• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
113
107. ஹரிணி யார்..???...

ஹரிணி வேலையை முடித்து விட்டு கிளம்பி சரிவு பாதையில் வந்து கொண்டே.. யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டே வர...
நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். நீ ரெடியா கிளம்பி இரு... இன்னைக்கு மதியான லஞ்ச் ஹோட்டலுக்கு போகலாம் என்று சொன்னாள்.... சொல்லிக்கொண்டே வந்தவள் தான், தன் பாதையை மறைத்துக் கொண்டு யாரோ நிற்கிறார்கள் என்று உணர்ந்து, மெல்ல நிமிர்ந்து பார்க்க..

முகத்தில் கோபம் ... கண்களில் பரிதவிப்பு, துடிக்கும் இரண்டு இதழ்களையும் தன் அடர்ந்த மீசைக்குள் ஒழித்துக்கொண்டு அப்படியே சிலை போல் நின்றான் உதயா.

உதயா நின்ற தோற்றத்தை பார்த்து ஹரிணிக்கு உள்ளுக்குள் பயம் வந்தாலும்...

அவனை ஒரு முறை நேருக்கு நேராக பார்த்து விட்டு, சாரி என்று சொல்லி தலை குனிந்து நின்றாள் ஹரிணி..

ஹரிணி தன்னிடம் சாரி கேட்ட அடுத்த நொடி.. இவள் எதற்கு நம்மிடம் சாரி கேட்கிறாள் என்று குழம்பிப்போன உதயா...

என்கிட்ட எதற்கு நீங்க சாரி கேக்குறீங்க என்று கேட்டான்...

அது வந்து சார்... நீங்க எதுக்காக அப்படி சொன்னீங்கன்னு தெரியாம உங்களை தப்பா நினைச்சு....

என்ன சொல்ல வர ஹரிணி... என்ன தப்பா நினைச்சு என்று... ஒன்றும் புரியல என்ன சொல்ல வர, என்ன விஷயம் என்று தெளிவாக சொல் என்ற பொறுமை இல்லாமல் பேசினான் உதயா.

அதாவது சஞ்சனாவுக்கு நீங்க மயக்க ஊசி போட்டு அவரை தூக்கத்திலேயே வைக்க சொன்னதற்கு காரணம், உங்கள் மாமா போய் செய்ய வேண்டிய வேலைகளை, அதாவது அவர் வெளியே சென்று தடுமாறாமல் செய்து விட்டு வரவேண்டும் என்பதற்காக தான்... ஆனால் அது எனக்கு தெரியாம, அவர் பட்ட கஷ்டத்தை மட்டும் மனதில் வைத்த கொண்டு அவரிடம் உண்மையை சொல்ல மறுக்கிறீர்களே என்று நினைத்து, நான் தான் அவர் கண்விழிக்க நீங்கள் லேட்டாகும் என்று சொன்னதை மாற்றி... நீங்கள் இன்ஜெக்ஷன் போட்டதால் தான் அவர் கண் விழிக்க லேட் ஆகும் என்ற உண்மையை, மனசு கேட்காம நான் தான் அவரிடம் சொல்லிவிட்டேன் மன்னித்து விடுங்கள் உதயா என்று சொன்னாள்.

இதுவரை ஹரிணி மேல் இருந்த தன்னுடைய உணர்வை வெளியே கொண்டு வராமல் அப்படியே உள்ளே வைத்துக் கொண்டு.. அவளை ஒரு முறை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்து விட்டு அவளை விட்டு நகர்ந்து வேகமாக மேலே சென்று விட்டான் எதுவும் சொல்லாமல்...

எதுவும் சொல்லாமல் செல்லும் உதயாவை பார்த்து.. மனதிற்குள் கஷ்டமாக இருக்க எவ்வளவு நேரம் என்று தெரியாமல் அதே இடத்தில் அப்படியே நின்று விட்டாள்.

வேகமாக சென்று தன் மாமா முன்னாடி போய் நின்ற உதயா..

