- Thread Author
- #1
37. கோவிலில் மலரும் நட்பு.
நன்மையா ??? தீமையா ???
பாண்டவர் இல்லம்!
என்ன சொல்றீங்க அத்தை.. நைட் நல்லா தானே இருந்தா, பிறகு எப்படி திடீரென்று காய்ச்சல் வரும் என்று லிபின் கேட்டான்.
தெரியல கண்ணு நான் எப்பவும் போல எதார்த்தமாக எழுந்து வந்து பார்த்தேன். நான் எப்பொழுதும் எழுந்து வரும் பொழுதே அவளும் அதே நேரம் எழுந்து விடுவாள். அவள் தான் முன் வாசல் பெருக்கி கோலம் போடுவாள்.
இன்று காணவில்லையே என்று பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் போய் பார்த்தேன். என்னவென்று தெரியவில்லை உடலை குறுக்கி போர்வைக்குள் படுத்து இருந்தாள். இரவு தேவை இல்லாமல் எதையும் யோசித்தாளா???. இல்லை ஏதேனும் கனவு கண்டு பயந்துவிட்டாளா என்று தெரியவில்லை... முனகிக் கொண்டே படுத்து இருந்தாள். தொட்டுப் பார்த்தால் போர்வைக்கும் மீறி சூடு தெரிந்தது.
பிறகு ஈர துணி வைத்து சிறிது நேரம் பார்த்து விட்டு.. ஓடு உரைத்து பத்து போட்டு விட்டு... வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இனிமேல் தான் அவளுக்கு கஞ்சி வைத்து எடுத்துக்கொண்டு.. மாத்திரையும் கொடுக்க வேண்டும் அவளுக்கு என்று சொல்லிவிட்டு சரி நான் போய் கஞ்சி வைக்கிறேன் என்று கிச்சனுக்கு சென்றார்.
சரோஜாவின் பின்னே சென்ற தனா.. அத்தை நான் வேண்டும் என்றால் அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லவா என்று கேட்டான்.
அச்சச்சோ அவளா அவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிடல் வரமாட்டாள் அவள்... அதனால் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ கவலைப்படாதே என்று சொன்னார் சரோஜா.
என்ன அத்தை நீங்களும் சிறுபிள்ளை போல் பேசுகிறீர்கள். அவள் தான் பயப்படுவாள் என்றால் நீங்கள் அதற்கு மேல் அவளுக்கு ஒத்து ஓதுவது போல் பேசுகிறீர்கள். இந்த காலத்தில் டாக்டரிடம் செல்வதற்கு யாராவது பயப்படுவார்களா என்று எதார்த்தமாக கேட்டான்.
ஆனால் தனாவின் கேள்வியில் அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்து விட்டு... கலங்கும் தன் கண்களை துடைத்துக்கொண்டாள்.
தன் அத்தையின் பார்வையின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாமல்... அவரின் கலங்கும் கண்ணீரையும் கண்டு.. ஐயோ அத்தை நான் ஏதும் தவறாக பேசி விட்டேனா என்னை மன்னித்து விடுங்கள் என்று பதறினான்.
தன் மருமகனின் பதட்டத்தை கண்ட சரோஜா... ஐயோ கண்ணு சாரி நான் தான் ஏதோ அவசரப்பட்டு கலங்கிவிட்டேன். நீ எதற்கு இவ்வளவு பதட்டப்படுகிறாய்... அமைதியாக இரு ஒன்றும் பிரச்சனை இல்லை சில வேண்டாத நினைவுகள் வந்துவிட்டது. அதன் தாக்கத்தில் தான் அத்தை அழுதுவிட்டேன். நீ ஒன்னும் கவலைப்படாதே இதை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ அமைதியாக அலுவலகத்திற்கு செல் என்று அவனை அனுப்பி வைத்து விட்டு...
அழகிக்கு கஞ்சியை வைத்து.. மாத்திரை சுடு தண்ணீர், கஞ்சி அவளுக்கு பிடித்த நல்ல இனிப்பும், புளிப்பும் காரமும் கலந்த மாங்காய் பச்சடியும் செய்து கொண்டு அனைத்தையும் ட்ராலியில் எடுத்து வைத்தவள்... அழகியின் அறைக்கு தள்ளி கொண்டு சென்றார் சரோஜா.
மற்றவர்கள் அவர்கள் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க கர்ணா சரோஜா அத்தையின் அருகில் வந்தான்.
என்ன கண்ணு என்னப்பா வேணும் எதுவும் வேண்டுமா என்று கேட்டார் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தவர்.
அத்தை அழகிக்கு நான் கொண்டு போய் கஞ்சியை கொடுக்கட்டுமா என்று கேட்டான் கர்ணா.
