- Thread Author
- #1
103. மெய்யை புரிந்து கொள்ளும் கர்ணாவின் காதல்...
சனாதனனுக்கு வரும் பதட்டம் எதனால்..??..
மருத்துவமனையில் இருந்து கேபில் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் ஸ்டாண்ட் வரை வந்தவர்கள் அங்கு இருந்து இறங்கி, இருவரும் இயல்பாகவே நடந்து சென்று தங்கள் வீட்டிற்குள் செல்ல ... சிலர் அங்கங்கே நின்று தங்களை கவனித்தாலும், அவர்கள் தங்களுடைய ஆட்களா?.. இல்லை எதிரியின் ஆட்களாய் என்று தெரியாமல் இயல்பாகவே அவர்கள் அவர்களை கடந்து சென்று வீட்டிற்குள் சென்றனர்...
உள்ளே சென்று கதவை சாத்தி விட்டு இருவருமே கதவிலேயே நின்று தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள...
இருவருக்குமே எப்படி உணர்கிறோம் என்று சொல்ல தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
முதலில் பயத்தில் சிறிது நேரம் நின்று இருந்தாலும்.. நேரம் ஆக இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவி கொள்ள..
ஏய் .. கொலைகாரி !!!... என் உயிரைக் கொல்லாமல் கொல்பவளே!!... தயவு செய்து சொல்லு டி ... அத்தான் நான் உன்னை காதலிக்கிறேன்.. என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேளடி என்னுடைய பேசா மடந்தையே என்று தன்னவளின் விழிகளை பார்த்து தன் விழியால் தன் ஏக்கத்தை சொல்ல...
அழகியோ இதற்கு மேல் தன்னால் முடியாது என்று... தன் அத்தானை இறுக கட்டி பிடித்து கொண்டு.... கதறி அழுதாள்...
எதற்கு அழுகிறாள் என்று ஓரளவுக்கு புரிந்தாலும், அதை தன் வாயால் கேட்கக் கூடாது என்பதை உறுதியாக மனதில் வைத்துக் கொண்டு, அவள் அழுது முடித்த பிறகு அவளாகவே அவள் மனதில் உள்ளதை பேசட்டும் என்று அமைதியாக, அவளை அணைத்து ஆறுதலாக அவளின் முதுகை தட்டி கொடுத்துக்கொண்டு நின்றான் கர்ணா.
சிறிது நேரம் கதறி அழுதவள், மெல்ல தன் அழுகையை நிறுத்தி அழுத விழிகளோட கர்ணாவை பார்க்க...
அவனோ தனது வலது புருவத்தை மட்டும் உயர்த்தி என்ன என்று கேட்க..
அந்தப் புருவ சுழிப்பில் மதி மயங்கியவள்... தன் விழி நீரை துடைக்கும் எண்ணம் இல்லாமல் ... தன் அத்தானின் விழி புருவங்களுக்கு முத்தமிட்டாள் அழகி.
தன்னவளிடம் இருந்து கிடைக்கும் முதல் முத்தம் அதுவும் காதலனின் புருவங்களுக்கு... சொல்லவும் வேண்டுமா கர்ணாவின் நிலைமையோ அப்படியே அந்தரத்தில் சிறகில்லாமல் பறப்பது போல் இருந்தது...
இரண்டு நிமிடங்கள் அப்படியே அந்த அனுபவத்தை கண்களை மூடி அவளையும் அணைத்தபடியே .. தனக்குள் உள்வாங்கியவன்... சிறிது நேரம் கழித்து அழகியை தன்னில் இருந்து விலக்கிப் பார்க்க ...
அவளோ அவனின் நெஞ்சுக்குள் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அத்தான் நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்... ஆனால் அதற்கு முன்பு நம் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் சமைக்கணும். அனைவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள் அதற்கு தகுந்த மாதிரி சாப்பாடு செய்து கொண்டு செல்ல வேண்டும். அதனால் தயவு செய்து உங்களுடைய காதல் பார்வையை தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, இப்பொழுது என்னுடன் வந்து சமையல் கட்டில் எனக்கு உதவி செய்யுங்கள்...
