• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
45
38. கர்ணாவின் காதலும் அழகியின் விலகளும்.

பாண்டவர் இல்லம்.


அழகியின் அறைக்கு ட்ராலியோடு உள்ளே சென்றான் கர்ணா.

சரோஜாவின் கைவண்ணத்தில் சற்று காய்ச்சல் மட்டுப்பட்டு இருக்க.. இப்போது அனத்தல் இல்லாமல் அமைதியாக படுத்து தூங்கிக் கொண்டு இருந்தாள் அழகி.

சிறிது நேரம் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன்... அவளுடைய நெற்றியில் கை வைத்து பார்த்தான். ஜுரம் நன்றாக அடித்தது. அவளின் தலையை சிறிது நேரம் அப்படியே அவளின் அருகில் அமர்ந்து தடவி கொடுத்து கொண்டு இருந்தான்.

அவளும் காய்ச்சல் வேகமா... இல்லை உறக்கத்தின் பிடியிலா என்று தெரியாமல்... தனையும் அறியாமல் அவனின் மற்றொரு கரத்தை எடுத்து தனது கழுத்துக்கு கீழே வைத்துக் கொண்டவள் அப்படியே உறங்கிக் கொண்டு இருந்தாள்.

அவளின் காய்ச்சலின் சூட்டை தன் கைகளுக்குள் வாங்கிக் கொண்டவன்... தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்.

நேரங்கள் கடந்து கொண்டே இருக்க சரி அவளை இதற்கு மேல் படுத்து இருக்க விடக்கூடாது என்று நினைத்தவன் மெதுவாக அவளது பிறை நெற்றியில் லேசாக முத்தமிட்டு... மெய்.. மெய்... எழுந்திரிடி... என்று எழுப்பினான்.

ஆனால் அவளோ போ மாமா... என்னால் எந்திரிக்கவே முடியவில்லை நான் இப்படியே தூங்குகிறேன் என்று சினிங்கி கொண்டு சொன்னாள்.

என்ன இவள் மாமா என்று சொல்கிறாள் ??? .. அப்போது நான் தான் இங்கு வந்து இவள் அருகில் அமர்ந்து இருக்கிறேன் என்று இவளுக்கு தெரிகிறதா?.. இவள் கண்ணையே முழித்து பார்க்கவில்லையே ???. பிறகு எப்படி தெரிந்து கொண்டால் என்று யோசித்தவன்.. மெதுவாக அவளை மறுபடியும் எழுப்பினான் மெய் எழுந்துகோ டா... என்று அவளை அப்படியே கட்டிலில் இருந்து தூக்கி சாய்வாக படுக்க வைத்தான்.

இப்போது தான் தன் கண்களை லேசாக விரித்து பார்த்தவள்.. தனக்கு மிகவும் அருகில் கர்ணா இருப்பதை பார்த்து விட்டு.... சில கணங்கள் அவனை மெய் மறந்து பார்த்தவள், மாமா ப்ளீஸ் வெளியே போங்க மாமா. போயிட்டு அம்மாவை வர சொல்லுங்க என்று வெறுப்பாக சொன்னாள் அழகி.

அவளின் வார்த்தையில் வெறுப்பு இருப்பது உணர்ந்தாலும்... அதை அவன் கண்டு கொள்ளாமல்... ஏய் முட்டைகோஸ் என்ன டி ஒரு நாள் ராத்திரி காய்ச்சலுக்கே... இப்படி வத்தி போயி எப்படியோன்னு இருக்க என்று கேட்டுக்கொண்டே அவளை தூக்கிக் கொண்டு, அவளின் மறுப்பு, கோபம், வெறுப்பு எதையும் கண்டுகொள்ளாமல் கொண்டு போய் பாத்ரூமில் இறக்கி விட்டான்.

பிரஷ் அப் ஆயிட்டு வரியா இல்ல அதற்கும் நான் வந்து உதவி செய்யவா என்று கேட்டான் கர்ணா.

தன்னுடைய இரண்டு கைகளையும் உயரே தூக்கி போதும் சாமி சிறிது நேரம் சும்மா இருங்க.. நானே வருகிறேன் என்று சொல்லி விட்டு கதவை தாழ் போட போனாள்.

அடியே காய்ச்சல் அதிகமாக இருக்கு.. தமிழில் நிறைய நேரம் இருக்காமல் சீக்கிரமாக வெளியில் வா கதவை எல்லாம் ஒன்றும் தாழ் வேண்டாம். நான் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து இருக்கிறேன் என்று சொல்லி விட்டு... கையில் ஒரு டவலை கொடுத்து விட்டு, போய் அமர்ந்து கொண்டான்.

அழகியாலும் அவனுடன் வாக்குவாதம் செய்ய முடியாமல்.. பல் துலக்கி தன்னுடைய காலைக் கடன்களை முடித்து விட்டு, முகத்தை கழுவியவள் ... அதற்கு மேல் நிற்க முடியாமல் அப்படியே சுவற்றில் சாய்ந்தவள் எப்போது அங்கேயே மயங்கி விழுந்தாள் என்று தெரியாமல் விழுந்தாள்.

