• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
19. கவிப்பிரியாவின் கோபம்...
வந்தது யார்???...


பரத் கிட்ட பேசிட்டு இருந்த சஞ்சனா.. இரு எங்க அண்ணனுக்கு கால் பண்றேன் என்று சொல்லி விட்டு.. போன் செய்தாள்.


அங்கே தன் நண்பனுடன் தன்னுடைய ப்ராஜெக்ட் பத்தி பேசிக் கொண்டு இருந்தவன்... என்ன பாப்பா இப்பதானே விட்டுட்டு போனா அதற்குள் போன் பண்ணுகிறாளே என்று நினைத்துக் கொண்டே போனையே அட்டென்ட் செய்து சொல்லு டா பாப்பா என்ன விஷயம் என்று கேட்டான்.

ஒன்றும் இல்லை அண்ணா,நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் இப்ப எது முக்கியமான வேலையில் இருக்கிறீர்களா... ஐயோ சாரி நீங்க ப்ராஜெக்ட் பத்தி பேசிட்டு இருப்பீங்கன்னு தெரியும் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் அவசரம் என்று கேட்டாள் சஞ்சனா.

பாப்பா தலை போற விஷயமாக இருந்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நீ எதற்காக போன் செய்தாய் அதை கூறு முதலில் என்று சொன்னான் உதயா.

அண்ணா உங்களை விட்டு விட்டு நான் வந்த போது என்று இங்கு நடந்த அனைத்து விவரங்களையும் மிக சுருக்கமாக சொன்னாள் தன் அண்ணன் உதயாவிடம்...

பரத் பக்கத்துல தான் இருக்கானா... என்று கேட்டான் உதயா.

ஆமாம் அண்ணா வேலை போயிடுச்சு ஆனாலும் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தது.. இப்பொழுது கொஞ்சம் கவலை இல்லாமல் நிற்கிறான் என்று சொன்னாள்.

சரி டா அவனிடம் போனை கூட என்று சொல்லவும்.. சஞ்சனாவும் பரத் கிட்ட போனை கொடுத்தாள்.

போனை வாங்கிய பரத் அண்ணா நல்லா இருக்கீங்களா என்று கேட்டான்...

நான் நல்லா இருக்கேன் டா நீ எப்படி இருக்க.. வீட்ல அம்மா, அக்கா, அவங்க வீட்டுக்காரர் எல்லாரும் நலமா என்று கேட்டான்.

எல்லோரும் நல்லா இருக்காங்க அண்ணா... அம்மா, அக்கா இருவரும் கூட போன வாரம் அம்மா கிட்ட பேசிட்டு தான் இருந்தாங்க அண்ணா என்று சொன்னான்.

சரி டா நான் இப்போ ஒரு அட்ரஸ் சொல்றேன் அதை நோட் பண்ணிக்கோ அந்த அட்ரஸ்க்கு வா நீ என்று சொல்லி விட்டு தங்கச்சி இடம் போனை கொடுக்க சொன்னான்.

பரத் கிட்ட இருந்து போனை வாங்கியவள் சொல்லுங்க அண்ணா என்று கேட்டாள் சஞ்சனா.

பாப்பா என்னை இறக்கி விட்ட இடத்தை சொல்லி அங்கு வர சொல் டா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னான் உதயா.

சரிங்க அண்ணா என்று சொல்லி விட்டு பரத் கிட்ட அட்ரஸ் சொல்லி அவனை அனுப்பி விட்டு... திரும்பி செல்ல...

அப்போது அங்கு வந்த ருத்ரா...

ஹாய் சஞ்சனா என்று அழைத்தான்.

ஒரு நிமிடம் அவனை பார்த்து விட்டு அச்சச்சோ நீங்கள் யார் என்று தெரியும் அங்கிள் காட்டி இருக்கிறார்.. ஆனால் நீங்கள் எத்தனையாவது பெயர் என்ன மறந்து விட்டேன் என்று சொன்னாள் சஞ்சனா.

நான் மூன்றாவது பையன். என் பெயர் ருத்ர தேவ் என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

ஓ... யா... கரெக்ட் உங்கள் ஃபேமிலியில் இருக்கும் அனைவரையும் அங்கிள் போனில் காட்டியிருக்கிறார்... ஆனால் பெயர்கள் தான் நினைவுக்கு வரவில்லை... ஓகே ஆர் டி சார்... குட்மார்னிங். ஆமாம் இது உங்க ரூட் இல்லையே.. அப்புறம் எங்க இந்த பக்கம் என்று சிறிது சந்தேகத்தோடு கேட்டாள் சஞ்சனா.

அது என்னுடைய லேப்டாப் சார்ஜர் கீழே விழுந்து விட்டது... சர்வீஸ் கொடுத்து இருந்தேன். அதை வாங்கி கொண்டு இனி தான் ஆபிஸ் போகனும் என்று சொன்னான்.

