- Thread Author
- #1
43. சனாதன் சஞ்சனா மோதல்...
இருவரையும் தேடும் உறவுகள்...
சனாதன் அலுவலகத்தில்...
சனாதன் இடமிருந்து தன்னுடைய மொபைலை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு உள்ளே வந்தவள் ...
யார் டா இவன்... இப்ப தான் இந்தியாவுக்கு வந்து இருக்கான்... ஆனால் நம்ம தமிழ்நாட்டு போலீசையும் மிஞ்சிடுவான் போலயே, பெரிய துப்பறியும் சாம்புவாக வேலை எல்லாம் படு ஸ்மார்ட் ஆக வேகமாக பார்க்கிறான். இவன் என்ன ஃபீல்டுல இருக்கான்னு தெரியலையே... உண்மையாலுமே இது அமுல் பேபியா? இல்ல ரவுடி பேபியா? தெரியலையே ? என்று யோசித்து கொண்டு இருந்தாள் சஞ்சனா.
அப்போது அவளின் எண்ணத்தின் நாயகனே அவள் முன் வந்து நின்றான்.
ஒரு நொடி தடு மாறினாலும் சொல்லுங்க சார் என்று கேட்டாள் சஞ்சனா.
அவனோ எதுவுமே சொல்லாமல்... சில நொடிகள் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவன்... பிறகு ஆராய்ச்சி எல்லாம் முடிந்து விட்டதா என்று கேட்டான் சனாதன்.
ஹான்... என்ன... என்ன ஆராய்ச்சி என்று கேட்டாள் சஞ்சனா.
அது தான் ... நான் யார்?.. சாக்லேட் பாயா?.. இல்லை ரகடானவனா?.. அதைத்தான் நான் சொன்னேன் அந்த ஆராய்ச்சி முடிந்ததா என்று கேட்டான் சனாதன்.
ஹையடா... எந்தா சாரே கனவு கண்டியா???;.. சார் மனசுல பெரிய மன்மதன் நெனப்பு... ஆளும் மூஞ்சியும் பாரு... முதல் அண்ணன் தம்பி மூணு பேரும்... கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டா?... எப்ப பாரு உர்னு இருக்கிறது இல்லையா?... பெரிய கொஸ்டின் மார்க்கை முகத்தில் வச்சிகிட்டே இருக்கிறது இந்த லட்சணத்துல.. சாக்லேட் பாயா... என்று கேள்வி... போங்க சார் சிப்பு சிப்பா வருது.... என்று அவள் சொல்லி சிரிக்க...
அவள் பக்கத்தில் இருந்த அவளுடைய டீம் மேட் சூர்யா அவளை வேகமாக உலுக்கி எடுத்தாள்.
அப்போது தான் சுயம் வந்த சஞ்சனா.. தன் அருகில் இருக்கும் சூர்யாவை பார்த்து என்ன சூர்யா என்று கேட்டாள் சஞ்சனா.
அதைத் தான் நானும் கேட்கிறேன் மேடம். நீங்கள் ஏதோ தனியாக பேசிக் கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டேன் என்று சொன்னாள். நான் கூட முதலில் நீங்கள் காதில் ப்ளூடூத் கனெக்ட் பண்ணி இருப்பீங்க அப்படின்னு தான் நினைத்தேன். ஆனால் இது வரை மொத்தம் உங்கள் போனிற்கு நான்கு மிஸ்டு கால் வந்துவிட்டது. அதனால் தான் நானும் உங்கள் அருகில் வந்து, கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். நீங்கள் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தீர்கள். அதனால் தான் உங்களை உலுக்கி எடுத்தேன் என்று சொன்னாள் சூர்யா.
ஓஹோ சாரி சூரியா நீங்க போய்... உன் வேலையை பாருங்க நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று, தன் மொபைல் போனோடு வெளியில் வந்தாள். டேய் சனா என்னை மட்டும் தனியா பிரிச்சு.. உன் கூட கோர்த்து விட்டு உன்னையே நினைச்சு புலம்பவும் விட்டுட்ட இல்ல... இருடா நான் உன்னை வைத்துக் கொள்கிறேன்... என் கையில் நீ மாட்டாளா போய்விடுவாய்.. என்று நினைத்துக் கொண்டே நடந்து வந்தவள் எதிரில் அவன் மீதே மோதி நின்றாள் சஞ்சனா.
இப்போது அவன் எதிரில் இருப்பவனை பார்த்தவள்..
