• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
57
50. பூஜை அறையில் சாமி படம் உடைகிறது.
யாருக்கு வரும் ஆபத்து???

சனாதனை மிதுன் ருத்ரா இருவரிடமும் மாட்டி விட்டு ஓடியே போய்விட்டாள் சஞ்சனா...

ஓடிப் போகும் சஞ்சனாவை பார்த்துக் கொண்டே திரும்பிய ருத்ராவும் மிதுனும் சனாதனிடம் ஒழுங்கா இப்ப நீயே சொல்லிடு... எதுக்கு ரெண்டு பேரும் அப்படி சிரிச்சிட்டு இருந்தீங்க ... ?.. இப்ப நீ இதை சொல்லல அப்படின்னா மவனே.. உனக்கு இன்னைக்கு இரவு சிவராத்திரி தான் என்று இருவருமே தங்களுடைய சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அவனிடம் நெருங்க...

அச்சச்சோ டேய் அப்படி ஒன்னும் பெரிய விஷயம் எல்லாம் எதுவும் இல்லை டா.. ரெண்டு பேருமே நான் சொல்வதை நம்புங்கடா... அவள் உங்க கிட்ட வேணும்னே என்னை கோர்த்து விட்டுட்டு போறா டா என்று சொன்னான் சனாதன்.

எங்களுக்கு தெரிஞ்சு சஞ்சனா அப்படி பொய் சொல்லிட்டு போற மாதிரி தெரியலயே... ஏதோ ஒரு விஷயம் இருக்கு அதைத் தான் உன் கிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்லாமல் சொல்லிட்டு போற மாதிரி தான் தோணுது. சொல்லு சொல்லு என்ன ரகசியம் என்று கேட்டார்கள் இருவருமே...

சரி டா அதுக்கு எதற்கு இப்படி சட்டை கை எல்லாம் மடித்து விட்டு.. ஏதோ பெண்ணிடம் சில்மிஷம் செய்யப் போற பையன்கள் போல் இருவரும் வருகிறீர்கள்.. என்று பேச்சை வளர்த்துக் கொண்டே டேபிள் மீது இருந்த தன்னுடைய பைக் கீயை எடுத்துக் கொண்டு...

அது ஒன்னும் இல்லை டா... அது வந்து... அது... அது ... எனக்கும் தூக்கம் வருகிறது வீட்டிற்கு போய் தூங்கலாம் வாருங்கள் என்று மிதுன், ருத்ரா இருவருக்கும் இடையில் புகுந்து ஓடியே விட்டான் சனாதன்.

ஏய் என்ன டா இவங்க ரெண்டு பேரும் இப்படி ஓட்டப்பந்தயத்தில் ஓடுற மாதிரி ஓடுறாங்க... நீ சொன்னது சரி தான் போல டா மிதுன்... இங்கே ஏதோ ஒரு புது டீலிங் ஓடிக் கொண்டு இருக்கு என்று நினைக்கிறேன் என்று ருத்ரா சொல்ல...

அதே தான் ருத்ரா நானும் சொல்றேன்... நானும் வந்ததுல இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. இவங்க ரெண்டும் பேரும் சரியான திருட்டு மாங்காயா தான் இருக்குங்க... பாப்போம் என்னைக்கு இருந்தாலும் பழம் பழுத்து நம்ம வீட்டுக்கு தானே வரணும் பாத்துக்கலாம் விடு... சரி வா நமக்கும் இன்று தூக்கம் போச்சு... மணி இப்பவே 1:30 ஆயிடுச்சு வீட்டிற்கு போய் பிறகு தூங்கி காலையில் எழுவது ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.

நாளைக்கு ஜாக்கிங் என்னால எந்திரிச்சு வர முடியாது. நேரா ஆஃபீஸ்க்கு தான் கிளம்பி கீழே இறங்கி வரணும். நீ எப்படி என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே ருத்ரா தூங்கி விழுந்தான் காருக்குள்ளே...

