• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
110
104. லிபின் லீனா இருவருக்கும் வரும் ஆபத்து...

அதை திசை திருப்பும் உதயா....

லட்சுமி மாவின் உடல்நிலை பற்றி சொல்லி விட்டு டாக்டர் சென்ற மறுநிமிடம் அனைவரும் மகிழ்வோடு இருந்தாலும் ... ஏனோ திடீரென்று சனாதனக்கு வியர்த்து கொட்ட நெஞ்சமெல்லாம் படபடவென்று அடித்துக் கொண்டது...

சற்றும் தாமதிக்காமல் சஞ்சனா அறையை நோக்கி ஓட... அங்கு ஏற்கனவே தன்னுடைய ஆட்கள் அங்கு மூன்று பேருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.

சற்றும் யோசிக்காமல் தன்னுடைய சைலன்ஸர் பொருந்திய கன்னை எடுத்தவன் ... அந்த மூன்று பேரையும் முழங்காலுக்கு கீழே சுட... மூன்று பேருமே அப்படியே கீழே விழுந்தனர்.

அடுத்து தன்னுடைய ஆட்களைப் பார்த்த சனாதன்,.. அடக்கப்பட்ட கோபத்துடன் இது ஹாஸ்பிடல்.. இது ஒன்னும் ப்ளே க்ரவுண்ட் கிடையாது... அதுவும் ஐ சி யு வார்டுக்குள்ளார சண்டை போட்டுட்டு இருக்கீங்க... ஏன் உங்க கிட்ட கன் இல்லையா... ஷூட் பண்ணுவதை விட்டு சின்ன பிள்ளைங்க மாதிரி இன்னும் பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க என்று திட்டி விட்டு... சீக்கிரம் இந்த தண்டங்களை தூக்கிக்கொண்டு இங்கிருந்து கிளம்புங்கள் என்று சொன்ன அடுத்த நொடி...

வேற எதுவும் பேசாமல் அவர்கள்.. அந்த மூன்று பேரையும் தூக்கிக்கொண்டு மாயமாய் மறைந்து இருந்தனர்.

இப்போது சஞ்சனாவை பார்க்க அவளை பெட்டோடு நகர்த்திக்கொண்டு கடத்த முயற்சித்து இருப்பார்கள் போல.. அவள் படுத்து இருந்த கட்டில் அலங்கோலமாக இருந்தது. கட்டிலை சரி செய்து அவளை சரியாக படுக்க வைத்து விட்டு டாக்டருக்கு அழைத்து அவளின் உடல் நிலையை பரிசோதிக்க சொன்னான் சனாதன்.

டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு சஞ்சனாவிற்கு ஒன்றும் பிரச்சனை இல்லை...

மருந்தின் வீரியம் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. நீங்கள் சொன்னதால் தான் இவர்களுக்கு நான் நர்ஸ் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணவில்லை.. நான் வேண்டும் என்றால் எங்களுடைய நர்ஸ் ஒருவரை இங்கேயே இருக்க சொல்லட்டுமா என்று கேட்டார்...

சாரி டாக்டர் இங்க நடந்த கலவரத்துக்கும், உங்களுடைய ஹாஸ்பிடலில் அமைதி இல்லாமல் செய்ததற்கும் மன்னித்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் ஒரு நர்ஸ் இங்கே அப்பாயின்மென்ட் பண்ணுங்க... இப்போது நடந்த தவறு கண்டிப்பாக இனி நடக்காது என்று சொல்லி விட்டு, அமைதியாக நின்றான் சனாதன்.

சார் உங்க சூழ்நிலை எனக்கு மிகவும் நன்றாக புரிகிறது.. நீங்கள் கவலைப்படாதீர்கள் இங்கு எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.. உங்கள் ஆட்கள் அமைதியாகவும் எந்த தொந்தரவும் இல்லாமல் தான் இருக்கிறார்கள். அதே சமயம் இங்கு இருப்பவர்களின் உயிர்களை காப்பாற்ற நீங்கள் போராடுகிறீர்கள் ஒரு விதத்தில் என்றால், நாங்களும் டாக்டர்ஸ் எங்கள் தொழிலும் உயிரை காப்பாற்றுவது தான், அதனால் நீங்கள் எதையும் நினைத்து கலங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு, சரி அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் எங்களுடைய நர்ஸ் ஒருவரை நானே அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.

இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்து கொள் டி... லட்சுமி அம்மா கண்விழித்து விட்டார்கள். அதுவும் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். அதேபோல் ஆர் கே விற்கும் ஒரு பிரச்சினையும் இல்லை அவனையும் நாளை மதியம் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் லக்ஷ்மி மாவை தான் இரண்டு நாட்கள் இருக்கணும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பரவாயில்லை நாம் வீட்டில் வைத்தே ட்ரீட்மெண்ட் செய்து கொள்வோம் நாளைக்கு மதியம் இங்கு இருந்து அனைவரும் சென்றுவிடலாம். நம் வீட்டில் இருந்தே ட்ரீட்மெண்ட் செய்து கொள்ளலாம் டாக்டர்ஸ் அனைவரையும் அங்கு வர வைத்துக் கொள்ளலாம் என்று சஞ்சனாவின் தலையை வருடிக் கொண்டே.. அவள் அருகில் சேரில் உட்கார்ந்தவாறு அவளின் தலைக்கு அருகில் தன் தலையை சாய்த்து அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான் சனாதன்.

