- Thread Author
- #1
46. சனாதனை தேடும் மிதுன், ருத்ரா...
சனாதனை காண வரும் சஞ்சனா...
மிதுன் அழகியை பற்றி தெரிந்து கொண்ட பின்பு.. சரோஜா வெளியில் வர, அனைவரையும் சாப்பிட அழைத்து சாப்பிட சொன்னாள் அழகி.
அது போலவே சனாதன் மட்டும் வீட்டிற்கு வராமல் இருக்க, அவன் வந்த பிறகு சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லி அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.
சாப்பிட்டு முடித்ததும் வழக்கமாக மிதுன் அழகியிடம் பால் கொண்டு வருமாறு சொல்ல...
அண்ணா அவளுக்கு உடல்நிலை சரியில்லை. அதோடு இரவு உணவும் சமைத்து இருக்கிறாள். மிகவும் சோர்வாக தெரிகிறாள். நான் போய் அனைவருக்கும் பால் காய்ச்சி எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு கர்ணா கிச்சன் நோக்கி சென்றான்.
அவன் செல்வதை பார்த்து விட்டு அழகியும் அவன் பின்னே சென்றாள்.
சரோஜாவும் மிதுனும் சரி என்னவாவது செய்யட்டும்.. அனைவருக்கும் பால் இன்று வந்து கிடைத்த மாதிரி தான் என்று நினைத்து சிரித்துக் கொண்டே அவரவர் ரூமிற்கு சென்றார்கள்.
லிபின், ருத்ரா இருவரும் கூட அவரவர் ரூமிற்கு சென்று விட்டார்கள்.
அறைக்கு வந்த மிதுன் சனாதனுக்கு போன் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தான்.. முதல் இரண்டு முறை ஃபோன் சென்று முழுதாக கட் ஆகும் போது.. டிரைவிங்ல இருப்பதால் கூட எடுக்காமல் இருப்பான் என்று நினைத்து அமைதியாக சிறிது நேரம் இருந்தான் மிதுன்.
ஆனால் நேரம் கடந்து கொண்டே இருக்க.. மனதிற்கு எதுவும் சரியில்லை என்று தோன்ற மறுபடியும் கால் செய்து பார்த்தான் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.
சரி இதற்கு மேல் தாமதிக்க வேண்டாம் தன் தம்பிகளிடம் சொல்லி விட்டு அவன் ஆபீஸ் வரை சென்று வருவோம் என்று வெளியில் வந்தவன்... கர்ணா அழகி தோட்டத்து பக்கம் செல்ல, அவள் பின்னே அவனும் சென்றதை பார்த்து விட்டு, சரி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ருத்ராவை காண சென்றான்.
ருத்ரா அறைக்குள் மிதுன் சரியாக உள்ளே நுழையும் போது ருத்ராவுக்கு புவனாவிடம் இருந்தும், மிதுனுக்கு மிதுனாவிடம் இருந்தும் போன் வந்தது.
இருவருமே ஒருவருக்கொருவர் தங்களது மொபைலில் வந்த பெயரை மற்றவருக்கு காட்டிக்கொண்டு அட்டென்ட் செய்து பேசினார்கள்.
இருவரும் ஹலோ என்று சொன்ன அடுத்த வினாடி சார் தனா சார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா... அவருக்கும் போன் போகவில்லை... சஞ்சனாவுக்கும் போன் போகவில்லை... சஞ்சனா இன்னும் வீட்டிற்கு வரவில்லை அவராவது அங்கு வீட்டிற்கு வந்து இருக்கிறாரா???.. என்று இருவரும் சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரி கேள்விகளை கேட்டுக் கொண்டு இருக்கும் சமயம் சரியாக... அவர்கள் வீட்டிற்குள் சஞ்சனாவின் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, ஓகே சார் சஞ்சனா வந்துட்டா என்று சொல்லி விட்டு எதிரில் இருப்பவர் ஏதேனும் பதில் சொல்ல வருகிறார்களா இல்லையா? என்று கேட்க கூட இல்லாமல் போனை கட் செய்து விட்டு இருவரும் வெளியே சென்றார்கள்.
இப்போது மிதுன்... சஞ்சனா வீட்டுக்கு வந்துட்டா... அப்ப சனாதனும் வீட்டுக்கு வந்து விடுவானா??.. என்று தனக்குள் கேட்டுக்கொண்டே ருத்ரனிடம் சனாதன் போன் எடுக்காத விஷயத்தையும்... பிறகு மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வருவதையும் சொன்னான்.
புவனாவும் மிதுனாவும் கால் செய்து பேசி கொண்டு இருக்கும் போதே சஞ்சனா அங்கு வந்து விட்டாள் என்று தெரிகிறது.. அப்ப சிறிது நேரம் வெயிட் செய்து பார்ப்போம் தனா வருகிறானா இல்லையா என்று சொல்லி கொண்டே இருவருமே ருத்ர அறையிலேயே அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால் நேரங்கள் தான் கடந்ததே தவிர.. சனாதன் வீட்டிற்கு வந்த படியாக இல்லை.. சரி டா இதற்கு மேல் தாமதிக்க வேண்டாம். வா நாம் இருவரும் சென்று அவனுடைய ஆபீஸ் வரை போய் பார்த்து விட்டு வருவோம் என்று கிளம்பினார்கள்.
