- Thread Author
- #1
49. கவி பிரியாவின் நண்பர்களுக்கு நடந்தது என்ன?..
சஞ்சனா, சனாதன் இருவரின் சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?
கவி பிரியா வீட்டில்...
கார்டனில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவள்... அப்படியே கண்களை மூடி காலையில் இருந்து நடந்ததை நினைவுப்படுத்தி பார்த்தாள் கவிப்பிரியா.
காலையில் வெளிய கிளம்பும்போது சரியாக தன் (கமிஷனர்) தாய் மாமா வந்தது.. வந்ததோடு இல்லாமல் தன் மீது கோபத்தை காட்ட முடியாமல் அவர் கோபத்தை கண்ட்ரோல் செய்து கொண்டு வந்த விஷயத்தை சொல்லிவிட்டு சென்றது என்று ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவள்.. அடுத்து தான் சென்று சந்தித்த நபர்களை பற்றி இப்போது சிந்தித்து கொண்டு இருந்தாள் கவிப்பிரியா.
காலையில்...
தன் தாய்மாவின் கோபத்தை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையை பார்க்க சென்ற கவிப்பிரியா.. முதலில் சந்திக்க சென்றது சஞ்சனாவின் போனில் இருந்து வீடியோ எடுத்த அந்த பையனை தான்.
அவனை வழக்கமாக சந்திக்கும் அவன் வைத்திருக்கும் பிரௌசிங் சென்டருக்கு சென்று பார்க்க.. அங்கு சென்டர் திறக்கப்படாமல் இருந்தது. சரி என்று அவனுக்கு போன் செய்து பார்க்க.. போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
என்ன எங்கே போனான் இந்த பக்கி என்று அவள் நினைத்துக் கொண்டு இருந்த சமயம் அந்த கடையில் வேலை பார்க்கும் பையன் அங்கு வந்து.. அக்கா இனிமே இந்த சென்டர் பக்கம் இனி வராதே... இன்று இருந்து இது என்னுடைய சென்டர்.
குமார் அண்ணா குடும்பத்தோட காலி பண்ணிட்டு வேற எங்கேயோ ஊருக்கு போயிடுச்சு. இனிமே இந்த சென்டர் எனக்குனு கொடுத்துட்டு சொல்லிட்டு போயிருச்சு... ஆனால் இன்னொரு முக்கியமான விஷயம், குமார் அண்ணன் ரொம்ப பாவம் அது முகம் கை கால் எல்லாம் வீங்கி போய் இருந்தது.
எனக்கு என்னமோ அது அப்படி அடிபட்டு கிடந்ததற்கு காரணம் நீ தான் என்று தோன்றுகிறது. ஏன் எதனால் என்று தெரியவில்லை ஆனால் நீ இனிமேல் இந்த சென்டர் பக்கம் வரவே வராதே என்று சொல்லி அனுப்பி விட்டு, சென்டரை திறந்து அவன் பார்க்கும் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
கண்டிப்பாக அந்தப் பையனிடம் குமாரை பற்றி கேட்டாலும் சரி ஏன்... என்ன... என்று எது விசாரித்தாலும், வேறு எந்த பதிலும் அவன் சொல்ல மாட்டான் என்பதை உணர்ந்து கொண்ட கவிப்பிரியா, எதுவும் சொல்லாமல் அமைதியாக தன்னுடைய வண்டியில் புறப்பட்டு அடுத்த சென்ற இடம்...
இப்ப எனக்கு சஞ்சனாவின் மொபைலை திருடி கொடுத்த தன்னுடைய தோழி வசந்தி வீட்டிற்கு சென்றாள்.
எப்பவும் அந்த வீடு கலகல என்று இருக்கும் ஆனால் இன்று அமைதியாக இருந்தது ... அதுவே அவள் மனதிற்கு உறுத்தலாக இருக்க.. எப்பவும் அவளும் அவள் தம்பியும் வீட்டில் இருக்கும் நேரம் ஏதாவது சண்டை போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் இன்று வீடு ஏதோ ஒரு மயான அமைதி போல் இருந்தது.
தன் காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கியவள் அமைதியாக கொஞ்ச நேரம் அந்த வீட்டை பார்த்துக் கொண்டே இருந்தாள். இந்நேரம் தான் காரை நிறுத்தியதற்கு அவளுடைய தம்பி வேகமாக வெளியில் வந்து இருப்பான்.
என்ன ஆச்சு இவர்களுக்கு என்று குழம்பி போய் நின்று கொண்டே இருந்தாள் கவிப்பிரியா.
அப்போது திடீரென்று யாரோ அலறும் சத்தம் கேட்டு வேகமாக வீட்டிற்குள் சென்று பார்க்க... அங்கு அவளுடைய தோழி வஞந்தியின் அறையில் இருந்து தான் அந்த சத்தம் கேட்டது. வேகமாக சென்று பார்க்க அங்கு வசந்தியின் தம்பியும்.. அவளுடைய அப்பா, அம்மா மூவரும் சேர்ந்து வசந்தியை மல்லு கட்டி கட்டில் படுக்க வைத்து.. அவளின் கால்களுக்கு விலங்குகளை போட்டுக் கொண்டு இருந்தனர்.
