• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
23. சனாதன், சஞ்சனா இருவரும்...

கவிப்பிரியாவின் நிலையும் ...

மெய்யழகியின் நிலையும்....



புவனாவிற்கு ருத்ரதேவனோடு.. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் முதல் நாள் வேலை இனிதாக முடிந்தது.

ருத்ர தேவ் சட்டென்று யாரிடமும் பகையும் வைத்துக் கொள்ள மாட்டான். அதே சமயம் சட்டென்று நெருங்கி பழகவும் மாட்டான். மிகவும் அமைதியானவன். தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவனுக்கு ஒரு வழியில் செல்பவன்.

அதனால் புவனாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் அன்றைய பொழுது நிம்மதியாக கழிந்தது.

மாலை நேரம் அனைவரும் அவரவர் பணியை முடித்து விட்டு அவரவர் இல்லங்களுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

சஞ்சனாவும் சனாதனிடம் சொல்லி விட்டு செல்ல வேண்டுமா?? இல்லை நம் வேலை முடிந்தது என்று கிளம்ப வேண்டுமா ???... என்று இரண்டும் மனங்களாக தன் மனதை குழப்பி கொண்டு இருந்தாள்.

ஒவ்வொருவராக கிளம்பி சென்ற பிறகு.... இறுதியாக இருந்தவளும் ஏன் சஞ்சனா மேம் கிளம்பாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டாள்.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இதோ கிளம்பி விட்டேன். எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று தன்னுடைய பொருள்கள் அனைத்தையும் எடுத்து வைப்பது போல், தன் பொருள்களை மெதுவாக எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். சரியாக அந்த பெண்ணிற்கும் போன் வர அவளிடம் விடைபெற்று சென்று விட்டாள்.

இறுதியாக சரி நான் வீட்டிற்கு கிளம்புவோம் என்று முடிவு எடுத்து தன்னுடைய வண்டி சாவி எடுத்துக் கொண்டு... தன்னுடைய லேப்டாப் பேக், லஞ்ச் பேக் இரண்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவள் வெளியே வர சரியாக எதிரில் சனாதனும் அவன் அறையில் இருந்து வெளியில் வந்தான். இருவருமே ஒருவர் ஒருவரை பார்த்துக் கொள்ளாமல் லிப்ட்டை நோக்கி சென்றனர்.

லிப்ட் அருகில் செல்லும் பொழுது தான்... தனக்கு பின்னால் வந்த சஞ்சனாவை பார்த்தான். அப்போதும் சஞ்சனா குனிந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டே வந்தவள் அவனை கவனிக்காமலேயே லிப்ட் உள்ளே ஏறினாள்.

சஞ்சனாவின் நிலையை பார்த்தவன் அவளுடன் விளையாடி பார்க்க எண்ணி... லிப்டை மேல் நோக்கி செலுத்தினான்.

ஒன்பது தளங்கள் கொண்ட அந்த லிஃப்ட்.. ஒன்பதாவது தளத்தில் சென்று நின்றது.

அப்போதும் அதை கவனிக்காமலே ஒன்பதாவது தளத்தில் இறங்கினாள்.

என்ன இவள் எதையும் கவனிக்காமல் இப்படி இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு... இப்போது மண்டை குழம்பி போவது சனாதன் முறையாகிற்று.

சரி அவள் என்ன தான் செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று அவள் பின்னே சென்று பார்த்தான் சனாதன்.

அவளோ இப்பொழுது நிமிர்ந்து ஒரு முறை பார்த்து விட்டு... திரும்பி பார்க்க சனாதன் மறைந்து கொண்டான்.

அதே தளத்தில் மற்றொரு பக்கம் இருந்த லிப்ட் ஐ நோக்கி சென்றாள் சஞ்சனா.

இப்பொழுது உள்ளே சென்றவள் நிமிர்ந்து நின்று கொண்டு இருக்க சனாதனும் உள்ளே வந்து அவளுடன் நின்றான்.

ஆனால் அவளோ அப்படி ஒருவன் தன் அருகில் நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.

லிஃப்ட் கிரவுண்ட் ப்ளோர் சென்றதும்... பார்க்கிங் ஏரியா சென்று தன்னுடைய புல்லட்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள்... திரும்பிப் பார்க்க சனாதன் தன் காரை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தான்.

சஞ்சனா வெளியில் செல்லாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த சனதன் கண்டிப்பாக தன்னுடன் பேசுவதற்காக தான் இருக்கிறாரோ என்று சந்தேகம் தோன்ற வேகமாக செல்ல வேண்டும் நினைத்து காரை வேகமாக எடுத்து சென்றான். மூளை அறிவுறுத்த வேகமாக எடுத்துச் சென்றாலும் ஏனோ மனம் அவள் அருகில் செல்லும் போது மெதுவாக சென்றது மட்டும் இல்லாமல்.... கார் நின்றே விட்டது .

அவளும் காருக்கு அருகில் வந்து கார் டோரை இறக்க சொன்னாள்...

