• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
18. கவிப்பிரியா சஞ்சனா மோதல் ‌..

தன் முதலாளியின் மகள் சொன்னதை கேட்டு ... வேகமாக ருத்ரதேவ் கார் கண்ணுக்கு தெரிகிறதா என்று சென்று பார்த்தார்...


பத்து நிமிடத்தில் அவரின் திறமையால் ருத்ரதேவ் காருக்கு பின்னாடி சென்று கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஒரு இடத்தில் ருத்ரா தன் காரை நிப்பாட்டி விட்டு... அருகில் இருந்த ஒரு மாலுக்குள் சென்றான்...

அதே நேரம் கவிப்பிரியாவின் டிரைவரும் கவி சொல்லியதால் அந்த மாலுக்கு செல்வதற்காக நேராக வந்து கொண்டு இருந்தவர் சட்டென்று திரும்ப...

அவர் இன்டிகேட்டர் போடாம சட்டென்று திரும்பவும் அங்கு எதிரில் வந்த ஒரு பைக் மீது மோதி அந்த பைக் காரன் கீழே விழுந்தான். விழுந்தவன் அவசரத்தில் எழுந்து பார்க்க அவன் வீட்டிலிருந்து அவன் அம்மா கட்டி கொடுத்த மதிய உணவு கீழே சிதறி கிடந்தது.

வேகமாக எழுந்து தன்னுடைய லஞ்ச் பாக்ஸ் எடுத்து கீழே விழுந்த சாதத்தை தவிர மீதி சாதத்தை எடுத்து மூடி வைத்து கொண்டு இருந்தான். அவன் வழி விட்டால் தான் கவி பிரியாவின் காரை எடுக்க முடியும். வீதியிலும் இல்லாமல் அதே சமயம் மாலுக்குள் செல்லவும் முடியாமல் அந்த தடுமாறவும், அந்த ஆத்திரத்திலும் கோபத்திலும் இறங்கியவள் கொஞ்சமும் சிறிது யோசிக்காமல் கீழே தன்னுடைய சாதத்தை எடுத்துக் கொண்டு இருந்தவனை எழுப்பி அவன் கன்னத்தில் பளார் என்ற ஒரு அறை வைத்து..‌ இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா சாவகாசமாக சோற்றை அள்ளிக் கொண்டு இருக்கிறாய் என்று கத்தினாள்.

அதை உள்ளே தனக்கு லேப்டாப்பிற்கு சார்ஜர் வாங்க வந்து இருந்த ருத்ராவும் பார்த்து விட்டு, என்ன பெண் இவள் என்று அவன் முதல் மாடியில் இருந்து கீழே வருவதற்குள்...

இங்கே கவிப்பிரியாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்து இருந்தாள் சஞ்சனா.

அதை சற்றும் எதிர்பார்க்காத கவிப்பிரியா சில நொடிகளில் தன்னை சுதரித்துக் கொண்டு சஞ்சனாவை அடிக்க கை ஓங்கினாள்.

சரியாக அந்த நேரம் பார்த்து ருத்ராவும் அங்கு வந்து கொண்டு இருந்தான். அவனுக்கு சஞ்சனாவை பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது... விநாயகம் அங்கிள் போனில் பார்த்து இருக்கிறார்கள் அனைவருமே இது சஞ்சனா தானே என்று நினைத்துக் கொண்டே... இவள் எதற்கு சஞ்சனாவை அடிக்க கை ஓங்குகிறாள் என்று அவர்கள் அருகில் சென்றாலும் அவர்கள் பேச்சு கேட்கும் தொலைவில் நின்று கொண்டான் அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக..

கவி பிரியாவின் கையை தடுத்தவள்.. ஏய் அமுல் பேபி கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்ன சரியா என்று சொல்லி விட்டு, அவளின் ஓங்கிய கையை விடாமல் இருக்க பற்றி கொண்டு சஞ்சனா...

அந்த சாப்பாடை எடுத்தவனை பார்த்து அடிக்க தன்னுடைய இன்னொரு கையால் ஓங்கி ஒரு அறை வைக்கப் போனால் ஆனால் வைக்காமல் அப்படியே நிற்க...

அவனோ அட கால கிரகமே இன்று யார் முகத்தில் விழித்தேன் என்று தெரியவில்லையே..

இப்படி ஆள் ஆளுக்கு வந்து அடிக்க வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு.. ஆனால் அவள் ஓங்கிய கை தன் கன்னத்தில் இறங்காமல் இருப்பதை பார்த்து விட்டு... அமைதியாக தன்னுடைய வண்டியை எடுத்து நேராக நிமிர்த்தி வைத்து விட்டு... மேடம் அவர்கள் தான் இண்டிகேட்டர் போடாமல் திடீரென்று திரும்பவும்... நான் சற்று நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன்.