அடப்பாவி.... எப்படி டா இவ்வளவு நேரமும் இன்ட்ரஸ்டிங்கா பேசிட்டே வந்தோம்.. இப்ப என்ன.. டா... சடனா இப்படி தூங்கிட்ட என்று புலம்பிக்கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் மிதுன்.

அது வா ப்ரோ, நான் இன்னும் எதிலுமே கமிட் ஆகல ப்ரோ, அதான் தூக்கம் வந்துருச்சு என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே தூங்கினான்.

ருத்ரா அப்படி சொல்லிய ஒரு நொடி ஏனோ மிதுன் கண்முன்னே ஒரு பாவை வந்து போனாள் ... அதே சமயம் அவன் முகத்தில் ஒரு குழப்ப ரேகையும் ஓட... பிறகு நிதானித்து சிரித்தவன், கடவுளின் சித்தம் என்று காரை ஓட்டினான் மிதுன்.

வீட்டிற்கு வந்ததும் ருத்ராவை எழுப்பி அவன் அறைக்கு போக சொல்லி விட்டு... தன் காரை செட்டில் விட்டு விட்டு, தன்னுடைய மெத்தையில் போய் விழுந்தான்... ஏனோ மறுபடியும் அந்த பாவை முகம் கண்களுக்குள் வந்து போக... ஏய்.. இது எல்லாம் சரி வருமா என்னன்னு தெரியல.. ஒழுங்கா ஓடிப் போயிடு என்று ஏதோ தன் கண்களுக்குள் இருப்பவள் தன் அருகில் இருப்பதாக நினைத்து பேசி விட்டு அப்படியே கண்களை மூடி தூங்கிவிட்டான் ‌மிதுன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்த இரவு இருக்க... அனைவருக்கும் பொதுவாகவே எப்பவும் போல் இளங் கதிரவன் தன் செங்கதிர்களை பூமிக்குள் பாய்ச்ச...

இரண்டு இரவு ஒரு பகல் பொழுது அதற்குள்ளாகவே ஏதோ பல யுகங்கள் கடந்தது போல் இருந்தது மெய்யழகிக்கு...

காய்ச்சல் முழுவதும் கர்ணாவின் காதலிலும் அன்பிலும்... முற்றிலும் குணமாக.. பெண்ணவளுக்கு உள்ளுக்குள் உண்டான சந்தோஷத்தையும் நிம்மதியையும் வெளிய காட்டிக் கொள்ளும் எண்ணம் மட்டும் இல்லாமல் போனது...

முழுவதுமாக நன்றாக ஓய்வில் இருந்தவள்... இப்பொழுது புத்துணர்வாக வெளியில் வந்தாள் அழகி...

கர்ணா, லிபின் இருவருமே நேற்று சனாதன் பிரச்சனை எதுவும் தெரியாமல் இருந்ததால்... இருவரும் வழக்கமாக எழுவது போல் எழுந்து கீழே வந்தனர்.

அழகிற்கும் எந்த பிரச்சனையும் தெரியாததால்.. வழக்கமாக அனைவருக்கும் வைக்கும் சத்து மாவு கஞ்சியை அடுப்பில் வைத்து கிளறி எடுத்துக் கொண்டு வந்தாள்.

கர்ணா ஜாக்கிங் முடித்து வந்தவன் கஞ்சியை தனக்கு ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு... அங்கு இருந்த பெரிய எல் இ டி ஸ்கிரீனை ஆன் செய்தான்.

அதில் கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலிக்க... அதனோடு அழகியும் சேர்ந்து பாடிக் கொண்டே... பூஜை அறையை சுத்தம் செய்து, ஏற்கனவே சரோஜமா கட்டி வைத்து இருந்த பூ மாலைகளை போட்டுக் கொண்டு இருந்தாள் அழகி.

