• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
12. வெள்ளை பேயின் மிரட்டல்...

கர்ணா மேல் மோத வந்தவள்
கண்மூடி நின்ற இடைவெளி பயன்படுத்தி அனைவரும் கைகழுவ சென்றனர்.

கைகளை கழுவி விட்டு வந்தவர்கள்.. அத்தை இடம் குட் நைட் சொல்லி விட்டு செல்வதற்காக வந்து நிற்க ... அவளோ அவர்கள் தன் பின்னாடி இருப்பதை கவனிக்காமல் சரோஜா அம்மாவிடம்..

என்ன சரோ மா நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்... நீங்கள் என்ன டா என்றால் சிரித்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்து விட்டீர்கள்.

சாமி சத்தியமா பார்த்தேன்.. இதோ இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நின்னுட்டு இருந்தது ஒரு வெள்ளை உருவம் என்று கண்களை சிமிட்டி சிமிட்டி சொல்லிக்கொண்டே... அங்கு இருந்த சேரில் அமர்ந்தவள்..

இலையை எடுத்து போட்டுக் கொண்டு புட்டையும் கருவாட்டு குழம்பையும் எடுத்து ஊற்றினாள்...

என்ன சரோ மா நான் வந்ததில் இருந்து பேசிக்கொண்டே இருக்கிறேன் .. நீங்கள் இவ்வளவு அமைதியாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டாள்.

அது... வா... மெய்யழகி நீ பார்த்த அதே வெள்ளை... பேய்... இப்போது உனக்கு முதுகுக்கு பின் பக்கம் தான் இருக்கிறது.. அதற்கு நீ சாப்பிடும் கருவாட்டு குழம்பு வேண்டும் என்று நினைக்கிறேன். உன் இலையை தான் பார்த்துக் கொண்டே இருக்கிறது... அதனால் தான் எதுவும் பேசாமல் அமைதியா சாப்பிடுகிறேன் என்று அமைதியாக சொன்னார் சரோஜா மா.

என்ன சொல்றீங்க மா என்று அஅஅஅஅஅஅஅ அதிர்ச்சியில் உறைந்து போய் கையில் உணவு இருக்க... முகம் முழுவதும் பயத்துடன்.. அப்படியே இருந்தாள்.

கர்ணாவும் தன் சகோதரர்களை பார்த்து அமைதியாக போகும் படி சொல்ல..
அவர்களும் சரோ மா கிட்ட புன்னகையோடு கைகளை அசைத்து குட் நைட் சொல்லி விட்டு... அவரவர் அறைகளுக்கு சென்றனர்.

அதிர்ச்சியில் உறைந்தவள் சில நிமிடங்கள் கழித்து தன்னை மீட்டுக் கொண்டு எதிரில் இருக்கும் சரோஜா கிட்ட..

அம்மா .. நான் வேணா இந்த கருவாட்டுக் குழம்பை அந்த பிசாசு இடம் கொடுத்து விடுகிறேன். அதே நேரம் நான் கண்களை மீண்டும் மூடி கொள்கிறேன். அந்த பேயை சிறிது நேரத்துக்கு முன்பு என் முன்னாடி வந்து விட்டு மறைந்தது போலவே எடுத்துக்கொண்டு போக சொல்லுங்கள்.

எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று சிறு பிள்ளை போல் அழுதாள் அந்த 22 வயதான அழகி.. மெய்யழகி..

அழுது கொண்டே நிமிர்ந்து பார்க்க தன் எதிரில் அமர்ந்து இருந்த சரோஜமாவும் காணாமல்...

பயத்தின் உச்சிக்கே போனவள்... சரோ.... மா... என்று மெல்லிய குரலில் அழைத்தாள்... ஆனால் வெறும் காற்று தான் வெளியே வந்தது.

