• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
53
47. சஞ்சனாவின் சனா அழைப்பை கவனிக்கும் சனாதன்...

இருவரின் மோதலையும் சரியாக கணிக்கும் மிதுன்.

சனாதன் ஒன்றும் சிறு பிள்ளை கிடையாது ... அவன் வீட்டிற்கு வந்து விடுவான். நீ கவலைப்படாதே மா. நீயே ஏற்கனவே இன்று வீட்டிற்கு தாமதமாக தான் வந்து இருக்கிறாய் . அதனால் நீ ஓய்வெடு என்று சொல்லி விட்டு மிதுனும் ருத்ராவும் சேர்ந்து தங்கள் காரில் சென்று விட...

வீட்டில் இருந்த சஞ்சனாவிற்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தன்னால் தான், அவன் இன்னும் வீட்டிற்கு செல்லாமல் இருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டு மனம் பரிதவிப்பில் இருக்க சரி இதற்கு மேல் இங்கு இருந்தால் சரி வராது என்று ஒரு முடிவோடு புவனாவிடம் சொல்லி விட்டு... இந்த நேரத்தில் இங்கு செல்கிறாய் என்று அவள் ஏதேனும் கேள்விகளை கேட்பதற்கு முன்பு சிட்டாக பறந்து இருந்தாள் தனது பைக்கில் சஞ்சனா.

எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக அவள் அலுவலகத்திற்கு வந்து அடைந்தாள்.

அவள் வந்த வேகத்தை பார்த்து செக்யூரிட்டியே என்ன சஞ்சனா... இப்பொழுது தான் சார் இருவரும் இந்த பக்கம் செல்கிறார்கள்... அவர்களுடன் போன் பேசிக் கொண்டு இருந்த நீ,... இவ்வளவு சீக்கிரம் இங்கு வந்து நிற்கிறாய் என்ன விஷயம் என்று கேட்டார் செக்யூரிட்டி.

அண்ணா நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது அதற்கான பதில் உள்ளே இருக்கிறது. எனக்கு கொஞ்சம் வேலையும் இருக்கிறது... அதோடு தனசாரம் வீட்டுக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள் அவர் வருவதற்குள் நான் காலையில் வேலைகளை முடித்து வைக்க வேண்டும் ஏற்கனவே காலையில் என்னை அவர் திட்டி விட்டார். அதனால் கொஞ்சம் நான் வேலை செய்து கொள்கிறேன். நீங்கள் அவர் அறையை மட்டும் திறந்து விட்டு செல்லுங்கள் என்று அவரை அனுப்ப நினைக்க.. சரியாக அவருக்கும் போன் வரவும் சரி என்று வேறு ஏதும் பேசாமல் அறையின் சாவியை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

அறையைத் திறந்து விளக்குகளை ஒளிர விட்டு சென்று விட்டார் செக்யூரிட்டி...

அவர் சென்றதும் கேபினை மூடி விட்டு... சனாதனனின் பர்சனல் அறையை திறந்து பார்க்க.... இருட்டாக இருந்தது அதே சமயம் கேபினில் இருந்த வெளிச்சம் அங்கு பட... ஸ்விட்ச் தேடி ஸ்விட்ச் ஆன் பண்ணியவள்... அதிர்ந்துதான் போனாள்.

ஆமாம் காலையில் அவள் போகும் போது எப்படி அமர்ந்து இருந்தானோ... அப்படியே அமர்ந்து இருந்தான்... உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து இருக்க... தன்னால் அவனின் இதழுக்கு ஆன காயம் கூட காய்ந்து.. ரத்தம் கருப்பாக உறைந்து போய் இருந்தது. ஆனால் அவன் மட்டும் உயிர் உள்ள பொம்மை அமர்ந்து இருப்பது போல் அமர்ந்து இருந்தான்.

அந்த நிலையில் சனாதனை பார்த்தவளுக்கு முதலில் கோபம் தான் வர, நேரே அவன் அருகில் சென்றவள் பளார் என்று அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்தாள்.

சஞ்சனா வைத்த அறையில் தான் தன் சுயம் வந்தவன்... தன் எதிரில் இருக்கும் சஞ்சனாவை பார்த்து சாரி என்று சொல்லி விட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து வெளியே சென்றான். அறைக்குள் இருந்த விளக்குகளின் வெளிச்சமும்... தன் உடம்பில் இருந்த வியர்வையும் வைத்து தான் தெரிந்து கொண்டான், இப்பொழுது நேரம் என்னவாக இருக்கும் என்றும், தான் எவ்வளவு நேரம் இப்படி அமைதியாக உட்கார்ந்து இருந்தோம் என்பதனை உணர்ந்தவன்..

தலையில் கையை வைத்து வெளியில் இருந்த தனது சேரில் வந்து அமர்ந்தவன்... இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் .... அமைதியாக கண்களை மூடி சீட்டில் அமர்ந்து இருந்தான்.