ஓஓ.. ஓகே ஆர் டி சார்.. நான் கிளம்புறேன். அப்பவே சிக்னல் கிட்ட சிடுமூஞ்சி சித்தப்பனை பார்த்தேன். இப்போது நான் கிளம்பி போனால் தான் சரியான நேரத்தில் ஆபிஸ் போய் சேர முடியும் என்று சொல்லி விட்டு ருத்ரா கிட்ட விடை பெற்றாள் சஞ்சனா.

சஞ்சனா தன் பைக் இல் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய அப்போது ருத்ரா ஏய் சஞ்சனா நீ யாரை சொன்னாய் சிடு மூஞ்சி சித்தப்பா என்று கேட்டான்.

அச்சச்சோ சாரி ஆர் டி சார்... அது கண்டிப்பா சொல்லியாகனுமா என்று கேட்டாள் சஞ்சனா.

நான் சும்மா விளையாட்டு தான் கேட்டேன் ஆள் நீ இப்படி அழுத்தி சொல்லும்போது கேட்கணும்னு தோணுது யாருது என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

உங்கள் வீட்டு இரண்டாவது நெடுமரம் தான் என்று சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டாள்....

தன் அண்ணனை கிண்டல் செய்து விட்டு செல்லும் போது தான் தன் அண்ணன் சனாதன் லைனில் இருப்பது நினைவு வந்தது.

போனை பார்க்க அது கட்டாகி இரண்டு நிமிடங்கள் ஆகி இருந்தது. சரி விடு டா... அண்ணா பார்த்துப்பான். நாம் கிளம்புவோம் நேரம் ஆச்சு என்று சொல்லி கொண்டே தன் காரில் தன் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.

கவி பிரியா காரில்....

காரில் டென்ஷனாக போய்க்கொண்டு இருந்த கவிப்பிரியாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது. கடவுளே அவன் எப்போது வந்து இருப்பான். சண்டை ஆரம்பிக்கும் போதே வந்து இருந்தால் அவன் என்னை என்ன நினைத்து இருப்பான். டிரைவர் அந்த காரில் இருந்தவன் எப்போது வந்தான் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டாள் கவி பிரியா.

மேடம் அந்த பொண்ணு உங்கள் கையை பிடித்து முழுக்கவும் உங்களை எப்படி அந்த பெண்ணிடம் இருந்து பிரிப்பது... எதுவும் பிரச்சனை ஆகிட கூடாது என்று தான் உங்களை தான் கவனமாக பார்த்துக் கொண்டேன் அதனால் அந்த தம்பி எப்போது வந்தது என்று கவனிக்கவில்லை... ஆனால் அதே சமயம் எனக்கு தெரிந்து அந்த தம்பி உடனடியாகவே வெளியே வந்துடுத்து என்று தான் நினைக்கிறேன் என்று சொன்னான்.

அது எப்படி அவ்வளவு தீர்மானமாக சொல்கிறீர்கள் என்று கேட்டாள் கவி.

ஏன் என்றால் பிரச்சினைகளுக்கு நடுவில் நான் ஒரு முறை திரும்பிப் பார்க்கும் போது அந்த தம்பி கோபமாக அங்கு நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வாயாடி பொண்ணு வரவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த வாயாடி பொண்ணு வந்து பேச ஆரம்பித்த பிறகு அந்த தம்பியின் முகத்தில் இருந்த கோபம் காணாமல் போய் அமைதியாக சிரித்துக் கொண்டு தான் இருந்தார்...ஜ என்று சொல்லிய அடுத்த வினாடி கவிப்பிரியா...

அங்கு இருக்கும் ஒரு பிரபலமான பார் பெயரை சொல்லி.. அங்கே போக சொல்லி விட்டு கண்களை இருக மூடி சீட்டில் சாய்ந்து விட்டாள்.

கடவுளே ஐயாவுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சினையாகிவிடுமே.. அதே சமயம் இப்போது இவர் இருக்கும் மனநிலையில் நாம் சொன்னால் நமக்கு இன்று சங்கு தான்... கடவுளே இன்று பத்திரமாக என்னை என் வீட்டில் அனுப்பி வைத்து விடு என்று வேண்டிக்கொண்டு கவிப்பிரியா சொன்ன பார் நோக்கி வண்டியை செலுத்தினார் டிரைவர்.

கார் சரியாக அந்த பார் வாசலில் நிற்க... வேகமாக இறங்கியவள் கதவை வேகமாக அடித்து சாத்தி விட்டு உள்ளே சென்றாள் கவிப்பிரியா.

