- Thread Author
- #1
28... மெய்யழகியின் விளக்கமும்... உதயா சனாதன் நட்பும்...
மிதுன், ருத்ரா இருவரும் காரில் போய்க்கொண்டு இருக்க...
ஏன் ருத்ரா அவ்வளவு கோவப்பட்டாய் என்று மிதுன் இயல்பாக கேட்டான்.
ஐயோ மிதுன் எனக்கு என்னமோ அந்த பெண்ணை பார்த்தால் ஓவர் ஆட்டிட்யூட் மாதிரி தோன்றுகிறது. எனக்கு அவளைப் பார்த்தாலே இருட்டேட்டிங்காக இருக்கிறது.. என்று ருத்ரா சொல்லவும்... மிதுன் வேற எதுவும் பேசாமல் அவனை அமைதியாக வா... என்று ருத்ரனை பார்த்து சொல்லி விட்டு அமைதியாக வீட்டிற்கு சென்றான்.
போலீஸ் ஸ்டேஷன் சென்ற மூவருக்காகவும் வாசலிலேயே காத்து இருந்தாள் மெய்யழகி.
அதே போல் மிதுன், ருத்ரா இருவரும் காரில் இருந்து இறங்கவும் எங்கே தனா மாமாவை காணோம் என்று கேட்டாள்.
அவன் ஏதோ வேலை இருக்கிறது என்று பாதியில் இறங்கிக் கொண்டான் என்று சொல்லி கொண்டே மிதுன் ருத்ரன் இருவரும் உள்ளே செல்ல பார்க்க..
ஒரு நிமிடம் மாமா இப்படி என்னோட வாருங்கள் என்று சொல்லி இருவரையும் பின் பக்கம் அழைத்து சென்றாள் மெய்யழகி.
மெய்யழகி கூப்பிட்டதும் என்ன எது என்று கேட்காமல்.. அவள் பின்னே இருவரும் சென்றார்கள்.
அங்கே பின்பக்கம் தோட்டத்திற்கு பாய்ச்சும் பம்பு செட்டை போட்டுக்கொண்டு ... அதில் கர்ணா, லிபின் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அருகிலேயே கேஸ் அடுப்பு வைத்து அதில் பன்னீர் பட்டர் மசாலா ஒரு பக்கம் ரெடியாகி கொண்டு இருக்க இன்னொரு புறம் நான் ரொட்டிகளை சுட்டு எடுத்துக் கொண்டு இருந்தார் சரோஜா அத்தை.
என்ன ஆச்சு அழகி இன்று ... இன்னைக்கு என்ன விசேஷம்?. இரவு உணவு இங்கே ரெடியாகி கொண்டு இருக்கிறது என்று கேட்டார்கள் மிதுன், ருத்ரன் இருவரும்.
அதற்குள் இருவருக்கும் ஆன ஷார்ட்ஸ் எடுத்து வந்து கொடுக்க.. அதோ அங்க மோட்டார் ரூம்ல போய் சேஞ்ச் பண்ணிக்கோங்க மாமா என்று கொடுத்தாள்.
முதலில் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்து கொஞ்சம் தண்ணீரில் விளையாண்டு கொண்டு இருங்கள் நீங்களும்... பிறகு நான் ரொட்டிகள் போட்டு முடித்த பிறகு கூப்பிடுகிறேன். வந்து டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு... இங்கேயே முருகன் அண்ணன் கிட்ட சொல்றேன் டேபிள் அரேஞ்ச் பண்ணுவாங்க. இங்கே உட்கார்ந்து இன்னைக்கு சாப்பிடலாம் என்று சொன்னாள்.
ஓகே அழகி தேவியாரே ... அப்படியே ஆகட்டும் என்று ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ் பனியன் எடுத்துக்கொண்டு இருவரும் உள்ளே சென்று ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்தனர்.
பிறகு வேலையாட்கள் அவர்களது அணிந்து இருந்த உடையை துவைப்பதற்கு எடுத்துக் கொண்டு சென்றனர்.