தயவு செய்து இதற்கு என்ன தீர்வு அதை சொல்லுங்கள் இப்பவே எனக்கு பத்து நிமிஷம் லாஸ் ஆ பே ஆகிவிட்டது.. இன்னும் நான் ஆபீசுக்கு செல்வதற்குள் அரை மணி நேரம் ஆகி விடும். தயவு செய்து உங்கள் இருவரிடம் நானே மன்னிப்பு கேட்கிறேன். காலை நேரம் அங்கே பாருங்கள் அவரவருக்கு அவரவர் வேலைக்கான அவசரம். தயவு செய்து என்னால் இங்கு யாருக்கும் எந்த தொந்தரவும் வேண்டாம் விட்டு விடுங்கள் மேடம் என்று சஞ்சனாவை பார்த்து கேட்டான்.

இந்த வார்த்தைகளை கவிப்பிரியாவை பார்த்து சொல்லி இருந்தால் அவள் அமைதியாகி இருப்பாள்.. அவன் சஞ்சனாவை பார்த்து சொல்லவும் மீண்டும் அதில் கடுப்பானவள்...

உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும், என் வண்டியின் மீது இடித்து விட்டு என்னிடம் சாரி கேட்காமல் அவளிடம் சமாதானம் பேசுகிறாயா என்று கோபமாக பேசினாள் கவிப்பிரியா.

கவி பிரியா கத்தி பேசவும், ஒரு கையால் அவள் கையைப் பிடித்து இருக்க மற்றொரு கையால் தன் காதுகளை குடைந்து கொண்டு... ஏய் லூசு எனக்கு தெரிந்த அந்த ப்ரோவுக்கும் எனக்கும் நல்ல காது கேட்கும் கொஞ்சம் அமைதியா பேசு... என்று நக்கலாக சொல்லி விட்டு அந்த பையனை பார்த்து ப்ரோ இப்ப நீ எங்க வேலைக்கு போகணும் ... நீ முதலில் உன் வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பு என்று சொன்னாள் சஞ்சனா.

ஏய் யார பார்த்து லூசு னு சொல்ற... நீ தான் டி லூசு ஏன் உன் குடும்பமே லூசா தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று மறுபடியும் கத்தினால் கவிப்பிரியா.

இவள் கத்துவதை இருவரும் கண்டு கொள்ளாமல் அந்தப் பையனோ சஞ்சனாவை பார்த்து தான் வேலை பார்க்கும் துணிக்கடையின் பெயரை சொல்லி அங்கு தான் வேலை பார்க்கிறேன். நான் செல்கிறேன் அக்கா கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா என்று சொல்லி விட்டு, வண்டியில் அமர போனவனை இப்பொழுது கவிப்பிரியா பார்த்து வேகமாக சிரித்தாள்..

அதோடு அவனை ஹே மடையா... என் கடையிலேயே வேலை பார்த்துக் கொண்டு என் வண்டியை இடித்து விட்டு என்னிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் என் கடைக்கே... நீ வேலை செய்யப் போகிறாயா? உன்னை இந்த நிமிடமே உன் வேலையை விட்டு நீக்கி விட்டேன் என்று சொன்னாள்.

பாவம் அந்த பையனுக்கு தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது அடிக்கின்ற மண்டை வெயிலில்....

சஞ்சனா அந்த பையனை பார்த்து நீ எந்த ஊர் என்று கேட்டாள்.

அக்கா நான் திருச்சி கா உறையூர் பக்கம் என்று சொன்னான்.

சரி நீ என்ன டா படித்திருக்கிறாய் என்று கேட்டாள்...

அக்கா நான் டிப்ளமோ இன் மோல்டிங் டெக்னாலஜி படித்து இருக்கிறேன் அக்கா என்று சொன்னான்.

அடப்பாவி அப்புறம் ஏன்டா திருச்சியை விட்டு இங்கு வந்து இப்படி போயும் போயும் துணி கடைக்கு சேல்ஸ்மேன் வேலைக்கு போயிட்டு இருக்க...

ஏண்டா திருச்சில எத்தனை பிளாஸ்டிக் கம்பெனி இருக்கு அதுல ஒன்னுல ஜாயின் பண்ணி இருக்கலாமே டா என்று பேசிக்கொண்டே போனாள் சஞ்சனா.

இவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டு கடுப்பான கவிப்பிரியா ஏய் லூசு என் கையை விட்டுட்டு... அப்புறமா அக்காவும் தம்பியும் கொஞ்சு குலாவி கொள்ளுங்கள். எனக்கு நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது..
அது தான் அவனுடைய வேலை போய்விட்டதே... எனக்கு தெரிந்த நீயும் ஒரு அண்ணாடம் காட்சி தான் நினைக்கிறேன்.. அப்படி ஓரமாக நின்று கதை பேசுங்கள் என்று மிகவும் இளக்காரமாக சொன்னாள் கவிப்பிரியா.

டேய் தம்பி கொஞ்ச நேரம் இரு டா... இந்த கொசு தொல்ல ஓவரா இருக்கு இதை அனுப்பி விட்டு வந்து உன்கிட்ட பேசுறேன் என்று சொல்லியவள் கவிப்ரியாவிடம் திரும்பி...

