• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
111
105. லீனா வாங்கும் முதல் அடி..

உதயாவை நினைத்து
சஞ்சனாவின் பதட்டமும் ...
சனாதனனின் பதட்டமும்...


லீனா திடீரென்று நடந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்று யோசிக்க முடியாமல், ஒரு நொடி தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்த்து விட்டு, அச்சச்சோ சாரி லிபின் திடீரென்று நீங்கள் வேகமாக வண்டியை ஓட்டவும் பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேனா அது தான் என்ன நடந்தது என்று தெரியவில்லை...

ஆமாம் என்ன நடந்தது என்று கேட்டாள்... ஆனால் லீனா ஒன்றை மறந்துவிட்டாளா இல்லை அவளுக்கு அது தப்பாக தெரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தோளில் தன் முகத்தை வைத்து தான் பேசிக் கொண்டு இருந்தாள்.

லிபினும் அவளின் முகமாற்றங்களை வண்டியின் கண்ணாடியில் பார்த்து கொண்டே..

ஓஓஓ.... அதுவா அது வந்து சொல்லனுமா!!??. சரி சொல்றேன் ஆனா அதை கொஞ்சம் வீட்ல போய்.. சோபாவில் கூட வேண்டாம் தரையில் உட்கார்ந்து கொண்டு பொறுமையாக பேசலாமா என்று கேட்க...

அப்போது தான் சுற்றமும் உரைத்து... அச்சச்சோ ராமா‌... ராமா... என்று சொல்லிக்கொண்டே அவனை விட்டு விலகி வண்டியில் இருந்து இறங்கி அவனை பார்க்காமல் திரும்பி நின்றாள்.

இப்போது வண்டியை நன்றாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அவளின் பின்புறத்தில் அருகில் சென்று சொல்லவா... வேண்டாமா ... என்று கேட்டான் லிபின்.

இவ்வளவு நேரமும் அவனை கட்டி பிடித்துக் கொண்டு உரசி கொண்டு அவ்வளவு நெருக்கத்தில் இருந்தவளுக்கு அப்போது இல்லாத கூச்சம்.. இப்போது அவன் தனக்கு மிக அருகில் அவன் மூச்சு காத்து தன் மேனியில் பட நிற்பது அவளுக்கு அனல் மேலே பனித்துளி இருப்பது போல்.. அவஸ்தையில் நெளிய ...

அவளை மேலும் சோதிக்காமல், அவளை விட்டு விலகி சரி.. சரி .. வா வந்து வண்டியில் ஏறு என்று சொன்னான் லிபின்.

ஆனால் லீனாவோ அவனை மேல் இருந்து கீழாக ஒரு முறை பார்த்து விட்டு ஏன் வண்டியில் ஏறனும் என்று கேட்டாள்...

இப்போது லிபின் அவளை மேல் இருந்து கீழாக பார்த்து ஏன் உனக்கு எதுவும் அம்னீசியா வா என்று கிண்டலாக கேட்டான்.

ஹலோ நான் எப்ப எனக்கு அம்னீசியான்னு உங்க கிட்ட சொன்னேன்.. என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது என்று சற்று கோபமாக கேட்டாள்.

அப்புறம் எவ்வளவு நேரம் இப்படி நடு ரோட்டில் நின்று பேசிக் கொண்டு இருப்பது... அதுவும் நாம் இப்ப இருக்கும் சூழ்நிலையில் இந்த நேரத்தில் நல்லதா?.. நம்மை சுற்றி இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிகிறதல்லவா என்று நக்கலாக கேட்டான் லிபின்..

லிபினின் நக்கலில் மேலும் கோபமானவள், நான் ஒன்றும் உங்களை நடுரோட்டில் நின்று கொண்டு ரொமான்ஸ் செய்ங்கன்னு நானும் சொல்லவும் இல்லையே என்று... அவனை வெறுப்பேற்றுவதற்காக சொல்ல..

ஆமா இவங்க பெரிய ரதி இவங்க கூட நாங்க ரொமான்ஸ் பண்றோம்.... இவ்வளவு நேரம் பைக்ல உக்காந்து கட்டி பிடிச்சுக்கிட்டு அப்படியே அட்டை போல ஒட்டிக்கொண்டு இருந்தது ... நீனா.. ?.. நானா.. ??... பெரிய இவளாட்டம் பேச வந்துட்ட என்று இப்போது அவனும் கோபமாக பேச...

இருவருமே சண்டைக்கோழிகளாக சடைத்து நின்றனர்...

அப்போது லிபினுக்கு சனாதன் போன் செய்தான்.. அப்போது தான் இருவருமே சட்டென்று அமைதியாக... லிபின் போனை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தான்.

எங்க இருக்கீங்க என்று சனாதன் கேட்டவுடன் தான் சூழ்நிலை உணர்ந்து அச்சோ.. அண்ணா .. சாரி அண்ணா... என்று லிபின் சொல்லவும்...