அப்போது திடீரென்று அவளின் பின் கழுத்தில் ஏதோ குறுகுறுப்பது போல் இருக்க... திரும்பிப் பார்க்க முயற்சி செய்யாமலே தன் கழுத்தை தொட்டு பார்த்தவளுக்கு கழுத்தில் சூடான காற்று அங்கு மட்டும் பரவ...

தைரியமாக ஆனால் பயத்தோடு திரும்பி பார்க்க... திருஷ்டி பொம்மைகள் முகமூடியை தன் மூஞ்சியில் மாட்டிக்கொண்டு நின்று இருந்த கர்ணாவை பார்த்து பயந்து அழகி அவன் கைகளிலேயே மயங்கி விழுந்தாள்.

அவள் மயங்கி விழுகவும்... பதறிப் போன கர்ணா... அத்தை சீக்கிரம் தண்ணி கொண்டு வாருங்கள் என்று கத்தினான்.

சாப்பிட்ட இலையை எடுத்து போடப் போன சமயம் தான்.. இவள் மயங்கி விழுக அங்கு இருந்து வந்தவர் அச்சச்சோ என்னாச்சுப்பா என்று கேட்டுக் கொண்டே வந்து பதட்டத்தில் டேபிள் இருந்த தண்ணீரை மறந்து விட்ட கர்ணாவிடம்.. கர்ணா மயங்கி கிடந்த மெய்யழகியை அப்படியே சோபாவில் படுக்க வைக்க சொன்னார் சரோஜா.

அவனும் அவளை தூக்கிக் கொண்டு சோபாவில் படுக்க வைத்து விட்டு... என்னம்மா இந்த பெண் இந்த அளவுக்கு பயந்து பொண்ணாக இருக்கிறாள் என்று சொல்லி கொண்டே தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான்.

தண்ணீர் பட்டதும் கண்களைத் திறந்தவள்... எதிரில் இருக்கும் சரோஜா அம்மாவையும் அழகான ஒரு ஆணையும் பார்த்து விட்டு...

சரோஜா அம்மா அந்த பேய் போயிடுச்சா... பிசாசு எப்படி வந்து என்னை பயமுறுத்திடுச்சு... ஆமா இது யாரு உங்க மருமகனா... இவர் தான் அந்த பிசாசை விரட்டி விட்டாரா... பேய், பிசாசு, குட்டிச்சாத்தான் என்று பேயை திட்டிக் கொண்டு இருந்தாள்.

சரோஜா, கர்ணா இருவருக்கும் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் ... சரி நீ போய் சாப்பிடு நான் மெயின் கதவை சாத்திவிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சரோஜா அம்மா சென்றார்.

என்னது மறுபடியும் நான் சாப்பிட போக வேண்டுமா எனக்கு சாப்பாடு வேண்டாம் பா. இனி என் வாழ்நாளில் இரவு நேரத்தில் கருவாட்டு குழம்பை நான் தொடவே மாட்டேன்... பேய் பிசாசுக்கலாம் கருவாட்டு குழம்பு தான் பிடிக்குமோ... உங்களுக்கு தெரியுமா சார் எனக்கு ரொம்ப புடிக்கும்... ஆனால் இனி மேல் நான் அந்த குழம்பு சாப்பிடவே மாட்டேன்.

இப்ப கொஞ்ச நாளா தான் அந்த குழம்பு சாப்பிட கிடைச்சுச்சு. அதுக்குள்ள அது பேய்க்கு புடிச்ச உணவாக போச்சு... என்று புலம்பிக் கொண்டு அமர்ந்து இருந்தவளிடம் வந்த சரோஜா...

கர்ணாவை பார்த்து நீ போய் தூங்கு கண்ணு... இவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லவும் எதுவும் பேசாமல் அவளை பார்த்து சிரித்து விட்டு.. குட் நைட் மெய்யழகி, குட் நைட் அத்தை என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான்.

