- Thread Author
- #1
102. அனைவரையும் பற்றி அறிந்து கொள்ளும் தீபா....
அழகியின் கண்ணீர் எதனால்....
சனாதன், ருத்ரா இருவரையும் தேடி வந்த மிதுன்... ஒரு பெண்ணை இருவரும் கட்டி பிடித்துக் கொண்டு நிற்க என்ன ஆச்சு இவனுகளுக்கு..
இப்படி பப்ளிக்கா ஒரு பொண்ண கட்டி புடிச்சிட்டு நிக்கிறானுங்க... என்று நினைத்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்று அவர்களை தட்டி கூப்பிட..
மூன்று பேருமே கண்கள் கலங்கிய நிலையில் நிற்க...
ஏய் என்னாச்சுப்பா ஏன் அழுகிறீர்கள்... டேய் யாரு டா?.. இந்த பெண்...?.. ஏன் டா அழுகிறாள்.. ?.. என்று கேட்ட மிதுன்
உங்களுக்கு தெரியுமா ஆர்கே வை இங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க என்று பதட்டத்தில் பேச...!!..
மூன்று பேருமே கண்களைத் துடைத்துக்கொண்டு.... மிதுனை பார்க்க...
அவர்களின் இருவரின் சாயலிலும் மிதுன் இருக்க.. அண்ணா என்று காலையில் தான் வீட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து இப்ப இங்கு வந்து இவர்களுடன் பேசி உரையாடியது வரை அனைத்தையும் சொன்னாள் தீபா.
ஓஓஓ... இவ்வளவு நடந்து இருக்கிறதா சரி வாங்க, ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க. வாங்க என்று மூவரையும் அழைத்துக் கொண்டு மிதுன் சென்றான்.
இவர்கள் மேலே போக கர்ணா அழகியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல வெளியில் வந்தான்.
இருவருக்கும் தீபாவை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு ஆர்கே வின் ரிசல்ட் தெரிவதற்காக வெளியில் காத்து இருந்தனர்.
கர்ணா, அழகி நீங்கள் இருவரும் நம் வீட்டிற்கு இங்கே இருந்து ஆட்டோ இல்லனா கேப் புக் பண்ணி போங்க. நம்ம வண்டியில் போக வேண்டாம்... என்று சொன்னான் சனாதன்.
ஏன் தனா, இப்போது இவர்கள் இருவரையும் இப்படி அனுப்புவது சரியாகும் என்று மிதுன் கேட்டான்.
சரியா இருக்கும் மிதுன்... நம்ம ஆட்கள் வெளியில் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் கவலை வேண்டாம். அப்புறம் ஏன் நம்ம வண்டியில் போக வேண்டாம் என்று சொல்கிறாய் என்று ருத்ரா கேட்டான்.
அது வந்து நம்ம ரொம்ப பர்ஃபெக்ட்டாவும் இருக்கோம் என்றும் நினைக்க கூடாது... எதிராளி எந்த அளவுக்கு நம்மை வாட்ச் பண்ணுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் என் கவனம் நம் மீது மட்டும் தான் இருக்கிறதா இல்லை நம் ஒவ்வொருவரையும் எப்படி இருந்தாலும் கவனிக்கிறார்களா என்று தெரிய வேண்டும் என்று சொன்னான் சனாதன்.
அப்ப கர்ணா மட்டும் வீட்டிற்கு போகட்டும்.. அழகி இங்கே இருக்கட்டுமே என்று சொன்னான் மிதுன்.
அதற்கு சனாதன் பதில் சொல்வதற்கு முன்பே அழகி, இல்லை மாமா நான் போயிட்டு வருகிறேன். வீட்டுக்கு சென்று மதிய உணவு அனைவருக்கும் சமைத்து, அனைவருக்கும் வேறு உடையும் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னாள் அழகி.
சரி அழகி நீ சமைச்சு விட்டு, நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு மட்டும் டிரஸ் எடுத்துட்டு வா. மற்றவர்கள் அனைவருக்கும் லிபின், லீனா இருவரையும் அனுப்பி வைக்கிறேன் என்று சனாதன் சொன்னான்.
இருவரும் சரி என்று விட்டு கிளம்ப...
டாக்டரும் அதே நேரம் வெளியில் வந்தார்.
டாக்டர் வந்ததும்... தீபா தான் வேகமாக முன்னே சென்று டாக்டர் இப்ப எப்படி இருக்காங்க அவரு... உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே... அவர் முகம் முழுவதும் ரத்தமாக இருந்தது... அடி ரொம்ப பலமாக இருக்கா என்று பட படவென்று கேள்விகளை கேட்டு கொண்டே இருக்க...
டாக்டர் அமைதியான இளம் புன்னகையோடு... ரிலாக்ஸாக இரு மா... உன்னை அட்மிட் செய்து பிரஷர் செக் பண்ண சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறதே என்று டாக்டர் சொல்லவும் தான்...