அதே நேரம் ஷாப்பிங் மாலுக்கு லிபின் வண்டியை நிறுத்த...

லிபி.. இங்கே வேண்டாம் நாமும் வீட்டிற்கே சென்று தேவையான பொருட்களை எடுத்து வரலாம் என்று சொன்னாள் லீனா.

அவனும் சரி என்று சொல்லி வண்டியை லீனாவிடம் வீட்டுக்கு எப்படி போக வேண்டும் என்று வழி சொல் என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்கு சென்றான்...

அவர்கள் வீடு இருக்கு பகுதிக்கு அருகில் வரும் சமயம் இரண்டு பேர் அவர்களது வண்டியை மறித்தார்கள்....

லீனாவோ பயத்தில் லிபின் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

வந்தவர்கள் ஏதோ அட்ரஸ் பற்றி கேட்க...

சாரிங்க அண்ணா, நாங்களும் ஏரியாவுக்கு புதுசு தான் எங்களுக்கும் தெரியாது... நீங்க வேற யாரிடமாவது கேளுங்கள் என்று சொல்லி விட்டு, பைக்கை ஸ்டார்ட் பண்ண....

ஆனால் அந்த இரண்டு பேரும் வழி விடாமல், ஆமாம் ஏரியாவுக்கு புதுசு என்றால் நீ மட்டும் எப்படி போவ.. என்று அவர்களிடம் வம்பு வளர்ப்பது போல் பிரச்சனை செய்ய...

அவர்களுடைய நோக்கம் என்னவென்று தெரிந்தாலும் லீனா மிகவும் பயப்படுவதை நினைத்து ஒதுங்கி போக நினைக்க ஆனால் அவர்களோ அவனுடைய வண்டியில் இருந்து சாவியை எடுக்க முயற்சி செய்ய, நொடியில் அதை புரிந்து கொண்டவன் வண்டியை ஆப் செய்து கீயை தன் பாக்கெட்டில் வைத்து விட்டு கைகளை கட்டி கொண்டு அப்படியே பைக்கில் அமர்ந்து இருந்தான் லிபின்.

லீனாவிற்கு பயத்தில் மயக்கம் வருவது போல் இருக்க... அவள் பயத்தில் மயங்கி சரிய போகும் சமயம், சரியாக அங்கு வந்து உதயா பைக்கை அவர்கள் அருகில் நிறுத்தி ஹெல்மெட்டை கழட்டினான்.

வண்டி வேகமாக வந்து ... தங்கள் அருகில் நின்ற அதிர்வில், மயக்கம் தெளிந்து வண்டியை பார்க்க.. அதில் தன் அண்ணன் இருப்பதையும் பார்த்தவுடன் தைரியமாக இருந்தாள் லீனா...

ஆனாலும் பதட்டத்தில் கண் கலங்கியது அவளுக்கு....

வந்த உதயாவோ... அங்கு இருந்த நபர்களை கண்டு கொள்ளாமல் ஏன் லிபின்.. இங்கேயே நின்று கொண்டு இருக்கிறீர்கள். சீக்கிரமாக வாங்க நேரம் ஆகிவிட்டது என்று சொன்னான்.

வழியை மறைத்தவர்களோ.. அட இங்கே பாரு... டா... பெரிய பிஸ்தா வந்துட்டாரு... என்று இங்கே நிக்கிற நாங்க உன் கண்ணுக்கு தெரியல அப்படித்தானே... என்று அவர்கள் நக்கல் தொணியில் கேட்க,

உதயாவோ அதே தான் என்பது போல், லிபின் சீக்கிரம் வண்டியை ஸ்டார்ட் பண்ணு என்று சொன்னாலும்.. இருவரும் பார்வையிலேயே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்ட...

லிபினும் உதயா சொன்னதை புரிந்து கொண்டு, ஆமாங்க மாமா என்னன்னு தெரியல இந்த இடம் வந்த உடனே தானா வேண்டி நின்றுச்சு, இதோ மறுபடியும் வண்டியை ஸ்டார்ட் பண்ண முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொல்லி, சாவியை போட்டு ஸ்டார்ட் பண்ண வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று சொன்னான்.

சரி சீக்கிரம் வாருங்கள் என்று சொல்லி விட்டு உதயா லிவிங் இடம் பேசிக் கொண்டிருப்பது போல் உரையாடிக் கொண்டே அவர்களின் கவனத்தை சிதற செய்து, தங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்ய... நொடியில் இருவருமே வண்டியை வேகமாக பெருகி அவர்களை இழுத்து தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் இருவரின் வண்டியையும் பின் தொடர்ந்து நான்கு வண்டிகள் வேகமாக வந்தது...