என்ன ஆச்சு டா .. எதற்கு சாரி கேட்கிறாய் என்று சனாதன் கேட்க...

லிபின் நடந்த விஷயங்களை சுருக்கமாக சொல்ல, ஓகே நீங்க முதலில் இருவரும் வீட்டிற்கு செல்லுங்கள். எந்த காரணம் கொண்டும் வெளியில் வர வேண்டாம். நான் வீட்டுக்கு வந்து போன் செய்ததற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியில் வாருங்கள்...

மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன் சீக்கிரம் வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணிட்டான் சனாதன்.

வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு திரும்பி பார்க்க அங்கு லீனா இல்லாமல் இருக்கவும்.. ஒரு நொடி கண்கள் அப்படியே இருட்டிக் கொண்டு வர.. ச்சே.. ச்சே.. இங்க தானே இருந்தாள் ... அதற்குள் எங்கு போய் இருப்பாள்... இங்கு யாரும் வரவில்லையே தவறாக எதுவும் நடந்து இருக்க வாய்ப்பில்லை இல்லை என்று ஒரு மனது சொன்னாலும், ஏனோ லீனாவை காணோம் என்று பரிதவிப்போடு வண்டியை விட்டு கீழே இறங்க அவனுக்கு பின்னாடி வந்து நின்ற லீனா ஏதோ சொல்ல வருவதற்குள்... அவளை பார்த்த வேகத்தில் பதட்டத்தில் அவளின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தான்.

இதுவரை பிறந்ததில் இருந்து யாரும் ஒரு முறை கூட .. திட்டி கூட யாரும் காயப்படுத்தியது இல்லை ... அப்படி இருக்கையில் முதலில் அடி வாங்கி இருந்ததால் அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை...

ஆனால் அவன் அடித்த அடியின் வீரியத்தில் கன்னம் எரிச்சல் கொடுக்க... அதில் சுய நினைவுக்கு வந்தவள், அவனை திரும்பியும் பாராமல் வீட்டிற்குள் சென்று வீட்டின் மெயின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று அமைதியாக சோபாவில் அமர்ந்தாள் லீனா.

அப்போது பக்கத்து வீட்டில் இருந்து வந்த ஒரு சிறு பெண், அண்ணனா எங்க லீனாக்கா வீட்டுக்குள் போய்ட்டாங்களா?.. சரி இந்தாங்க .. நேற்றில் இருந்து இங்கு யாருமே வீட்டிற்கு வராததால், கேட்டில் பால் பாக்கெட் அப்படியே இருந்தது.. இரவு பாலை அம்மா காய்ச்சி வச்சுக்கிட்டாங்க. இது காலை பால் இதையும் காய்ச்சி வச்சு இருந்தாங்க, யாராவது வீட்டிற்கு வந்தால் குடுக்க சொல்லிட்டு இப்ப தான் மார்க்கெட் போனாங்க, அக்கா கிட்ட கொடுத்து விடுறீங்களா என்று லிபின் கையில் கொடுத்தாள்.

சரி டா நான் கொடுத்து விடுகிறேன் என்று, அந்த சிறு பெண்ணின் கையில் இருந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

மருத்துவமனையில்...

சனாதன் தொடர்ந்து உதயாவிற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க உதயாவின் போன் எடுக்காமலே இருந்தது... பதட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மறந்து உதயாவுக்கே மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து கொண்டு இருக்க....

அவனின் பதட்டத்தை உணர்ந்து கண் விழித்த சஞ்சனா என்ன ஆயிற்று சென்று என்று கேட்டாள்.

சஞ்சனா கண் விழித்து என்ன ஆயிற்று சனு என்று கேட்கவும் மேலும் பதட்டம் அடைந்தவன்... தடுமாற ஒன்றும் இல்லை சஞ்சு மா என்று சொல்லி விட்டு, நீ கொஞ்ச நேரம் ஓய்வெடு என்று சொல்லி அவளிடம் இருந்து நகர போனவனின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தியவள்... சனாதன் வழக்கமான சனா என்று அழைப்பு இல்லாமல் தன் அண்ணன் அழைப்பது போல் சஞ்சுமா என்று அழைக்கவும்... தன் அண்ணனுக்கு தான் ஏதோ ஆயிற்று என்று நினைத்தவள்..

சனு... உதயா அண்ணாவுக்கு என்ன ஆயிற்று என்று தவிப்போடு கேட்டாள் சஞ்சனா...

அவளின் தவிப்பில் உடலில் வலிகள் அதிகமாக... வலியோடு அவள் வேதனைப்படுவதை பார்த்தவன், அவளை இயல்பாக்கும் பொருட்டு..

ஓய் .. சனா!!.. என்ன ஏதோ உன் அண்ணனை நான், என் இடுப்பில் தான் அமர்ந்து இருப்பேன் என்று அடம் பிடித்தவனை, நான் வச்சிக்க மாட்டேன் என்று சொல்லி அவனை கீழே தள்ளி விட்டது போல்... என்னிடம் கொஸ்டின் கேட்கிறாய் என்று மொக்கையாக காமெடி பண்ண..