அப்போது பூஜை அறையில் இருந்த விநாயகர் படம் கீழே விழுந்து உடைந்தது. சத்தம் கேட்டு கர்ணா, லிபின் இருவரும் உள்ளே வந்து பார்க்க... பயத்தில் அழகி அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.. கண்களில் மட்டும் கண்ணீர் தாரை தாரையாக வந்துக் கொண்டு இருந்தது.

லிபின் நீ போய் வீட்டில் வேலை செய்பவர்கள் யாரையாவது அழைத்து வந்து இந்த கண்ணாடி சில்களை சுத்தம் செய்ய சொல்லு என்று சொல்லி விட்டு, சற்றும் யோசிக்காமல் அழுது கொண்டு நின்று இருந்தவளை, அப்படியே தன் கையில் தூக்கியவன் கண்ணாடி சில்கள் படாதவாறு அவளை தூக்கிக்கொண்டு வெளியில் வந்தான்.

ஒரு நிமிடம் லிபினோ இங்கே என்ன..‌ டா... நடக்குது என்று பார்த்து விட்டு பிறகு கர்ணா சொல்லியது போல் வேலை ஆட்களை கூப்பிட்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய சொன்னான்.

கர்ணா தூக்கிக் கொண்டு வந்து தன் அறையில் இறக்கி விடும் வரையிலும் கூட அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை... அதே சமயம் அவன் தன்னை தூக்கிக் கொண்டு வந்தான் என்று உணரும் மனநிலையிலும் அவள் இல்லை.

அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டு... மெய்... என்ன... டா இப்படி அழுகிறாய் ... இப்பொழுது தான் காய்ச்சல் குறைந்து இருக்கிறது. மறுபடியும் அழுது காய்ச்சலை வர வைத்து கொள்ளாதே... இங்க பாரு நீ அழுக அழுக மூச்சு அதிகமாக வாங்குகிறது.

கொஞ்சம் அமைதியாக இரு டா என்று அவளை தன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தான்.

அவனின் ஆறுதல் மொழிகளா... இல்லை அவன் தோளில் சாய்ந்து அவன் தட்டி கொடுத்ததும்... அவளுக்கு அவளின் தாத்தா வீராவை நினைவு படுத்த...

வீரா... வீரா.. என்று முனங்கி கொண்டே அழுதாள் அழகி.

எங்கே அவள் மேற்கொண்டு அழுது கொண்டே இருந்தால், போன காய்ச்சல் திரும்பி வந்து விடுமோ என்ற பயத்தில் இப்பொழுது அவளை தன்னிடம் இருந்து விலக்கி... மெய் இப்ப நீ மட்டும் அழுகையை நிறுத்தவில்லை என்றால்.. நீ அழுது காய்ச்சல் வந்ததற்கு பிறகு போட வேண்டிய மாத்திரையை இப்பவே கொடுக்கட்டுமா என்று கேட்டான் கர்ணா.

கர்ணா அப்படி கேட்டதும் இவ்வளவு நேரமும் இருந்த பயமும் அழுகையும் போய்... அப்படியே கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் அழகி.

என்ன கொடுக்கட்டுமா மாத்திரை என்று கேட்டான்... கர்ணா கேட்ட அடுத்த நொடி தன் கைகளால் வாயை மூடி கொண்ட அழகி...

இப்போது தான் அன்று காலையில் அவன் எப்படி தனக்கு மாத்திரை கொடுத்தான் என்பது நினைவு வர...

ச்சீ... போ அத்தான் நீ ரொம்ப மோசம்... நான் இதுவரைக்கும் மாத்திரையை சாப்பிட மாட்டேன்.. காய்ச்சலுக்கு கண்ணை மூடிக்கிட்டு ஊசி கூட போட்டு கிட்டு இருக்கேன்.. ஆனால் மாத்திரை போடவே மாட்டேன் தோட்டத்தில் குழி பரித்து மூடி விடுவேன் தெரியுமா?.. ஆனால் நீ என்ன டா என்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ... அதுவும் வெட்கமே இல்லாமல் உன் வாய்க்குள் தண்ணீரை விட்டு, மாத்திரை போட்டு அதை என் வாய்க்குள் அனுப்பி விட்டாய்.. எனக்கு இப்பவும் அதை நினைத்து பார்க்க ஒரு மாதிரியா இருக்கு தெரியுமா?..