வசந்தியோ டேய் என்ன விடுடா என்று.. கத்தி கொண்டு இருந்தாள்.
கவிப்பிரியாவுக்கு என்ன நடக்கிறது என்றே ஒரு நிமிடம் புரியவே இல்லை... ஏன் திடீரென்று இவள் எப்படி பிஹேவ் பண்ணுகிறாள் என்று தெரியாமல்... அதிர்ச்சியில் அங்கு என நடக்கிறது என்று பார்த்துக் கொண்டே நிற்க...
திமிரிக் கொண்டே இருந்த வசதி பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து, வேகமாக வீசி எறிந்தால் அது சரியாக கவி பிரியாவின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது.
சரியாக அந்த நேரம் அவளின் கால்களுக்கு விலங்குகளை பூட்டி விட்டு, கைகளுக்கு விலங்குகளை பூட்ட செல்ல...
அவள் சொம்பை வீசி அடிப்பதை பார்த்த அவள் அப்பா ஐயோ கடவுளே எப்படி இருந்த பெண் ஒரு நாள் இரவில் இப்படி ஆகிவிட்டாலே என்று கதறி தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதவர், தன் மகளின் கைகளுக்கும் விலங்குகளை போட்டு பூட்டி விட்டு...
அப்படியே அவன் தம்பி அவளுக்கு தலையைப் பிடித்துக் கொள்ள மாத்திரையை போட்டு விழுங்க செய்தனர்... அவளுடைய அப்பாவும் அம்மாவும்.
சிறிது நேரத்தில் அப்படியே மயங்கி படுத்து விட்டாள் வசந்தி.
அதற்கு பிறகு தான் அறையின் வாசலில் பீதியோடு நிற்கும் கவி பிரியாவை பார்த்ததும் அவளுடைய அம்மா... அம்மாடி கவிப்பிரியா உன் பிரண்ட பாரு மா ... அவளுக்கு ஏன் இப்படி ஆனது என்று தெரியவே இல்லை... நேற்று இரவு ஒரு போன் வந்தது.. வந்துவிடுகிறேன் அம்மா என்று போனாள்... இரவு ரொம்ப நேரம் ஆகியும் வரவே இல்லை.
அப்பாவும் வெளியே சென்று தேடி பார்த்தார்.. 11:00 மணி ஆகியும் வரவே இல்லை... பிறகு 11:30 இருக்கும் அப்போ ஒரு போன் வந்தது... நம் வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பூங்கா இருக்குல அந்த இடத்தில் உங்கள் பெண் மயங்கி விழுந்து கிடக்கிறாள் என்று...
நாங்களும் அறக்க பறக்க சென்று போய் பார்த்தோம்... மயங்கி தான் கிடந்தாள். ஆனால் அங்கு இருந்து தூக்கிட்டு வந்து... ஒரு பத்து நிமிடத்தில் கண் விழித்தாள், ஆனால் கண்விழித்ததுமே எங்கள் யாரையும் அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. என்னை விட்டுடுங்க .. என்னை விட்டுடுங்க... என்கிட்ட வராதீங்க... என்று மட்டும் கத்திக் கொண்டே இருந்தாள்... பிறகு அப்படியே மயங்கி விட்டாள்.
காலையில் தான் அப்பாவிற்கு தெரிந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தோம்... ஏதோ பயத்தில் இருக்கிறாள் என்று டேப்லெட் கொடுத்துட்டு போனாங்க... ஆனால் மிகவும் வயலெண்டாக பிஹேவ் பண்ணுகிறாள்... என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை கவி என்று அழுதார்.
சரி மா அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. கொஞ்சம் இருங்க நான் எங்களுடைய ஃபேமிலி டாக்டரிடம் ஆலோசித்து விட்டு... வந்து வசந்தியை கூட்டி செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வந்தாள்.
டாக்டரை போனில் தொடர்பு கொள்ளாமல் நேராக மருத்துவமனைக்கு சென்று போய் பார்த்து விட்டு... அங்கு இருந்த ஆம்புலன்ஸ் ரெடி பண்ணி கொண்டு வசந்தி வீட்டிற்கு வந்து பார்க்க...
வசந்தியின் வீடு பூட்டு போடப்பட்டிருந்தது. அதோடு டூ லேட் போர்டும் மாட்டி விட பட்டிருந்தது... என்னது இது என்று ஒன்றும் புரியாமல், ஆம்புலன்சை மறுபடியும் அனுப்பி வைத்து விட்டு டாக்டரிடம் சாரி கேட்டு விட்டு வீட்டிற்கு வந்தாள்.
இந்த விஷயங்களை தான் யோசித்துக் கொண்டே தன்னுடைய கார்டனில் படுத்து இருந்தாள் கவிப்பிரியா.
காலையில் மாமா வந்து பேசி விட்டு போனதற்கும்... குமார் சென்டரை விற்று விட்டு... ஊரையே காலி செய்து போனதற்கும்... வசந்திக்கு இப்படி ஆனதற்கும் ஏதேனும் கனெக்சன் இருக்குமா?.. வசந்தி வீட்டில் ஏன் அரை மணி நேரத்திற்குள் வீட்டை காலி செய்து போனார்கள்.. அவ்வளவு சீக்கிரம் காலி பண்ண முடியுமா?..