தான் கொண்டு வந்து இருந்த மொபைல்கள் இரண்டையும் அவனிடம் கொடுக்க...

இந்த போன்ல பேட்டன் லாக் எதுவும் போடாமலே வைத்து இருந்தானா அவன் என்று கேட்டான் சனாதன்.

ஆமாம் மாமா.. உங்களிடம் நான் பேசின போனில் அவன் பேட்டன் லாக் எதுவும் பண்ணவில்லை. ஆனால் இந்த போன் ஃபுல் லாக்ல இருக்குது..

அதே மாதிரி இந்த லாக் ஆகாம இருக்க போன்ல கொஞ்சம் ஓபன் பண்ணி பாருங்க இதுல நம்ம சார்ந்தவர்கள் அனைவருடைய போன் நம்பரும் சேவ் ஆகி இருக்கிறது.

நான் உங்க நம்பர் டயல் பண்ண ஆரம்பிக்கும் போதே உங்கள் நம்பர் உங்கள் பெயரோடு இதில் வந்தது என்று சொன்னான் உதயா.

ஓஓ.. ஓகே உதயா இது என்ன விஷயம் ஏது என்று நான் என் டீம் ஆட்களிடம் கொடுத்து விசாரித்துக் கொள்கிறேன். நீ முதலில் சஞ்சனாவை பார்த்து விட்டு வா, நான் சென்று கேன்டின் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு, சனாதன் சென்றதும் தன் தங்கையை காண உள்ளே சென்றான் உதயா.

உள்ளே கண்மூடி படுத்து இருந்தாள் சஞ்சனா... சாதாரணமாக தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் உறக்கம் என்றால் என்னவென்று தெரியாதவள் அதே போல் ஓய்வென்று எப்பவும் உறைந்து போகாதவள்...

இப்படி மருத்துவமனையில் பல வயர்களுக்கு இடையில்.. தலையிலும் உடம்பிலும் பல காட்டுகளோடு படுத்திருக்கும் தன் தங்கையை பார்த்து அழுகை வர இவ்வளவு நேரமும் யாரும் இருக்கிறார்கள் என்று அதுவும் ... தானும் அழுது தன்னை சுற்றி இருப்பவர்களும் அழுதால் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று அடக்கி வைத்து இருந்த ஒட்டுமொத்த அழுகையையும்... இப்பொழுது தன் தங்கையை பார்த்தவுடன் வெடித்து அழுதான்... உதயா.

அவள் மயக்கம் தெளிந்து எழுந்து விட்டால் என்பதை மறந்து விட்டவன்... வாய் விட்டு கதறி அழுக, உதயாவின் அழுகையில் கண் திறந்த சஞ்சனாவும் தன் அண்ணனின் கண்ணீரை கண்டு அழுக ஆரம்பித்தாள்.

அவளின் அழுகையில் தன்னை சுதாரித்த உதயா.. பாப்பு கண் முழிச்சிட்டிங்களா.. இப்போ உடம்புக்கு எப்படி டா இருக்கு... வலி அதிகமா இருக்கா என்று தன் அழுகையை முற்றிலும் தனக்குள் அடக்கிக் கொண்டு, இயல்பாக தன் தங்கையை பார்த்து பேசிய வண்ணம் அவள் கண்ணீரையும் துடைத்து விட்டான் உதயா.

அண்ணா ப்ளீஸ் நீ மட்டும் அழுகாத.. நீ அழுதால் எனக்கு அழுகை வந்து விடும். நீ இதே போல் சிரித்துக் கொண்டே இருந்தேனா.. நானும் சிரித்து கொண்டே இருப்பேன். எனக்கு உடம்பில் எந்த வலியும் இல்லை அப்படின்னு பொய் சொன்னா எல்லாரும் நம்மை பார்த்து சிரிப்பாங்க.. வலிக்குது ஆனா நீங்க எல்லாம் இருந்தா நான் அதை சமாளிச்சு விடுவேன். அதுக்கு நீங்க முதல் அழுகாமல் இருக்கணும் என்று தன் தங்கை அவ்வளவு வலிகளிளும் தனக்காக பேச..