அலுவலகத்திற்கு வந்து பார்க்க அலுவலகத்திற்கு வாசலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி தங்களின் முதலாளியின் கார் இந்த நேரத்தில் வருவதை பார்த்து விட்டு வேகமாக வந்து கதவை திறந்து விட்டார்.
சனாதன் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டானா என்று அங்கு இருந்த செக்யூரிட்டி கிட்ட ருத்ரா கேட்டான்.
சார்... சார் எப்போது வெளியே கிளம்பினார் என்று தெரியாது. நான் கவனிக்கவில்லை சாரி இப்போது எல்லாம் பைக்கில் வருவதால் அவர் சிறிய கேட் வழியாகவே சென்று விடுகிறார்.. அதனால் அலுவலகத்தில் ஃபுல்லா ஒரு முறை செக் செய்து விட்டு எல்லாரும் சென்ற பிறகு கேட்டை பூட்டி விட்டேன் என்று சொன்னார்.
ஓகே எதுக்கும் ஒரு முறை ஆபீஸ் திறந்து விடுங்கள்.. நாங்கள் தனா அறைக்கு சென்று பார்க்க வேண்டும் என்று சொல்லவும், செக்யூரிட்டியும் வந்து அறைகளை திறந்து
சனாதனனின் அறையை திறந்து காட்டினார்.
உள்ளே சென்று விளக்குகளை போட்டு விட உள்ளே அவனுடைய மொபைல் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகி அங்கு இருந்த சேரில் இருந்தது.
என்ன தனாவின் போன் ஒன்னு டேபிள் மீது இருக்க வேண்டும் இல்லை என்றால் அவன் கையில் இருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் இந்த சேரில் எப்படி இருக்கிறது.
ஒருவேளை எங்கேயும் அவசரமாக செல்லும் போது தெரியாமல், இங்கு தவறுதலாக விட்டு சென்று விட்டானோ???.. என்று ருத்ரா கேட்க...
மிதுன் மனதிற்கு எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது என்று பயமாக இருந்தது.
சரியாக அந்த நேரம் சஞ்சனா மிதுனுக்கு கால் செய்ய...
சொல்லு சஞ்சனா ஏன் இவ்வளவு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தாய் என்று எடுத்த உடனே மிதுன் தன் கேள்வியைக் கேட்டான்.
சார் கொஞ்சம் பர்சனல் பிராப்ளம்ஸ் அதனால வெளில போயிருந்தேன். பட் என்னோட போன்ல சார்ஜ் இல்ல அதனால இன்பார்ம் பண்ண முடியல. நான் வீட்டுக்கு சேஃபா வந்துட்டேன் சார். ஆனா அதற்குள் உங்களுக்கும், ருத்ரா சாருக்கும் போன் பண்ணி இவர்கள் இந்த நேரத்தில் தொந்தரவு செய்து விட்டார்கள் அதற்கு தான் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று கால் செய்தேன். ருத்ர சார் பக்கத்தில் இருந்தால் அவரிடமும் சொல்லுங்கள் சார் என்று சொன்னாள். இந்த இரவு நேரத்தில் தொந்தரவு செய்வதற்கு மன்னித்து கொள்ளுங்கள் சார் என்று சொன்னாள் சஞ்சனா.
சஞ்சனா ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் சேஃப்பாக வீட்டிற்கு வந்து விட்டீர்கள் தானே..
ஆமாம் சார் ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் வீட்டிற்கு வந்து விட்டேன். ஓகே குட் நைட் சார். நான் போனை வைத்து விடவா என்று கேட்டாள் சஞ்சனா.
சஞ்சனா தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களிடம் ஒன்று கேட்கலாமா என்று கேட்டான் மிதுன்.
கேளுங்கள் சார் என்ன விஷயம் என்று கேட்டாள் சஞ்சனா.
இல்லை நீங்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது என்ன நேரம்??.. எந்த நேரத்தில் கிளம்பினீர்கள்??.. அப்போது அலுவலகத்தில் சனாதன் இருந்தானா என்று கேள்விகளை கேட்டான் மிதுன்.
ஒரு நொடி காலையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தாலும்.. அதை புறம் தள்ளி விட்டு, நான் அலுவலகத்தில் இருந்து வெளியில் வரும் பொழுது அங்கு தான் இருந்தார் என்று சொன்னாள் சஞ்சனா.
ஓகே சஞ்சனா தனாவின் போன் அலுவலகத்திற்குள்.. அதுவும் அவன் கேபினில் அவன் சேருக்கு ஆப்பனட் சேரில் இருக்கிறது. ஆனால் அவனை காணவில்லை. சரி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போனை வைக்க போகும் சமயம்....