லிபின் அடுத்த தெருவில் தான் நம்ம வீடு இருக்கு வேகமாக லீனாவை அங்கு சென்று இறக்கி விட்டு... வர வேண்டாம் அவளுக்கு துணையாக அங்கேயே இரு.. தயவு செய்து வந்து விடாதே இங்கு என்ன நடந்தாலும் கவலைப்படாதே.. முதலில் லீனாவை பார்த்துக் கொள் அவள் பயந்தவள் என்று சத்தமாக சொல்லிக் கொண்டே... பின்னாடி வந்த நான்கு பைக்கில் வந்தவர்களை ஒரு திருப்பத்தில் தன் பக்கம் கவனத்தை திசை திருப்பி அவர்களை அழைத்துக் கொண்டு வேறொரு வழியில் சென்றான்.

லீனாவோ எதையும் உணராது வண்டி வேகமாக செல்ல ஆரம்பிக்கவும் லிபிணை இருக கட்டிப்பிடித்துக் கொண்டு கண்களை மூடியவாறு அமர்ந்து இருந்தாள்.

அவர்களிடம் இருந்து தப்பித்து வரும் வரை அவனும் லீனாவின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், வேகமாக வந்தவன் உதயா சொன்ன பாதையில் வந்து பிறகு, எது வீடு என்று தெரியாமல் லீனாவை பற்றி அப்பொழுது தான் சிந்திக்க, அவளோ அவளை கட்டி பிடித்துக் கொண்டு அவனோடு அவன் முதுகாகவே ஒன்றி போய் அமர்ந்து இருந்தாள்.

வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு.... லீனா என்று கூப்பிட்டான். ஆனால் அவளோ கண்களை திறக்காமல் அவனை இறுதி அணைத்தவாறு அமைதியாக இருக்க... மறுபடியும் லீனா என்ற கூப்பிட அப்போது தான் கவனித்தான்.. தன் முதுகில் மோதும் சூடான காற்றை.. அவளின் இதழ்கள் தன் முதுகில் ஏதோ உரசிக் கொண்டு இருப்பது போல் உணர, அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ள அமைதியாக அவளை கவனிக்க,

அவளோ மிக மிக மெல்லிய குரலில் ஜெய் ஆஞ்சநேயா ஸ்ரீ ராம ஜெயம் ஜெய ஆஞ்சநேயா ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்...

அவளை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவன்... இப்போது 10 மணிக்கு மேல் ஆவதால்.. அந்தப் பகுதி ரெசிடென்சியல் ஏரியாவாக இருக்கவும் அனைவரும் அவரவர் வேலைகளுக்கு செல்ல, அங்கு அந்த பகலிலும் அந்த சாலை வெறிச்சோடி கிடந்தது...

லிபின் அந்த சாலையை முழுவதும் ஒரு முறை ஆராய்ச்சி செய்தவன் சரி மிதுனாவிற்கு கால் செய்யலாம் என்று நினைத்து மிதுனாவிற்கு ஃபோன் செய்ய, அவளுடைய போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

சரி புவனாவிற்கு கால் பண்ணலாம் என்று போன் டயல் செய்ய போகும் சமயம்.. லீனாவே அப்பொழுது தான் அவனிடம் இருந்து பிரிந்து... மெதுவாக தலையை நிவர்த்தி பார்த்தாள்.

அவள் நார்மலாக ஆகிவிட்டாள் என்று தெரிந்து கொண்டவன்... புவனாவிற்கு கால் செய்யாமல் .. என்ன மேடம் உங்கள் வீடு எது என்று சொல்கிறீர்களா?.. என கேலியாக கேட்டான்.

அவளோ திடீரென்று நடந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்று யோசிக்க முடியாமல், ஒரு நொடி தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்த்து விட்டு, அச்சச்சோ சாரி லிபின் திடீரென்று நீங்கள் வேகமாக வண்டியை ஓட்டவும் பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேனா அது தான் என்ன நடந்தது என்று தெரியவில்லை...

ஆமாம் என்ன நடந்தது என்று கேட்டாள்... ஆனால் லீனா ஒன்றை மறந்துவிட்டாளா இல்லை அவளுக்கு அது தப்பாக தெரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தோளில் தன் முகத்தை வைத்து தான் பேசிக் கொண்டு இருந்தாள்.

லிபினும் அவளின் முகமாற்றங்களை வண்டியின் கண்ணாடியில் பார்த்து கொண்டே..

ஓஓஓ.... அதுவா அது வந்து சொல்லனுமா!!??. சரி சொல்றேன் ஆனா அதை கொஞ்சம் வீட்ல போய்.. சோபாவில் கூட வேண்டாம் தரையில் உட்கார்ந்து கொண்டு பொறுமையாக பேசலாமா என்று கேட்க...

அப்போது தான் சுற்றமும் உரைத்து... அச்சச்சோ ராமா‌... ராமா... என்று சொல்லிக்கொண்டே அவனை விட்டு விலகி வண்டியில் இருந்து இறங்கி அவனை பார்க்காமல் திரும்பி நின்றாள்.

இப்போது வண்டியை நன்றாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அவளின் பின்புறத்தில் அருகில் சென்று சொல்லவா... வேண்டாமா ... என்று கேட்டான் லிபின்.

இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top