சரி டா என்று இயல்பாக உதயாவும் பேசிக் கொண்டு இருந்தான். இருவரும் இயல்பாக பேசிக்கொண்டு இருக்க அந்த சமயம் மிதுனா மற்றவர்களும் அனைவரும் அங்கே வர வெளியே சென்ற சனாதனும் உள்ளே வந்தான்.

அனைவரும் சஞ்சனாவிடம் நலம் விசாரித்த பிறகு சனாதன் உதயாவை பார்த்து, உதயா நாங்கள் நாளை காலையில் ஹாஸ்பிடலில் இருந்து அனைவரும் வீட்டிற்கு செல்கிறோம்.

ப்ராஜெக்ட் கொஞ்சம் முக்கியமானது போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு அனைவரும் சேர்ந்து உழைத்தால் தான் சரியான டைம் முடிக்க முடியும். ஆனால் இப்பொழுது சஞ்சனா இருக்கும் நிலையில் அவளுடைய வேலையும் சேர்த்து நான் தான் பார்த்தாக வேண்டும். அதனால் சஞ்சனாவை நான் என் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் இருந்து நானும் அவளும் ஓர்க் பார்க்கிறோம். அது மட்டும் இல்லாமல் இவர்களின் பாதுகாப்புக்காக அனைவருமே எங்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.

மற்றவர்கள் அலுவலகத்திற்கு சென்று பார்க்கட்டும். அதே போல் நானே சனாவை பத்திரமாக பார்த்துக்கொள்வேன் உனக்கு நம்பிக்கை இருந்தால் என்னுடன் என் வீட்டிற்கு அனுப்பி வை. மற்றபடி இங்கு நடந்த எந்த விஷயத்தையும் வீட்டில் யாருக்கும் தெரிவிக்காதே... சஞ்சனாவின் உடல்நிலை முற்றிலும் குணமாகிய பிறகு எங்களுடைய ப்ராஜெக்ட் வொர்க்கும் முடிந்த பிறகு நாங்களே வீட்டிற்கு வந்த நேரடியாக மாமாவை பார்த்து நடந்த விஷயங்களை சொல்லிக் கொள்கிறோம் என்று சொன்னான் சனாதன்.

உதயா விற்கும் அது சரி என்று பட சரி மாமா... நான் இன்று இருந்து விட்டு காலையில் சஞ்சனாவை உங்கள் வீட்டில் விட்டுவிட்டு, பிறகு செல்கிறேன் என்று சொன்னான் உதயா.

சரி நான் போய் லிபின், லீனா இருவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்..

கர்ணா, அழகி இருவரும் சேஃப்டியா வீட்டுக்கு போயிட்டாங்க. நம்ம ஆட்கள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து கண்காணித்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. வீட்டில் இருந்து இன்று இரவிற்கு மட்டும் அனைவருக்கும் உடை எடுத்துக் கொண்டு கிளம்பி வருகிறார்கள் உணவோடு...

வந்ததும் அனைவரும் பகிர்ந்து உணவை உண்ணுங்கள். ஒருவர் ஒருவர் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சரி நான் சென்று லிபினையும் லீனாவை மட்டும் அழைத்து வந்து விடுகிறேன் என்று சனாதன் சென்றான்.

அறையின் கதவு வரை சென்றவன் திரும்பி நின்று உதயாவை பார்த்து ஏன் உதயா உனக்கு ஹரிணி என்று யாரையாவது தெரியுமா என்று கேட்டான்.

சனாதன் அவ்வாறு கேட்ட அடுத்த நொடி சட்டென்று தன் தங்கைகள் மூவரையும் ஒரு நொடி பார்த்து விட்டு, அப்படி யாரையும் எனக்கு தெரியாது மாமா என்று சொன்னான்.