ஆனால் சத்தம் வித்தியாசமாக வரவும் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே பாத்ரூமுக்குள் வந்து பார்க்க... அவளின் நிலையை கண்டு முதலில் கோபம் தான் வந்தது.‌ ஆனாலும் இந்தப் பெண்கள் ஒரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டால் அநியாயத்துக்கு அதையே அப்படியே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் என்று, வாய் திட்டிக் கொண்டு இருந்தாலும்... அவளை தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தான்.

ஈரத்துணியால் அவளது முகத்தை துடைத்து விட்டு... அவளுடைய சேலையும் நனைந்து இருந்தது. அவள் விழுந்ததுமே உள்ளே சென்று பார்த்ததால் சேலையில் மட்டும் ஈரமாக இருக்க அதை அகற்றி விட்டு அவளுடைய கபோர்டு திறந்து பார்க்க...

அதில் வெறும் சேலைகளும், சுடிதார் மட்டுமே இருந்தது. இலகுவாக அணிவது போல் நைட்டி எதுவும் இல்லாமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு மஞ்சள் கலரில் அம்பர்லா கட்டிங் இல் ஒரு சுடிதார் பார்க்க அது மிகவும் ஆடம்பரமாகவும் இல்லாமல்.. அதே சமயம் உருத்துவது வேறு எந்த ஜம்கி வேலைப்பாடுகளும் இல்லாமல் இருக்க அதை எடுத்துக் கொண்டு வந்தவன் அதையே அவளுக்கு அணிவித்து விட்டான்.

பிறகு மறுபடியும் ஈர துணியால் அவள் முகத்தை துடைத்து விட, இப்பொழுது லேசாக கண்களை திறந்து பார்த்தாள் அழகி.

அருகில் கர்ணாவை பார்க்கும் போது எல்லாம் தடுமாறும் தன் மனதை திட்டிக் கொண்டு, வெளியில் வெறுப்போடு அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கர்ணாவும் அவளின் மனதில் உள்ளதை படித்தவன் போல்... வெளியில் தெரியும் அவளின் வெறுப்பான முகத்தை சற்றும் மதிக்காமல்... அவளுக்கு ஹாட் பாக்சில் இருந்து பவுலில் கஞ்சியை ஊற்றி... பவுல் மூடியில் மாங்காய் பச்சடியை வைத்து.. அவளுக்கு ஸ்பூனால் கஞ்சியை ஊட்டி விட்டான்.

வெளியில் வெறுப்பது போல் கோபமாக இருந்தாலும், மனதில் உள்ள ஆசையில் அவன் ஊட்டி விட மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் கர்ணாவின் மெய்.

கஞ்சியை முழுவதும் குடிக்க வைத்து விட்டு... வாயை ஈர டவலால் துடைத்து, மாத்திரையை பிரித்து கொடுத்தான்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் இப்போது நான் மாத்திரை போட்டுக்கொள்கிறேன். நான் சாப்பிடவும் இப்போது எனக்கு தெளிவாகத்தான் இருக்கிறது. நீங்கள் போங்கள் என்று கோபமாக சொன்னாள் அழகி.

ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன்.. மாத்திரை போட்டுக் கொள்ள பயமா உனக்கு என்று கேட்டான்.

ஒன்றும் சொல்லாமல் அமைதியாக தலை குனிந்து உட்கார்ந்து இருப்பவளை பார்க்கும் போது... சிரிப்பதா.. ??? இல்லை கோபம் கொள்வதா ... ??? என்று தெரியவில்லை என்று நொந்து கொண்டவன்... அவளின் முகத்தை நிமிர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவள் கண்மூடி திறக்கும் முன்பு என்ன செய்தானோ எது செய்தானோ அவள் மாத்திரையை விழுங்கி இருந்தாள்.

அவள் அப்படியே அதிர்ச்சியாகி இருக்க... அவளின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு பேசாமல் தூங்கு... சரியாகவில்லை என்றால் மதியம் வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் என்று சொல்லி விட்டு, மெய்யானவளை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான் கர்ணா.

கோவிலில் இருந்து..

லீனா தன் நண்பன் வினயோடு வீட்டிற்கு பைக்கில் வந்தாள்.

தன் வீட்டிற்கு முன்பு பைக் சவுண்ட் கேட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்த சரண், வினய் வருவதை பார்த்துவிட்டு ஹேய் வாடா எப்படி இருக்கிறாய் .. நீ எப்படி டா இங்கே என்று கேட்டான்.

ப்ரோ நான் வந்து நான்கு வருடங்களை ஆயிற்று. நான் திருச்சி காரனாக இருந்தாலும் தற்சமயம் சென்னை வாசி தான். ஆமாம் இவளுக்கு வேலை கிடைத்தது என்று சொன்னால் நீங்களும் இங்கு தான் இருக்கிறீர்களா... இவளுக்காக இங்கு இருக்கிறீர்களா இல்லை உங்களுக்கும் வேலை கிடைத்து இருக்கிறதா என்று கேட்டான்.