பிறகு இங்கு இருந்து மருத்துவமனைக்கு சென்ற பிறகு... அனைவரும் சாப்பிட்டதற்கு பிறகு நாம் கொஞ்சம் தனிமையாக இருந்து பேசிக் கொள்வோம் இப்போது தயவு செய்து வா அத்தான் என்று சொல்லி கொண்டு கிச்சனுக்கு சென்றாள்.
போகும் அவளை பார்த்தவன் மெய் ஒரு நிமிஷம் நில் என்று சொன்னான்.
கர்ணாவின் மெய் என்று அழைப்பில் உடல் முழுவதும் சிலிர்க்க.. அத்தான் நாம் இருவரும் தனிமையில் பேசி முடிக்கும் வரை நீ என்னை அழகி என்றே சொல் தவறில்லை என்று குனிந்த தலை நிமிராமல் சொல்லி விட்டு நின்றாள் ... ஆனால் எந்த பதிலும் தனக்கு வராமல் இருப்பதால், என்ன ஆயிற்று இந்த அத்தானுக்கு என்று நினைத்து தலை நிமிர்ந்து பார்க்க கர்ணாவோ அவள் எதிரில் இல்லவே இல்லை.
ஒரு நிமிடம் தான் எப்படி உணர்கிறோம் என்று கூட உணர முடியாமல் தனக்குத்தானே தன்னை திட்டிக் கொண்டவள்... நான் கூட அந்த மார்கான் தான் என்னை மெய்யென்று அழைத்தான் என்று நினைத்து விட்டேன்... என சலித்தவளாக உள்ளே செல்ல நினைக்க அவளின் மனசாட்சியோ..
ஏ அழகி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை அவர் தான்.. உன்னோட மனதையும் விருப்பத்தையும் அவரிடம் சொல்லாமல் மெய் என்று அழைக்க மாட்டார் என்ற வைராக்கியத்தோடு இருப்பவரிடம் அந்த அழைப்பை நீ எப்படி எதிர்பார்க்கலாம்... மக்கு மக்கு நீ மக்காக இருந்து கொண்டு அவரை மாகான் என்று சொல்கிறாய் என்று அவளுக்கு அவளே மனசாட்சியாக பேசிக் கொள்ள...
ஆமா இது ஒன்னு தான் குறைச்சல் சமையல் கட்டுக்கு வந்து வேலை செய்ய ஹெல்ப் பண்ணுன்னு சொன்னேன் இல்ல எங்க போனாரு இப்ப சொல்லுடி மனசாட்சி என்று அவளை திட்டிக்கொண்டே திரும்ப தன் அத்தான் நெஞ்சில் மோதி நின்றாள் அழகி..
பொண்டாட்டி இட்லிக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன். பாத்திரத்தில் துணி எல்லாம் போட்டு வைத்து விட்டேன். மாவு மட்டும் எடுத்து ஊத்தி வை... பிறகு பூண்டு சட்னி செய்து கொள்ளலாம்... நான் போய் பூண்டு உரிக்கிறேன் சீக்கிரமா கனவு கண்டு கொண்டு இருக்காமல் வந்து சேரு அழகி என்று சொல்லி விட்டு சென்றான்.
ஐயோ இந்த அத்தான் முதலில் என்னை பொண்டாட்டி தானே கூப்பிட்டது. அப்புறம் என்ன முடிக்கும் போது அழகக சொல்லிட்டு போகுது... முதலில் சொன்ன பொண்டாட்டி பொய் என்றால் கடைசியில் சொன்ன அழகி உண்மை அத்தான் என்னடா நீ ஃபாரின்ல இருந்து வந்து என்னை இப்படி புலம்பு வச்சிட்டியே .. நான் உண்டு என் வேலை உண்டு சரோமா உண்டு என்று இருந்தேன்... மாயக்கார வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே என்னை ஏதேதோ செய்து விட்டாய் என்று புலம்பினாலும், மறக்காமல் கர்ணா சொன்ன வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்..