என்ன சொன்ன நான் அண்ணாடம் காட்சியா.... அதோ அங்க நிக்குது பாத்தியா என்னுடைய புல்லட் லேட்டஸ்ட் மாடல்.. நீ கொண்டு வந்து இருக்க பார்த்தியா இந்த தகர டப்பா காரு... அதோட வேல்யூவும் உனக்கு என்னனு தெரியாது.. என்னோட வண்டியோட வேல்யூவும் தெரியாது உனக்கு ஏன் உனக்கே உன்னோட வால்யு தெரியாது... அப்பாவோட காசுல ஜாலியா ஊர் சுற்றி கிட்டு இருக்குற அமுல் பேபி நீ...

என்னை சொல்கிறாயா.. என்னுடைய பைக் என்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கியது.... சரி தான் போடி டுபுக்கு...

பெருசா பேச வந்துட்டா புடலங்கா... சரி தான் போடி அந்த பக்கம்... இன்னும் ஒரு நிமிடம் நீ இங்க நின்றாலும் அப்புறம் கலீஜ் ஆய்டும் பாத்துக்க என்று சொல்லி விட்டு அவளின் கையை உதறினாள் சஞ்சனா.

இங்கு நின்று மேலும் அவர்களிடம் வாதத்தை தொடரவும் விருப்பமில்லை... அதே சமயம் அப்போது தான் அங்கு நின்ற ருத்ரதேவை பார்த்து விட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக தன் காரில் எரி சென்றாள் கவி பிரியா.

அவ சென்றதும் அந்த பையனை பார்த்து.. டேய் தம்பி உன் பெயர் என்னடா என்று கேட்டாள் சஞ்சனா.

அக்கா என் பெயர் பரத்.. அக்கா அம்மா நான் மூன்று பேர் மட்டும் தான்.
அக்காவே இங்கு தான் ஒருவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கிறோம்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் அக்கா மாசமா இருக்கு ... மாமாவிற்கும் சொந்த பந்தம் என்று யாரும் இல்லை.. அவருடைய அப்பா மட்டும் தான். அவரு போன வருடம் இறந்து விட்டார். அதற்காக வேண்டி தான் அம்மா... மாமா வீட்டோட தங்கி கொள்ளலாம் என்று இங்கே அழைத்து வந்து விட்டார்கள்.

நான் திருச்சியில் இருந்த வரை உதயா பிளாஸ்டிக் என்று ஒரு கம்பெனியில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நல்ல சம்பளம் நல்ல பார்த்துக் கொள்வார்கள். ஒரு ஆறு மாசமாக அங்கு வேலை பார்த்தேன். அதற்குள் அம்மா இங்கே வரவேண்டும் என்று சொன்னதால் நானும் வேலையை விட்டு இங்கு வந்து விட்டேன்.

இங்கே எல்லாமே ரொம்ப பெரிய பெரிய கம்பெனியாக இருக்கிறது. சிபாரிசு இல்லாமல் யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன் சொல்லிட்டாங்க.. அதான் அக்கா என்று சொன்னான்.

அடப்பாவி அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் நீ நம்ம பையனாடா... என்று சொன்னவளை விளங்காமல் பார்த்தான் பரத்.
என்ன டா அப்படி பாக்குற நான் யார் தெரியுமா என்று கேட்டாள் சஞ்சனா.

இல்லை தெரியாது அக்கா என்று சொன்னான் பரத்.
நீ சொல்கிறாயே உதயா பிளாஸ்டிக் ஓனர் லிங்கத்தோட ஒரே பெண்.. உதயாவோட ஒரே தங்கச்சி தான் நான் என்று சொன்னாள்.

ஓ அக்கா நீங்கள் தானா அது...

அங்கு வேலை பார்க்கும் சமயங்களில் ஜெயஸ்ரீ அக்கா உங்களைப் பற்றி மற்ற இரண்டு அக்காக்கள் பற்றியும் நிறைய சொல்லுவார்கள் என்று சொன்னான்.

என்ன பண்றது டா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுடா அப்படித் தான் எங்க அம்மா யாரு கிட்ட பார்த்தாலும் எங்க மூணு பேரையும் பற்றி பேசுவது தான் அதற்கு வேலையாக இருக்கும்... என்று சொன்னாள் சஞ்சனா.

ஆமாக்கா நீங்கள் மூவரும் செய்த அனைத்து திருவிளையாடல்களையும் சொல்லிக் கொண்டே இருப்பார். ஓய்வே ஓயாது... எப்ப டா கரண்ட் போகும்... வந்து அமர்ந்து உங்களுடைய திருவிளையாடல் சொல்லலாம் என்று தான் காத்திருப்பார் என்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டு நின்றான்.
அடப்பாவி என்னையவே கலாய்க்கிறீயா என்று அவன் தலையில் செல்லமாக ஒரு கொட்டு கொட்டி விட்டு... இரு உன்னை உதயா அண்ணா கிட்ட மாட்டி விடுகிறேன் என்று தன்னுடைய அண்ணன் உதயாவிற்கு ஃபோன் செய்தாள்.

இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டு நின்று இருந்த ருத்ரதேவ் முகத்தில்...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top