Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
நீலகிரி:
பவி தனது கணவன்,மூன்று வயது மகளோடு மருதுவின் வீட்டிற்கு வந்தவள் அவளின் மாமனார் மாமியாரின் அறுபதாம் கல்யாணத்திற்கு குடும்பத்தோடு வருமாறு அழைக்க அவளின் பேச்சிலேயும் அவள் நடவடிக்கையிலும் ரொம்ப மாறிவிட்டாள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது..
மோகனின் மடியில் இருந்த பிள்ளையை தூக்கிய மருது தமது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து குழந்தையின் கையில் வைத்தவன் அது கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கி விட மருதுவின் பொண்ணோ ஓடி வந்து தனது தந்தை செய்தது போல அதுவும் தன்னை விட பெரிய குழந்தையின் கன்னத்தில் முத்தமிட அதை பார்த்து சிரித்து விட்டனர்...
செல்லாவோ தனது கணவனையும் பவியையும் பார்த்து கண்ணடிக்க சும்மா இருடி என்றவனுக்கும் சிரிப்பு வந்தது...
மருதுவின் தம்பி மிலனும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் பள்ளியிலேயே முதல் மார்க் எடுக்கவும் அவனுக்கு சென்னையில் இருக்கும் மருத்துவ கல்லூரி இலவசமாக சீட்டு கிடைத்தது.
அதேபோல் அவர்கள் மலைவாழ் இனத்தில் அவனின் ஆருயிர் நண்பன் வினய்கும் அதே கல்லூரியில் சீட்டு கிடைக்க இருவரும் அவர்கள் புது வாழ்க்கையின் அத்தியாயத்தை தொடங்க சென்னையை நோக்கி பயணமானார்கள்.
மருதுவோ தனது பெற்றோர்கள் மற்றும் காதல் மனைவி செல்லா தனது செல்ல மகள் கண்மணி அதோடு தற்போது மனைவியின் வயிற்றில் இருக்கும் அடுத்த வாரிசோடு அவன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறான்...
சீமக்கரை:
மாதங்கள் கடந்திருக்க அல்லிக்கும் பிரசவமானது.அவளுக்கும் முதல் டெலிவரில் தாமரையை போல இரட்டை பிள்ளைகளாக பையன்கள் பிறக்க, தாமரையோ ஒரு மாதம் தனது வீட்டில் தங்கிக் கொள்வதாக சொல்லவும், கதிர் தான் முரண்டு பிடித்தான். அவனை சமாளித்து தனது வீட்டில் தங்குவதற்குள் போதும் போதும் என்று ஆனது.
ஒரு நாள் வேலைக்கு கிளம்பி கீழே வந்த நிலாவோ தலை சுற்றுவதாக இருக்க அங்கிருந்த முற்றத்திலே உட்கார்ந்து விட,அந்த நேரம் கிச்சனிலிருந்து வெளியே வந்த தாமரை என்ன ஆச்சு நிலா?
ஏன் ஒரு மாதிரியா இருக்க?.
என்னனு தெரியவில்லை கா. ஸ்கூலுக்கு கிளம்பினேன் ஆனால் தலை சுத்துற போல இருக்கு கா என்றாள்..
ஓஓஓ என்றவள் கிச்சனிற்குள் சென்று ஒரு லெமனை புழிஞ்சு உப்பும் சக்கரையும் போட்டு எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கி இரண்டு வாய் குடித்தவளோ மலமல வென்று வாந்தி எடுத்து விட்டாள்.
பின்னர் யோசித்த தாமரை நிலா நாள் எதாவது தள்ளி போயிருக்கா?.
யோசித்தவளோ ஆமா கா என்க...ஹேய் சந்தோஷம் டி நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசு வரப்போகுது என்றாள்...
வயலில் வேலை நடப்பதால் தாமரை நிலாவை தவிர மற்ற எல்லாரும் அங்கே இருந்தனர்...