சஞ்சனாவின் செய்கையை பார்த்து விட்டு கார் டோரை இறக்கி விட்டான் சனாதன்.

பை... புருஷ்.... என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு செல்லாமல்... ஆமாம் மாடிக்கு எதுக்கு டா கூட்டிட்டு போன... சரி உனக்கு கூட்டிட்டு போவதற்கு வேறு இடம் எதுவும் தெரியவில்லை. சரி விடு இந்த ஞாயிறு மறுபடியும் பீச்சுக்கு போகலாமா வரியா என்று கேட்டாள் சஞ்சனா.

சஞ்சனா புருஷ் என்று அழைத்ததில் தடுமாறிய மனதை... பீச்சுக்கு போகலாமா என்று கேட்டதில் தெளிய வைத்தவள்... சனாதன் முக மாற்றத்தை வைத்தே அவன் கோபமாகிறான் என்று தெரிந்து வண்டியை வேகமாக எடுத்து பறந்து சென்று விட்டாள்.

அடிப்பாவி மத்தியானம் நான் வைத்து செய்ததற்கு .. இப்போ என்னை வைத்து செய்து விட்டாளா இவள்... சரியான கேடி... என்று அவளை திட்டினாலும் முகம் என்னவோ சிரித்துக் கொண்டு தான் இருந்தது.

அதே போல் ருத்ர தேவ் காலையில் ஆபீஸ் வருவதற்கு முன்பு... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வேலைப்பளுவில் மறந்து இருந்தவனின் மனதில், தன் காரில் ஏறி அமர்ந்ததும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.

ஏனோ காலையில் தான் பார்த்த பெண் எந்த மாதிரி ஆன பெண்... முதலில் தன் டிரைவருக்காக துடித்தாள்... ஆனால் சிறிது நேரத்தில் ஒரு இளைஞனை தேவை இல்லாமல் அடித்து வம்பு இழுத்து... கடைசியில் உப்பு பெறாத ஒரு விஷயத்திற்கு அந்த பையனை வேலையை விட்டு நீக்கினாள். அது தான் போகுது என்று பார்த்தால் காலையிலேயே பாருக்கு செல்கிறாள் என்று மனதிற்குள் நினைத்தாலும் அவன் கார் அந்த பார் இருந்த சாலையில் தான் போய்க் கொண்டு இருந்தது.

சரியாக அந்த பார் அருகில் செல்ல... அப்போது நான்கு குடிமகன்கள் முழு போதையில் வர... அவர்கள் பின்னே அதை விட போதையில் கவிப்பிரியா வந்தாள். ஆனால் அவளிடம் நிதானம் இருந்தது.

அவர்களை தாண்டி செல்லும் போது.. அதில் ஒருவன் டேய் இந்த குதிரை மட்டும் அடங்கவே மாட்டேங்குது என்று சொல்லி கொண்டு இருந்தான்.

அதை காதில் வாங்காமல் அவளின் கார் அருகில் சென்று ஒரு நொடி சாலையை பார்த்தவள்.. இவ்வளவு ட்ராபிக்கில் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது சரியில்லை என்று நினைத்து.. தன் டிரைவருக்கு கால் செய்தாள்.

அவர் எதிரில் இருந்த கடை ஒன்றில் அமர்ந்து இருந்தவர் வேகமாக எழுந்து வந்தார்.

அவர் எதிர்ப்புறம் இருந்து எழுந்து வருவதற்குள்...

இங்கு இருந்த நாலு குடிமகன்களும் அவளிடம் வந்து... ஸ்வீட்டி நான் வேண்டுமானால் காரை ஓட்டி வரவா என்று கேட்டான்.

அவளோ மிகவும் அமைதியாக நின்றாள்.

டிரைவரும் அந்த இளைஞர்களை பார்த்துக் கொண்டு வேகமாக வந்து காரை எடுத்தார்.

ஏனோ அந்த இளைஞர்களுக்கு இன்று அவளை விடக்கூடாது என்று தோன்ற..

அவள் காரை இவர்கள் ஃபாலோ செய்த போனார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து ருத்ர தேவும் எதற்கு என்று தெரியாமலே அந்த இளைஞர்களின் காரை பாலோ செய்து சென்றான்.

ஆனால் ருத்ராவிற்கு ஒரு போன் வர போன் அட்டென்ட் செய்து பேசுவதற்காக காரை ஓரமாக நிப்பாட்டி விட்டு போன் பேசினான்.
இந்த இடைவெளியில் அந்த இரண்டு கார்களும் ருத்ரனின் கட்டுப்பாட்டில் இருந்து சென்று விட்டது.

போன் பேசி முடித்த பிறகு.. அவன் மனம் ஏனோ ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டு இருக்க வேகமாக.. காரை இயக்கினான்.

அவர்கள் வீட்டுக்கு செல்லும் பாதையில் இடப்புறம் ஒரு கிளை பாதை போக... அந்த பகுதியில் இருந்து நேர் எதிரில் ஓடி வந்து கொண்டு இருந்தாள் கவிப்பிரியா.