கர்ணா, லிபின் இருவரோடு இணைந்து இவர்களும்.. தண்ணீர் தொட்டியில் நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தனர்.
லிபின் என்ன டா விசேஷம் இன்று, இன்று பௌர்ணமி கூட கிடையாது.. பௌர்ணமி முடிந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்டது. பிறகு எதற்காக இந்த அட்மாஸ்பியரில் இரவு உணவு தயாராகிக் கொண்டு ஊருக்கிறது என்று கேட்டான்.
அது வா மிதுன் அண்ணா... நீங்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்தீர்கள் தானே.. அதற்கான ட்ரீட் தான் இது என்று சொன்னான் கடைக்குட்டி சிங்கம் லிபின்.
டேய் என்னடா சொல்றீங்க போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்ததற்காகவா... நாங்கள் போலீஸ் ஸ்டேஷன் போகவில்லை. கமிஷனர் ஆபீஸ் தான் டா போயிட்டு வர்றோம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே...
அங்கு மெய்யழகி அனைவருக்கும் ஆன டவல் எடுத்துக் கொண்டு வந்தாள்.
ஐயோ லிபின் மாமா ... சும்மா இருக்க மாட்டியளா... இந்த ராத்திரி நேரத்தில் கமிஷனர் ஆபீஸ் போயிட்டு வந்ததற்காக தான் குளிக்க சொல்லி வீட்டிற்கு உள்ளே வர விடாமல், இப்படி வெளியே வைத்து கொடுமைப்படுத்துகிறேன் என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்.
ஐயோ மாமா நான் அந்த மாதிரி தப்பான அர்த்தத்தில் இந்த இரவு உணவை இங்கு செய்ய சொல்லவில்லை என்று அவசரமாக லிபினிடம் வருத்தமாக சொல்லி விட்டு, மிதுன் ருத்ரன் இருவரிடமும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மாமா என்று மன்னிப்பு கேட்டாள்.
ஐயோ அழகி உன் மீது நாங்கள் இருவரும் கோபம் எல்லாம் எதுவும் படவில்லை.. ஆனால் லிவிங் சொல்வது போல் கமிஷனர் ஆபீஸ் சென்று வந்ததற்காக தாடி எங்களை உள்ள விடாமல் வெளியே குளிக்க வைக்கிறாய் என்று கேட்டான் ருத்ரன்..
ஆனால் அவன் முகத்தில் இருந்த புன்னகையில் தன்னுடைய பயத்தையும் பதட்டத்தையும் குறைத்துக் கொண்டு...
அதுவும் ஒரு வகையில் காரணம் தான். ஆனால் நீங்கள் அனைவரும் நினைப்பது போல் பழைய பஞ்சாங்கமாக போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்தால், தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். தீட்டுக் கழிய வேண்டும் அப்படி என்றெல்லாம் நான் இதை செய்யவில்லை.
இப்போது நீங்களே யோசித்துப் பாருங்கள் அங்கு உங்கள் அம்மா அப்படி சொல்லி எல்லாம் வளர்த்து இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது. அதாவது அங்கு நம் இந்து கோவில்கள் எல்லாம் இருக்குமா என்று கூட எனக்கு தெரியாது.
இங்கே நாம் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது... வீட்டிற்குள் வந்ததும் பாத்ரூம் சென்று கை, கால்கள் அளவக்கூடாது என்று சொல்வார்கள் ஏனென்றால் நான் கோவிலுக்கு சென்று வரும் போது அங்கு இருக்கும் தெய்வம் நம்மோடு வருகிறது என்று சிலரும் சொல்வார்கள்.. தெய்வம் நம்மோடு வருகிறதோ வரவில்லையோ...