தனது போனை எடுத்து கணவனுக்கு கால் பண்ண, அந்த பக்கம் அட்டென் பண்ணிய கதிர் என்ன டி புருசனை பார்க்காம இருக்க முடியலையா?.
யோவ் வாய மூடு!!
வளவன் மாமாவை உடனே வீட்டுக்கு அனுப்பு என்க..
என்னடி ஆச்சுங்க?.
நீங்கள் அனுப்புங்களேன் நிலாவை கொண்டு போய் ஸ்கூல்ல விடனும் ஸ்கூட்டி ஏதோ மக்கர் பண்ணுது யா.
அப்படியா இதோ வரசொல்றேண்டி என்றவன் மாமாவுக்கு உம்மா கொடுக்க வேண்டியதுதானே என்க,வெட்கமே இல்லையா என்று சிரித்துக் கொண்டு அழைப்பை துண்டித்தாள்...
பத்து நிமிடத்தில் வாசலில் வண்டி சத்தம் கேட்க வளவன் மாமா தான் வந்துட்டாங்க போல விஷயத்தை சொல்லு நிலா..சரிக்கா என்று சிரித்துக் கொண்டாள்.
உள்ளே வந்தவன் நிலா நிலா எங்கடி இருக்க வாடி சீக்கிரம்..அங்க வயல்ல வேர அரப்பு போயிட்டு இருக்கு இப்பதான் வண்டி ரிப்பேர் அது ரிப்பேர் மனுஷன் கடுப்பேத்திட்டு இருக்க என்று திட்டிக் கொண்டு வர..
நிலாவோ சாவகாசமாக முற்றத்தில் உட்கார்ந்து இருக்க ஏன்டி இங்கே கரடி போல ஒருத்தன் கத்துக்கிட்டே இருக்கேன் நீ என்னமோ மெத்தையில் உட்கார்ந்து இருக்கிற போல இருந்தால் என்ன டி அர்த்தம்?
கிளம்புடி..
மணி ஒன்பது ஆயிடுச்சு..
ஆயிரம் தான் உன் அண்ணன் வீட்டு ஸ்கூலா இருந்தாலும் உனக்கு நேரம் காலம் இல்லையா என்று முறைக்கவும் அய்யோ மாமா ஏன் வந்ததும் இப்படி பொறியுர..ஒரு நிமிஷம் அவ என்ன சொல்றான்னு காதுல வாங்கு அதுக்கு பிறகு நீ பேசு என்கவும் என்ன தாமரை என்ன சொல்ல போறாள் உன் தங்கச்சி?.
நீயே உன் புருஷனுக்கு சொல்லு எனக்கு தரி ரூம்ல வேலை இருக்கு ஜான் மாமா கிட்ட இன்னிக்கு நீ ஸ்கூல் வரலைன்னு நான் சொல்லிட்டேன் என்றவள் சிரித்துக் கொண்டே வெளியே செல்ல என்னடி தாமரை என்னமோ புதிர் போட்டுட்டு போகுது என்க..
எதுவும் சொல்லாமல் எழுந்து வந்தவள் கணவனின் கையைப் பிடித்து புடவை இடைவெளியில் இருக்கும் தனது வயிற்றின் மேல் வைக்க என்னடி வயிறு வலிக்குதா சோடா குடிச்சியா?.
அட மக்கு மட சாம்பிராணி என்றவள் கிட்ட வாயா என்று அவன் கழுத்தில் கையை வைத்து தன் பக்கம் வளைத்தவள் அவன் காதில் விஷயத்தை சொல்ல..அப்படியா என்று மனைவியை தூக்கி சுத்தியவன் சூப்பர் சூப்பர் என்று முத்தங்களை கொடுக்க அந்த நேரம் போனை வைத்து விட்டதாக உள்ளே வந்த தாமரை ஐயையோ நான் எதுவும் பார்க்கவில்லை நான் எதுவும் பார்க்கலை என்க..