சார் ஒரு நிமிடம் நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்டாள் சஞ்சனா.
ஐயோ சஞ்சனா அவன் என்ன சிறு பிள்ளையா?.. அவனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவன் வந்து விடுவான் நீங்களே நேரம் கழித்து தான் வீட்டிற்கு வந்து இருக்கிறீர்கள்... சோ.. டேக் ரெஸ்ட் என்று சொல்லி விட்டு போனை கட் செய்தான் மிதுன்.
சஞ்சனாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லை... என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆண். அவன் ஏதோ கோபத்தில் செய்தான் என்றால் பதிலுக்கு நானும் அப்படி செய்து இருக்கக் கூடாது. அதுவும் மிகவும் வன்மையாக வேறு செய்து விட்டேன்... ஒருவேளை இன்னும் அவன் அந்த அறையிலேயே இருக்கிறானோ... ஐயோ உடனே மிதுன் சார் கிட்ட போன் செய்து சொல்லலாமா என்று போனை கையில் எடுத்தவள்...
ஐயோ என்னன்னு சொல்வது... இப்படி சொல்வது என்று தடுமாறிக் கொண்டு... சரி அலுவலகத்திற்கே செல்வோம் என்று மிதுனாவிடம் சொல்லி விட்டு செல்லலாம் என்றால் அவள் கேள்விகள் கேட்டுக் கொல்வாள் என்பதால், நேரே புவனாவிடம் மட்டும் சொல்லி விட்டு, ஆனாலும் அவளும் அடுத்த ஏதேனும் கேள்விகளை கேட்பதற்கு முன், நான் இப்ப வந்து விடுகிறேன் என்று வேகமாக தன்னுடைய பைக்கில் பறந்து சென்றாள் அலுவலகத்தை நோக்கி.
சஞ்சனா அலுவலகத்தை அடையும் பொழுது... செக்யூரிட்டியிடம் சொல்லி விட்டு அங்கு இருந்து அப்போது தான் மிதுன் ருத்ரா இருவரும் காரில் கிளம்பி இருந்தார்கள்.
செக்யூரிட்டி சஞ்சனாவை பார்த்து விட்டு, என்ன மேடம் இப்போ சிறிது நேரத்துக்கு முன்பு தான் ... மிதுன் சார் உங்களுக்கு ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தார். அதற்குள் இங்கு வந்து விட்டீர்கள் என்று ஆச்சரியமாக கேட்டான்.
அண்ணா அது எல்லாம் அப்புறம் இருக்கட்டும்... முதலில் சார் இருவரும் கிளம்பி விட்டார்களா? என்று கேட்டாள் சஞ்சனா.
நீங்கள் இந்த பக்கம் வருகிறீர்கள் அவர்கள் இந்த பக்கம் இப்பொழுது தான் போகிறார்கள் என்று சொன்னான் செக்யூரிட்டி.
ஓகே கொஞ்சம் தப்பா எடுத்துக் கொள்ளாமல் சனா சார் சாரோட கேபின் திறந்து விடுங்கள் என்று சொன்னாள்.
இப்போது தான் திறந்து பார்த்தார்கள், பெரிய சாரும், சின்ன சாரும் ஆனால் அங்கே நம்ம சார் இல்லையே சஞ்சனா மா என்று சொன்னார் செக்யூரிட்டி.
இருக்கட்டும் அண்ணா எனக்காக ஒருமுறை திறந்து விடுங்கள். நான் நாளைக்கு ஒரு முக்கியமான பைலை அங்க வைத்து விட்டேன். ஏற்கனவே காலையில் சனா சார் என்னிடம் கோபமாக பேசினார். இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர் நாளை காலையில் சீக்கிரமாக வருகிறாரா? இல்லை லேட்டாக வருகிறாரா தெரியவில்லை? காலையில் நேரத்தோடு மீட்டிங் இருக்கு அனைத்தையும் தயார் செய்து வைக்க வேண்டும் ... ப்ளீஸ் என்று சொல்லிக் கொண்டு செக்யூரிட்டியை அழைத்துக் கொண்டு ஆபீஸ் உள்ளே சென்றாள் சஞ்சனா.
அவரும் கதவை திறந்து விட சஞ்சனாவின் நல்ல நேரமா? இல்லை சனாதனின் நல்ல நேரமா தெரியவில்லை சரியாக செக்யூரிட்டிக்கு போன் வரவும்...
நான் பைலை எடுத்துக் கொண்டு நானே பூட்டிவிட்டு வருகிறேன் நீங்கள் போங்க அண்ணா என்று சொல்லி, செக்யூரிட்டி அனுப்பி வைத்து விட்டு கதவை க்ளோஸ் பண்ணி விட்டு..
சனாதனனின் பர்சனல் அறையை திறந்து பார்க்க ஒரே இருட்டாக இருந்தது. ஆனால் கேபினில் இருந்த வெளிச்சத்தில் அறையில் ஸ்விட்ச் பாக்ஸ் தேடி ஸ்விட்சை போட...
அங்கு....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...