திடீரென்று கர்ணா அப்படி வந்து கேட்டது முதலில் ஒன்றும் புரியாமல் ஏன் கண்ணு .. உனக்கு சிரமம் வேண்டாம் கண்ணு என்று சொன்னவர்... அவனின் முகத்தில் இருந்து எதை உணர்ந்தாரோ... ஒன்றும் பேசாமல் தான் தள்ளி கொண்டு வந்த ட்ராலியை அவன் கையில் கொடுத்து விட்டு, கண்ணு முடிந்தால் அவளுக்கு கொஞ்சம் பிரஷ்ஷப் பண்ணி விட்டுட்டு கஞ்சியை கொடு என்று சொன்னார்.
தன்னுடைய அத்தையின் புரிதலில் சிறிது புன்னகை சிந்தி விட்டு, நான் பார்த்துக் கொள்கிறேன் அத்தை என்று சொல்லி விட்டு ட்ராலியை தள்ளி கொண்டு சென்றான் கர்ணா.
செல்லும் தன் மருமகன் கர்ணாவை பார்த்து விட்டு, கடவுளே.. ஐயனாரப்பா எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று தன் குல தெய்வத்திடம் வேண்டி விட்டு... இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன் இறைவா என்று தன் மருமகன் மீது கொண்ட நம்பிக்கையில்... அடுத்து காலையில் மற்றவர்கள் சாப்பிடுவதற்கான சமையல் வேலையை பார்க்க சென்றார் சரோஜா.
இங்கு வரும் போது எல்லாம் தன் தங்கைகளோடு இந்த சிவன் கோவிலுக்கு வந்து பழக்கம் இருந்ததால்... அங்கு இருந்த தேங்காய் பழ கடைகளும் பழக்கம் இருக்க.. தாங்கள் வாங்கும் வழக்கமான கடைக்கு சென்று அர்ச்சனை தட்டு ஒன்று, நெய் விளக்குகளும் வாங்கிக் கொண்டு... அந்த கடைக்கார அக்காவிடம் நலம் விசாரித்து விட்டு இனி நானும் இங்கே தான் இருப்பேன் என்று கூறியவள்... காலணிகளை அந்த கடையில் இருக்கும் அக்காவிடமே சொல்லி விட்டு கழட்டி வைத்து விட்டு.. உள்ளே சென்றாள்.
விசேஷ தினங்கள் எதுவும் இல்லாததால்... அதுவும் காலையில் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது. நேரே கொடி மரத்துகிட்டயே வாங்கி வந்த அகல் விளக்கை ஏற்றி வைத்தவள்... அங்கு அருகில் இருந்த நந்தியம் பெருமானிடம் காதுகளில் ஏதோ முனுமுனுத்து விட்டு, சிவனை நோக்கி சென்றாள் லீனா...
அப்போது அங்கு ஒரு குழந்தை வேகமாக ஓடி வந்து அவள் மீது இடித்தது... திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்த வேகத்தில் அவள் மீது இடித்ததும், கீழே விழுகப் போன குழந்தையை அப்படியே உட்கார்ந்து அரவணைத்துக் கொண்டாள் லீனா.
அதே நேரம் சரியாக குழந்தையை துரத்தி வந்த ஒருவன்... பாப்பா என்ன இப்படி பண்ற என்று சொல்லி கொண்டே லீனாவை கவனிக்காமல் குழந்தையை வேகமாக தூக்கினான்.
அவன் கோபமாக தூக்குவது போல் தோன்ற... லீனாவோ, ஹலோ மிஸ்டர் என்ன இது கோவில்ல வந்து ஒரு சின்ன பிள்ளை கிட்ட இவ்ளோ கோபத்தை காட்டுகிறீர்கள் என்று கோபமாக பேசினாள்.
அவன் கைகளில் இருந்த குழந்தையும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்க... குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவள் அந்த ஆண்மகனின் முகத்தை பார்க்காமல் இருந்தாள்.
ஆனால் அவனோ லீனாவை பார்த்து விட்டு ஏதோ யோசனைகளோடு நின்று கொண்டு இருந்தான்.
குழந்தையை தூக்கியவன் தனக்கும் பதில் சொல்லாமல், அதே சமயம் நின்று கொண்டும் இருக்கவும்... அப்போது தான் குழந்தையிடம் இருந்து கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள் லீனா.
அவனைப் பார்த்ததுமே அட பன்னி இங்கே என்ன டா பண்ணிட்டு இருக்க... எப்ப டா வந்த சென்னைக்கு என்று கேட்டாள் லீனா..
அடியே என் குட்ட பயந்தாங்கொள்ளி நீ தானா டி... எப்படி டி இப்படி ஒரு பொது இடத்தில் ஒரு குழந்தைக்காக ...
ஒரு பையன் கிட்டையே சண்டை போடுற அளவுக்கு தைரியம் வந்தது. உன் தைரியத்தை கண்டு தான் நீ தான் லீனாவான்னு சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தேன் என்று அதிசயமாக கேட்டவனை பார்த்தவளுக்கு கோபம் உச்சியை கடக்க...
