- Thread Author
- #1
108. ஹரிணியின் நிலை...
அறை வாங்கும் லிபின்...
புவனா ஹரிணியை தேடி செல்ல... அங்கு இருந்த ஒரு சிஸ்டர், எப்பவும் ஹரிணி சிஸ்டர் சரிவு பாதையில் தான் செல்வார்கள் என்று சொல்ல அவளும் அந்த பக்கமாகவே சென்று பார்த்தாள்.
அங்கு சென்று பார்க்க உதயா பேசிவிட்டு சென்ற நொடியில் இருந்து, எப்படி நின்றாளோ அப்படியே நின்று கொண்டு இருந்தாள் ஹரிணி.
ஹரிணியை அப்படி பார்க்க... யாரோ ஏதோ அவளை கஷ்டப்படுத்தி பேசி இருக்கிறார்கள்... அதனால் தான் அவள் இப்படியே நின்ற இடத்தில் நின்று கொண்டு இருக்கிறாள். ஏனெனில் அவளின் இயல்பு இது தான். அவள் மனம் பாதிக்கும் படி யாராவது ஏதேனும் எந்த செயலாவது செய்தாலும், பார்த்தாலும் இல்லை கேட்டாலோ வேறு எதையும் பற்றி சிந்திக்க மறந்து விட்டு, அதே இடத்தில் நின்று விடுவாள் ஹரிணி.
இப்பவும் அதே போல் நிற்பதை பார்த்த உடனே, அவளின் மனநிலை புரிந்து கொண்ட தோழியாக புவனா... அவளை சென்று கட்டிப்பிடித்துக் கொண்டு ஹரிணி என்று சப்தமாக அவள் காதில் கத்தி கன்னத்தில் முத்தமிட்டாள்.
அந்த சத்தத்திலும் .. தனக்கு கன்னத்தில் இதழ் முத்தம் கொடுத்த தன் தோழியின் ஸ்பரிசத்திலும் சுயம் வந்தவளாக... ஹரிணி அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள்.
சிறிது நேரம் அவளை அழவிட்டவள், ஏடி அழுமூஞ்சி ஹரிணி உன்னை இவ்வளவு வருடங்கள் கழித்து பார்க்கும் பொழுதும்... இப்பவும் அதே போல் தான் இருக்கிறாய் கொஞ்சம் கூட மாறாமல் என்று கிண்டலடிக்கும், தன் தோழியை தன்னிடம் இருந்து விலகி நிறுத்திப் பார்க்க அப்போதும் இருவருக்குமே ஆனந்தத்திலும் கண்ணீர் தான் வந்தது...
ஏண்டி ரெண்டு நாட்களாக உங்களையே சுற்றி சுற்றி வருகிறேன் ... என்னை யாருக்கும் அடையாளமே தெரியவில்லை தானே..?..
சஞ்சு அவள் முடியாமல் இருக்கிறாள் சரி, இந்த மிதுனா நீ வருவதற்கு முன்பே இங்கு வந்துவிட்டாள்... என்னை பார்த்தும் பார்க்காதது போல் சென்று விட்டாள் தெரியுமா..?.. உங்களுக்கே என்னை யார் என்று தெரியவில்லை, உங்க அண்ணாவிற்கு மட்டும் எப்படி என்னை அடையாளம் தெரியப்போகிறது என்று இந்த வாசகத்தை மட்டும் தான் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.. சரி உங்கள் சூழ்நிலை அப்படி என்று நான் என் மனதை தேற்றிக்கொண்டாலும்,
மனதிற்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா என்று இப்போது தேம்பியவளை...
சரி டி ... வாடி சஞ்சு தான்... நீ இன்னும் இங்க தான் இருக்கிறாய்.. நீ போய் தேடி அவளை அழைத்துக் கொண்டு வா என்று சொன்னாள். வா.. வா.. உன்னை பார்க்கணும் என்று கூப்பிடுகிறாள் என்று சொல்லி தன் தோழியை அழைத்துக் கொண்டு சென்றாள் புவனா.