சும்மா இரு தாமரை எங்க அண்ணன் ஏதும் கொடுக்காது போல தான் என்கவும்..மாமா என்று பல்லை கடித்தாள்.சரி சரி ஏதோ அறியா புள்ளைங்க தெரியாம பண்ணிட்டோம் மன்னித்துவிடு மன்னித்துவிடு என்று சிரித்துக் கொண்டு மனைவியை தூக்கிக்கொண்டு படியில் ஏறி மேலே சென்றான். ..
குழந்தைகளுக்கும் நான்கு வயது தொடங்கியதும் டவுனில் இருக்கும் பள்ளியிலேயே சேர்த்தனர்..
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து போகும் வேலையை வளவனும் நிலாவும் பார்த்துக் கொண்டனர். நிலாவோ ஏழு மாத வரைக்கும் வேலைக்கு போனவள் அதன் பின்னர் வளையல் காப்பு விட்டு அவள் அப்பா வீட்டுக்கு சென்று விட்டாள்.
அவளுக்கும் பத்தாவது மாதம் வந்ததும் டெலிவரியாக அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்...
பிள்ளைகள் வளரும் வரை காத்திருந்தவர்கள் பின்னர் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அவனவன் மனைவியோடு இரண்டாவது ஹனிமூனுக்கு தயாரானார்கள்.
இதை பார்த்து அவனுங்க மனைவிகள் தான் கணவன்களை வறுத்து எடுத்துக் கொண்டிருக்க அவனுங்களோ மீண்டும் எங்களுக்கு ஹனிமூன் வேண்டுமென்று பிடிவாதமாக இருந்து சாதித்தார்கள்..
அவர்கள் ஊருக்கு புறப்படும் நாளும் வரை குழந்தைகள் எல்லாரையும் லாரன்ஸ் காரில் ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் கண்காட்சிக்கு சென்று விட,இவனுங்களோ வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டு ட்ராவலர் வேனில் ஏறியவனுங்கள் அவர்களின் இரண்டாவது ஹனிமூன் பயணத்தை தொடர்ந்தனர்.
நான் ஓட்டுகிறேன் என்ற வேலுவோ டிரைவர் சீட்டில் உட்காரவும் இவனுங்களும் பின்னாடி உட்கார்ந்து பேசிக் கொண்டே வரும் போது இந்த நாளுக்காக தான் இத்தனை மாதம் காத்திருந்தோம் என்று ஆண்கள் சொல்ல,பெண்களோ அவர்கள் சொல்வதைக் கேட்டு ச்சீ என்று வெக்கப்பட்டுக் கொண்டு வேறு பக்கம் திரும்பி கொண்டாளுங்கள்..
மனைவியின் தோளில் கையை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த கதிர் இந்த அல்லி மலர வேண்டும் என்பதற்காக தான் டி இந்த கதிரவனும் இந்த பிறவியில் காத்திருந்தேன்.
இனிவரும் எல்லா பிறவியிலும் "உனக்காய் காத்திருப்பேன்" என்றவனோ யாரும் பார்க்காத வண்ணம் அவள் கன்னத்தில் முத்தமிடவும்,தாமரையோ தனது கணவனின் தோளின் மீது காதலோடு சாய்ந்து சாய்ந்து கொண்டாள்
இவர்களின் இந்த பயணம் இனிதாய் தொடரட்டும்...இன்று போல் என்றும் இதே நட்போடும் அன்போடும் காதலோடும் இவர்கள் வாழ நாமளும் இவர்களை வாழ்த்தி விடை பெறலாம்.
முற்றும்...
இதுவரை வாசித்த விமர்சித்த வாசிக்க போகும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
இவர்கள் பிள்ளைகளுடனான புது கதை களத்தோடு மீண்டும் சந்திக்கலாம்.
சீமா