• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
112
106. பிரியாவால் ஏற்பட போகும் விபரீதம் தெரியாத தாய்மார்கள்...

உதயாவின் கோபமும்.. ஹரிணியின் மன்னிப்பும்...

பிரியா வீட்டில்..

பிரியா முதல் நாள் இரவு தன் தாய் மாமா வீட்டிற்கு சென்று இயல்பாக நோட்டமிட்டவள், தன் அத்தையின் மனதை நன்கு அறிந்து கொண்டு வந்து இருந்தாள்.. அதாவது அவர் கமிஷனர் என்பதால் சில சமயங்களில் ஒரு வாரத்திற்கு மேலும் கூட வீட்டிற்கு வராமல் இருந்து இருக்கிறார். அதனால் அவர்கள் வீட்டில் யாரும் பயப்படவில்லை என்று தெரிந்து கொண்டவள்... எப்பவும் போல சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள்.

பிரியா அம்மாவோ... பிரியாவை திட்டிக் கொண்டு இருந்தாள்... தன் தங்கை ருக்மணி கிட்ட... சின்னவள் எவ்வளவு அழகாக பொறுப்பா காலையில் கிளம்பி காலேஜ் போறா... ண

இவளை நமக்கு இருக்கிற பிசினஸ் கவனிச்சுக்க சொன்னேன் நாட்டை திருத்துறேன் ... சமுதாயத்தை திருத்துறேன்னு,... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் அப்படின்னு இல்லாத வேலை எல்லாம் பாத்துட்டு, ஒரு பார் ஓபன் பண்ணி நடத்துற... இதெல்லாம் என்ன குடும்ப பொம்பளை செய்யும் வேலையா என்று தன் மகளை திட்டிக் கொண்டே போக...

ருக்மணியும் அக்கா என்ன வார்த்தை சொல்கிறாய்? கோபத்தில் என்ன வார்த்தை வேண்டும் ஆனாலும் சொல்லிவிடலாமா!?.. நீ என்ன சொன்ன என்று நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு, இன்னும் ஒரு முறை இந்த மாதிரி பேசினா என்னிடம் பேசுவதை நிப்பாட்டி விடு நீ.. என்று சொல்லி விட்டு கோபமாக .. தன் தங்கை போகும் போது தான்,...

தான் என்ன மாதிரி வார்த்தையை சொல்லி இருக்கிறோம் என்று புரிந்து கடவுளே என்று வருத்தப்பட்டார் பிரியாவின் தாய்.

அதே நேரம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த பிரியா... தன் அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சித்தி சித்தி மா... வாங்க எனக்கு பசிக்குது என்று சத்தம் போட்டாள் பிரியா.

ருக்மணியும் வந்து தன் மகளுக்கு காலை உணவை பரிமாறி விட்டு... பிரியா கண்ணு ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க பிரச்சனை எதுவும் எடுத்துக்காதீங்க...

தயவு செய்து சித்தி மாவுக்காக நல்ல பிள்ளையா இருங்க... நம்மை யாரும் குறை சொல்வது போல் நடந்து கொள்ளக் கூடாது சரியா என்று...... எப்பவும் இயல்பாக ஜாலியாக பேசும் சித்தி இன்று அறிவுரையாக அதே சமயம் கண்டிப்பாக சொல்லும் போது...

தன் தாய் தான் ஏதோ சித்தி கிட்ட தன்னால் சண்டை போட்டு இருக்கிறார் என்பது புரிய... கண்டிப்பா சித்தி மா நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன் யார் என்ன வேணா சொல்லிட்டு போறாங்க... நீங்க ஏன் கவலைப்படுறீங்க என்று கட்டிப்பிடித்து, அவளின் கன்னத்தில் முத்தமிட்டவள்...

தன் தாயைப் பார்த்து ஏன் மா சித்தி கவலைப்படும்படி என்ன சொன்னாய் என்று கேட்டாள் பிரியா.

எங்க உணர்ச்சிவசப்பட்டு அக்கா உண்மையை சொல்வதாக நினைத்து அப்படியே சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் ருக்மணி, அவசரமாக பிரியா மா அது எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நீ முதலில் உன் வேலையை பார்க்க கிளம்பி செல் என்று சொல்லி கொண்டு பிரியாவை வாசலுக்கு அழைத்து சென்றாள் ருக்மணி.

ஏன் சித்தி அம்மா ஏதும் கோபத்தில் மிகவும் மனம் கஷ்டப்படும்படி வார்த்தை விட்டு விட்டாரா... சரி விடுங்க அம்மா அப்படித்தானே எப்பவும், என்னை புரிந்து கொள்ளவே மாட்டார்கள் ... என்று விரக்தி ஆக சொன்னாள் பிரியா.