அப்போது உள்ளே இருந்து வந்த லட்சுமி மா.. என்ன சரண் எதற்கு வெளியவே நின்று பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

வா வினய் உள்ளே வா என்று வினயை உள்ளே அழைத்தார்.

வணக்கம் மா என்று லட்சுமி அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

அவன் காலில் ஆசீர்வாதம் வாங்க ஆரம்பிக்கும் போதே... அண்ணன் தங்கை இருவரும் வீட்டிற்குள் சென்று விட்டனர். ஆமாம் அங்கே நின்று கொண்டு இருந்து யார் அவர்களிடம் பேச்சு வாங்குவது... இவன் வேறு அரசியல்வாதி மகன் மாதிரி காலில் விழுந்து விழுந்து நம்ம உயிரை வாங்குவான் என்று புலம்பிக்கொண்டே உள்ளே சென்று இருந்தார்கள்.

இது வழக்கமாக நடைபெறுவதுதான் என்பதால் லட்சுமி மாவும் சிரித்துக் கொண்டே வினையை அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்து விட்டு.. அவன் வழக்கமாக குடிக்கும் இஞ்சி டீ போட சென்று விட்டாள்.

அப்போது மேலே இருந்து கீழே வந்த மிதுனா வினய் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு... ஹாய் வினு அண்ணா... எப்படி இருக்க என்று வந்தாள்.

ஹே குட்டிமா நீயும் இங்கே தான் இருக்கிறாயா? அப்ப திருச்சியை விட்டு இங்கே ஷிப்ட் ஆகி வந்துட்டீர்களா? அனைவரும் என்று கேட்டுக் கொண்டே இருக்க மேல் இருந்து புவனாவும் சஞ்சனாவும் கீழே இறங்கி வருவதை பார்த்து விட்டு...

அடக்கடவுளே மொத்த திருச்சியும் இந்த வீட்டுக்குள் தான் இருக்கிறதா என்று கேட்டான்.

அடப்பாவி உன்னை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததால்.. உனக்கு மரியாதை கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது தேவை இல்லாத ஆணி என்று நீயே சொல்லிவிட்டாய். அப்புறம் எப்படி டா இருக்கிறாய் வினு அண்ணா என்று கேட்டாள் புவனா.

நான் ரொம்ப நல்லா இருக்கேன் டி... உன்னோட இந்த மரியாதையே எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று புவனாவிடம் சொல்லியவன் சஞ்சனாவை பார்த்து எப்படி டா இருக்க என்று கேட்டான் வினய்.

நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க வீட்ல அனைவரும் நலமா என்று கேட்டாள் சஞ்சனா.

அனைவரும் நலமாக இருக்கிறோம்.. எங்கே அனைவரும் கிளம்பி விட்டீர்கள் வேலைக்கா என்று கேட்டான்.

ஆமாம் அண்ணா என்று, தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இப்பொழுது அனைவரும் எந்தெந்த பிரான்சில் இருக்கிறோம் என்ற தகவல்களை கூறினாள். அதோடு லீனாவும் வந்து தானும் அதே கம்பெனியில் கர்ணா, லிபின் இருவருக்கும் பிஏவாக அப்பாயின்மென்ட் ஆகியிருக்கிறேன் என்று சொல்லவும்....

பாரு டா குடும்பமாக ஒரே கம்பெனியில் குப்பை கொட்ட போகிறீர்கள். இதில் ஒரு துரதிருஷ்டமான விஷயம் என்ன என்றால், நானும் லீனா சொன்ன அதே பிராஞ்சில் தான் அக்கவுண்ட் செக்ஷனில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னான் வினய்.

அடக்கடவுளே மறுபடியும் உங்கள் இருவரின் அட்டகாசத்தை ஆரம்பிக்க போகிறீர்களா?.. என்று கேட்டான் சரண்.

கடவுளே உங்கள் கம்பெனிக்கு மட்டும் நான் வேலைக்கு வரவே மாட்டேன்... நான் வேறு கம்பெனி தேடிக் கொள்கிறேன் அப்பா என்று விளையாட்டாக சொல்லி விட்டு...

வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்களை பார்க்க தொடங்கினான் சரண். பின்னொரு நாளில் இவன் பார்க்கப் போகும் வேலையால் நடக்கப் போகும் பிரச்சனைகளை முன்னமே அறிந்திருந்தால்.. ஒழுங்காக தன் தங்கைகளின் கம்பெனியிலேயே வேலை செய்திருப்பானோ என்னவோ???..

ரிஷியும் சரியாக காரை எடுத்துக் கொண்டு வர... அவரவர் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

லீனாவிற்கும் அப்பாடா என்று இருந்தது. எப்படி வேலைக்கு தனியாக செல்வது என்று பயந்து கொண்டு இருந்தவள்... வினயோடு சேர்ந்து வேலைக்கு கிளம்பினாள்.
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top