தீபாவும் லேசா அசடு வழிய சிரித்துக் கொண்டே அமைதியாக நின்றாள்.
மற்றவர்களும் தீபாவை பார்த்து சிரித்தாலும் அதே நேரம்... டாக்டரின் முகத்தில் இருந்த இளம் புன்னகையும்.. பெரிதாக எதுவும் இல்லை என்று தோன்ற,டாக்டர் என்ன சொல்ல போகிறார் என்று கவனித்தனர்.
சரியாக அந்த நேரம் கவியும் .. ருத்ரா சென்று ரொம்ப நேரம் ஆகியும் வராததால் மெதுவாக எழுந்து நடந்து வெளியில் வந்தாள்.. அனைவரும் டாக்டர் முன்பு நிக்க மெதுவாக அவளும் வந்து சேர்ந்தாள்.
இவருக்கு நேற்று ஈவினிங் டைமிங் அடிபட்டு இருக்க வேண்டும்... இவருக்கு அடிபட்ட வேகத்தில் நல்ல மயக்கத்தில் இருந்து இருக்கிறார். அதே மாதிரி ஏதோ மரத்தில் நல்ல வலுவாக மோதி இருக்கிறார்.
கண்டிப்பாக அவராக மோதி இருக்க மாட்டார். ஏதோ கை கலப்பு நடந்து இருக்கிறது ... அதில் இவரை யாரோ பிடித்து தள்ளி விட்டு இருக்கிறார்கள்.
அதில் மயக்கமானவர் தான் வேறு ஒன்றும் இல்லை மற்றபடி உடலில் சில இடங்களில் சண்டை போட்ட போது ஏற்பட்ட சில காயங்கள் தானே தவிர அடி ஒன்று பலமாக இல்லை இன்ஜெக்ஷன் போட்டு இருக்கோம்.. நேற்றில் மாலையில் இருந்து சரியாக சாப்பிடாதது, ரத்தம் வெளியேறியது அதனால் சோர்வாக இருக்கிறார். டிரிப்ஸ் போட்டு இருக்கோம் எப்படியும் ஒரு, அறை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடுவார்.. பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் நாளைக்கு மதியம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் அவரை என்று சொல்லி விட்டு டாக்டர் சென்றார்.
டாக்டர் சென்றதும் அப்பாடா இப்ப தான் அண்ணாஸ் எனக்கு பதட்டமே குறைவாக இருக்கு... அவர் முகம் முழுவதும் இருந்த ரத்தத்தை பார்த்ததில் இருந்து, எனக்கு மயக்கம் வராமல் இருந்தது பெரிய ஆச்சரியம் தான்... என்னால் இப்பதான் இயல்பாகவே மூச்சு விட முடிகிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் .. ஐயோ அண்ணா அங்க பாருங்க என்று வேகமாக கத்தினாள்...
அவளை ரசித்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்த மூன்று பெயருமே திடீரென்று அவள் எங்கே பார்க்க சொல்கிறாள் என்று திரும்பி பார்க்க.. லட்சுமி அம்மாவின் அறையில் இருந்து லிபின், லீனா இருவரும் வந்து கொண்டு இருந்தார்கள்...
அதில் லிபினை பார்த்து விட்டு தான், அவள் கத்துகிறாள் என்று புரிந்து கொண்டவர்கள், மென்மையாக சிரிக்க, ஏய் வாலு அது கர்ணா இல்லை... அது லிபின் இருவரும் இரட்டை பிறவிகள் என்று சொன்னான் சனாதன்.
ஓஹோ ... அப்படியா ..!!.. அதானே இப்போது தானே இந்த பக்கம் இறங்கி போனார் ஒரு பெண்ணோடு, அதற்குள் இந்த பக்கம் இருந்து வேற ஒரு பெண்ணோடு வருகிறாரே என்று பயந்துவிட்டேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே...
அவர்கள் அருகில் வந்தவர்கள் என்ன அண்ணா எதற்கு வர சொன்னீர்கள் என்று கேட்டான் லிபின்.
லிபின் கிட்டயும் இங்கு நடந்த விஷயங்களை சுருக்கமாக சொல்லி விட்டு, தீபாவை பற்றியும் சொல்லி.. இனி இவள் நம் தங்கை என்று சொன்னான் மிதுன்.
தீபாவோ அப்ப பஞ்சு பாண்டவர்களாக எனக்கு அண்ணன் ஓகே ... ஓகே.. அப்ப பாஞ்சாலி அண்ணி யாரு என்று கேட்க...
ஏய் வாலு இங்க நிக்கிறானே இவன் மட்டும் தான் இன்னும் கமிட் ஆகல... மத்த நாலு பேரும் கமிட்டட் தான். அந்த நாலு பேரில் எனக்கு வாய்த்ததும் இதோ தனாவிற்கு வாய்த்த இருவரும் வந்தார்கள் என்றால் உன்னை ஆய்ந்து விடுவார்கள்... என்று மிதுன் சொல்லும் போது... ஏனோ லீனாவும் லிபினும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஓகே அண்ணா.. அப்ப இங்கே நிற்கும் இந்த ஒட்டடை குச்சி யாரு என்று கவியை பார்த்து கேட்க...