அவளின் புலம்பல்களோடு இட்லி ஊற்றும் அழகையும், மற்ற வேலைகளை செய்யும் அழகையும் பார்த்துக் கொண்டே ... பூண்டுகளை உரித்து கொண்டு இருந்தான் கர்ணா.
பாவம் அங்கு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு எல்லாம் நல்லபடியாக சாப்பாடு வந்து சேருமா என்று தான் தெரியவில்லை...
ஹலோ வாயும்.. மனசும் எப்படி புலம்பினாலும் கை தானாக செய்யும் வேலையை... செய்யும் உணவும் அதே மாதிரி நல்ல பக்குவத்தில் வரும்.. நாங்கள் சமையலில் கைதேர்ந்தவர்கள் ஆக்கும் என்று சொல்லிக்கொண்டு வேலையை செய்தால் அழகி...
ஏய் யார் கிட்ட டி பேசுற சமையல் வேலையை பாரு டி என்று கர்ணா சொல்ல...
ம்ம்... இப்போ உரிமையா பொண்டாட்டி மாதிரி வாடி போடின்னு பேசினது நீங்க தான் அப்படின்னு எனக்கு தெரிஞ்சாலும், நான் உங்க கிட்ட கேட்டாலும் நீங்க இல்லையே நான் அழகி.. அழகின்னு மூச்சிக்கு முன்னூறு தடவ சொன்னேன் அழகின்னு தான் சத்தியம் பண்ணி சொல்லப்போற.. அது தானே அத்தான். என்னமோ பண்ணித் தொலை என்று பதில் சொல்லிக் கொண்டு.. வெந்த இட்லிகளை எடுத்து ஹாட் பேக்கில் கொட்டினாள் கர்ணாவின் மெய்.
ஐயோ பார்ட்டி ரொம்ப சூடா ஆயிடுச்சு டா கர்ணா.. போதும் இதோடு விளையாட்டை நிப்பாட்டிக்கொள். சமத்தா சமையல் பண்ணி பத்ரமா மருத்துவமனைக்கு போனதுக்கு பிறகு அங்கு வச்சு பேசிக்கலாம் அதுவரைக்கும் உங்களிடம் வாய் கொடுத்து வாங்கி கட்டிக் கொள்ளாதே என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் அமைதியாக உரித்த பூண்டுகளை எடுத்து அழகி இடம் கொண்டு போய் கொடுத்தான்.
அவளும் அதை அமைதியாக வாங்கிக் கொண்டு, மதிய சமையலுக்கான காய்கறிகளை அவன் கையில் கொடுத்து எந்த பக்குவத்தில் வெட்ட வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தாள்.
அவனும் அமைதியாக வாங்கிக் கொண்டு சென்றான்... மெய்யின் கர்ணாவாக...
அதேபோல் மருத்துவமனையில் இருந்து லீனா லிவிங் இருவரும் மற்றவர்களுக்கான ஒரே வாங்குவதற்காக வெளியில் செல்ல... லீனாவின் நண்பன் வினய் தன்னுடைய பைக்கை கொண்டு வந்து கொடுத்தான்.
அதை நன்றி சொல்லி வாங்கிக் கொண்டவர்கள் இருவரும் இணைந்து மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து சாலையில் பயணிக்க... அவர்கள் இருவரையும் தொடர்ந்து மற்றொரு பைக்கில் உதயா ஹெல்மெட் அணிந்து அவர்களை பாலோ செய்தான் சனாதனின் அறிவுரைப்படி...