குமார் வசந்தி இருவருக்கும் என்ன ஆனது ஏன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு போனார்கள். ???.. இவர்களுக்கு என்ன நடந்து இருக்கும்??? ... யாரால் நடந்து இருக்கும்... ???. சனாதன், ருத்ரா இருவருக்கும் இதில் ஏதேனும் தொடர்பு இருக்குமா???... குழம்பிப்போனவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டத்தை தீட்டிக்கொண்டே அப்படியே கார்டனில் இருந்த ஊஞ்சலிலேயே படுத்து விட்டாள்.
மிதுனும், ருத்ராவும் காரில் பேசிக் கொண்டே வர அதில் ருத்ராவிடம் சனாதன் , சஞ்சனா இருவருக்கும் தான் ஏதோ பிராப்ளம் இருக்கும் என்று தோன்றுகிறது என்று தன் மனதிற்கு தோன்றுவதை ருத்ராவிடம் சொல்லிக் கொண்டே வந்த மிதுன் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.
அதில் ஏன் மிதுன் என்ன ஆச்சு?.. என்ன என்று பதறிய ருத்ராவிற்கு... செக்யூரிட்டி அண்ணா சொன்னாரு தானே அவன் பைக்கில் வர ஆரம்பித்த பிறகு மெயின் கேட் வழியாக வருவதில்லை என்று அப்போ அவன் பார்க்கையில் அவன் வண்டி இருக்கா என்று பார்க்க தவறி விட்டோமே என்று சொன்னான்.
ஐயோ மிதுன் நீ சொல்வது சரி தான்.. ஆனால் அதுக்கு இப்படி சடன் பிரேக் போட்டா சொல்லுவ ... இந்த இரவு நேரத்தில் .. போடா நான் என்னமோ ஏதோ பயந்துவிட்டேன் என்று சொல்லி விட்டு... சரி நீ வண்டியை திருப்பு..
மறுபடியும் ஆஃபீஸ்க்கு சென்று போய் பார்ப்போம் என்று சொல்லவும்... மிதுன் காரை திருப்பிக் கொண்டு சென்றான்.
அங்கே சனாதன் அலுவலகத்தில்...
தனா தன்னுடைய பீலிங்ஸ் சொல்லி சஞ்சனாவிடம் மன்னிப்பு கேட்க சஞ்சனாவும் அவனை மன்னிப்பு எல்லாம் வேண்டாம் என்று சொல்லாமல் சொல்வது போல்... நம் இருவரும் இன்று முதல் பிரெண்ட்ஸ் என்று தன் கையை நீட்டினாள்.
சனாதனும் சற்றும் தாமதிக்காமல் அவளின் கைகளை பற்றி பிரண்ட்ஸ் என்று கைகுலுக்கினான்.
அடுத்த நொடி இருவருக்குமே அடக்க முடியாமல் சிரிப்பு வர சிரித்துக் கொண்டே இருந்தனர்.
அதேசமயம் அங்கு வந்த ருத்ரா, மிதுன் இருவரும் இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல்.. ஹலோ இப்ப நீங்கள் இருவரும் எதற்காக இப்படி சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கொஞ்சம் எங்களுக்கும் சொன்னால், நாங்களும் சேர்ந்து சிரிப்போம் என்று இருவரின் குரலைக் கேட்டு நிதானத்திற்கு வந்தவர்கள்..
சஞ்சனாவும் சனாதன் இருவரும், மிதுன் ருத்ரா இருவரையும் பார்த்து விட்டு என்ன சொல்வது என்று தெரியாமல், இருவரும் மலங்க மலங்க விழிக்க...
ஓஹோ... உங்கள் இருவருக்கும் இடையில் உள்ள பர்சனல். அதில் நாங்கள் தலையிட உரிமை இல்லை என்று சொல்கிறீர்களா என்று ருத்ரா கேட்டான்.
மிதுனும் அப்படி தானா என்பது போல் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றான்.
ஐயோ சார் என்ன இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்... நாங்கள் இருவருமே இப்போது தான், இந்த நிமிடம் தான் பிரண்ட்ஸ் என்று கைகுலுக்கி கொண்டோம்.. அப்படி இருக்க எங்களுக்குள் என்ன பர்சனல்... ஆனாலும் நாங்கள் எதற்காக சிரித்தோம் என்று சொல்லனுமா என்று உங்கள் தம்பி கிட்ட கேட்டுக்கோங்க...
இப்போ நேரம் ஆகிட்டு... நான் நாளைக்கு லேட்டா தான் வருவேன்... இனிமே நான் போய் தூங்கி எழுந்து வர லேட் ஆகும். சோ லேட்டா தான் வருவேன் என்று சொல்லி விட்டு பாய் மிதுன் சார், பாய் ருத்ரா சார்... என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்று விட்டாள் சஞ்சனா.
எதற்காக சிரித்தார்கள்??...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...