அவன் அப்படியே இருளில் சுயம் இல்லாமல் அமர்ந்து இருக்கவும், அதுவும் அவன் இருந்த கோலம் கண்டு தான் பதட்டத்தில் அவனை அடித்து இருந்தாள் சஞ்சனா.

ஆனால் அவன் அடுத்த நொடி தன்னை அடிப்பான் இல்லை திட்டுவான் என்று எதிர்பார்க்க அவனும் அமைதியாக மன்னிப்பு கேட்டு விட்டு, வெளியில் சென்றதை நினைத்து ஒரு நொடி சஞ்சனாவும் குழம்பி தான் போனாள்.

பிறகு சுதாரித்துக் கொண்டு வெளியில் வந்து பார்க்க... அவனோ தலையில் கை வைத்தவாறு தனது சேரில் அமர்ந்து இருப்பதை பார்த்தவள் மனதிற்கு ஏதோ செய்ய...

அவன் அருகில் சென்று மெதுவாக மிகவும் மெதுவாக சனா என்று அழைத்தாள்.

ஆனால் அவள் அழைப்பது தெரிந்தாலும் அமைதியாகவே தலை குனிந்து அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு தான் அழைப்பது கேட்டும் அவன் தலை குனிந்து அமர்ந்திருப்பது ஒரு நிமிடம் வருத்தமாக இருந்தாலும், மறு நிமிடம் கோபம் வர... அவன் அருகில் சென்று இப்ப என்ன ஆச்சு??? இப்ப எதற்கு இப்படி உட்கார்ந்து இருக்க??!!!?? முதலில் முகத்தை கழுவிக் கொண்டு வா என்று அவனை பிடித்து எழுப்பி மறுபடியும் அவனுடைய பர்சனல் அறையில் இருக்கும் பாத்ரூமுக்குள் தள்ளி விட்டு வெளியே வந்தாள்.

அவள் பேசியதில் முழுவதுமாக இயல்புக்கு வந்தவன்... பாத்ரூமில் இருக்கும் சிறிய கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு... அடியே ராட்சசி... என்ன டி இப்படி கடித்து வைத்து இருக்கிறாய்... உன்னை இதற்கு நான் சும்மா அனுப்பி வைத்தால் நன்றாகவா இருக்கும், உன்னை என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு... முகங்களை கழுவி விட்டு உதட்டையும் நன்றாக கழுவி விட்டு... காய்ந்து போய் இருந்த ரத்தத்தை எல்லாம் சுத்தமாக துடைத்து விட்டு, காயத்தில் பெரிதாக வலி ஒன்றும் இல்லை என்றாலும் ஐஸ்கட்டி எடுத்து உதட்டில் வைத்து விட்டு...

முகம் மட்டும் இல்லாமல் தன்னையே சுத்தப்படுத்திக் கொண்டவன்... வெளியில் வந்து தன் அறையில் இருக்கும் எக்ஸ்ட்ரா உடையை எடுத்து அணிந்து கொண்டவன்... ஒரு ட்ரக் பாண்டும் ஸ்போர்ட்ஸ் வேர் பனியனும் ஆக வெளியில் வந்தான்.

உள்ளே சென்றவனுக்கும் இப்போது வெளியில் வந்தவனுக்கும் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் ஆறு வித்தியாசங்கள் என்பது போல்.. ஆளை மயக்கும் பர்பியும் வாசனையில் வெளியில் வந்தவனை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றால் சஞ்சனா.

அவளின் தடுமாற்றங்களை உள்ளுக்குள்ளே ரசித்தாலும் வெளியில் மிகவும் கேஷுவலாக அவன் அவளின் அருகில் வந்து நின்றான்.

அவன் தன் அருகில் வரவும்.... இவ்வளவு நேரமும் இருந்த தைரியம் எங்கே போனது என்று தெரியாமல் காணாமல் போக...

ச.....சன்.... னாஆஆஆ... சனா என்று திக்கி திணறி வாயில் வெறும் காற்று மட்டும் வருவது போல் பின்னாடியே போய் கொண்டு இருந்தாள்.

அவள் திணறி திணறி பேசும் போது தான் கவனித்தான்.. தன்னை எப்பொழுதும் அவள் சனா என்று அழைப்பதை... அனைவரும் தன்னை தனா என்று அழைக்க, இவள் மட்டும் என்ன சனா என்று கூப்பிடுகிறாள். சனா என்று அழைப்பு பெண்களை அழைப்பது போல் அல்லவா இருக்கும் என்று யோசித்துக் கொண்டே அவனும் முன்னேறிச் செல்ல அவளோ சுவற்றில் இடித்து சாய்ந்து நின்றாள் சஞ்சனா.

