• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
107
100. பிரியா பற்றி அறியும் தீபா...

தீபாவின் செயல்களில் பயம் கொள்ளும் ருக்மணி....

பிரியாவின் வீடு..

காலை 9 மணி...

கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்தாள் தீபா...

ஆனால் அவளின் எண்ணமோ எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவளுக்கே தெரியாது...

பாவம் பயபுள்ளைக்கு காதல் வந்து விட்டதோ என்று நினைக்காதீர்கள் அவளுக்கு... அவள் அக்கா கவிப்பிரியாவை பற்றி தெரிந்துவிட்டது அதாவது நேற்று இரவு பிரியா பழனி இருவரும் சேர்ந்து கணேஷ் மாமாவை பற்றி பேசிக்கொண்டு இருந்தது, பாம் வைப்பது பற்றி பேசிக் கொண்டு இருந்தது என்று அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள்.

அந்த நிமிடத்தில் இருந்து இந்த நிமிடம் வரை ... அவளால் தன் அக்கா அதிகாரம் பண்ண வேண்டும், தன்னை மட்டுமே அனைவரும் நேசிக்க வேண்டும்... தன்னை மட்டுமே அனைவரும் மகாராணி போல் கொண்டாட வேண்டும் என்று கொஞ்சம் சுயநலம் உள்ளவள் தான் என்று நினைத்து இருக்க... ஆனால் அவளோ இந்த அளவிற்கு ஒரு குடும்பத்தை அழிக்கும் அளவிற்கு கொடூரமானவளா என்று ...!!.. முதன் முதலாக தெரிந்து கொண்டதில் இருந்து தான் எப்படி உணரருகிறோம் என்று கூட தெரியாமல் கலங்கி போயிருந்தாள்.

அதே சிந்தனையில் உறக்கம் இல்லாமல், தாமதமாக உறங்கி தாமதமாக எழுந்தவள்... இப்பொழுதும் அதே சிந்தனையில் கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்தாளே தவிர, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பாவம் சிறு பிள்ளை போல் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஐயோ இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டதில் இருந்து நமக்கே மனம் இந்த மாதிரி பாடாய்ப் படுகிறது. பெரியம்மா, பெரியப்பா, அம்மா, அப்பா அனைவருக்கும் தெரிந்தால் என்ன செய்வார்கள்...

அதிலும் பெரியப்பாவும் அப்பாவும் அவளை ஏதோ மகாராணி போல் அவளை தலையில் வைத்து தாங்குகிறார்கள். இந்த ராஜ்ஜியத்திற்கு அவள் தான் ராணி என்று பகட்டாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் இவள் எவ்வளவு மனதில் அழுக்குோடு இருக்கிறாள்..

இதுவரை எல்லார் வீட்டிலும் அக்கா தங்கை தங்களுக்குள் சண்டை போடுவது போல் தான்.. அவளிடம் நான் சண்டை போட்டு இருக்கிறேனே தவிர, ஒரு நாளும் அவளை என் அக்கா இல்லை என்று நான் மறுத்ததே இல்லை. ஆனால் ஏன் இப்படி அவள் தவறாக நடந்து கொள்கிறாள்... அதுவும் அழகான ஒரு குடும்பத்தையே அழிக்கும் அளவிற்கு செல்கிறாள் என்றால் அவள் மனதளவில் ஏதேனும் பாதிக்கப்பட்டு இருப்பாள... இல்லை அவளின் இயல்பான குணமே இது தானா கடவுளே என்ன செய்வேன்.

நான் என்ன செய்யணும் எனக்கு ஒன்றும் புரியவில்லையே, இங்கு யாரிடம் இதைப் பற்றி பேச முடியும்...!!?? என்னால் எனக்கு ஒரு தெளிவான பதில் யார் தருவார்கள் என்று தன் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தே புலம்பி கொண்டு இருந்தாள் தீபா..

காலையில் நேரமாகியும் கீழே வராமல் இருக்கும் தன் மகளை பார்ப்பதற்காக மேலே வந்தார் ருக்மணி.

ஏய் வாலு.. என்ன டி பண்ணிட்டு இருக்க கண்ணாடிக்கு முன்னாடி நின்னு... கண்ணாடியில் பேசிட்டு இருக்க என்னடி உன்னை நீயே சைட் அடிச்சுக்கிறியா..!!??? இல்ல வீட்டுக்கு மருமகனை கொண்டுட்டு வர போறியா என்று கிண்டல் பண்ண.

ஐயோ அம்மா விவஸ்தையே இல்லாம பேசாத நீ எனக்கு அம்மா. அம்மா கொஞ்சமாவது அம்மா மாதிரி பேசுறியா.. என்னம்மா இப்படி பேசுற.. என்று இருந்து கொண்டவளுக்கு தன் அக்காவின் நினைவு வர ...
கடவுளே இந்த அழகான குடும்பத்தில் பிறந்துட்டு இவளுக்கு மட்டும் ஏன் இப்படி புத்தி கீழ் தரமா போகுது இப்போ இந்த பிரச்சினையை எப்படி நான் சமாளிக்க போகிறேன்... எனக்கு தெரிந்த பிறகு இவள் எப்படியோ கேட்டு போகட்டும் என்று நினைத்து ஒதுங்கி போவதற்கு இவள் வேறு யாரோ கிடையாது.. என்னுடைய அக்கா அவளை எப்படி நான் இப்படியே விட முடியும் என்று தனக்குள் புலம்பி கொண்டே தன் அம்மாவை பார்த்துக் கொண்டு இருக்க...