சனாதனும், மிதுனும் மருத்துவமனையில் இருந்து எப்பொழுது வீட்டிற்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டு இருக்க..
வேகமாக வந்த புவனா மாமா லஷ்மி மா கண் விழித்து விட்டார்கள் என்று சொன்னாள்.
ஓஓ.. ரொம்ப சந்தோஷம் டாக்டரிடம் சொல்லி விட்டாயா என்று கேட்டுக்கொண்டு... அந்த அறையை நோக்கி வேகமாக செல்ல... கால் இடறி கீழே விழுந்தான் சனாதன்.
புவனாவும் மிதுனம் பதறிப் போய் அவனுக்கு கை தாங்கலாக தூக்கிவிட...
இல்லை .. இல்லை.. அத்தை கண்விழித்து விட்டார்கள் என்று சொல்லவும் பதட்டத்தில் எழவும் கால் தடுமாறி விட்டது அவ்வளவு தான் என்று தன்னை சமாதானப்படுத்தி, மற்றவர்களையும் சமாதானப்படுத்தியவன்...
இப்போது வேகமாக லட்சுமி மாவின் அறைக்கு சென்றார்கள்.
அங்கே டாக்டர் வந்து பரிசோதித்து கொண்டு இருந்தார்கள்.
இப்போது ரிஷ்வந்த், சரண் என்று அனைவருமே அறையின் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள்.
கவிக்கு கால் வலி எடுப்பது போல் இருக்கவும் .. தயங்கித் தாங்கி தாங்கி நின்று கொண்டு இருந்தவளைப் பார்த்த ருத்ரா...
சனாதனிடம் சொல்லி விட்டு கவியை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்று படுக்க வைத்தான்.
ஐயோ மாமா எல்லோரும் இருக்கும் போது எனக்கு என்ன வந்தது என்று பொசுக்கு பொசுக்குன்னு என்னை தூக்கி கொண்டு ... நீங்க பேசாம வரீங்க எனக்கு வெக்கமா இருக்கு.. என்று சொன்னவள்...
பாவம் லட்சுமி அம்மாவிற்கு எப்படி இருக்கு என்று தெரியவில்லை. போய் பார்த்து என்ன நிலவரம் என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று சொன்னாள்.
ஏய் நான் உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் இந்த இடம் சரி வராது, சரி நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கொள்வோம். இரு நான் போய் அங்கு என்ன நிலவரம் என்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி விட்டு வெளியே வந்து நிராகரிக் லட்சுமி அம்மாவின் அறைக்கு முன்பு வந்து நின்றான் ருத்ரா.
சரியாக டாக்டரும் வெளியில் வந்து அவர்களுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை. வயதின் காரணமாகவும் அவர்களுக்கு மயக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. அதேபோல் அவர்களுக்கு கொடுத்த மயக்கம் மருந்து அவர்களது உடம்பில் முழுவதும் பரவி இருந்து இருக்கிறது இப்ப தொடர்ந்து ட்ரீட்மெண்டில் அது குறைவாக... இனி அவர் நலமாக இருப்பார்.. ஒரு இரண்டு நாட்கள் கண்டிப்பாக இங்கேயே இவர்கள் இங்க தான் இருக்க வேண்டும்.. பிறகு சில டெஸ்ட்கள் எழுதி தருகிறேன் அதை எடுத்து, அதன் ரிசல்ட் பார்த்து விட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் அதில் எதுவும் பிரச்சனை இருக்காது என்று தான் நான் நினைக்கிறேன் பயப்படாதீர்கள் என்று சொல்லி விட்டு சொல்ல...
டாக்டர் சென்ற மறுநிமிடம் அனைவரும் மகிழ்வோடு இருந்தாலும் ... ஏனோ திடீரென்று சனாதனக்கு வியர்த்து
கொட்ட நெஞ்சமெல்லாம் படபடவென்று அடித்துக் கொண்டது...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...