அவள் வேகமாக ஓடி வந்ததும்... அவளின் கலைந்த தோற்றமும் ஏதோ தவறாக பட... அவள் அருகில் வண்டியை நிறுத்தி..‌ அவள் தன்னை காணாமல் கடந்து தான் போவாள் என்று மனதிற்குள் பட.. காரில் இருந்து இறங்கி அவள் தன்னை கடக்கும் சமயம் சரியாக அவளை தன் காரின் உள்ளே இழுத்து தள்ளி இருந்தான்.

உள்ளே விழுந்த வேகத்தில் அவள் சீட்டில் அடிபட்டு மயக்கத்திற்கு சென்று விட்டாள்.

ருத்ர தேவும் சட்டென்று வண்டியில் அமர்ந்து ... அவளை கவனிக்காமல் காரை வேகமாக எடுத்துச் சென்றான். ஏனோ அந்த இடத்தில் இருப்பது அவ்வளவாக உகந்தது இல்லை என்ற மனது சொல்ல ... தன் அருகில் மயக்கத்தில் இருப்பவளை கவனிக்காமல் காரை வேகமாக எடுத்துச் சென்றான்.

சிறிது தூரம் சென்ற பிறகு தான் இன்னும் சிறிது சென்றுவிட்டால், தன் வீட்டிற்கு அருகில் சென்று விடுவோமே.. அதற்குள் இந்த பெண்ணை எழுப்பி அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமே என்ற சிந்தனை வந்த பின்பு தான், காரை மெதுவாக நிறுத்தி அவளை பார்த்தான்.

கலைந்த ஓவியம் போல் கிடந்தவள் முகத்தை பார்க்க ஏனோ அந்த முகம் தனக்குள் ஆழமாக பதிவதை உணர்ந்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையை சரியாக இல்லை என்பதால் அவள் மீது இருந்த கவனத்தை தனக்குள் தடுத்து, அவளுக்கு மயக்கம் தெளிய வைப்பதற்காக காரில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான்.

அவளோ ஓடி வந்த களைப்பா அடிபட்டதன் வீரியமா என்ன என்று தெரியாமல் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.

அவள் எழுந்து கொள்ளாமல் இருக்கவும் தான் அவளின் முகத்திற்கு கீழே பார்க்கும் போது... அதிர்ந்து போனான்... ????...


கர்ணா அலுவலகத்தில்.

மெய் நாங்கள் வீட்டிற்கு கிளம்புகிறோம்... நீ இன்னும் கிளம்பாமல் என்ன செய்கிறாய் என்று கேட்டேன் கர்ணா.

அலுவலகத்தில் அனைவரும் சென்று இருக்க... அலுவலக நேரமும் முடிந்து விட..

அழகி.. அது வா மாமா.. எப்பவும் செக்யூரிட்டியோட சேர்ந்து அலுவலகத்தை மூடி விட்டு... சாவியை நான் வாங்கிக் கொண்டு தான் வருவேன் என்று சொன்னாள் அழகி.

ஓகே மெய் நீ போய் உன் வேலைகளை பார்த்து விட்டு வா... நாங்கள் முன்னே செல்கிறோம் என்று சொல்லிவிட்டு தன் இரட்டையோடு சேர்ந்து வீட்டிற்கு சென்றான்..

கர்ணா , லிபின் இருவரும் சென்ற பிறகு
வழக்கம் போல் செக்யூரிட்டியோடு சேர்ந்து அலுவலகம் முழுவதும் ஒரு பார்வை பார்த்து விட்டு.. அவரிடம் ஒரு சாவிக்கொத்தை கொடுத்து விட்டு, தன்னிடம் இருந்த சாவிக்கொத்தை தன்னுடைய கைப்பையில் வைத்துக் கொண்டு.. தன்னுடைய ஸ்கூட்டியில் வேகமாக பறந்தாள்.

அழகி சென்று ஸ்கூட்டியை பாலோ செய்து கொண்டு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அதில் இரண்டு ஜோடி கண்கள் அவளின் மகிழ்ச்சியை குரோதத்தோடு பார்த்து கொண்டே பாலோ செய்தார்கள்.

தன்னை இருவர் ஃபாலோ செய்வதை அறியாமல்... தன்னுடைய இருண்ட பக்கங்களை... சரோஜா அம்மாவின் உதவியால் மறந்து போனவள்... அதில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என்ற நம்பிக்கையில் பறந்து கொண்டு இருந்தாள்.

ஆனால் விதி வலியது அது அவளை துரத்திக் கொண்டே தான் இருக்கிறது என்று அறியும் பொழுது... பாவை அவள் என்ன செய்வாளோ.... ?... தன்னைக் காத்துக் கொள்வாளா?... இல்லை மீண்டும் சிறைபடுவாளா?...
இணைந்திருங்கள்

சொல்லவா ... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top