• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
47
41. கமிஷனரின் கோபமும், கவி பிரியாவின் அலட்சியமும்.

கவிப்பிரியா வீட்டில்.

சாப்பிட்டு முடித்தவள் வெளியில் செல்வதற்காக தன் சித்தி இடம் சொல்லி விட்டு... தம்பி அப்பாக்கள் இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப...

அவள் வாசலுக்கு வரும் நேரம் சரியாக கமிஷனரும் தன்னுடைய வண்டியை வேகமாக கொண்டு வந்து நிறுத்தினார்.

என்ன கமிஷனர் கார் இவ்வளவு வேகமாக வந்து நிற்கிறது என்று...‌ எப்பவும் போல பேசிக்கொண்டே கவிப்பிரியா தன் மாமன் அருகே சென்று நிற்க...

அவர் ஓங்கி ஒரு அடி தனக்கு தானே வைத்துக் கொண்டார்... தன் தொடை பகுதியில்... அவரின் கோபத்தை கண்டவள் மிரண்டு போய் ஒரு நிமிடம் நின்றாள்.

கமிஷனர் விடு.... விடு..
விடு ... என்று வீட்டிற்குள் சென்றார்.

அவர் உள்ளே சென்றதும் அதிர்ச்சியில் இருந்து விலகியவள்.. சரி நம்ம வேலையை பார்க்க போவோம்... காக்கி வேல் ரொம்ப சூடா இருக்கு... இப்போ உள்ளே போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய காருக்கு அருகில் சென்று அடுத்த நொடி...

சமையல் வேலைக்கார பெண் வேகமாக அவள் அருகில் வந்து குனிந்தவாறு...

பாப்பா உங்களை பெரிய ஐயா வீட்டிற்குள் வர சொல்கிறார் என்று... சொல்லி விட்டு தலை நிமிர்ந்து பார்க்காமல் ஓடியே விட்டாள்.

அடக்கடவுளே இவனுங்க வேற காலைல இருந்து போன் எடுக்கவே இல்ல. இப்ப காக்கி வேற வீட்டுக்குள்ள கோவமா வந்து உட்கார்ந்து இருக்கு... என்ன பிரச்சனை தெரியலையே ??.. என்னைய வேற எதுக்கு கூப்பிடுது என்று தனக்குள்ளே சொல்லி கொண்டே வீட்டுக்குள் சென்றாள்.

தன்னுடைய அப்பா இருவரும் சோபாவில் அமர்ந்து இருக்க... சித்தி அமைதியாக நின்று கொண்டு இருந்தார். கமிஷனர் கணேஸ்வர் மட்டும் ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார்.

ஐயோ என்ன.. பெரிய பிரச்சனையாக இருக்குமோ??.. காக்கி
இந்த அளவுக்கு சூடாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே... பொறுமையாக வீட்டிற்குள் சென்றாள்.

சரி அப்படி என்ன தான் பிரச்சினை என்று போனால் தெரிந்து விடப்போகிறது என்று, வேகமாக தன் தாய் மாமாவின் அருகில் போய் நின்றவள்.. என்ன கணேஷா ஏன் இவ்வளவு கோபம்...???. எங்கள் வீட்டை அளந்து பார்க்க சொல்லி எதுவும் உன் மச்சான் சொன்னாரா என்று கேட்டாள்.

அவளின் வழக்கமான குறும்பு பேச்சில், ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுளே இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று .. நொந்து கொண்டவர் அப்படியே அமைதியாக அங்கு இருந்த தனி சோஃபாவில் தொப்பென்று உட்கார்ந்தார்.

அவளும் அவருக்கு அருகில் அங்கு இருந்த பீன் பேகை எடுத்து போட்டுக்கொண்டு அதில் அமர்ந்தவள் என்ன ஆச்சு காக்கி என்று கேட்டாள் கவி.

பாப்பா நீ என்ன பண்ணி வைத்து இருக்கிறாய் என்று உனக்கு தெரியுமா? தெரியாதா? என்று சற்று கோபமாகவே கேட்டார்.

அவரின் கோபத்தை உணர்ந்தவள் விளையாட்டு பேச்சை தவிர்த்து.. மாமா நானும் உங்களுடன் சீரியஸ் ஆகவே பேசுகிறேன். நீங்கள் எந்த விஷயத்தை பற்றி பேசுகிறீர்கள்..‌ அதை நேரடியாக கூறுங்கள். நீங்களும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்காதீர்கள் என்று சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்தாள் கவி.

கவி மா.. நேற்று நடந்த பிரச்சனைக்கு பிறகு நீ ஏதேனும் புதிதாக ஏதாவது பிரச்சனையை கிளப்பி விட்டாயா என்று கேட்டார் கமிஷனர்.

ஒரு நொடி அமைதியாக இருந்தவள்.. பிறகு ஆமாம் நான் ஒரு பிரச்சினையை செய்து வைத்து இருக்கிறேன் தான். ஆனால் அதை நீங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள்.