ஹரிணியை பார்த்து விட்டு சஞ்சனா மிதுனா இருவரும் சந்தோஷ பட.. முதலில் மிதுனாவிடம் தன்னை அடையாளம் தெரியவில்லை என்று கோபப்பட்டாலும் பிறகு தங்களுடைய பள்ளிப் பருவ காலங்களை நினைத்து... இப்பொழுது நான்கு தோழிகளும் இவ்வளவு நாள் பிரிவுகளை பற்றியும் எப்படி இருந்தார்கள் என்ன பண்ணினார்கள் என்று.. அவர்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.
அப்போது ரிஷ்வந்த், உதயா இருவருமே உள்ளே வர.. ஹரிணியோ அவர்கள் வருவதை கவனிக்காமல் தன் தோழிகளோடு எப்பவும் போல அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாள்.
உதயாவிற்கு அங்கு ஹரிணி இருப்பது... உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ அவள் தான் செய்த ஒரு வேலையை நம்பாமல், சனாதனிடம் சொல்லியது அவள் மேல் இனம் புரியாத ஒரு கோபம் வந்தது... அதனால் தான் அவள் யார் என்று தான் தெரிந்து கொண்டாலும், தெரிந்து கொள்ளாதது போல் கடைசியில் தன் மனதை மாற்றிக் கொண்டது நினைத்து, இப்பொழுது அந்த அறையை விட்டு வெளியே செல்ல நினைக்க...
சஞ்சனா அதை பார்த்து விட்டு உதயா அண்ணா எனக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொடுங்களேன் என்று கேட்டாள்.
சஞ்சனாவின் வாயில் இருந்து உதயா அண்ணா என்ற வார்த்தை வெளியில் வந்ததுமே.. பசை போட்டு ஒட்டியது போல் தன் இதழ்களை ஒட்டிக்கொண்டவள், தலையையும் குனிந்து கொண்டு அமர்ந்து இருந்தாள் ஹரிணி.
சஞ்சனா அழைத்ததால் வேறு வழி இல்லாமல்.. அங்கு சென்று அவள் கேட்ட தண்ணீரை எடுத்து அவளுக்கு கொடுத்து விட்டு, சரி பாப்பா கர்ணா அழகியும் வந்துவிட்டார்களா என்று பார்த்து விட்டு, சரோமாவையும்... ஒரு பார்வை பார்த்து விட்டு லட்சுமி மா அறையில் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, நிற்காமல் வெளியே சென்றான் உதயா.
போகும் அவனை பார்த்த மிதுனா... இது சரிப்பட்டு வராது.. என்ன சஞ்சு என்ன பண்ணலாம் என்று கேட்டாள்.
நீ சொல்வது சரி தான் டி... இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு பார்த்து... சனு சொல்லியது போல் இது வேறு விவகாரமாக வேறு இருக்கிறது... அதனால் இது இப்படியே விட்டால் சரி வராது... நீ இவளை வெளியே அழைத்துச் சென்று கொஞ்சம் வேப்பிலை அடித்து விடு என்று சொன்னாள்.
மிதுனாவும் ஹரிணியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அதே நேரம் சிஸ்டர் வந்து.. புவனா, ரிஸ்வந்த் இருவரையும் வெளியே போக சொன்னார்கள் சஞ்சனாவிற்கு ட்ரெஸ்ஸிங் பண்ணனும் என்று சொல்ல...
புவனா, ரிஸ்வந்த் இருவரும் வெளியே வந்தார்கள் ... ரிஷ்வந்த் புவனாவிடம் யார் இந்த ஹரிணி என்று கேட்க..
