவே மெய் என்று அறையில் இருந்து வெளியே சென்றவளை கூப்பிட்டான் கர்ணா.

என்ன மாமா என்று கேட்டாள் வாசலில் நின்று கொண்டு..

மெய் எது நடந்தாலும் ... அதாவது இனிமேல் எதுவும் புதுசாக யாரும் திருத்தப் போவதில்லை. ஏற்கனவே நம் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கிறதோ, அது தான் நடக்கப் போகிறது அதனால்... வரப்போகும் பிரச்சினைகளை நினைத்து இப்போது இருக்கும் இந்த நிமிடத்தை வீணாக்க கூடாது. அதை மனதில் வைத்துக் கொண்டு பூஜை செய் என்று சொல்லி விட்டு மாடிக்கு சென்றான்.

கர்ண மாடிக்கு செல்வதை பார்த்து விட்டு தேங்க்ஸ் அத்தான் என்று சொல்லி விட்டு.. கடவுளே யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டவள் பூஜை அறையில் சென்று அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டு... காலை உணவை தயாரிக்க சென்றாள் அழகி.

கவிப்பிரியா வீட்டிற்கு முன்பு ஒரு ஆட்டோ ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கியவனை பார்த்து வாட்ச்மேன் நீங்கள் யார் என்று கேட்டான்.

என் பெயர் வேலு.. நான் மரகதம் ருக்மணி இவர்களின் சித்தப்பா பையன். நான் வெகு நாட்களுக்கு பிறகு எனது ஊரில் இருந்து வருகிறேன். அதனால் தான் உனக்கு என்னை யார் என்று அடையாளம் தெரியவில்லை ஆனால் இதற்கு முன்பு இருந்த கந்தனுக்கு என்னை தெரியும் என்று சொல்லவும்..

ஓஹோ என் பெயர் குமார். கந்தன் அண்ணனுடைய தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன். நீங்கள் கொஞ்ச நேரம் இங்கேயே காத்திருங்கள்.. எதற்கும் ஒரு முறை நான் போய் வீட்டில் ஐயாவிடம் கேட்டு விட்டு வந்து விடுகிறேன். உங்களை உள்ளே அனுப்பவா என்று என கேட்டான் குமார்.

போய் கேட்டு விட்டு வா குமார் நான் இதோ இந்த கார்டனில் நடந்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி விட்டு ,கார்டன் பக்கமாக நடந்து சென்றான்... அங்கு தன் அக்காவின் மகள் அதுவும் இந்த வீட்டின் இளவரசி என்பவள் ஏன் இப்படி ஊஞ்சலில் தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டே இருந்தான். அவனின் பார்வையில் சத்தியமாக நல்ல எண்ணம் இருப்பது போல் தோன்றவே இல்லை.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கவிப்பிரியாவிற்கு தன் முன் நிழல் ஆடுவதை உணர்ந்து, மெல்ல கண்விழித்து பார்க்க... முதலில் எதிரில் நின்றவனை யார் என்று அடையாளம் தெரியாமல் சட்டென்று எழுந்து அமர்ந்தவள்... ஏய் யார் நீ?... எதற்கு இங்கு வந்து நிற்கிறாய்?.. முதலில் நீ எப்படி உள்ளே வந்தாய் என்று அதிகாரமாக கத்தினாள் கவிப்பிரியா.

ஐயோ என்ன கண்ணு கவி இந்த மாமாவ மறந்துட்டியா... ?.. ஆமா எப்படி நினைவு இருக்கும்.. நானும் ஊருக்கு வந்து பல வருடங்கள் ஆகியிருச்சு அதனால உனக்கு என்னை மறந்து விட்டது என்று நினைக்கிறேன் நான் தான் வேல் மாமா என்று சொன்னான்.

அப்பவும் நினைவு வராமல் அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் சமயம்..
அங்கு வந்த மரகதம் வா பழனி இப்ப தான் எங்கள் நினைவு எல்லாம் வந்ததா??.. எத்தனை வருடங்கள் ஆச்சு?. இப்ப தான் இங்க வரணும்னு தோணுச்சா உனக்கு.

சித்தப்பாவும் சித்தியும் இறந்த பிறகு உன்னை எங்களோடு வந்து தங்கு என்று சொன்னேன் நீ தான் வரமாட்டேன் என்று விட்டாய். ஒரு பெண்ணுக்கு இரு பெண்கள் கொடுத்த இடத்தில் வந்து எப்படி வந்து இருப்பது என்று சொல்லி வரமாட்டேன் என்று விட்டாய்.

சரி ஏதாவது நல்லது கெட்டதுக்காவது வருவ என்று பார்த்தேன்.. வரவே இல்லையே. இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய் தமிழ்நாட்டில் தான் இருந்தாயா இல்லை வேறு ஏதாவது ஊருக்கு சென்று இருந்தாயா என்று கேட்டாள் மரகதம்.

ஐயோ அக்கா கொஞ்சமாவது மூச்சு விட்டு பேசு, நீ இவ்ளோ பேசுவாயா என்று எனக்கு இப்பொழுது தான் தெரியும். எவ்வளவு அமைதியாக இருப்ப நீ என்று சொன்னான் பழனிவேல்.