ஏய் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி கொஞ்சம் கூட உனக்கு சென்ஸ் கிடையாது... எப்ப பாரு எனக்கு முன்னாடியே வந்து நின்னு கிட்டு இருக்க.. இதோ இதோ இப்ப தானே சொன்னேன்.. மூஞ்சிய எப்ப பார்த்தாலும் உர்னு வச்சுக்கிட்டே இருக்கியே?..!?? நீ எல்லாம் கண்ணாடி பார்க்கிற பழக்கம் இருக்கா இல்லையா உனக்கு.. அப்படி இல்லை என்றாலும் ஒன்னும் பரவாயில்லை.. இனிமேலும் அந்த பழக்கத்தை வச்சுக்காத.. பாவம் கண்ணாடி அழுது விடும் என்று சஞ்சனா சொல்லிக் கொண்டே போக...
கடுப்பான சனாதன் வில் யூ ஸ்டாப் இட் நவ்.. வாட் த நான்சென்ஸ் யுவர் டாக்கிங்..
பாரு .. டா பீட்டர் மகன் வெளியே வராரு.. என்று அப்போதும் தனது அறையில் அவன் நிழலிடம் பேசிக் கொண்டு இருந்ததை நினைத்து... இப்பவும் எதிரில் இருப்பவன் நிஜமல்ல நிழல் என்று நினைத்துக் கொண்டு பேச.. அதே சமயம் அலுவலகத்தில் ஆட்களும் தேநீர் இடைவேளை முடித்து ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்ததை பார்த்து விட்டு, சஞ்சனாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு யாரும் அறியா வண்ணம் தனது அறைக்கு இழுத்துச் சென்றவன் உள்ளே சென்றதும் அவளை அங்கு இருந்த .... தனது பர்சனல் ரூமின் சிறிய சோபாவில் தள்ளிவிட்டான் சனாதன்.
அவன் கையைப் பிடித்து இழுத்து வரும் பொழுதே உணர்வுக்கு வந்தவள் போச்சி போச்சு இன்னைக்கு நல்லா மாட்டிக்கிட்டேன் என்று... அமைதியாகவே இருந்தாள் இவ்வளவு நேரம் பேசியதற்கு நேர் மாறாக சஞ்சனா.
அவளை தள்ளி விட்டு டோரை க்ளோஸ் செய்து விட்டு, கதவின் மீது சாய்ந்த படி இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு அவளை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு நின்றான் சனாதன்.
ஐயையோ இம்புட்டு அழகா இருந்தா நான் என்ன டா பண்ணுவேன்... எவ்வளவு பேர் என்னை சைட் அடிச்சிருப்பாங்க... ஏனோ என் மனது உன்னை மட்டுமே பார்க்க சொல்கிறது. ஆனால் உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது.... இந்த பாலா போன மனது மட்டும் ஏனோ உன்னை பார்க்க சொல்லி என்னை கட்டாயப்படுத்துகிறது.
ஐயோ இவன் பார்வையே சரியில்லையே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பேச தொலைந்தேன் என்றும் நினைவுக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு... வெளியில் அவன் பார்வைக்கு நான் ஒன்றும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பது போல்... அவனைப் போலவே அவளும் சோபாவில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
தன்னைப் போலவே அவளும் சளைக்காமல் பார்ப்பதே பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்து விட்டு... ராட்சசி நான் இங்கு தேடி வந்தது அழகான தமிழ் கலாச்சாரம் உள்ள குடும்பப் பங்கான பெண்ணை.. என் அம்மா மிகவும் அமைதியானவர்கள்... (டேய் ராசா அதை உங்க அப்பா கிட்ட கேக்கணும் நீ சொல்லக்கூடாது)....
எப்பிடி டி உன்னை வைத்து அவர்கள் சமாளிப்பார்கள்.. என்னாலயே முடியவில்லை. அப்போது அவன் மனசாட்சி அப்படின்னா, இப்ப நீ என்ன சொல்ல வர இவளை நீ விரும்புகிறாயா என்று கேட்டது.
நெவர் இந்த ராட்சசியை நான் விரும்புவதா?... எப்ப பாரு என்னவாவது, எதையாவது சொல்லி காயப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். இப்ப சிறிது நேரத்திற்கு முன்பு கூட என்ன சொன்னார் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கியாம்... அது மட்டுமா பீட்டர் மகனே.. இது எல்லாம் வாய் விட்டு சொல்லியது அவள் .... வாய்விட்டு சொல்லாமல் இதோ என்னை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருக்கிறாளே கல்லுளி மங்கி மனதிற்குள் என்னை எப்படி எல்லாம் கழுவி ஊற்றுவாள் தெரியுமா என்று தன் மனசாட்சி இடம் அவளை கழுவி கழுவி ஊத்திக் கொண்டு
இருப்பதை மறந்து விட்டான்.