எனக்குத் தெரிந்து ருத்ராவுக்கு என் மீது எந்த சந்தேகமும் வர வாய்ப்பே இல்லை. அதே சமயம் என் ஆட்கள் யாரும் அவர்களிடம் மாட்டிக் கொண்டார்களா? காலையில் இருந்து நானும் போன் பண்ணிக் கொண்டே இருக்கிறேன்... பக்கி பயலுக போன் எடுக்கவே இல்லை. அதே சமயம் நீங்களும் கோபமாக வரவுமே எனக்கு லேசான விஷயம் என்னவென்று புரிந்தது. ஆனால் இப்போது நீங்கள் கேட்ட கேள்வியில் கண்டிப்பாக ஊர்ஜிதமும் பண்ணி விட்டேன். உங்களிடம் மாட்டிக் கொண்டார்களா?; இல்லை அந்த வீணா போனவர்கள்... அவர்களிடம் மாட்டிக் கொண்டார்களா?. என்று கேட்டாள் கவிப்பிரியா


ஐயோ பாப்பா என்னிடம் அவர்கள் மாட்டி இருந்தால், நான் ஏன் உன்னிடம் இவ்வளவு கோபப்பட போகிறேன்... அவர்களை இப்படி மாட்டிக் கொள்வதற்காக நாலு அடி அடித்து விட்டு அவர்களை பாதுகாப்பாக தானே வைத்திருப்பேன் ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது என்று சொன்னார் கணேஸ்வர்.

அப்ப ருத்ர விஷயத்தை கண்டுபிடித்து விட்டாரா என்று கேட்டாள் ஒரு ஆவலோடு...

முதலில் நீ என்ன செய்தாய் அதை சொல் என்னிடம் என்று கேட்டார் கணேஷ்வர்.

ஒன்றுமில்லை மாமா, நான் அவர்களை பாலோ பண்ணிக்கொண்டு போகும் போதே என்னுடைய நண்பன் கார்த்திக்கு போன் செய்து அங்கு நடக்கும் அனைத்தையும் வீடியோ எடுக்க சொல்லி இருந்தேன்.

அதைத் தான் அவன் வீடியோ எடுத்து வைத்து இருந்தான். அதை வைத்து சும்மா ருத்ராவை வம்பு இழுத்து கொஞ்சம் விளையாட்டு காட்டலாம் என்று நினைத்தேன். ஏன் என்றால் அவரோடு பேசுவதற்கு எனக்கு சில வாய்ப்புகள் கிடைக்கும் அப்படி என்று நினைத்து தான் சும்மா மெசேஜ் அனுப்பி விட்டேன், மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

நேற்று என்னை காப்பாற்றிய இடத்திற்கு வந்து எதையோ எவிடென்ஸாக எடுத்துக் கொண்டு ருத்ரா சென்றான் என்று என்னுடைய ஆட்கள் போன் செய்து சொன்னார்கள்.

ஆனால் அதற்கு எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து உங்களிடம் வந்து சொல்லியும் சென்று விட்டானா... பலே கில்லாடி தான் என்று சொன்னாள் கவிப்பிரியா.

பாப்பா கண்டுபிடித்தது ஒன்னும் ருத்ரா இல்லை சனாதன்...

அதுவும் சும்மா ஒன்றும் இல்லை... நீ வீடியோ எதில் எடுத்தாய் என்று தெரியாது. ஆனால் நீ யாரோ ஒரு பெண்ணின் மொபைலில் இருந்து அதை அனுப்பி வைத்து இருக்கிறாய்.

அது மட்டும் விஷயம் அல்ல ... அந்தப் பெண் யார் என்றும் சனாதன் கண்டுபிடித்துவிட்டார். அதை விட மிக முக்கியம் அந்தப் பெண் அவருக்கு மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இனி ஒரு தரம் இந்த மாதிரி நீ மறுபடியும் ஏதாவது விளையாட்டு தான் செய்வதாக இருந்தால் தயவு செய்து அதை என்னிடம் சொல்லி விடு... அதற்கு முன் நான் என் சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடுறேன்.

நானும் இங்கு வந்த நாளில் இருந்து... அதிகம் சால்வ் பண்ணி வைத்த கேஸ் என்ன என்று பார்த்தால், உன்னால் ஏற்பட்ட பிரச்சினைகள் தான் நிறைய...

ஆனால் இது வரை நீ செய்த அனைத்து விஷயங்களிலும் ஏதேனும் நல்ல விஷயங்கள் இருந்தது. அதனால் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் அதை வைத்து சமாளித்து விட்டேன். ஆனால் இன்று ஏன் நீ ருத்ராவின் பிரச்சனையில் இப்படி பெரிய பிரச்சினையாகி வைத்து இருக்கிறாய் என்று தெரியவில்லை.

