• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
116
110. ஆர் கே வீட்டில் தீபாவின் அலப்பறை...

மருத்துவமனை...

அனைவரும் வீட்டிற்கு பாதுகாப்பாக கிளம்ப... கவிப்பிரியா கேட்டுக் கொண்டதற்காக மட்டும் இல்லாமல், தனக்குமே ஆர்கேவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், உடனடியாக சென்றாள் தீபா ஆர்கே வின் வீட்டிற்கு...

ஆர் கே வின் வீடு...

இரவில் வந்து சென்றதாலும்... அதுவும் ஆர்கேவின் உடல் நிலை பொருட்டு, சுற்றிலும் ஆராய்ச்சி செய்யாமல் விட, இப்பொழுது பகலில் நல்ல வெளிச்சத்தில் பார்க்கும் போது வீடு மிகவும் கலைநயத்தோடு இருந்தது.

வெளியில் இருந்தே வீட்டின் அழகை ரசித்துக் கொண்டே மெதுவாக உள்ளே செல்ல..

அங்கே கிச்சன் வேலை செய்யும் செல்வி முதலில் தீபாவை பார்த்து விட்டு வந்தவள், வாங்க மேடம் என்று சொல்லி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.

ஆர் கே எந்திரிச்சிட்டாங்களா என்று செல்வியிடம் கேட்டாள் தீபா.

இல்ல மேடம்... இன்னும் சார் கீழே வரவில்லை. அவர் வராமல் நாங்கள் யாரும் மாடிக்கு செல்ல மாட்டோம். சாராக கூப்பிட்டால் மட்டும் தான்.. அதுவும் வேலு மட்டும் மாடிக்கு போவான். சார் இருக்கும் போது வேறு யார் சென்றாலும் அவருக்கு பிடிக்காது.
வேலுவும் இரண்டு நாட்களாக லீவில் இருக்கிறார். அவர் மனைவிக்கு பிரசவம் என்று செல்வி சொல்ல..

சரி ஆர்கே எப்பவும் எழுந்ததும் என்ன குடிப்பார் என்று கேட்டாள் தீபா.

வெஜிடபிள் சூப் குடிப்பாங்க அப்புறம் மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் அப்ப என்ன கேக்குறாங்களோ... அதை செஞ்சு தருவோம் ஆனால் இன்று இன்னும் சார் வராததால்... வேறு எதுவும் செய்யவில்லை என்று சொன்னாள்.

சரி அவர் குடிக்கும் சூப் ஒரு பவுலில் ஊற்றி எடுத்து வாருங்கள்... அப்படியே ஒரு ஜக்கில் தண்ணீர் டம்ளர் என்று அனைத்தையும் எடுத்து வர சொன்னாள்.

அவ்வாறே செல்வியும் எடுத்து வந்து தர அதை வாங்கிக் கொண்டு மாடிக்கு சென்றாள் தீபா.

இவர் மாடியில் இருந்தால் யாரும் வரமாட்டார்களாமே ஏன் அவ்வளவு கொடூரமானவரா இவர் இல்லை ரொம்பவும் யாரிடமும் ஓட்டி பழகாதவரா இவர் எப்படிப்பட்டவர் என்று தனக்குள் ஆலோசனை நடத்திக் கொண்டே மாடிக்குச் சென்றவள்,
நேற்று அவனை படுக்க வைத்து அறைக்கு வாசல் வரை சென்றவள்...

ஆஹா இதுவரை யாருமே இவர் மாடியில் இருக்கும் பொழுது வந்ததே இல்லை என்று சொல்கிறார்கள் இப்போது நாம் ஏதோ கட்டின பொண்டாட்டி மாதிரி ஜம்பமா சூப் இதெல்லாம் எடுத்துக்கிட்டு மாடிக்கு வந்துட்டோம் ஆனால் உள்ளே போனா அவர் ஏதும் சொல்வாரோ... என்னானு தெரியவில்லையே..?.. போகலாமா..??.. வேண்டாமா ...?.. என்று தனக்குள்ளேயே ஆர்கியூமென்ட் பண்ணிக் கொண்டே இருந்தாள்...

