- Thread Author
- #1
48. சனாதன் சஞ்சனா நட்பு மலருதல்
ருத்ராவும் மிதுனும் பேசிக்கொண்டே காரில் செல்ல...
ருத்ரா கவிப்பிரியாவின் பிரச்சனையை மனதில் வைத்து தான் இவ்வளவு நேரம் தான் பதட்டமாக இருந்தான் என்று கூறவும்..
மிதுன் அவனிடம் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. நம் தனா இந்த பிரச்சினையை எல்லாம் ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ள மாட்டான். எனக்குத் தெரிந்து இந்த பிரச்சினையை காலையிலேயே எப்படி சரி பண்ண வேண்டுமோ அப்படி இந்நேரம் சால்வ் பண்ணி இருப்பான்.
ஆனால் எனக்கு என்னமோ சஞ்சனா தாமதமாக வீட்டிற்கு வந்ததற்கும் தனா இவ்வளவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் இருப்பதற்கு காரணம்... கண்டிப்பாக நம் தனாவிற்கும் அவளுக்கும் தான் ஏதோ ஒரு பிரச்சனை நடந்து இருக்கிறது. அதில் தான் இவளும் லேட்டாக வீட்டிற்கு வந்து இருக்கிறாள். அவனும் எங்கு சென்றான் என்று தெரியாமல் இருக்கிறது என்று தன்னுடைய மனதில் தோன்றிய சந்தேகத்தை ருத்ராவிடம் சொன்னான் மிதுன்.
ருத்ராவும் அப்படியா சொல்கிறாய்... இப்படி இல்லாமலும் கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது தானே என்று கேட்டான்.
அப்படி இல்லாமல் போவதற்கு பாய்ண்ட் ஜீரோ அளவுக்கு தான் வாய்ப்பு இருக்கிறது. ஏன் இந்த அளவுக்கு நான் உறுதியாக சொல்கிறேன் என்றால்... நானும் இங்கு வந்ததில் இருந்து தனவும் சஞ்சனாவும் சேர்த்து பார்த்துக் கொள்ளும் சமயங்களில் எல்லாம், அவர்களை நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
ஏனோ இருவருக்குமே கொஞ்சம் கூட ஒத்துப் போகவே இல்லை என்பது போல் நமது அனைவருக்கும் தோன்றினாலும், அதையும் தாண்டி அவர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது.... எனக்கு என்னமோ இவள் தான் நம் வீட்டிற்கு வர போகும் இரண்டாவது மருமகள் என்று தோன்றுகிறது என்று முதல் மருமகளாக மெய்யழகியை மனதில் நினைத்து சொன்னான் மிதுன்.
ஆனால் ருத்ராவும் அழகி விஷயம் தெரியாததால், தனா வீட்டில் இரண்டாவது பையன் என்பதால் தான் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு... ஓஹோ அப்படியா விஷயம் அப்படி இருந்தால் நல்லா இருக்கும் தான்...
இந்த முரட்டு குதிரைக்கு ஏற்ற சண்டி குதிரை தான் சஞ்சனா... என்ற கிண்டல் அடித்தான் ருத்ரா.
டேய் அப்படி மட்டும் நடந்தா சஞ்சனா உனக்கு அண்ணி... வயதில் சிறியவளாக இருந்தாலும் கவனமாகப் பேசு என்று சொன்னான் மிதுன்.
இருவரும் பேசிக் கொண்டே வெகு தூரம் வந்துவிட அப்பொழுது தான் ருத்ரா...
ஏன் மிதுன் நாம போன் எடுத்துக் கொண்டு வந்தோமே... அவனுடைய பைக் நம்ம ஆபீஸில் நிற்கிறதா என்று கவனிக்க மறந்து விட்டோமே என்று சொன்னான்.
அட ஆமாம் டா.. சரி இரு காரை மறுபடியும் ஆஃபீஸ்க்கு விடுவோம் என்ற காரை திருப்பிக் கொண்டு மீண்டும் தங்கள் தம்பியின் அலுவலகத்தை நோக்கி வந்தார்கள்...
இங்கு அலுவலகத்தில்...
சஞ்சனாவை பயமுறுத்துவதற்காக மட்டுமே அவள் அருகில் வந்தவன்.. முதலில் தவிப்புகளை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டாலும் ,வெளியில் அமைதியாகவே அவனை பார்த்துக் கொண்டே இருந்த சமயம்... ஏனோ அவள் இதழ்களில் கவனம் செலுத்த... காலையில் அவள் சொல்லி சென்ற பொறுக்கி நாயே என்ற வார்த்தை மனதிற்குள் வர மூளையில் மறுபடியும் கோக்கு மாக்கு செய்ய ஆரம்பித்தது.
சஞ்சனாவோ அவ்வளவு நெருக்கத்தில் அதுவும் பர்பியும் மழையும் மீறி அவனிடம் இருந்து வந்த அவனின் வாசனையும் உள்ளுக்குள் அவஸ்தையை தர... எவ்வளவு நேரம் தான் அமைதியாக இருப்பது... அவனை தள்ளி விட்டு செல்ல மூளை அறிவுறுத்தியது.... ஆனால் மனமோ அவனை பார்த்துக் கொண்டே இரு என்று சொல்ல.... அவ்வளவு தடுமாற்றத்திலும் அவன் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள் சஞ்சனா.