இதுவரை இந்தியாவில் இல்லாமல்.. வெளிநாட்டில் எங்கோ இருந்தவன்... அதுவும் தமிழ்நாட்டில் கமிஷனர் என்று கூட கொஞ்சமும் யோசிக்காமல் அவன் என்னை மிரட்டி விட்டு செல்கிறான். ஒரு நிமிடம் அவன் மிரட்டி விட்டு செல்லும் பொழுது.. எனக்கே ஒரு நொடி பயமாக இருந்தது. அவனைப் பார்க்கும் பொழுது சாதாரண பிசினஸ்மேன் என்றே தோன்றவில்லை...

எதற்கும் நீ ஜாக்கிரதையாக இருந்து கொள். அவர்கள் விஷயத்தில் இனி எதுவும் செய்யாதே.. ஏதேனும் தவறுதலாக செய்து மாட்டிக் கொண்டாய் என்றால் மிகப் பிரச்சனையாகி விடும் பார்த்துக் கொள் என்று எச்சரித்தார் கணேஸ்வர்.

ஐயோ மாமா ஓகே நான் விளையாடாக தான் செய்தேன். அதை தான் அவர் பெரிய சிபி ஆபிசர் மாதிரி கண்டுபிடித்து விட்டார் தானே. அதுவும் உங்களிடம் வந்து இனி ஒரு தரம் எப்படி நடக்க கூடாது என்று எச்சரிக்கையும் செய்துவிட்டு போய்விட்டார் தானே... பிறகு என்ன போங்க இந்த விஷயத்தை நான் எப்படி டீல் பண்ணி கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று, சொல்லி விட்டு அசால்டாக எழுந்து வெளியே சென்றாள்.

இதுவரை அமைதியாக இருந்த தன்னுடைய மச்சான்கள் இருவரையும் பார்த்து விட்டு... எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம் தான் இந்த பிரச்சனை எங்கே போய் நிற்கப் போகிறது என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து அவள் இந்த விஷயத்தை இதோடு நிப்பாட்டுபவள் போல் தோன்றவில்லை. அவள் மனதில் ஏதோ இருக்கு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, தன் சிறிய தங்கையின் கையில் இருந்த காபியை வாங்கி ஒரே மடக்கில் குடித்து விட்டு அவரின் தலையில் லேசாக தடவி கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டார்.

அண்ணா மச்சான் ரொம்ப கோபமாக போகிறாரே என்று கேட்டார் கோபாலகிருஷ்ணன்..

ஆமா கிருஷ்ணா பாப்பா.. எனக்கு தெரிந்து அந்த ருத்ரா என்ற பையனை விரும்புகிறாள் என்று நினைக்கிறேன். நானும் விசாரித்தவரையில் மிகவும் நல்ல குடும்பம் தான் வெளிநாட்டில் சிறு வயதிலேயே சென்று செட்டில் ஆகி இருக்கிறார்கள் அந்த பையனோட அம்மா அப்பா இருவரும்.

மொத்தம் ஐந்து அண்ணன் தம்பிகள்... பாப்பா நம் வீட்டில் எப்பவும் முதலாவதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். அங்கு பாப்பா விரும்பும் பையனும் மூன்றாவது பையனாக இருக்கிறான்... ஆனால் அங்கு அவர்கள் அனைவரும் அப்படி ஒரு ஒற்றுமையில் இருக்கிறார்கள்.

நான் இதுவரை விசாரித்ததில் குடும்பம் என்றால் அப்படி ஒரு அழகான குடும்பமாக இருக்கிறது. பாரம்பரியமான குடும்பமாகவும் இருக்கிறது. அதை விட மிக முக்கியம் வெளிநாட்டில் இருந்தும் ... இந்த நிமிடம் வரைக்கும் அவர்கள் மனதில் அவர்கள் ஒரு இந்தியர்கள் என்ற மனபாங்கிலேயே அவர்களின் தாய் தந்தை அவர்களை நல்ல படியாக வளர்த்து இருக்கிறார்கள்.

இப்பவும் அவர்களுடைய பிசினஸை இங்கு வந்து பார்ப்பதற்காக அனுப்பி வைத்து இருப்பது அவர்களின் திருமணத்திற்காக தான்.

ஆனால் அதைக் கூட அந்த பையன்களிடம் சொல்லாமல் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு அவர்களும் இங்கு வந்து பிசினஸ் பார்க்கிறார்கள். எனக்கு தெரிந்து அவர்கள் அனைவருக்கும் அவர்கள் ஏதோ பெண்களை நிச்சயம் பண்ணி விட்டார்களோ என்று தோன்றுகிறது ஐந்து பேருக்குமே...

அதனால் தான் அவர்களை இங்கே அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இவர்களாக பேசி பழக வேண்டும் என்று... ஆனால் அதற்கு இடையில் இப்பொழுது நாம் பாப்பா தான் அந்த வீட்டில் ஒரு பையனை விரும்புகிறாள் என்று நினைக்கும் பொழுது தான், மனதிற்கு ஒரு விதமான தயக்கமும் பயமும் வருகிறது.

இவளின் பிடிவாதமும் நமக்கு தெரியும்.. அதே சமயம் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒற்றுமையும் பாசமும் நான் அறிந்த வரையில் எனக்கு கலக்கமாக தான் இருக்கிறது. சரி என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்..

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top