ஆனால் அங்கு நாம் சென்று வரும் போது நம் மனது உடலும் மிகவும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். எவ்வளவு கவலைகளை அங்கு வருபவர்கள் சுமந்து வந்தாலும் அங்கு கோவிலில் இருந்து வெளியில் செல்லும் போது.. தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள் எதுவும் தேர்ந்தெடுக்காது ஆனால் அதை சமாளித்துக் கொள்ளலாம் என்ற ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் அது இறைவனாலா இல்லை எதனால் என்று தெரியாது ஆனால் அந்த கோவிலில் இருந்து வெளியில் வரும் பொழுது அவ்வளவு நிம்மதியாக இருக்கும் அந்த சமயம் அந்த உணர்வோடு நாம் வீட்டுக்குள் வரும் போது குளித்து முடித்தோ கை கால்கள் கழுவினோம் என்றாலோ..
அந்த பாசிட்டிவ் எனர்ஜி இல்லாமல் போகும் என்பது என்னுடைய கருத்து என்பதை விட எனக்கு என் பாட்டி சொல்லிக் கொடுத்த கருத்து.
அதே போல் தான் போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, கோர்ட் இந்த மூன்று இடங்களுக்கும் சென்று வந்தாலும் நம் மனதில் தேவையில்லாத பாரங்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. நாம் அங்கு சென்ற காரணம் ரொம்ப பெரிய காரணமாக இல்லாமல் இருந்தாலும் அங்கு சுற்றி நடக்கும் ஏதேனும் ஒரு கெட்ட விஷயமோ ஏதோ மனதை பாதிக்க கூடிய விஷயமோ அதை பார்த்து விட்டு வந்தால், அது நம் மனதில் போட்டு உழன்று கொண்டு இருக்கும். அதற்காகத்தான் வந்ததும் குளித்து விட்டு வரும்போது அந்த நீரில் அங்கு இருந்த அனைத்து பிரச்சனைகளையும் மறப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். அடுத்த வேலையை அமைதியான மனதுடன் பார்க்க உதவும் அதனால் தான் என்று நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்தாள் அழகி.
அவளின் நீண்ட சொற்பொழிவை கேட்டு விட்டு.... தன்னுடைய கண்ணில் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியில் வந்த லிபின்...
மீ.. பாவம்.. இந்த குட்டி வயிறு பசிக்குது சாப்பிட போகலாமா என்று கேட்டான்...
அச்சச்சோ விபின் மாமா நானும் சாப்பாடு எல்லாம் ரெடி ஆகி எடுத்து வைத்தாயிற்று.. உடைமாற்றிக் கொண்டு வாருங்கள் சாப்பிட என்று அழைக்க தான் வந்தேன்.
இந்தாங்க டவல் என்று சொல்லி நால்வருக்கும் டவலை கொடுக்கவும்...
வாங்கிக்கொண்டு உடைமாற்றி விட்டு நால்வரோடு சரோஜா அத்தை, அழகி இருவரும் அமர்ந்து ஒன்றாகவே இரவில்.. சுற்றிலும் மரங்களுக்கு இடையில்... அழகாக ஒளிந்து கொண்டு இருந்த மின்சார ஒளியிலும்... இயற்கையின் சுவாசத்திலும் .. ஜாலியாக பேசிக்கொண்டு உணவு அருந்தினர்.
அதே நேரம் இங்கு ஹோட்டலில் அதை நான், பனீர் பட்டர் மசாலா.. ஆர்டர் செய்து உதயா சஞ்சனாவோடு அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் சனாதன்.
லட்சுமி அம்மா .. எப்படி தம்பி இந்த பெண்களை வைத்து கம்பெனியில் சமாளிக்கிறீர்கள் என்று கேட்கவும், அதுவரை நல்ல பிள்ளை போல் அமைதியாக இருந்த சஞ்சனா...
உதயாவை ஒரு பார்வை பார்த்து விட்டு... சாரி மா என்று சொல்லி லட்சுமி அம்மாவின் பிளேட்டில் இருந்த சிக்கன் லாலிபாப் ஐ எடுத்து தன் பிளேட்டில் வைத்து சாப்பிட்டாள்.
அட கருமமே இது தான் உன் கோபமா டி என்று சரண் கிண்டல் செய்தான்.