அப்போது அங்கு இருந்த அமைதியில் யாரோ அனத்தும் சத்தம் கேட்க... கூர்மையாக கவனித்து பார்க்கும் போது தான், அந்த அறைக்குள் இருந்து சத்தம் வருவது தெரிந்து வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்க்க...

ஆர்கே .. தலைவரை போர்த்தி போத்திக்கொண்டு படுத்து இருந்தவன் அந்த போர்வைக்குள் தான் அனத்திக்கொண்டே படுத்து இருந்தான்.

அச்சச்சோ இது என்ன இவ்வளவு ஏசி கூலிங்கா இருக்கு ... இவருக்கு வேறு காய்ச்சலாக இருக்கிறது போலவே என்று, அந்த அறையின் ஏசியை ஸ்லோவாக வைத்து விட்டு, போர்வையை விளக்கிப் பார்க்க...

அவனும் அங்கு குளிரில் காய்ச்சலின் வேகத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான். உடனே சட்டென்று ஏசியை முழுவதுமாக அனைத்து விட்டு, அந்த அறையின் கதவுகளை எல்லாம் திறந்து விட்டாள் தீபா.

பிறகு தங்களது குடும்ப டாக்டருக்கு அழைத்து, ஆர்கே வீட்டு அட்ரஸை சொல்லி வரச்சொன்னாள்.

பிறகு ஆர்கே வின் அருகில் சென்று அவனை கைத்தாங்கலாக எழுந்து அமர வைத்தாள் தீபா. அவன் ஜுர வேகத்தில் இருந்தாலும் தீபா நேற்று இருந்து உதவி செய்யவும் அவளை எதுவும் சொல்லாமல், அமைதியாக அவளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தான்.

அவளும் பாத்ரூம் சென்று கப்பில் தண்ணீர், பேஸ்ட், பிரஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, அவனை பிரஷ் பண்ண வைத்து விட்டு, அங்கு இருந்த டவலால் ஈரத்துணியால் முகம் கழுத்து அனைத்தும் துடைத்து விட்டு, அவனை அப்படியே அமரச் சொல்லி சூப்பை அவனிடம் கொடுத்து குடிக்க சொன்னாள்.

இவ்வளவு நேரமா தனிமையான உணர்வில் அதிகப்படியாக சோர்ந்து இருந்தவன், இப்பொழுது தீபாவின் கவனிப்பில் சற்று தெளிவடைந்து .. அவளை பார்த்துக்கொண்டே சூப்பை குடித்தான்.

ஹலோ சிஸ்டரா நீங்க என்று கேட்டான் ஆர் கே.

இவ்வளவு நேரமும் அவன் உடல் நிலையை மட்டும் மனதில் நினைத்து செய்து கொண்டு இருந்தவள், அவன் திடீரென்று நீங்கள் சிஸ்டரா என்று கேட்டதும்...

இவ்வளவு நேரமும் அமைதியாக ஆர்கேவுக்கான தேவைகளை பார்த்துக் கொண்டு இருந்தவள்... அவன் நீங்க சிஸ்டரா என்ற கேள்வியில்... சட்டென்று தன்னுடைய இயல்பான குணம் தலைதூக்க...

அடிங்கொய்யால நான் உனக்கு சிஸ்டரா.. நீ என்னோட பிறந்தவன்னா... அடிங்க.. என்று வேகவேகமாக அவன் அருகில் வந்து நின்று, ஆர்கேவின் முகத்தருகே முகத்தை வைத்து இருப்பது கூட அறியாமல், வேக வேகமான மூச்சுகளோடு அவனிடம் வாதம் செய்ய...

