• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
51
45. மிதுனின் கோபமும் .. சரோஜாவின் விளக்கமும்...


அலுவலகத்தில் இருந்து வந்த மிதுன்.. தன் அறைக்கு சென்று சுத்தப்படுத்திக் கொண்டவன் கீழே வந்து தன் அத்தை கொடுத்த காபியை குடித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து தன்னுடைய ஃபிரண்ட்ஸ் அனைவருக்கும் சாட்டிங் செய்து கொண்டு இருந்தான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக தன்னுடைய சிநேகிதர்கள் அனைவரிடமும் சேட்டிங்கில் பேசிக் கொண்டு இருந்தவன்.. எதார்த்தமாக திரும்ப அழகியின் அறையில் இருந்து சிரித்த முகமாக தன் தம்பி வெளியில் வருவதை பார்த்தவன்....

தன் நண்பர்கள் அனைவருக்குமே தற்சமயம் ஓகே டா ஒரு முக்கியமான பிசினஸ் மீட் இருக்கிறது என்று பொய் சொல்லி விட்டு அனைவரிடமும் இருந்து வெளியில் வந்தவன்...

தனக்குள் வரும் படபடப்பு .. கோபமா??? இயலாமையா???? இல்லை வருத்தமா¿¿¿¿ என்று தெரியாமல் பதட்டத்தோடு எழுந்தவன்... தன் தம்பியை கர்ணாவை பார்ப்பதற்காக அவன் அறைக்கு செல்ல போகும் சமயம் அங்கு வந்த சரோஜா...

மிதுன் கண்ணா என்ன ஆயிற்று? ஏன் இவ்வளவு படபடப்பு?.. என்ன ஆச்சும்மா எதுவும் பிரச்சனையா என்று கேட்டார்.

அத்தை உங்களிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் உங்களிடம் சொல்லாமலும் என்னால் இருக்க முடியாது. நம்ம கர்ணா என்ன செய்கிறான் என்று எனக்கு புரியவில்லை... அவன் ஏதும் தவறு செய்கிறானோ என்று மனதிற்குள் சிறு படபடப்பு உருவாகிறது என்று பதட்டமாக பேசியவனை கண்டு...

கர்ணா அழகியின் அறையில் இருந்து வெளியேறுவதை பார்த்து தான் மிதுன், இந்த அளவுக்கு பதட்டமும் படபடப்பும் கொள்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட சரோஜா மிதுனை தன் அறைக்கு அழைத்துச் சென்றார் சரோஜா.

அத்தை என்ன அத்தை... நீங்கள் என்னை இங்கு தனியாக அழைத்து வருவதை பார்த்தால், உங்களுக்கு எதுவோ விஷயம் தெரியும் என்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் எனக்கு படபடப்பாக இருக்கிறது என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லுங்கள் என்று கேட்டான் மிதுன்.

நீ சொல்வது சரி தான் மிதுன்... நம்ம கர்ணா என் மகள் மெய்யழகியை விரும்புகிறான் என்று சொன்னார் சரோஜா.

அத்தை அவன் அழகிய விரும்புவது எனக்கு மிகவும் சந்தோஷம் தான் அத்தை. அவன் என்னை விட 5 வயது சிறியவனாக இருந்தாலும் அவனுக்கும் வயது 25 ஆகிவிட்டது... நான் அதற்கெல்லாம் தடை சொல்ல மாட்டேன், தடையும் சொல்லவில்லை.

நான் கோபப்படுவது... நான் இங்கு வந்து அமர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது... நான் வந்த பிறகு கர்ணா இந்த பக்கம் வரவே இல்லை. அப்ப நான் வருவதற்கு முன்பே அவன் அழகி அறைக்கு சென்று இருக்கிறான். இது என்ன பழக்கம் அத்தை. இருவரும் அங்கே எந்த தப்பும் செய்து இருக்க மாட்டார்கள்... ஆனால் இவனுக்கு எங்க போச்சு புத்தி, இங்கு நாம் மட்டும் இல்லை... வேலைக்காரர்கள் தான் அதிகம்.

அதுவும் ஊர்க்காரர்கள் தான் அதிகம் அப்படி இருக்கும் போது இவன் இப்படி இருந்தால், யாராவது ஒருவர் அழகியை பற்றி ஒரு சொல் தவறாக சொல்லிவிட்டாள் என்ன செய்வது...

அம்மாவிற்கு விஷயம் ஏதேனும் தவறாக யாராவது சொல்லி... அம்மா அப்படி யாரையும் சட்டு என்று விசாரிக்காமல் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனாலும் வீட்டுக்கு வர போகும் மருமகள் மீது யாரேனும் தவறாக பேசினால் அது அவருக்கு வருத்தமாக இருக்கும் தானே... அதற்கு தன் பையனும் ஒரு காரணம் என்று தெரிந்தால் அவரின் வளர்ப்பு நினைத்து வருத்தப்பட மாட்டார்களா என்று வருந்தினான் மிதுன்.