ஏன் அப்படி பண்ணனுன... எனக்கு எப்பவும் மாதிரி சாப்பிடவே பிடிக்காது அதுவும் இனிமே எப்பவாவது மாத்திரை சாப்பிட வேண்டும் சூழ்நிலை வந்தாலும் உன் நினைவு தான் வந்து தொலையும்... இன்று காலையில் பூஜை அறையில் நடந்த விஷயங்களை மறந்து அவனோடு இயல்பாக பேசிக்கொண்டு இருந்தாள் அழகி.

கர்ணாவும் அவள் பழைய நிலைக்கு திரும்பியதையும், அவளின் கள்ளம் கபடமில்லாத பேச்சிலும்... அதை விட தன்னை மட்டும் அவள் உரிமையோடு அத்தான் என்று அழைக்கும் அந்த உரிமையான அழைப்பிலும் அவளையே மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவ்வளவு நேரமும் வாய் ஒட்டாமல் பேசிக்கொண்டே இருந்தவள்... தன் அத்தானின் பார்வை மாற்றத்தையும், இதுவரை தான் உளறிக் கொண்டு இருந்ததையும் யோசித்துப் பார்த்தவள்... அடக்கடவுளே இவ்வளவு நேரமும் என்ன பேசிக் கொண்டு இருந்தோம் என்று உணர்ந்து, வெட்கம் வந்து தொலைய... அவனை விட்டு நகர்ந்து திரும்பி அமர்ந்து கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டு இருந்த பேச்சில் மெய் மயங்கி இருந்தவன்... இப்போது அவளின் வெட்கத்தில் முழுவதுமாக தடுமாறிப் போனான் கர்ணா.

இதே நிலையில் இருவரும் இருந்தால் இங்கு என்ன வேண்டும் ஆனாலும் நடக்கும். அதே சமயம் இப்பொழுது இவளை இங்கே தனியே விட்டு விட்டு சென்றால், சிறிது நேரத்தில் தன் இயல்புக்கு வருபவள் ... மறுபடியும் பூஜை அறையில் நடந்த சம்பவத்தை மனதில் நினைத்து அழ ஆரம்பித்து விடுவாள் என்று... தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை கேலி செய்ய ஆரம்பித்தான்...

அய்யய்யோ கிராமத்து பைங்கிளிக்கு வெட்கம் வருகிறதோ என்று கேட்டான்... ஆனால் அழகி உனக்கு வெட்கம் எல்லாம் வருகிறது... உன் வெட்கத்தை பார்த்து எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது.

நான் இங்கு வந்ததில் இருந்து உன்னை ஒரு ரவுடி பேபி என்று நினைத்தேன்.. யாருக்காக வரும் எப்பவாவது தலை வணங்கி பேசி இருக்கியா நிமிர்ந்து நடந்துகிட்டு பாரதி கண்ட புதுமைப்பெண் என்பது போல் என்னமோ நடிச்சிட்டு இருந்த... என்று கர்ணா கேட்கவும் ....

கோபத்தோடு திரும்பியவள் நான் என்ன நடித்தேன். நான் எப்போதும் போல் என்னுடைய இயல்பில் தான் இருக்கிறேன் என்று கோபமாக பேச ஆரம்பித்தாள் அழகி.

ஆஹா அடுத்து என்ன நடக்கப்போவது இவர்களுக்குள்...?...
பூஜை அறையில் படம் விழுந்தது நல்லதா கெட்டதா?...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top