இவர்கள் இருவரும் சரியான ஜோடியாக தான் இருப்பார்கள். ஒருவர் ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் மனதிற்குள்ளேயே தங்களை எவ்வளவு அழகாக கழுவி ஊற்றி கொள்கிறார்கள்... இவர்களுக்கு நாம் தேவையே இல்லை. இவர்களே அடித்துக் கொள்வார்கள் .. இல்ல இல்ல சேர்ந்து கொள்வார்கள்.. இல்ல இல்ல வெட்டு குத்து என்ற அளவு போகவில்லை என்றாலும் அடித்துக் கொண்டு சேர்ந்து கொள்வார்கள்.. இவர்கள் இவருடன் சேர்ந்தால் நான் குழம்பி விடுவேன்... சரி நாம் இப்போது இடத்தை காலி பண்ணுவோம் என்று அவன் மனசாட்சி கிளம்பியது.
இவ்வளவு நேரமும் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தவள் அவளின் குட்டி வயிற்றில் லேசாக பசிப்பது போல் இருக்க... இது ஒன்றும் சரி வராது நாம் எழுந்து செல்வோம் என்று... எழுந்தவள் நேராக சனாதன் அருகில் வந்து, அவனை விலக்கி கதவை திறக்க சென்றாள் சஞ்சனா.
ஆனால் அவனும் அவளோடு சேர்ந்து அவள் திறந்த கதவின் லாக்கை மறுபடியும் அவள் கைகளைக் கொண்டே லாக் செய்தவன்.. அவளை அப்படியே கதவின் மீது சாய்த்து... சற்றும் யோசிக்காமல் அவனின் இதழ்களை முரட்டுத்தனமாக சுவைக்க ஆரம்பித்தான். அவளோ ஒரு நொடி என்னடா நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவளின் கீழ் உதட்டை கடித்து வைத்து இருந்தான்.
அவன் கடித்ததில் சுயம் பெற்றவள்... அவனின் இதழை சற்று யோசிக்காமல் மிகவும் வன்மையாகவே கடித்து வைத்து விட்டு அவனை தள்ளிவிட்டு... பொறுக்கி நாயே என் உதட்டில் இருக்கும் காயம் நான் லிப்ஸ்டிக் போட்டு மறைத்து விடுவேன் உன் உதட்டை காயத்தை என்ன செய்வாய் என்று சொல்லி விட்டு... சற்று யோசிக்காமல் கோபத்தில் வெளியேறி விட்டாள்.
அவளின் பொறுக்கி நாயே என்ற வார்த்தையே மறுபடியும் மறுபடியும் தன் மனதிற்குள் வந்து மோத... தான் என்ன காரியம் செய்தோம்... ஏன் இப்படி செய்தேன் ஐயோ கடவுளே... நான் எப்படி என் அம்மாவின் முகத்தில் முழிப்பேன்.
இந்த விஷயம் என் தாய்க்கு தெரிந்தால் அவர்களின் வளர்ப்பை நினைத்து எவ்வளவு வருத்தப்படுவார்கள். ஐயோ எல்லாம் இந்த ராட்சசியால்... இவள் மட்டும் என்னை தேவை இல்லாத வார்த்தைகளால் சீண்டி விடாமல் இருந்து இருந்தால் இப்படி நான் செய்து இருக்க மாட்டேனே... இன்று புலம்பி கொண்டு தான் தலையில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தவன் மனம் மட்டும் உலைக்கலமாக கொதித்துக் கொண்டு இருந்தது.
அறையை விட்டு வெளியில் வந்த சஞ்சனா தன் கேபின் சென்று பார்க்க அனைவரும் வேலையில் மும்மரமாக இருந்தனர். அது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தவள் தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு.. வேகமாக வெளியில் வந்த பிறகு தன்னுடைய இரும்பு புரவியில் பறந்து சென்றாள் சஞ்சனா.
அவன் கொடுத்த உதட்டு காயம் லேசாக தான் இருந்தது. ஆனால் இவள் கொடுத்த உதட்டு காயமோ நல்ல அழுத்தமாக இருந்தது. அவன் அதே அறையில் அமர்ந்த நிலையிலேயே அமர்ந்தே இருந்தான் சிறிதும் அசைவின்றி.
காலமும் நேரமும் உனக்காக இல்லை யாருக்காகவும் காத்திருக்காது என்பது போல்... நேரங்கள் கடக்க அன்றைய பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக முடிய... அந்த மாலை வேளையில்... காலை நேர பரபரப்பு போலவே மாலை நேர பரபரப்பில் அவரவர் இல்லம் தேடி சென்றனர்....
நேரங்கள் கடந்தும் சனாதன் வீட்டிற்கு வரவில்லை...
அதே போல் நேரங்கள் கடந்தும் சஞ்சனாவும் வீட்டிற்கு செல்லவில்லை...
இருவரையும் தேடும் உறவுகள்....
இருவரின் நிலை என்ன????...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...