பிரியா கண்ணு நீ பேசறது ரொம்ப தப்பு.. அம்மா என்ன உன் மேல ஆசை இல்லாம எப்ப நடந்துக்கிட்டாங்க அம்மா கோபப்படுறது எல்லாமே ஒரு தாயா தன் பொண்ணுக்கு நல்லது பண்ணனும் என்ற நல்ல எண்ணத்தில் தான்... நானும் உங்க சித்தப்பாவும் தான் அக்கா சொல்ற மாதிரி உன்னை நல்லா கெடுத்து வச்சிருக்கோம்... என ருக்மணி புலம்ப..

சரி சரி ரொம்ப புலம்பாத ருக்கு ப்ளீஸ்.. அப்புறம் என்னோட மூடு ஸ்பாயில் ஆயிடும் அதே மாதிரி அங்கே பாரு உன் அக்கா ஓவர் பீலிங் ஆஃப் இந்தியாவுல இருக்காங்க... போய் அவர்களை சமாதானப்படுத்து. நான் எப்பவும் போல ஜாலியா இருக்கேன் என்று, எந்த கவலையும் எனக்கு இல்ல ஓகே என சொல்லி விட்டு, தன்னுடைய போனி டைல் குதித்தாட வேகமாக வெளியே சென்றாள் பிரியா.

பிரியா தன் காரில் வீட்டை விட்டு செல்லும் வரை அவளை பார்த்துக் கொண்டு இருந்த ருக்மணி, இப்போது தன் அக்காவை சென்று சமாதானப்படுத்தி அவரை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டார்.
விரைவில் இவளால் குடும்பத்தில் பேரிடி இறங்கப் போவது தெரியாமல்...

உதயா....

உதயா நால்வரையும் அடித்து துரத்தி விட, ... நால்வரும் தங்கள் வண்டியை கூட மறந்து, பின்னங்கால் பிடரியில் அடிக்க... பயந்து ஓடினார்கள்.

அவர்கள் ஓடியதற்கு பிறகு தன்னுடைய மொபைல் போனை தேடி பார்க்க.. அது வழியிலேயே எங்கோ விழுந்து இருந்தது... என்ன செய்வது இந்நேரம் மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்து இருந்தால் பயந்து கொள்வார்களே என்று சுற்றிப் பார்க்க அந்தகன் நான்கு நடிகர்களும் விட்டுச் சென்ற பைக்கை சென்று ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அந்த பைக்கில் ஒரு போன் இருக்க அதை எடுத்துக் கொண்ட உதயா...

அதில் இருந்து தன் மாமா நம்பருக்கு கால் செய்து பார்க்கலாம் என்று நம்பரை டயல் செய்து பார்க்க... முதல் நான்கு நம்பர்களை போடும் பொழுது ஆட்டோமேட்டிக்காக தன் மாமாவின் நம்பர் வரவும் ... அட இங்க பாரு டா என்று நினைத்துக் கொண்டவன் கால் செய்ய ஆரம்பித்தான்..

அங்கே மருத்துவமனையில் சனாதன் உதயா நம்பர்க்கு அழைத்து அவன் எடுக்காமல் இருக்க, சஞ்சனாவும் பதட்டத்தோடு சனாதன் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சஞ்சனாவை பார்த்துக்கொண்டே மறுபடியும் உதயாவிற்கு அழைத்து பார்க்க ஒரு முழு ரிங் சென்று கட்டானதே தவிர, யாரும் அதனை செய்யவில்லை அதே நேரம் உதயா அந்த அடியாட்களின் நம்பரில் இருந்து அழைக்க தன் நம்பருக்கு புது நம்பரில் இருந்து போன் வரும்...

ஒரு நொடி கூட தாமதிக்காத அட்டென்ட் செய்வதன்... ஹலோ என்று பேச அவன் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த உதயா...

மாமா பதட்டப்படாதீங்கள் நான் உதயா தான் பேசுகிறேன் நான் நல்லா இருக்கேன் எந்த பிரச்சனையும் இல்லை... லிபின் இந்நேரம் என்ன நடந்தது என்று எல்லாமே உங்களுக்கு கன்வே பண்ணிருப்பான்னு தெரியும். நானும் அவர்களின் கவனத்தை விசை திருப்பி
அவர்களை அடித்து விரட்டி விட்டேன். அவர்கள் தங்கள் வண்டியை கூட எடுக்காமல் ஓடிவிட்டார்கள் .. அவர்கள் வண்டியில் இருந்து தான் போன் எடுத்து பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று, சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... அங்கே சனாதனின் ஆட்களும் வந்துவிட..

மாமா உங்கள் ஆட்களும் இங்கு வந்து விட்டார்கள் என்று சொன்னான் உதயா.

சரி அந்த போனை அப்படியே அவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடு உதயா என்று சொல்லவும் அங்கு வந்தவர்களிடம் தான் பேசிக்கொண்டு இருந்த மொபைலை கொடுக்க,

சனாதன் அவர்களிடம் முதலில் அங்கு கிடக்கும் பைக்குகளை, ஆளுக்கு ஒருவராக கலெக்ட் பண்ணி கொண்டு.. போனை மட்டும் உதயாவிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று சொல்ல...