அப்போது லட்சுமி அம்மா வேற என்ன செய்வா.. இப்போது உதயா இருக்கான் இல்ல... இன்று லட்சுமி அம்மா சொல்லவும்...
அப்படி உதயா இல்லை என்றால் என்ன செய்வாள் லஷ்மி மா என்று ஒரு ஆர்வத்தில் சனாதன் கேட்டு விட்டான்.
வேறு என்ன உதயா மட்டும் இல்லை என்றால் என் பிளேட் அப்படியே எடுத்து சாப்பிட்டு இருப்பாள். அவ்வளவு தான் என்று சொல்லி விட்டு அமைதியாக சாப்பிட்டார்.
ஆனால் சஞ்சனாவின் முகம் போன போக்கில்... சனாதனுக்கு சிரிப்பு வந்து விட்டது... ஆனால் எப்பவும் போல் மென்மையான சிரிப்பாக மட்டுமே இருக்க... எனக்கு எந்த தடையும் இல்லை என்பது போல் சரண் வாய் விட்டே சிரித்தான்.
சரணின் தடையற்ற சிரிப்பில்... சனாதனும் தன்னுடைய மென்மையான சிரிப்பை கொஞ்சம் இலகுவாக்கி இதழ் பிரித்து அழகான புன்னகையை சிந்தினான்.
அந்த சிரிப்பில் ஏனோ தனக்குள் பூகம்பம் வர... அதை உணராமல் கோபத்தில் எழுந்து செல்ல நினைத்து எழுந்தாள்...
ஆனால் எழுந்த சஞ்சனாவை உதயாவின் ஒரு பார்வை அமைதியாக உட்காரு என்று சொல்ல...
குனிந்த தலை நிமிராமல் தன் பிலேட்டில் இருக்கும் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டவள் வேறு எதுவும் பேசவே இல்லை சாப்பிட்டு முடிக்கும் வரை.
அதே போல் சிரித்துக் கொண்டு இருந்த சரணுக்கும் ஒரே பார்வை தான்.. அவனும் அமைதியாக சாப்பிட்டான்.
இருவரும் சாப்பிட ஆரம்பித்த பிறகு உதயா சனாதனை பார்த்து... சாரி சார் இது ரெண்டும் இல்ல... என் கூட பிறந்த அத்தனையுமே சரியான வாலு பிள்ளைகள் தான் என்று ஒரே வார்த்தையில், நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்று அழகாக சொன்னான்...
ஏனோ இந்த நேரம் கவிப்பிரியா இவர்களைப் பற்றி சொல்லிய பேச்சு மனதிற்குள் வந்து போக... விநாடிக்கும் குறைவாக கவிப்பிரியாவை நினைத்து வருந்தினான்.
பிறகு உதயாவிடம்... ஏன் உதயா இவர்கள் தான் என்னை சார் என்று சொல்கிறார்கள் சரி... நீ எதற்கு என்னை சார் என்று சொல்கிறாய்... சும்மா நீயும் என் வீட்டில் கூப்பிடுவது போல் தனா என்றே கூப்பிடலாம் என்று சொன்னான்.
ஓகே தனா... என்று சொல்லி விட்டு... நான் இன்று இரவு 11 மணிக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன். சோ.. நான் கிளம்பனும். அதே சமயம் நான் மட்டும் தான் கிளம்புகிறேன் மற்றவர்கள் அனைவரும் இங்கு தான் இருக்கப் போகிறார்கள்.
அதுவும் லீனா புதிதாக ஒரு கம்பெனியில் ஜாயின் பண்ணி இருக்கா... சஞ்சனா நீ தான் அவளை பார்த்துக் கொள்ள வேண்டும்... என்று சொல்லி கொண்டே சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பினார்கள்.
சனாதனும் லட்சுமி அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினான்.
அனைவரும் அவரவர் வழி செல்ல இரண்டு கண்கள் அவர்கள் அனைவரையும் குரோதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...