அவன் சென்றதும் அச்சோ... சரோ மா என்னோட ராக்ஸ்டார் அல்லு அர்ஜுன் மாதிரியே இல்ல உங்க மருமகன் என்று சொல்லிக் கொண்டே சரோஜாவோடு சேர்ந்து .. டைனிங் டேபிளை சுத்தம் செய்து விட்டு.. ஒரு பவுலில் மூன்று இடியாப்பங்களை போட்டு அதில் தேங்காய் பாலையும் ஊற்றி ஸ்பூனை போட்டுக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.

பழையபடி டிவியில் ஓடிக் கொண்டு இருந்த ஆள வைகுந்தபுரத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்து இடியாப்பத்தை சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.

அடியே இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேய் அது இதுன்னு பயந்து கொண்டு இருந்த... நான் கூட பயத்தில் சாப்பிடாமல் படுத்து விடுவாய் என்று பார்த்தால்.. நீ வந்து டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறாய் என்று கேட்டார் சரோ மா.

அச்சோ சாப்பாட்டு பொருளை வீணாக்க கூடாது சரோ மா. எனக்கு புடிச்ச கருவாட்டு குழம்பு தான் பேய்க்கு பிடிச்சிருக்கு.. . அதனால் அது சாப்பிட்டு போயிருக்குமே.. மீதி இருக்கும் உணவை யார் சாப்பிடுவது. யாரும் சாப்பிடவில்லை என்றால் வீணாகத்தானே போகும். எந்த உணவுப் பொருளையும் சாப்பிடாமல் வீணாக போக விடக் கூடாது அல்லவா...

உங்களுக்கு தெரியாததா இந்த சாப்பாடு எல்லாம் ஒரு காலத்தில் எனக்கு கிடைக்குமா என்று எவ்வளவு ஏங்கி இருப்பேன்... இப்ப என்னவென்றால் கைக்கு கிடைக்கவும் அதை வீணாக்க வேண்டுமா???. அதெல்லாம் என்னால் முடியாதுப்பா என்று சொல்லிக் கொண்டே மிகவும் இயல்பாக தனக்குள் இருந்த வலியையும்... எதார்த்தமாக சொல்லிக் கொண்டே டிவியை பார்த்துக் கொண்டு சாப்பிட்டாள்.

சரியாக அந்த நேரம் மிதுன் கர்ணா இருவருமே ஏதோ பேச வேண்டும் என்பதற்காக வெளியில் வந்தவர்கள் அவளின் உரையாடலை கேட்டுக் கொண்டே.. மாடிப்படிகளில் ஏறி சென்றனர்.

அப்போது தான் மொட்டை மாடிக்கு செல்பவர்களை பார்த்து விட்டு...

அச்சச்சோ மறந்தே போயிட்டேன் பாருங்களேன் மா.

உங்களுடைய ஐந்து மருமகன்களும் வந்து விட்டார்களா?.. எந்த பிரெஞ்சுக்கு எந்த மருமகன் நாளைக்கு போகிறார்கள் என்று முடிவெடுத்து விட்டார்களா?. என்னோட பிரான்ச்சுக்கு யார் வருவார்கள் என்று கேட்டாள் மெய்யழகி.

அது வா இப்போது நீ மயங்கி விழுந்த போது... உன்னை தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்த அவன் தான் உன்னுடைய பிரான்ச்சுக்கு வர போகிறேன். அவன் பெயர் கர்ணா தேவ்.

இப்போது அவனும் அவனுடைய முதல் அண்ணன் மிதுன் இருவரும் தான் மாடிக்கு செல்கிறார்கள் ஏதாவது பேசுவார்கள்...

சரி.. சரி.. வா திருமணம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது தானே சாப்பிட்டு விட்டாயா? டிவியை ஆப் பண்ணி விட்டு போய் தூங்கு... என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் சரோ.