அவள் சொன்ன பொறுக்கி நாயே என்ற வார்த்தை மனதிற்குள் வந்து வந்து போனாலும் ... ஏனோ அவளிடம் தன்னுடைய முழு கோபத்தையும் காட்டவும் முடியாமல் அதே நேரம் அவள் இப்படி வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதை பார்த்து அவனும் தடுமாறினாலும்... எப்படி தன்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம் என்று கோபமே மேலோங்கி நிற்க...
அவளின் நெற்றியில் தன் கைகளை சுடுவது போல் கொண்டு சென்றவன் அப்படியே அவள் நெற்றியில் கை வைக்காமல் ஆனால் சிறு நூலிலையில் கைகளை விலக்கி விட்டு... அவன் விடும் மூச்சு காற்று அவள் மீது மோத.... சுட்டும் விரலை நெற்றி, புருவம், கண்கள், மூக்கு என்று தொடாமலே ஆனால் தொட்டு விடும் இடையில் அவளை அளந்து கொண்டு வந்தவன்... அவளின் கீழ் உதட்டை தன் இரு விரல்களின் நுனியால் பிடித்து இழுத்து ...
இந்த உதடு தானே நான் பொறுக்கி நாயே என்று சொன்னது... அப்புறம் எதுக்கு டி இந்த இரவு நேரத்தில் என்னை தேடி வந்தாய்... ஓஹோ இந்த பொறுக்கி நாயின் சேவை தேவையோ என்று கேட்கவும் இவ்வளவு நேரம் அவன் மேல் இருந்த மாயை விலகி...
கோபம் ஆனவள்... மிஸ்டர் சனாதன் இன்னும் ஒரு நொடி என் அருகில் நீங்கள் நின்று கொண்டு இருந்தீர்கள் என்றால்... பைசா செலவு இல்லாமல் பேமிலி பிளானிங் பண்ணிடுவேன்... உங்களுக்கு ஓகே என்றால்... எனக்கு ஓகே தான் எப்படி வசதி என்று கேட்டாள்.
ஓஹோ அப்படிங்களா டாக்டர்... பண்ணு டி தைரியம் இருந்தா பண்ணு டி... நீ எனக்கு ஃபேமிலி ப்ளானிங் பண்றியா இல்ல நான் உனக்கு.... என்று ஏதோ சொல்ல வந்தவன்.. தான் வளர்ந்த வளர்ப்பு முறையால் அமைதியாகி... இப்ப சொல்றேன் டி நல்லா கேட்டுக்கோ இனி ஒரு நிமிஷம் நீ இந்த ஆபீஸில் இருக்க கூடாது. அது மட்டும் இல்லாமல் எக்காரணம் கொண்டு என் ஆபீஸ்க்கு நீ வரக்கூடாது. நீ எந்த ஆபீஸ்க்கு வேணாலும் போய்க்கொள்.. என் முகத்துலையோ என் ஆபீஸ்லயோ உன் கால் இல்ல... மூச்சு காத்து கூட என் திசை பக்கம் இருக்க கூடாது. வெளிய போடி என்று கத்தினான்.
ஹலோ மிஸ்டர் சனாதன் என்ன மனசுல மன்மத ராசா நினைப்பா... இங்க உங்களை பாக்குறதுக்காக ஒண்ணும் நாங்க உருகி உருகி எங்களை அழகா அலங்காரம் பண்ணிக்கிட்டு... மயக்கறதுக்காக ஒன்னும் இங்க நாங்க வரல. என்னோட திறமை ..
எனக்கான வேலை வாய்ப்பு கிடைத்தது.
சோ இது நான் வேலை பாக்குற இடம்... என்னோட டேலண்ட்ட நான் ப்ரூவ் பண்ணனும். அவ்வளவு தானே தவிர உங்ககிட்ட வந்து இளிச்சு பேசிட்டு இருக்க இல்ல ... அதே சமயம் உங்க கூட சண்டை போடுறதுக்கும் நான் இங்க வரல...
ன
அதே மாதிரி இங்க தான் வேலை செய்யணும் அங்க தான் வேலை செய்யணும்னு சொல்ற உரிமை வேணா உங்களுக்கு இருக்கலாம். ஆனா என்னைய கட்டாயப்படுத்துவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்கு எங்க வேலை செய்யணும்னு தோணுதோ அங்க தான் நான் வேலை செய்வேன. இஷ்டம் இருந்தால் என்னை வைத்து உங்கள் வேலைகளை செய்து கொள்ளுங்கள். இல்லையா என்ன ரிசைன் பண்ணிடுங்க நான் வெளியே போறேன்.