மிதுன் வருத்தத்தை பார்த்த சரோஜா மனதிற்குள் தன் அண்ணன் அண்ணி இருவரும் வெளிநாட்டில் சென்று வாழ்ந்தாலும் ...

தங்கள் பிள்ளைகளை எவ்வளவு பொறுப்புள்ளவர்களாகவும் நம் மரபு வழி படியும் வளர்த்து இருக்கிறார்கள் என்று பெருமையாக நினைத்து கொண்டு...

மிதுன் கண்ணா நீ பயப்படும் அளவிற்கு ஒன்றுமே நடக்கவில்லை. இங்கு வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் அனைவருமே அழகியை பற்றி நன்கு அறிந்தவர்கள் தான். அவள் பட்ட கஷ்டம் என்னவென்று இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் அவர்கள் அது பிரச்சினையை விட முதலில் அவளுக்காக தான் எழுதிக் கொள்வார்கள் அந்த அளவுக்கு நம் ஊர்க்காரர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்களை நீ கவலைப்பட வேண்டாம் அதேபோல் அவள் வாழ்வில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறேன் கேள் என்று...

அனைத்து விஷயங்களையும் எடுத்து சொல்லியவள்... இந்த விஷயங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே கர்ணாவிடம் சொல்லிவிட்டேன். ஏனென்றால் முதன் முதலில் அழகியை விரும்புவதாக முதலில் என்னிடம் வந்து தான் சொன்னான். நான் அப்பவே அவனிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டேன். அதே போல் அழகியும் அனைத்து விஷயங்களையும் அவனிடம் சொல்லிவிட்டாள்.... கர்ணாவும் அண்ணன்கள் திருமணம் முடிந்த பிறகு கண்டிப்பாக நான் அழகியின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வேன் என்று எனக்கு வாக்கு கொடுத்து இருக்கிறான்.

ஆமாம் நீ நினைப்பது போல் இந்த திருமணத்தில் அழகிக்கு உடன்பாடு இல்லை.‌ அவளுக்கு திருமணத்திலேயே உடன்பாடு இல்லை... அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு அவள் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று முடிவோடு இருக்கிறாள்.

அது மட்டும் இல்லாமல் அவளுக்கு இன்று காய்ச்சல் என்றும், காலையில் கர்ணா தான் பார்த்துக் கொண்டதும்... பிறகு அவன் வந்ததும் என்று அனைத்து விஷயங்களையும் எடுத்து சொல்லியவர்.. கர்ணா பக்குவப்பட்ட பையன் தான். ஏன் நீங்கள் அனைவருமே மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் தான் இருக்கிறீர்கள். பயப்படாதே அழகியை நல்ல முறையில் அவன் மீட்டுக்கு கொண்டு வருவான். அவளின் பயத்தை போக்கி அவளுக்காக அவன் இருப்பான். ஆனால் எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒன்று தான் அவனுடைய முதல் அண்ணனாக அவனுக்கு நீ உறுதுணையாக இருப்பாயா? இல்லை என் மகள் பட்ட கஷ்டத்திற்கு அவள் அவனுக்கு தகுதி இல்லை என்று எதுவும் நீ நினைக்கிறாயா என்று கேட்கும் போதே கண் கலங்கினார் சரோஜா.

அத்தை என்ன வார்த்தை சொல்கிறீர்கள்.. கர்ணா நாலாவதாக கல்யாணம் செய்து கொள்ளப் போவது என்னமோ உண்மை தான். ஆனால் எங்கள் வீட்டிற்கு வர போகும் முதல் மருமகள் என்ற உரிமையை முழுவதுமாக இப்பவே ஏற்றுக்கொள்ளப் போகிறவள் அழகி மட்டும் தான்.. என்று சொன்னவன்.. சரிங்க அத்தை நான் எதையுமே தனா கிட்ட ஷேர் பண்ணாமல் இருக்க மாட்டேன். அதனால் அவனிடம் சென்று அனைத்து விஷயங்களையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னான் மிதுன்.

இங்கு இப்படி ஒரு பாசப் போராட்டம் நடந்து கொண்டு இருப்பது தெரியாமல் வீட்டிற்கு தான் தான் முதல் மருமகளாக வரவேண்டும் ஒரு எண்ணத்தில் அங்கு ஒருத்தி திட்டங்கள் பலவற்றை தீட்டிக் கொண்டு இருந்தாள்....
நம்ம தானாவும் அன்று இரவு கர்ணாவிடம் அழகி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவனும் அருகில் நின்று கேட்டு இருக்கிறான். ஆனால் அவர்களுக்கு தெரியாது.. அனைவரும் இருக்கிறார்கள் என்று தான் போயிருக்கிறான் ஆனால் அழகி சொல்லும் விஷயங்களை கேட்க ஆரம்பித்த பிறகு, அங்கேயே நின்று கேட்டு விட்டு என்னிடம் வந்து காலையில் கேட்டான்.

நானும் இப்போது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் முதலில் அழகியும் கர்ணாவை நேசிக்க ஆரம்பிக்கட்டும், பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்லி வைத்து இருந்தேன்.. அதனால் கூட தனா உன்னிடம் சொல்லாமல் இருந்து இருப்பான் என்று சொன்னார் சரோஜா.