இவள் நாங்கள் சிறு வயதில் ஒன்றாக படித்தோம். பக்த தாயுமானவர் நடுநிலைப்பள்ளி மலைக்கோட்டை.. ஆறாவது வரை ஒன்றாக தான் படித்தோம். பிறகு இவர்கள் அப்பாவிற்கு டிரான்ஸ்பர் கிடைத்து, வெளியூர் சென்று விட்டார்கள் அப்பொழுது இப்போது போல் செல்போன் அதிகம் பழக்கத்தில் இல்லாததால் காண்டாக்ட் இல்லாமல் போய்விட்டது.
இப்போது தான் இங்கு பார்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டே வந்தவள், இப்போ இங்கு வந்ததில் இருந்து உதயா அண்ணாவோட இவள் மிகவும் நெருக்கமாக இருந்திருப்பாள் போல..
அவள் மனதில் எந்த கள்ளமும் இருந்திருக்காது ஆனால்.. இப்போது வயதில் தடுமாற்றத்தில் அண்ணாவை சைட் அடிச்சிட்டு இருந்திருப்பா போல.. அதே நேரம் அண்ணா சஞ்சனாவிற்கு மயக்க மருந்து செலுத்த சொல்லியது மனதிற்கு நெருடலாக இருக்க... அந்த விஷயத்தை சனாதன் மாமாவிடம் சொல்லிவிட்டாள், அதனால் அண்ணா ஏதோ கோபமாக இருப்பது போல் தோன்றுகிறது...
அதற்கு தான் காம்ப்ரமைஸ் செய்ய சொல்லி விட்டு சென்று இருக்கிறார் மாமா. அது தான் மிதுனா அவளை அழைத்துச் சென்று இருக்கிறாள் என்று சொல்லி விட்டு, திரும்ப அங்க கர்ணா, அழகி இருவரும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து இருந்தார்கள்.
அவர்களோடு இணைந்து அனைவருக்கும் சாப்பாடு பகிர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
மிதுனா, ஹரிணியிடம் பேச்சு கொடுத்தாள் வீட்டில் அனைவரும் நலமா என்று..
இதுவரை தன் தோழிகளை பார்த்த சந்தோஷத்தில் இருந்தவள் அச்சச்சோ மிதுனா மறந்தே போயிட்டேன் இருடி என்று... தன் போனில் யாருக்கோ அழைக்க, அந்த பக்கம் அழகான மழலையில் அம்மா என்று அழைத்து ஒரு குயில் பேசியது...
என்னம்மா இன்னும் வரவில்லையா நான் கிளம்பி இருக்கிறேன் என்று...
அச்சச்சோ... செல்லக்குட்டி... சாரி டி செல்லம். அம்மா ஹாஸ்பிடல் இருந்து கிளம்பும் போது திடீர்னு என்று அவள் எது சொல்ல வருவதற்குள் அந்த பக்கம்..
போ.. மா... உனக்கு ஏதோ வேலை வந்துவிட்டது, அதனால் என்னை கூட்டிட்டு போக வர லேட் ஆகுந் ... தா.. னே... என்று மழலையில் அழகாக திக்கி.. திக்கி ..பேசியது...
அச்சச்சோ அப்படி இல்ல செல்ல குட்டி... அம்மா உங்க கிட்ட சொல்லி இருக்கேன்ல, அம்மாவோட ஃப்ரெண்ட்ஸ்ன்னு அவங்க மூணு பேரையும்... நான் இங்க பார்த்தேனா அவங்க கூட பேசிட்டு இருக்கவும் நேரம் ஆயிடுச்சு.
அதுவும் அதில் ஒரு சித்திக்கு உடம்பு சரியில்லை.. அதாண்டா செல்லக்குட்டி இன்னும் ஒரு மணி நேரத்தில் அம்மா வீட்டிற்கு வந்து விடுவேன். கண்டிப்பா நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளில போய் லஞ்ச் சாப்பிடலாம் ஓகே வா என்று தன் மகளிடம் பேசி விட்டு போனை கட் செய்ய...