அப்புறம் எதற்கு என்னை வெளியே போ சொல்ற ... நீ தான் வம்படியா என்னைய இங்க வா னு சொன்ன.. அதுவும் பொண்டாட்டி வாம்மா அப்படின்னு... இப்ப என்ன ஆச்சு புருஷா வெளில போக சொல்ற?... பொண்டாட்டி கிட்ட பயம் வந்துருச்சா... இன்று அவனின் வார்த்தையில் கோபமாக பேச ஆரம்பித்தாலும் அவனை பொறுக்கி நாயே என்று சொன்னது தவறு என்பதால் விளையாட்டாக பேசி அப்படியே அமைதியாக அவனை சீண்டி விட்டாள் சஞ்சனா.
சனாதனும் வார்த்தை போரில் கோபத்தை மறந்து.. ஏய் இராட்சசி ஏன் டி இப்படி பண்ற... நான் தான் பொறுக்கி நாய் ஆச்சே... எதற்கு என்னுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். உனக்கு விருப்பப்படி உன்னுடைய பழைய ஆஃபீஸ்க்கு சென்று போய் வேலையை பார். நான் இதை கோபத்தில் சொல்லவில்லை. உன்னை கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் சொல்கிறேன் என்று, வேகமாக பேச ஆரம்பித்து நிதானமாக சொல்லி முடித்தான் சனாதன்.
சனாதன் பேச்சில் இருந்தே அவன் அந்த வார்த்தையால் எவ்வளவு காயப்பட்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சஞ்சனா..
தன்னிடத்தில் இருந்து கோபத்தில் சற்று தள்ளி நின்று இருந்தவனை... தன் பக்கம் திருப்பி சாரி சனா... என்ன இருந்தாலும் உன்னை பார்த்து அந்த வார்த்தை நான் சொல்லி இருக்கக் கூடாது.... சாரி சனா நான் வந்து ஒரு வேகத்துல சொல்லிட்டேனே தவிர... சத்தியமா உன்னை அந்த மாதிரி நான் நினைச்சு பேசவே இல்ல புரிஞ்சுக்கோ.
ஏனோ உன்னை பார்த்ததில் இருந்தே எனக்குள் சில தடுமாற்றங்கள்... அதை சமாளிப்பதற்காகவும்.. என்னுடைய ஈகோவை விட்டுக் கொடுக்க கூடாது... அப்படிங்குற ஒரு வேகத்திலும் அந்த வார்த்தையை நான் சொல்லிட்டேன். அப்படி சொன்னது மிகவும் தப்பு தான். ஐ அம் எக்ஸ்ட்ரீமிலி சாரி... சனா... இன்று மிகவும் அமைதியாக அதே சமயம் தான் சொன்ன வார்த்தை தன்னை காயப்படுத்தி இருக்கு என்பதை உணர்ந்து அவளும் மன்னிப்பு கேட்க இப்பொழுது அவனும்...
சஞ்சனாவிடம் நெருங்கி... சாரி சனு... நானும் உன்னை பார்த்த நாளில் இருந்து எனக்குள்ளும் ஏதோ சில சில தடுமாற்றங்கள். அதை எப்படி எக்ஸ்போஸ் பண்ணுவது என்று தெரியாமல் தான்.. நானும் உன்னிடம் தவறாக பிகேவ் பண்ணிட்டேன். நீ என்னை பொறுக்கி நாயே என்று சொல்லிய பிறகு தான் நான் உன்னை எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி இருக்கிறேன் என்று தெரிந்தது.
உனக்கு தெரியுமா இன்று நான் செய்த செயல் மட்டும் என் அம்மாவிற்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள். அதை நினைத்து தான் நீ சென்ற பின்பு ... நீ வந்து என்னை மறுபடியும் அறையும் வரையில் என் மனதில் அவ்வளவு பாரமாக இருந்தது. அதனால் தான் சத்தியமா அந்த நிமிஷத்துல இருந்து நீ மறுபடியும் இங்கு வரும் வரை எனக்கு வேற எதுவுமே சிந்தனையில் இல்லை. என் அம்மாவின் வளர்ப்பு தப்பாக போய்விட்டதா என்று தான் அவ்ளோ வருத்தத்தில் இருந்தேன்.
நீ வந்து அறைந்தது எங்கள் அம்மாவே வந்து என்னை அறைந்தது போல் இருந்தது.. அதனால்தான் நீ என்னை அடித்ததும் எனக்கு சிறிதும் கோபமும் வரவில்லை வருத்தமும் வரவில்லை நான் உன்னிடம் ஏன் மன்னிப்பு கேட்டேன் என்று கூட நீ யோசித்து இருப்பாய் தானே முழுக்க முழுக்க நான் செய்த தவறு எனக்கு புரிந்தது அதைவிட என் அம்மாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும்??.. என்று தான் நான் மிகவும் பயந்தேன் என்று சொல்பவனை சிறுபிள்ளை போல் பார்த்துக் கொண்டே இருந்தால் சஞ்சனா.
அவன் பேசிக் கொண்டே போக அவரின் வாயில் கையை வைத்து போதும் இதற்கு மேல் நீ ஒன்னும் பேச வேணாம்.. இந்த நிமிடத்தில் இருந்து நீயும் நானும் ஃபிரண்ட்ஸ் ஓகேவா என்று தன் கையை அவன் முன் நீட்டினாள் சஞ்சனா...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...