பேசிக் கொண்டு இருந்த போன் மட்டும் உதயாவிடம் கொடுத்து விட்டு வண்டியில் ஏற ....

ஏதேனும் வேற போன் இருக்கா என்று செக் பண்ணி பார்த்தனர். அதில் மற்றொரு பைக்கிலும் ஒரு போன் இருக்க அந்த போனையும் எடுத்து உதயாவிடம் கொடுத்து விட்டு, அவர்கள் வந்த வழியே திரும்பி சென்று விட்டனர்.

உதயாவும் அந்த இரண்டு மொபைல்களையும் பார்க்க அதில் சனாதன் பேசிக் கொண்டு இருந்த போன் லைனில் இருக்கவும், அதை அட்டென்ட் செய்து ...
மாமா என்ன செய்ய வேண்டும் இந்த இரண்டு ஃபோன்களோடு நான் அங்கு ஹாஸ்பிடல் தான் வருகிறேன் என்று சொல்ல...

இரண்டு போன்களையுமே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு உதயா... அதே சமயம் நீ வரும் வழியில் உன்னுடைய போன் எங்கேயும் இருக்கிறதா என்று செக் பண்ணி பாரு என்று சொல்ல...

சனாதன் ஆட்களில் வேறு ஒருவன் வந்து .. சார் உங்க போன் என்று கையில் கொடுக்க ...
எங்கே இருந்தது என்று கேட்டான் உதயா.

நீங்கள் அவர்களை வழி மாற்றி கூட்டிக் கொண்டு வரும் பொழுது கீழே விழுந்தது, நான் எடுப்பதற்குள் அதை வேறு ஒருவன் எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவனிடம் சென்று வாங்கி வருவதற்கு தான் தாமதம் ஆகிவிட்டது என்று சொல்லி, அவனிடம் கொடுத்து விட்டு நான் வருகிறேன் சார் என்று அவன் மற்றொரு பாதையில் சென்று விட்டான்.

உதயாவும் நேரே மருத்துவமனைக்கு தான் வந்தான்..

மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்ற இறக்க லிஃப்ட் தேவைப்படும் என்பதால் லிஃப்ட் தவிர்த்து, பக்கவாட்டில் இருந்த சரிவு தள பாதையில் ஏறினான்.

சரியாக நர்ஸ் ஹரிணியும் தன்னுடைய வேலை முடித்து.. வீட்டுக்கு கிளம்பி வந்து கொண்டு இருந்தாள். வந்ததில் இருந்து நர்ஸ் உடையில் பார்த்து விட்டு... இப்போது தேன் நிற மெருன் கலரில் சாதாரண பூனம் சேலையாக இருந்தாலும்,அதை அவள் உடுத்தி இருந்த விதம் அவ்வளவு அழகாக இருந்தது.

இறங்கி வரும் ஹரிணியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே மேலே ஏற...

ஹரிணியோ உதயாவை கவனிக்காமல் போனில் யார் கூடவோ பேசிக்கொண்டே கீழே இறங்கினாள்.

ஹரிணி போனில் டேய் உன் கிட்ட எத்தனை தடவை சொல்வது போனில் கிஸ் கேட்காதே என்று சொல்லி கொண்டே வர....

உதயா அப்படியே தன் கால்கள் பூமிக்குள் வேரோடியது போல் நின்று விட்டான்.

உதயா நின்றதை கவனிக்காத ஹரிணி போனில் பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தாள். நான் ஹாஸ்பிடலில் வொர்க் பண்றேன்.. இங்கே எத்தனை பேர் வருவார்கள் போவார்கள் அவர்களுக்கு முன்பு நான் உனக்கு போனில் முத்தம் கொடுத்தால் நன்றாகவா இருக்கும்....

எனக்கு வேலை முடிஞ்சிடுச்சு. நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். நீ ரெடியா கிளம்பி இரு... இன்னைக்கு மதியான லஞ்ச் ஹோட்டலுக்கு போகலாம் என்று சொன்னாள்.... சொல்லிக்கொண்டே வந்தவள் தான், தன் பாதையை மறைத்துக் கொண்டு யாரும் நிற்கிறார்கள் என்று உணர்ந்து, மெல்ல நிமிர்ந்து பார்க்க..

முகத்தில் கோபம் ... கண்களில் பரிதவிப்பு, தூடிக்கும் இரண்டு இதழ்களையும் தன் அடர்ந்த மீசைக்குள் ஒளித்துக்கொண்டு அப்படியே சிலை போல் நின்றான் உதயா.

உதயா நின்ற தோற்றத்தை பார்த்து ஹரிணிக்கு உள்ளுக்குள் பயம் வந்தாலும்...

அவனை ஒரு முறை நேருக்கு நேராக பார்த்து விட்டு, சாரி என்று சொல்லி தலை குனிந்து நின்றாள் ஹரிணி..

இணைந்திருங்கள்
சொல்லவா,.. வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top