தான் கேட்ட கேள்விக்கு தனக்கு பதில் சொல்லாமல் தன் தங்கைகளை அவன் பார்க்கும் போதே இதில் இன்னும் வேறு வேறு விஷயங்கள் ஏதேதோ இருக்கு போலவே என்று நினைத்தவன், மறுபடியும் உள்ளே வந்து சனாவிடம் காதில் ஏதேதோ சொல்லி விட்டு சென்றான்.

இப்போது புவனா, மிதுனா, சஞ்சனா மூவருமே தன் அண்ணனை ஒரு மார்க்கமாக பார்க்க...

ஏய் பாப்பா நீங்க மூணு பேரும் ஏன் எதற்கு என்னை குறுகுறு என்று பார்க்கிறீர்கள் என்று கேட்டான் உதயா.

என்ன அண்ணா சொல்றீங்க.... நாங்கள் உங்களை குறுகுறன்னு பார்க்கிறோமா... அப்படியா..!!.. சொல்றீங்க?.. அப்படி ஒன்னும் நாங்கள் உங்களை பார்க்கவில்லையே.. ஆமாம் உங்களுக்கு ஏன் அப்படி தோன்றியது என்று சஞ்சனா, புவனா இருவரின் சார்பாக மிதுனாவே கேட்டாள்.

இல்ல அது எல்லாம் ஒன்றும் இல்லையே, நான் சும்மா இயல்பாக தான் கேட்டேன் என்று சமாளித்தான் உதயா..

ஆனால் மூன்று பெண்களுமே நம்பாத பார்வை பார்க்க...

தன் தங்கைகள் மூவரிடம் இருந்து தப்பிப்பதற்காக, அங்கு இருந்த ரிஸ்வந்திடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வெளியில் சென்றான் உதயா.

சஞ்சனா புவனாவை பார்த்து இங்கே நர்ஸ் ஹரிணி என்று யாரோ இருக்காங்களாம்...

இப்ப தான் சனு சொல்லிட்டு போனாரு.. வெளியில் சென்று அது யார் என்று விசாரித்து, அந்தப் பெயரில் யாராவது இருந்தால் அழைத்துக் கொண்டு வா என்று சொன்னால் சஞ்சனா.

ஏன் சஞ்சனா உனக்கு எதுவும் நம்ம ஹரிணி என்று தோன்றுகிறதா?.. என்று கேட்டாள் மிதுனா.

ம்ம்.. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனென்றால் வந்ததில் இருந்து, அந்த நர்ஸ் நம் அனைவரையும் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்கள் என்று சனு சொன்னார்.

அதனால் தான் சொல்கிறேன்.. நீ போய் விசாரித்து விட்டு வா என்று, புவனாவை அனுப்பி வைத்தாள்.

புவனாவும் வந்து வெளியில் பார்க்க ரிஷ்வந்த், உதயா இருவரும் கேண்டின்கு செல்வது தெரிந்தது. அதே போல் அந்த வார்டின் வலது பக்கம் பார்க்க அங்கு ஒரு சிஸ்டர் டேபிளில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்ததை பார்த்து விட்டு அவர்களிடம் சென்று விசாரித்தாள் புவனா.

அங்கே தனக்கு தேவையான அனைத்து விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டவள்... ஆஹா மகளே இங்க தான் இருக்கியா ..?.. எத்தனை வருடங்கள் ஆயிற்று உன்னை பார்த்து.
சரி இரு டி.. மறுபடியும் உன்னை பார்க்காமல் போய்விடுவோமா!!??. என்ன என்று அவள் வீட்டிற்கு சென்று விட்டால் என்ற செய்தி கேட்டு, உள்ளே வந்து சஞ்சனாவிடம் அனைத்து விவரங்களையும் சொன்னாள் புவனா.

இல்ல டி எனக்கு தெரிஞ்சு அவள் இங்கே தான் எங்கேயோ இருப்பது போல் தோன்றுகிறது, எதற்கும் ஒரு முறை கீழே சென்று பார்த்து விட்டு வருகிறாயா என்று கேட்டாள் சஞ்சனா.

புவனா சரி என்று கிளம்பி சென்றாள்.

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top