சரியாக அவள் செல்வதை பார்த்துக் கொண்டே அவளை கடந்து சென்றான் ருத்ரதேவ்... அவன் இதழ்கள் தானாக முனுமுனுத்தது ஓஹோ தமிழ்நாட்டின் குடிமகளோ இவள் என்று... ஏனோ மனதில் ஒரு இனம் புரியாத எரிச்சல் வந்தது அவளை பார்க்கும் போது...

அந்த எரிச்சலோடு தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய அங்கு புவனா... அவனின் பாதி வேலைகளை காலையிலேயே வந்து முடித்ததோடு இல்லாமல்... ப்ராஜெக்ட்டிற்கான அடுத்த வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருக்க அங்கு இருந்தவர்களோடு ... டிசைனிங் ஒர்க் ஐ ஸ்டார்ட் பண்ணி இருந்தாள்.

புவனாவின் இந்த பொறுப்பான செயலால் அவனுடைய மனதில் தோன்றி இருந்த எரிச்சல் மறைய... ஹாய் புவனா சாரி... கொஞ்சம் லேட் ஆயிருச்சு என்று சொல்லிக் கொண்டே அவள் அறைக்கு சென்றான்.

இருக்கட்டும் ஆர் டி சார் லேப்டாப் சார்ஜர் போய் செட் பண்ணி பாருங்க... செட் ஆயிருக்கா என்று சொல்லி விட்டு அமைதியாக தன் டீம் மெம்பர்ஸ்களோடு வேலையில் ஈடுபட்டாள்.

ஓஹோ... நியூஸ் அதுக்குள்ள இங்க பாஸ் ஆயிடுச்சு என்று கேட்டான் ருத்ரா.

ஆமாம் ஆர் டி சார்... உங்கள் பெரிய தல எதற்காக எங்களை பிரித்து போட்டார்கள் என்று தெரியாது. ஆனாலும் நாங்கள் என்றும் பிரிந்திருக்க மாட்டோம். எப்பவும் எந்த நிமிடமும் கனெக்ட்ல தான் இருப்போம்.. என்று சொல்லிக்கொண்டே கைகள் தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தது. அவள் வேலை செய்யும் தீவிரத்தை கண்டு விட்டு வாய் அடிக்காமல் சரி நீங்க உங்க வேலைய பாருங்க என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றான் ஆர் டி என்கிற ருத்ரதேவ்.

அதே போல் கர்ணா, லிபின் இருவரும் தங்கள் அலுவலகம் வந்து சேர.. அவர்களுக்கு முன்பே அங்கு மெய்யழகி வந்து அவளுடைய வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.

அட.. அழகி செம்ம ஷார்ப் எங்களுக்கு முன்னாடி வந்துட்டியே பரவாயில்லை என்று இயல்பாக பேசினான் லிபின்.

ஆமாம் சார் உங்களுக்கு பி ஏ போஸ்ட் செலக்ட் பண்ணுவதற்கான இன்டர்வியூக்கு ஆள் வந்திருக்காங்க சார் என்று அவள் முற்றிலும் வீட்டில் இருந்ததற்கு எதிர்ப்பதமாக மாறி தான் ஒரு வேலை செய்யும் பெண் என்பவள் மட்டும் தான் என்று அவர்களிடம் பேசுவதை பார்த்த இருவருமே... அதை மனதில் குறித்துக்கொண்டு ஓகே...

இன்டர்வியூ ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு ஆரம்பிக்கலாம். அதற்கு பிறகு இன்டர்வியூக்கு வந்து இருக்கும் ஆட்களை நீங்கள் அனுப்ப சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு அவர்களும் உள்ளே சென்றார்கள்.

அவளும் சரிங்க சார் என்று சொல்லி விட்டு அமைதியாக சென்று தன் சீட்டில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

சரியாக 10 நிமிடங்களுக்கு பிறகு... கர்ணா, லிபின் இருவரிடமும் போன் செய்து இன்டர்வியூ செய்ய ஆட்களை அனுப்ப வா என்று கேட்டுக் கொண்டு பிறகு ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினாள் அழகி.

கிட்டத்தட்ட 15 பேர்கள் அனுப்பியும் யாரையுமே இருவரும் செலக்ட் செய்யவில்லை.

இன்னும் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். நான்கு பேரும் போயும் கூட அவர்களையும் அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை.

சரி விடு அழகி... நாளைக்கு இன்டர்வியூ ரெஃபர் பண்ணுங்க வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னான் லிபின்.

அப்போது இன்டர்காம் ஒலித்தது எடுத்து பேசியவள்...

ஓஓ... அப்படியா... ஓகே வரச் சொல்லுங்கள் என்று சொ
ல்லி விட்டு...
கர்ணா லிபின் இருவரையும் பார்த்து...
வந்தது யார்...
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top