அட எம்மா மரகதம்.. நீ இந்த அளவுக்கு பேசுவாயா?.. நான் கூட உன் சின்ன மகளுக்காக பேசும் போது மட்டும் தான் உனக்கு பேச தெரியும் என்று நினைத்தேன்... இப்போ உன் கூட பொறந்த பிறப்பு வரவும் இந்த அளவுக்கு பேசுகிறாய்... ஹாய் மாம்ஸ்.. உன்னை யார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அம்மா உன்னை தம்பி என்கிறார்.

ஓகே நேற்று எதோ ஒரு சிந்தனையில் நான் இங்கேயே படுத்து விட்டேன். உடம்பு எல்லாம் ஒரு பக்கம் வலிக்கிறது. நான் போய் சிறிது நேரம் என் அறையில் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றால் கவி பிரியா.

சரி உள்ளே வா பழனி என்று அழைத்துக் கொண்டு சென்றாள் மரகதம்.

ஐயோ என்ன இந்த மரகதம் என்னை பழனி என்று கூப்பிட்டு காரியத்தை கெடுத்து விடும் போல் தெரிகிறதே... நான் இங்கு அனைவரிடமும் வேல் என்று தான் அறிமுகமாகலாம் என்று வந்தேன். இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் சரியாக எனது பெயரை சொல்லி தொலைகிறாளே இவள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே உள்ளே சென்றான் பழனி வேல்.

அப்போது உள்ளே இருந்து வந்த கோபாலகிருஷ்ணன் சரியாக அவனை பார்த்து விட்டு என்ன மச்சான் வேலு எப்படி இருக்கீங்க என்று கேட்டான்.

அப்பாடா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாமா என்று எதற்கு சொன்னான் என்று தெரியாமலே சொன்னான் வேல்.

அப்புறம் இவ்வளவு நாள் எங்கு இருந்த மச்சான் என்று கேட்டார் கோபாலகிருஷ்ணன்.

அப்படியே வடக்கு பக்கமாக போயிட்டேன் மாமா..

ஒரே சப்பாத்தியும் ரொட்டியுமாக சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு... அதே மாதிரி புரியாத ஊரில் புரியாத பாஷையில் சரி.. அது தான் உங்கள் அனைவரையும் பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

ருக்மணி அனைவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு எப்படி இருக்க டா தம்பி என்று விசாரித்துக் கொண்டே, அனைவருக்கும் காபியை கொடுத்து விட்டு தனக்கும் ஒரு காபி எடுத்துக் கொண்டு அமர்ந்தார்.

நல்லா இருக்கேன் அக்கா... எங்க அக்கா நம்ம பாப்பாவ காணோம் என்று கேட்டான்.

அவள் கிரவுண்டுக்கு போய் இருக்காப்பா... சரி நீ ரொம்ப தூரத்தில் இருந்து வந்து இருக்கிறாய்.. அதோ அந்த அறையில் தங்கிக் கொள். உனக்கும் பயணம் பண்ணி வந்ததில் களைப்பாக இருக்கும். சிறிது நேரம் போய் ஓய்வு எடு. உணவு தயாரான பிறகு வந்து உன்னை எழுப்புகிறேன் என்று சொல்லவும்,...

அவனும் எங்கக்கா பெரிய மாமாவை காணோம் என்று கேட்டுக் கொண்டு எழுந்தான்.

அவர் காலையிலேயே கடைக்கு போய் விட்டார் டா நீ போய் படுத்து தூங்கு நான் சமையல் ரெடி பண்ணி விட்டு எழுப்புகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்கள் மரகதமும் ருக்மணியும்...

கோபாலகிருஷ்ணனும் காபி குடித்து விட்டு மூவரிடமும் சொல்லி விட்டு, தன் அறைக்கு சென்று கடைக்கு செல்ல கிளம்பினார்.

உள்ளே வந்த பழனி.. கட்டிலில் படுத்துக் கொண்டு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களை வேக வேகமாக மனக் கண்ணில் போட்டு பார்த்தான்.

எந்த அளவுக்கு தன்னுடைய உயிர் தன்னை விட்டு சென்று, பிறகு மீண்டும் தனக்குள் வந்தது என்று போராட்டத்தை நினைத்து பார்த்தவன்... அதற்குக் காரணமானவர்கள் யாரையும் உயிரோடு விடமாட்டேன்...

அதே சமயம் அவர்களுக்கு உடனையே அவர்களின் உயிரையும் பறிக்கவும் மாட்டேன். ஆனால் வாழும் போதே நரகம் எப்படி இருக்கும் என்று ஒவ்வொருவருக்கும் காட்டப் போகிறேன். நான் பட்ட கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் ... சரியான பதிலை சரோஜா நீயும் உன் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எனக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

ஏய் அழகி... வரேன் ... டி... ரொம்ப சந்தோசமா திரிஞ்சுக்கிட்டு இருக்க தானே நீனு... வரேன் உன்னுடைய மொத்த சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைக்க வருகிறேன்....

நீ ஒவ்வொரு முறையும் சிரிக்கும் போதும் எனக்குள் எரியும் தீயை அணைக்க உன் கண்ணிரால் மட்டுமே முடியும்... கூடிய விரைவில் உன் கண்ணிரால் என் நெருப்பை அணைக்கவில்லை நான் பழனிவேல் இல்லையடி என்று சூளுரைத்தான்...

இவனின் வஞ்சகம் அறியாமல்...
இவன் சூழ்ச்சியில் சிக்கும் கவிப்பிரியா....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top