ம்ம்... வாடி யம்மா நாத்தனாரே .. நான் தான் உனக்கு மூன்றாவது அண்ணி கவிப்பிரியா ருத்ர தேவ்...
ஓஓஓஓ... ஓகே ஓகே... ஆமாம் ருது அண்ணா... ஆமா என்ன இவங்க இப்படி சீக்கு கோழி மாதிரி இருக்காங்க... கொஞ்சம் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் எங்கேயாவது கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கலாம் இல்ல என்று கிண்டல் செய்ய...
அந்த நிறம் சனாதனுக்கு போன் வரவும் எக்ஸ்க்யூஸ் என்று சொல்லி விட்டு அவர்களிடம் இருந்து தள்ளி வந்து போன் பேசினான்.
அதேபோல் ஆர் கே கண்விழிக்கவும் இன்னும் நேரம் இருக்கிறது .. அதற்குள் மற்றவர்களை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி, அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்ததோடு... அழகியின் வாழ்க்கையை மற்றவர்கள் அனைவர் பற்றியும் சுருக்கமாக சொல்லி முடித்தான் மிதுன்...
இன்னும் சில நாட்களில் அழகி பற்றியும் சொல்லி இருக்கலாம் என்று வேதனைப்படும் நாள்... அதுவும் மிக விரைவில் வரப்போகிறது என்று தெரிந்து இருந்தால்... பாவம் தீபாவிடம் அழகியை பற்றியும் இப்பவே சொல்லி இருந்து இருப்பானோ என்னவோ!!???... காலம் யார் யாருக்கு என்ன வைத்து இருக்கிறது என்று யார் அறிவார்?..
சனாதன் போன் பேசி விட்டு சஞ்சனாவை பார்க்க போக அவளோ மருந்தின் வீரியத்தில் கண்களை மூடி அமைதியாக படுத்து இருந்தாள்.
அவளுக்கு டிரிப்ஸ் முடியும் தருவாயில் இருக்க.. நர்ஸ் அழைத்து அவளுக்கு மாற்றி விட சொன்னான்.
கர்ணா, அழகி இருவரும் கேப் புக் செய்து ஹாஸ்பிடல் உள்ளே கேப் வரவைத்து அதில் ஏறி செல்ல... ஹாஸ்பிடல் பார்க்கிங், கேட்டின் பகுதியில் மட்டும் அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, அவர்கள் மருத்துவமனையின் இன்னொரு முகப்பு வழியாக சென்றது தெரியாமல் போய்விட்டது.
அதே மாதிரி கர்ணா, அழகி இருவரும் அவர்கள் வீட்டுக்காரர் இருக்கும் பஸ் ஸ்டாப்பிலேயே இறங்கி அங்கு இருந்து தங்கள் வீட்டிற்கு நடந்து செல்ல... கர்ணா அழகி இருவரும் இயல்பாக பேசிக்கொண்டு நடப்பது போல் ஆனால் சுற்றிலும் தங்களை யார் கவனிக்கிறார்கள் என்று சுற்றுப்புறத்தையும் கவனித்துக் கொண்டே நடந்து சென்றார்கள்.
இருவரும் இயல்பாகவே நடந்து சென்று தங்கள் வீட்டிற்குள் செல்ல ... சிலர் அங்கங்கே நின்று தங்களை கவனித்தாலும், அவர்கள் தங்களுடைய ஆட்களா?.. இல்லை எதிரியின் ஆட்களாய் என்று தெரியாமல் இயல்பாகவே அவர்கள் அவர்களை கடந்து சென்று வீட்டிற்குள் சென்றனர்...
உள்ளே சென்று கதவை சாத்தி விட்டு இருவருமே கதவிலேயே நின்று தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள...
இருவருக்குமே எப்படி உணர்கிறோம் என்று சொல்ல தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
முதலில் பயத்தில் சிறிது நேரம் நின்று இருந்தாலும்.. நேரம் ஆக இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவி கொள்ள..
ஏய்.. கொலைகாரி !!!... என் உயிரைக் கொல்லாமல் கொல்பவளே!!... தயவு செய்து சொல்லு டி ... அத்தான் நான் உன்னை காதலிக்கிறேன்.. என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேளடி என்னுடைய பேசா மடந்தையே என்று தன்னவளின் விழிகளை பார்த்து தன் விழியால் தன் ஏக்கத்தை சொல்ல...
அழகியோ இதற்கு மேல் தன்னால் முடியாது என்று தன் அத்தானை இறுக கட்டிபிடித்து கொண்டு கதறி அழுதாள்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...