சனு உனக்கு காமெடி வரல.. தயவு செய்து உண்மையை சொல்லு உதயா அண்ணாவுக்கு என்ன ஆச்சு என்று பொறுமையாக கேட்டாள் சஞ்சனா.

மனதிற்குள் பாவி நான் மட்டும் என்ன,?.. இந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி காமெடி பண்ணனும் என்று phd ஆ.. முடித்து விட்டு வந்தேன்... என்று மனதிற்குள் புலம்பினாலும், விழியில் அவளிடம் பொய்யாக கோபப்படுவது போல் அவளை பார்த்த முறைத்துக் கொண்டு இருக்க...

அதே நேரம் உதயா...

உதயா பைக்கில் வந்த நால்வரையும் தன் பின்னே கவனத்தை திசை திருப்பி அழைத்துச் செல்ல... ஒரு கட்டத்தில் ஆளில்லாத இடத்தில் நான்கு பேருமே உதயாவை ரவுண்டு அப் பண்ணி விட்டார்கள்.

நான்கு பேருமே பைக்கில் இருந்து இறங்கி, உதயாவிடம் நெருங்கி வந்து ஓய்... என்ன டா.. மனசுல பெரிய ஹீரோ நினைப்பா... எங்களை டைவர்ட் பண்ணி கூட்டிட்டு வந்துட்டா, அவங்க ரெண்டு பேரும் சேஃபா இருந்துருவாங்களா.. எங்க ஆட்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சுற்றியும் நாங்கள் வாட்ச் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறோம் என்று உதயாவை பார்த்து அந்த நால்வரில் ஒருவன் சொல்லி ஏளனமாக சிரித்துக் கொண்டு இருக்க...

மற்றவர்களும் உதயாவை பார்த்து சிரித்து வைத்தனர்...

அவர்களின் சிரிப்பை பார்த்து விட்டு உதயா ஓகே காமெடி பண்ணி முடிச்சிட்டீங்களா?... இப்ப கொஞ்சம் வழியை விட்டீர்கள் என்றால் நான் என் வேலையை பார்த்துக் கொண்டு போவேன் என்று சொன்னான்.

பாரு... டா.. தொரைக்கு பயமே இல்லையாம்... என்ன மாமே... பாக்கப் பையன் அப்படியே அமுல் பேபி கணக்கா நல்லா செவ செவன்னு தான் இருக்கான் நம்ம லைட்டா தட்டினாலே பொளக்குனு இரத்தம் வந்துரும் போலயே... என்று ஒருத்தன் கிண்டல் பண்ண...

அட ...என்ன அண்ணாத்த.. உனக்கு தங்கச்சி இருக்கா... அதுக்கு மாப்பிள்ள பாக்குறியா... ஆனா பாரு எனக்கும் மூன்று தங்கச்சி இருக்கு.. அதனால இப்ப நான் யாரையும் கண்ணாலம் கட்டிக்கிற ஆசையில் இல்ல... அதனால என்ன இப்போ விட்டுடு. நீ வேற யாரையாவது போய் உனக்கு தோதா ஒரு மாப்பிள்ளைய பாரு ஓகே வா... என்று உதயாவும் அவர்களை பார்த்து கிண்டல் அடிக்க...

ஏய்... என்ன .. விட்டா ஓவரா பேசிக்கிட்டே போற என்று, பின்னால் இருந்தவன் கட்டையைக் கொண்டு உதயாவின் பின் மண்டையில் தாக்க வர...

நொடியில் உதயா தன் இடது காலை ஊன்றி வலது காலை பின்னே வந்தவனை பார்த்து தூக்கி ஒரு கிக் வைத்து வண்டியில் இருந்து கீழே இறங்கி நிற்க...

உதயா விடம் அடி வாங்கியவன் சில அடிகள் தூரம் தள்ளி போய் கீழே விழுந்தான்.

கீழ விழுந்தவனை பார்த்து விட்டு மற்ற மூன்று பேரும் ஒரே நேரத்தில் உதயாவை அடிக்க...

அவர்களின் நோக்கம் புரிந்து சட்டென்று தான் நின்ற இடத்தில் இருந்து விலகி நிற்க... மூன்று பேருமே தங்களுக்குள் மாறி மாறி அடித்துக் கொண்டனர்...

இப்போது கீழே விழுந்தவன் மறுபடியும் எழுந்து வந்து தன் சகாக்களோடு சேர்ந்து... உதயாவை தாக்கினான்.

நால்வரையும் விளையாட்டு போல் அவர்களை அடித்து பந்தாடிய உதயா... அவர்களை அடித்து துரத்தி விட்டு தன் வண்டியில் ஏறி அமர்ந்தவன்... தன்னுடைய மொபைல் போனை தேட வந்த எங்கே விழுந்ததோ என்று தெரியவில்லை.

அதை அவன் தேடிக் கொண்டு இருந்த சமயம் சரியாக...


இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top