இவ்வளவு நேரமும் மனதில் எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் அவளை பயமுறுத்துவதற்காக மட்டுமே அப்படி வந்தவன்.... இவ்வளவு அருகில் அவளின் இதழை பார்க்கும் பொழுது அவள் கடைசியாக சொல்லி விட்டு சென்ற பொறுக்கி நாயே என்ற வார்த்தை தான் மனதிற்குள் வந்து போனது...

.....

காரில் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த மிதுனும், ருத்ராவும் எங்கு செல்வது என்று தெரியாமல் கார் போன ... கை போன போக்கில் போய்க்கொண்டு இருந்தார்கள்.

சிறிது நேரம் அமைதியாக வந்தாலும் அவன் எங்கே சென்று இருப்பான் என்று யோசித்துக் கொண்டே வர... மிதுன் ருத்ராவை பார்க்கும் போது ருத்ரா ஏதோ ஒரு பதட்டத்தில் இருப்பது போல் தோன்றியது.

ருத்ரா நீ எதுவும் என்னிடம் மறைக்கிறாயா?... சனாதன் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல... நம் தனாவை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும் அவனுக்காக நீ இந்த அளவுக்கு பதட்டப்பட மாட்டாய். ஆனால் அவன் வராததை நினைத்து ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய். முதலில் அவன் வராததை நினைத்து தான் நீ இவ்வளவு பதட்டப்படுகிறாயா என்ன??!!! ஒழுங்காக சொல் என்று கேட்டான் மிதுன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ருத்ர நீ நினைப்பது போல் நான் பதட்டமாக தான் இருக்கிறேன்.அதே சமயம் நம் தனாவிற்கு எந்த பிரச்சனையும் வராது என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த இடம் என்ன இருந்தாலும், இது புது ஊர், புது ஏரியா... நாம் பழக்கப்படாத இடம் அதனால் கொஞ்சம் தடுமாற்றம் அவ்வளவு தான் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தான்.

அப்பவும் நம்பாத மிதுன் இதில் இன்னும் வேறு ஏதோ இருக்கிறது... தெளிவாக முழுமையாக விஷயத்தை சொல். அப்பொழுது தான் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியும் என்று மிதுன் சற்று கண்டிப்பாக குரலில் கேட்டான்.

இதுவரை ஒரு நண்பனை போல் இருந்த தன் அண்ணனின் குரல் மாற்றத்திலேயே அவனது கோபத்தை தெரிந்து கொண்ட ருத்ரா..

அண்ணா அதாவது அதுதான் அந்த கவிப்பிரியா பிரச்சனை இருக்கிறது அல்லவா என்று ... அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே...

அது தான் கமிஷனர் ஆபீஸில் வைத்து கமிஷனரே அந்த பிரச்சினையை முடித்து வைத்து, முடிந்து போய் விட்டதே அப்புறம் என்ன டா என்று கேட்டான் மிதுன்.

அண்ணா அது வந்து அங்க பிரச்சனை முடிந்து விட்டது ஆனால் அதற்கு பிறகு என்னுடைய போனிற்கு சில வீடியோக்களும் போனும் வந்தது என்று... தனக்கு வந்த ஃபோன் கால்ஸ், வீடியோ அனைத்து விஷயங்களையும் கூறி அதை சனாதனிடம் கூறியதையும் சொன்னான்...

அதற்கு சனாதன் நானே பார்த்துக்கொள்கிறேன். இந்த விஷயத்தை பற்றி நீ எதுவும் கவலைப்படாதே என்று சொல்லி விட்டு சென்றான் என்றும் சொன்னான் ருத்ரா...

அட ஏன் டா ... நீ வேற... இது தான் விஷயமா? நான் கூட ஏதோ என்று பயந்து விட்டேன். அவனுக்கு இந்த விஷயம் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அந்தப் பிரச்சினை எல்லாம் காலையிலேயே அவன் முடித்து வைத்து இருப்பான்.

எனக்கு என்னமோ இந்த பிரச்சனையும் வேறுவிதம் என்று தோன்றுகிறது... என்று சொன்னால் மிதுன்.

இவ்வளவு நேரமும் பயத்தில் இருந்தவன் அண்ணா என்று பேசிக் கொண்டு இருந்தான் ... ஆனால் மிதுனின் பேச்சை கேட்ட பிறகு பயம் தெளிந்தவன்.. இப்போது பழையபடி என்ன சொல்ற மிதுன் என்று கேட்டான் ருத்ரா...

ஆமாம் ருத்ரா.. எனக்கு தெரிந்து சஞ்சனா வீட்டிற்கு தாமதமாக வந்ததற்கும் இந்த தனா இன்னும் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் இருப்பதற்கும்... இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனை என்று தான் தோன்றுகிறது...

அப்படியா சொல்ற...
இணைந்திருங்கள்
சொல்லவா ... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top