அதுவும் சரி தான் அத்தை பெண் பிள்ளை விஷயம் அல்லவா.. சரி விடுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி விட்டு... அதை எனக்கு ஒரு டம்ளர் காபி கிடைக்குமா என்று கேட்டான்.

அப்போது தான் சரோஜா நேரத்தை பார்க்க இரவு 8 மணி என்று காட்டியது.

அடடா பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை இந்நேரம் சாப்பிட்டு விடலாமே இரவு உணவு என்ன செய்வது என்று தெரியவில்லை இரு நான் போய் பார்க்கிறேன் இல்லை முதலில் உனக்கு காபி போட்டு கொண்டு வரவா என்று கேட்டார்.

அத்தை ஒன்றும் அவசரம் இல்லை. நானும் நேரத்தை கவனிக்காமல் காபி கேட்டு விட்டேன். நீங்கள் போய் அழகிக்கு உடல்நிலை சரியாகிவிட்டதா? என்று பாருங்கள் இரவு சமைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை... உணவு ஆன்லைனில் ஆர்டர் பண்ணிக் கொள்ளலாம் என்று சொன்னான் மிதுன்.

ம்ம்.. சரி கண்ணா.. இரு நான் முதலில் அழகியை பார்த்து விட்டு வருகிறேன் என்று வெளியில் வர சரியாக அம்மா என்று அழைத்துக் கொண்டே அழகியும் வந்தாள்.

இரவு உணவு தயாராகி விட்டது சாப்பிட வாருங்கள். மாமா அனைவரையும் வர சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு சென்றாள். மிதுன் சரோஜாவின் அறையில் இருப்பதை கவனிக்காமல்...

சரி வா கண்ணா.. சாப்பிட போகலாம் அழகிக்கு உடல்நிலை சரியாகி விட்டது என்று நினைக்கிறேன். நான் போய் மற்றவர்களை அழைத்து வருகிறேன் நீ சாப்பிட்டுக் கொண்டிரு என்று சொல்லி விட்டு மாடிக்கு சென்றார் மற்றவர்களை அழைப்பதற்காக...

மிதுனும் சென்று எப்பவும் போல் அமைதியாக அழகி பரிமாறிய உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

கர்ணா அறைக்கு செல்ல அங்கு லிபின், மீனா இருவரும் சேர்ந்து இன்று தாங்கள் அட்டென்ட் பண்ண மீட்டிங் பற்றி பேசிக்கொண்டு இருந்தான்..

அட பசங்களா... வீட்டிற்கு வந்தும் வேலை தானா....??... முதலில் வந்து சாப்பிட வாருங்கள். பிறகு உங்கள் வேலையை பற்றி பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு.. தனா அறைக்கு சென்றார்.

கர்ணா, லிபின் இருவரும் சேர்ந்து கீழே சாப்பிட சென்றனர். அதே போல் ருத்ராவின் அறைக்கும் சென்று ருத்ராவையும் கீழே போக சொன்னார். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது... சரோஜாவும் அவர்களோடு வந்து சாப்பிட அமர்ந்தவர், அழகியையும் அருகில் அமரச் சொல்லி ... அனைவரும் ஒருவருக்கொருவர் வேணும் என்ற உணவு பதார்த்தங்களை எடுத்து போட்டு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்போது ருத்ரா எங்கே தனாவை காணோம் என்று கேட்டான்.

ஆமாம் ருத்ரா நானும் அவன் அறைக்கு சென்று பார்த்தேன். அறையில் இல்லை இன்னும் அவன் வீட்டுக்கு வரவில்லை போல.. ஏதாவது முக்கியமான வேலையாக இருக்கும்.. சிறிது நேரம் கழித்து அவனுக்கு போன் செய்து பார்ப்போம். இப்ப அனைவரும் சாப்பிடுங்கள் என்று சொன்னார்.

சரி என்று அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு.. மிதுன் தனாவிற்கு போன் செய்து பார்த்தான். போன் அழைப்பு முழுவதாக சென்று அட்டென்ட் செய்யாமல் கட் ஆகியது.

மறுபடியும் ஒரு முறை போட்டு பார்த்தவன் அப்பொழுதும் அழைப்பு ஏற்கப்படாமல் கட்டாகவும் சரி வந்து கொண்டு இருக்கிறானோ... என்னவோ என்று நினைத்து விட்டு அழகியிடம் பால் கேட்டான் மிதுன்.

அண்ணா அவளுக்கு உடல்நிலை சரியில்லை, நானே அனைவருக்கும் பால் காய்ச்சி எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு கருணா கிச்சன் உள்ளே சென்றான்.

நேரம் ஆக ஆக அனைவருமே சனாதனுக்கு மாற்றி மாற்றி கால் செய்து கொண்டே இருந்தனர்....

அந்த சமயம் புவனாவிடம் இருந்து ருத்திரனுக்கு அழைப்பு வந்தது....
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top