மா... ப்ளீஸ்... மா... நீங்கள் போய் தூங்குங்கள் நான் இந்த படம் முடிய இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. முடிந்த பிறகு நான் வந்து படுத்து கொள்கிறேன்... ப்ளீஸ்... மா... என்று சிறுபிள்ளை போல் கெஞ்சியவளை பார்த்து...

சரி படம் முடிந்ததும் வந்து படுத்து விட வேண்டும். லைட் எல்லாம் ஆஃப் பண்ணி விட்டு போகட்டுமா என்று கேட்டார்.

எப்பவும் சரி என்று சொல்பவள் ஏதோ இன்று பேயை பார்த்த பயத்தில்... இல்லை மா நானும் உங்களுடனே படுக்க வருகிறேன் என்று சொல்லி விட்டு எழுந்து வந்தவளை பார்க்க மனதிற்குள் கஷ்டமாக இருக்கவும்...

ஏய்.. அழகி .. லூசு மாதிரி பயப்படாதே. இவ்வளவு நாள் இந்த வீட்டில் இப்படி பேய் பிசாசு என்று எதையாவது பார்த்தாயா...

நீ வந்த போது நின்றது கர்ணா தான். நீ கண்களை மூடி நின்றாய் ... சரி நீ தடுமாறாமல் நிற்கவும் கருணா சென்று கைகழுவ போனான். அந்த இடைவெளியில் மற்றவர்களும் கை கழுவிட்டு வந்தார்கள் அவ்வளவு தான்.

ஆனால் அதற்கு நீ பேய் பிசாசு என்று சொல்லவும் பின்னாடி நின்று கொண்டு இருந்தவர்கள் அப்படியே சிரித்துக் கொண்டே போயிட்டாங்க. கர்ணா மாஸ்க் அணிந்து பயமுறுத்தியது சரோவிற்கும் தெரியாததால் அவரும் அதை சொல்லாமல் விட்டார்ஈ.

மற்றபடி உனக்கு பின்னேவும் சரி முன்னாடியும் சரி நின்றது கர்ணா தான் என்று சொல்லி விட்டு நீ படத்தை பாரு பயப்படாமல்.. நான் போய் தூங்குகிறேன் என்று படுக்க சென்றார்.

அது எல்லாம் ஓகே ஆனால் நான் பார்த்தேனே ஒரு கோரமான முகத்தை... இப்ப சொன்னால் அம்மா நம்ப மாட்டார்கள்... காலையில் எழுந்து சொல்லிக் கொள்ளலாம் என்று புலம்பி கொண்டு இருக்க திரையில் விளம்பர இடைவேளை முடிந்து படம் போடவும் அதில் கவனம் செலுத்தினாள் மெய்யழகி.

பேட்மிட்டன் கிளப்...

சனாதன் காரை கிராஸ் பண்ணி சென்ற அந்த காரில் இருந்த பெண்...

காரில் இருந்து இறங்க... அவளை சுற்றி தோழியர் கூட்டம் வந்து நின்றது. ஹாய் கவிப்பிரியா என்று ஒருத்தி சொல்லவும்...

கால் மீ பிரியா... என்று கோபமாக சொல்லி விட்டு... வேகமாக உள்ளே சென்றாள்.

ஏய் அவளுக்குத்தான் அவளுடைய முழு பெயரை சொல்லி கூப்பிட்டால் பிடிக்காது என்று தெரியும் தானே...

பிறகு ஏண்டி அவள் வந்ததும் வராததுமா அவளை இரிடேட் பண்ணுகிறாய் என்று திட்டினார்கள் மற்ற தோழிகள்...

அட போடி பெரிய இவ... நீங்கள் வேணா அவளுக்கு கூஜா தூக்குங்கள்... எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் தீபா.

ஐயோ இந்த தீபா, பிரியா இருவரின் சண்டை என்று தான் ஓயுமோ என்ற தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார்
கள் மற்ற தோழிகள்..

யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன பிரச்சனை....
இணைந்திருங்கள்

சொல்லவா ... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top