ஏற்கனவே அனலாக கொதிக்கும் உடம்பு இப்போது தீபாவின் நெருக்கத்தில் மேற்கொண்டு தகித்தது.. அவனின் ஆழ்ந்த பார்வையிலும்... சற்று சுதாரித்தவள் தன் நிலையை பார்க்க..

ஒரு வேகத்தில் அவன் அருகில் வந்து கேட்டு விட்டாளே தவிர, அப்பொழுது தான், தான் என்ன செய்கிறோம் என்று உணர்ந்து ... ஐயோ கடவுளே என்று தன் நாக்கை கடித்துக் கொண்டு, தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள்... சாரி என்று சொல்லி விட்டு அவனிடம் இருந்து விலகி நின்றாள் தீபா.

அவளின் நிலையை மேலும் சோதிக்க விரும்பாமல் டாக்டர் கதவை தட்டி விட்டு உள்ளே வர...

அப்பாடா... தப்பிச்சேன் டா... சாமி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வாங்க அங்கிள்... இவருக்கு தான் நேற்று அடிபட்டது, அதோட வேகம் என்று நினைக்கிறேன் காய்ச்சல் அடிக்குது என்று சொல்லி கொண்டே.. நேற்று தான் வைத்து விட்டு சென்ற இடத்தில் அவனுடைய மெடிக்கல் ஃபைல் இருக்க அதையும் எடுத்து டாக்டரிடம் காண்பித்தாள் தீபா.

டாக்டரும் அதை வாங்கி செக் செய்து விட்டு, ஓகே டா பெயின் அதிகமா இருக்கவும் அதோட விளைவாக தான் காய்ச்சல் வந்து இருக்கிறது. ஒரு இன்ஜெக்ஷன் போடறேன்.. சிறிது நேரத்தில் காய்ச்சல் குறைந்து விடும். டேப்லெட் எல்லாம் இதில் இருக்கும் டேப்லட்டையே கொடுங்க போதும்.

நான் போட்டுருக்க இன்ஜெக்ஷனில் நல்ல தூக்கம் வரும். நல்லா தூங்கி எந்திரிங்க... எழுந்திருக்கும் போது பிரெஷா பீல் பண்ணுவீங்க.

இதுல இருக்குற மாதிரி மெடிசின் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுங்க அதுக்கப்புறம் காய்ச்சலோ இல்ல உடம்பில் வேறு ஏதாவது வலி, ஏதாவது அலர்ஜி எதுவும் இருந்தா உங்க டாக்டரை பாருங்க, இல்லை என்னை பார்க்க வந்தாலும் சரி என்று சொல்லி விட்டு தீபா மா.. ஓகே நான் வருகிறேன் டா என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

டாக்டர் வருவதற்கு முன்பே கீழே இட்லி ஊற்றி வைக்குமாறு சொல்லி இருந்தாள். கீழே சென்று டாக்டரை வழி அனுப்பி வைத்து விட்டு, செல்வி இடம் இருந்து இட்லியும், சாம்பாரும் வாங்கிக்கொண்டு மாடிக்கு வந்தவள்..

அவனிடம் இரண்டு இட்லி வைத்து சாம்பார் ஊற்றி கொடுக்க... அவனும் மறுப்பு எது சொல்லாமல் வாங்கி சாப்பிட்டு விட்டு, கை கழுவி விட்டு அவளிடம் தட்டை கொடுப்பதற்கு பதிலாக அருகில் இருந்த மேஜையில் வைக்க போக...

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே தட்டை வாங்கி வைத்தாள்.

அவள் திடீரென்று முறைக்கவும் இப்ப எதுக்கு இவள் முறைக்கிறாள் என்று தெரியாமல் குழம்பி போனவன்.. அவளையே பார்க்க அவளோ.. அவனுக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள். அதையும் வாங்கி சாப்பிட்டவன் வேறு எதுவும் சொல்லாமல் அப்படியே படுத்துக்கொண்டான் கண்களை மூடி...