அவள் இதுவரை பேசிக் கொண்டு இருந்ததை, வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்தது... மிதுனா மட்டும் இல்லாமல் உதயாவும் தான். ஆனால் உதயா தூணுக்கு மறைவாக இருந்ததால் இரு பெண்களுக்கும் அவன் அங்கு நிற்பது தெரியவில்லை.
இப்போது சொல் டி என்று மிதுனாவிடம் ஹரிணி கேட்க..
நான் என்னத்த சொல்வது ... நீ தான் சொல்லணும் இப்பொழுது போனில் யாரிடம் பேசிக் கொண்டு இருந்தாய், உன் மகளிடமா!!! ???.. உனக்கு திருமணமாகிவிட்டதா!!??.. என்று சற்று அதிர்ச்சியாகவே கேட்டாள் மிதுனா.
ஹரிணி வேதனையான சிரிப்பை ஒன்றை வெளியிட்டவள்... அது நம்ம பார்கவி அக்காவின் குழந்தை.. பாப்பா பிறந்து 9 மாதத்தில் குலதெய்வ கோவில் சென்று மொட்டை அடித்து காது குத்தி விட்டு வரும் வழியில் ஒரு விபத்தில் அக்கா மாமா மாமாவுடைய அம்மா அப்பா... அதோடு என்னோட அப்பா அம்மா என்று அனைவரும் இறந்து விட்டார்கள். அந்த விபத்தில் உயிர் பிழைத்தது நானும், இதோ சிறிது நேரத்திற்கு முன்பு பேசினாளே மாளவிகா அந்த குட்டியும் மட்டும் தான்.
எனக்காக அவளா??.. இல்லை அவளுக்காக நானா??.. என்று தெரியாமல் நாங்கள் இருவரும் ஒரு உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
ஏய் நீ வேலைக்கு வரும் போது குழந்தை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று பதைப்போடு கேட்டாள் மிதுனா. வீட்டிற்கு பக்கத்திலேயே கிரஷ் இருக்கு டா அங்க தான் விட்டுட்டு வருவேன்.
சரி டா நான் போய்.. பாப்பாவை கூட்டிட்டு போய், லன்ச் சாப்பிட வச்சுட்டு... நான் அப்புறமா இங்க வந்து மற்றவர்களை பார்க்கிறேன். நான் இப்போது கிளம்பட்டுமா என்று கேட்டாள் ஹரிணி.
மிதுனாவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை, கண்கலங்க தன் தோழியை பார்த்துக் கொண்டே இருக்க...
அவளின் மனநிலை புரிந்த ஹரிணி... சரி டி நேரமாயிடுச்சு, நீ மேலே போ உங்களை சுற்றியும் ஏதோ நிறைய ஆபத்துகள் இருக்கிறது கவனமாக இருங்கள் என்று சொல்லி விட்டு திரும்ப போகும் சமயம்...
அவர்களுக்கு முன்பு வந்த உதயா மிதுனாவை பார்த்து நீ மாடிக்கு போ பாப்பா என்று சொல்லி விட்டு, ஹரிணியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
சஞ்சனா வீடு..
சஞ்சனா வீட்டிற்கு சென்ற சனாதன் வீட்டிற்கு வாசலில் நின்று.. லிபின் நம்பருக்கு கால் செய்தான்.
அதுவரை வீட்டிற்குள் இருவரும் பொம்மைகள் போல் ஒரே இடத்தில் அசையாமல் எதிரெதிரே சோபாவில் அமர்ந்து இருந்தவர்களின் மோன நிலையை கலைத்தது.. சனாதனின் மொபைல் அழைப்பு..
அதில் சுயம் வந்த லிபின் அட்டன் செய்து பேச ... நான் வெளியில் தான் இருக்கிறேன் வந்து கதவை திறங்கள் என்று சொன்னதும்...
லிபின் லீனாவை பார்க்க அவளோ மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்தாள்.
உள்ளே வந்த அடுத்த நொடி சனாதன்... லிபினுக்கு ஓங்கி ஒரு அறை வைத்தான்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...