செல்லக்குட்டி இந்த பன்னியை நம்பியா நீ கோவிலுக்கு வந்தாய். ஆமாம் நீ யாரு குட்டி என்று கேட்டாள்.
இவ்வளவு நேரமும் பயந்தவள் போல் இருந்த அந்த செல்ல குட்டி பெண்... ஐயோ ஆண்ட்டி... இது என் சித்தா... சித்தா என்னை இறக்கி விடு நான் போய் அம்மாவை அப்பாவையும் கூட்டிட்டு வரேன் என்று சொல்லி கொண்டே ஓடிப் போனாள்.
டேய் யாருடா இது இவ்ளோ பெரிய குட்டி பொண்ணு... உங்க அண்ணாவுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு பெரிய குழந்தை இருக்கா சொல்லவே இல்ல.. காலேஜ் முடிச்சதும் பிரெண்ட்ஸ் எல்லாம் அவ்வளவு தான்... வீட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் போன் பண்ணி கூட சொல்ல முடியாது உங்களுக்கு.. அந்த அளவுக்கு ஆயிப்போச்சு என்று படபடத்தவளை...
அடியே கொஞ்சம் அமைதியா இரு டி.. எதிரில் இருக்கவனும் பேசணும்.. அதுக்கு வாய்ப்பு கொடு டி என்று சொன்னான் லீனாவால் பன்னி என்று பாசமாக அழைக்கப்பட்ட வினய்.. லீனாவின் கல்லூரி தோழன்.
அடியே அண்ணா கல்யாணம் பண்ணினதை எங்களுக்கே சொல்லலடி லவ் மேரேஜ் டி.. அது மட்டும் இல்லை அன்னைக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கும் பொழுது தான் அவனுக்கு கல்யாணம் நடந்த விஷயமே எங்களுக்கு தெரியும். நம்ம காலேஜ் முடிந்த மறு வருடம் அண்ணாவிற்கு வரேன் பார்க்க ஆரம்பித்தோம்.. அப்பவும் அமைதியாக தான் இருந்தான்.
ஒரு பெண்ணை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்து... சரி என்று சொல்லப் போகும் சமயம் தான்.. எனக்கு குழந்தை இரண்டு வயதில் இருக்கு என்ற உண்மையை சொன்னான். அது தான் இப்பொழுது ஆறு வயது குழந்தையாக இருக்கிறது என்று சொன்னான் வினய்.
ஓஹோ... என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வினயின் அண்ணா அண்ணி குழந்தை என்று.. மூவரும் வந்தவர்கள் லீனாவிடம் எப்படி டா கண்ணே இருக்கிறாய் என்று கேட்டான் வினயின் அண்ணா.
நன்றாக இருக்கிறேன் அண்ணா... அண்ணி நீங்க நல்லா இருக்கீங்களா என்று கேட்டாள்.
ரொம்ப நல்லா இருக்கேன் டா... உன் பெயர் என்ன மா என்று கேட்டாள் வினய் அண்ணி சீதா.
அண்ணி என் பெயர் லீனா.. என்று தன் விபரங்களையும், தன் வீடு மற்றும் வேலைக்கு இன்று முதல் நாள் சேரப்போவது என்று அனைத்து விஷயங்களையும் சொல்லி சிவனுக்கு அர்ச்சனை செய்ய வந்தேன் என்று சொன்னாள்.
சரி டா நாங்கள் சாமி கும்பிட்டு விட்டோம், நீ போய் அர்ச்சனை பண்ணி விட்டு வா நாங்கள் உனக்காக காத்திருக்கிறோம் என்று சொன்னார்.
அச்சச்சோ அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் அண்ணி... காலையில் என்னால் உங்களுடைய பணிகள் எதுவும் நிற்க வேண்டாம். ஏய் வினய் உன்னுடைய நம்பரில் தானே நீ இருக்கிறாய். நான் உனக்கு கால் பண்ணி பேசுகிறேன் நீங்கள் கிளம்புங்கள் அண்ணி என்று சொன்னாள்.
அண்ணி நீங்கள் கிளம்புங்கள் நான் அவளோடு இருந்து பேசி விட்டு அப்புறம் வருகிறேன். அண்ணா உனக்கும் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது தானே நீங்கள் கிளம்புங்கள் என்று சொன்னான்.
வினய் சொல்லவும்.. சரி லீனா ஒரு நாள் நீயும் உன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இவனோடு சேர்ந்து நம் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு.. கிளம்பி சென்றனர்.
லீனாவோடு வினய் மறுபடியும் சென்று சிவபெருமானை வழிபட்டு விட்டு... வினயின் பைக்கிலே தன் வீட்டிற்கு சென்றாள்.
வினய் இவனின்
வரவு... வினையாகுமா... இல்லை நன்மை பயக்குமா....
இணைந்திருங்கள்..
சொல்லவா ... வேண்டாமா...