சிறிது நேரத்தில் ஊசி போட்டதன் விளைவாக ஆர் கே தூங்கி விட... அந்த அறையை அழகாக சுற்றி வந்த பார்த்தாள்... அங்கே ஒரு செல்பில் தமிழ், இங்கிலீஷ்... என்று பல நாவல்கள் இருக்க அதில் கல்கியின் பொன்னியின் செல்வனை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள்...

நாவலின் மூழ்கியவள் நேரத்தை மறந்து அமர்ந்து இருக்க...

ஹாய் டா ... என்ன பண்ற.. சீக்கிரம் போன் எடு என்று ஒரு ஆணின் குரல் வர...

முதலில் சரியாக கவனிக்காமல்... மறுமுறையும் அந்த குரல் கேட்க, அட கடவுளே பூட்டி இருக்கும் மணிக்குள் யார் வந்தது என்று பயத்தில் சுற்றும் மற்றும் பார்த்தால் ஆனால் சத்தம் ஆர் கே வின் கட்டிலுக்கு அருகில் வர அந்த சென்று பார்க்க அவனுடைய போன் தான் அப்படி ஒரு ரிங்டோன் வந்து கொண்டு இருந்தது.

அதில் ஆர் கேவும், ஆர்கேவின் அப்பாவும் அழகாக ஒரே போல் உடைய அணிந்து கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தார்கள்...

அடடா அங்கிள் உங்களோட போன் தானா என்று... ஆர்கே வை பார்க்க அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.

சரி நமக்கு அங்கிளை தான் நல்லா தெரியுமே... நம்மளே அட்டென்ட் செய்து பேசுவோம் என்று போனை அட்டென்ட் செய்தாள்.

அவள் தன் அப்பாவை தெரியும் என்று சொல்லி போனை அட்டென்ட் செய்ய சரியாக கண் விழித்த ஆர் கே.. ஓஹோ என் அப்பாவை உனக்கு முன்னமே தெரியுமா..?.. இன்று மனதில் நினைத்துக் கொண்டு கண்களை திறக்காமல் அப்படியே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்பதற்காக அப்படியே படுத்து இருந்தான்.

போன் கட்டாக போகும் சமயம் சரியாக அதை அட்டென்ட் செய்தது ஹலோ என்று சொல்ல..

தன் பையனின் போனில் அதுவும் கவியை தவிர்த்து, வேறு ஒரு பெண்ணின் குரல் கேட்க அம்மாடி யாரம்மா நீ ... ??... கவி தவிர என் மகனின் போனில் வேறு யாரும் பேச மாட்டார்களே என்று கேட்க...

கவியை தவிர உங்கள் மகன் போனில் வேறு எந்த பெண் குரலும் கேட்காதா..?.. அப்போ உங்கள் மருமகள் கூட உங்கள் மகன் போனில்இருந்து பேச மாட்டார்களோ!!???.. என்று எடக்காக கேட்டாள் தீபா.

தீபாவின் இந்த கேள்வியில் படுத்து இருந்தவனுக்கு தான் மறுபடியும் காய்ச்சல் வருவது போல் இருந்தது. இருந்தாலும் சிரித்துக் கொண்டே, அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்டுக் கொண்டு படுத்து இருந்தான் ஆர் கே.

அந்தப் பக்கம் பேசியவரும் நன்கு வாய்விட்டு சிரித்துக் கொண்டே..

ஓஹோ!!.. அப்படி சொல்கிறாயாமா.. சரி மா மருமகளே உன் பெயர் என்ன என்று கேட்டார்.

அது எல்லாம் சொல்ல முடியாது என்று சொன்னாள் தீபா.

சரி என் மகனிடம் போன் தருகிறாயா? நான் அவனிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்க...

அதற்கும் வாய்ப்பு...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top