ஹே தீபா என்ன ஆச்சுடி உனக்கு... ஏய் யாரையாவது லவ் பண்றியா உண்மைய சொல்லு.. உங்க பெரியப்பா கிட்ட சொல்லணும் நான்.. உங்க அப்பா கிட்ட சொன்னேன் என்றால் என்னை வெட்டி போட்டுருவாரு.. இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் உங்க பெரியப்பா தான் சரி ..‌ தைரியமா சொல்லுடி என்று கேட்கும் தன் அம்மாவை தலையில் அடித்துக் கொண்டு பார்த்தவள்...

அம்மா தயவு செய்து சொல்றேன் எனக்கு தலை வலிக்குது. அது மட்டும் இல்லாமல் நான் இப்போது பெரிய மன குழப்பத்தில் இருக்கிறேன் தயவு செய்து இப்படி மொக்கையா காமெடி பண்ணி என்னோட கடுப்ப கிளப்பாம கிளம்புமா.. என்று சொல்ல..

இப்போது கட்டிலில் தன் மகளை அழைத்து தன் அருகில் அமர வைத்து... என்ன டா மனசுக்குள் ஏதாவது பெரிய போராட்டம் நடக்கிறதா சரி அம்மா நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா... என்று சொல்லி அவளை வா வந்து
அம்மா மடியில் சிறிது நேரம் தலை வைத்து படுத்துக்கொள். அம்மா உன் தலையை கோதி விடுகிறேன்.. சிறிது நேரம் உன் பிரச்சனை பற்றி எதுவும் யோசிக்காமல் அமைதியாக அம்மாவின் தலை வருடலை உள்வாங்கிக் கொண்டு கண் மூடி படுத்து இரு.. இதைப் பற்றியும் யோசிக்காமல் அமைதியாக படு...

பிறகு உன் மனதில் ஒரு அமைதி வரும் அப்போது உன் பிரச்சனையை உனக்கு எதிரில் வைத்து பார் அதற்கான தீர்வு உனக்கு கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு... அவளின் தலையை மெதுவாக வருடி கொடுத்துக் கொண்டு இருந்தார் ருக்மணி.

தீபாவும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக படுத்து இருந்தவள் சிறிது நேரத்தில் மனதில் ஏதோ ஒரு தெளிவு கிடைத்தது போல் உணர, எழுந்து அமர்ந்து தேங்க்யூ மம்மி என்று சொல்லி கட்டி பிடித்து தன் அம்மாவிற்கு கன்னத்தில் அழகான முத்தம் ஒன்றை வைத்தாள் தீபா.

ஹே மம்மி நீ சரியான ஆளு தான் இப்படித்தான் எங்க அப்பாவ கௌத்தியா... மனுஷன் ஏன் டா உன்னை மட்டும் சுத்தி சுத்தி வராரு பூனைக்குட்டி மாதிரி என்று பார்த்தால், இப்ப தான் புரியுது என்று தன்னை கலாய்க்கும் மகளை
பார்த்து பொய்யாக முறைத்து...

போடி போக்கிரி உனக்காக பேச வந்தால் என்னையவே கலாய்க்கிறாயா... சரி சரி.. வா வந்து சாப்பிடு என்று கூப்பிட தான் வந்தேன்... சீக்கிரம் வாடா என்று சொல்லிக் கொண்டு செல்ல..

தன் அறையை விட்டு வெளியே போகும் போது அம்மா... அக்கா சாப்பிட்டு விட்டாளா என்று கேட்டாள் தீபா.

ஒரு நொடி ருக்மணி தான் கேட்டது கனவா?.. நிஜமா?.. உண்மையா!!??? பொய்யா!!?? என்று தெரியாமல் தன் கையை தானே கிள்ளி பார்த்துக் கொள்ள...

ஐயோ அம்மா ஏன் இப்படி நிற்கிறாய்? அக்கா சாப்பிட்டு விட்டு கிளம்பி போய் விட்டாளா இல்லை இருக்காளா என்று கேட்டாள் தீபா..

ஏய் தீபா என்னடி இவ்ளோ பெரிய ஷாக் தர.. காலையில் இருந்து ஆளே ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிற. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா டா.. எதற்கும் ஒரு முறை டாக்டரை போய் பார்த்து விட்டு வருவோமா இல்லையென்றால் கோவிலுக்கு சென்று பூசாரியிடம் விபூதி போட்டுட்டு வருவோம் என்று சொல்லும் தாயே மேலிருந்து கீழாக விசித்திரமாக பார்த்தவள்...

அம்மா உனக்கு இப்ப என்னம்மா பிரச்சனை நான் சாப்பிட வரணுமா சாப்பிட வருகிறேன்.. வா.. அதற்கு ஏன் மா இப்படி என்னென்னமோ பேசுகிறாய் என்று தன் தாயை இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

ருக்மணியை தரத்தரவென்று இழுத்துக் கொண்டு வருவதை பார்த்த பிரியாவின் அம்மா ஏய் பாப்பா எதற்கு இப்படி அம்மாவை இழுத்துக்கொண்டு வருகிறாய் என்று கேட்க....

ஐயோ பெரியம்மா சாப்பிட வா என்று சொல்ல வந்துட்டு என்னைய வச்சு.... சரி விடுங்க ஒன்னும் சொல்ல முடியல பெரியம்மா சரி வாங்க நீங்க எனக்கு பசிக்குது நீங்கள் சாப்பாடு வையுங்க என்று டைனிங் டேபிள் சென்று அமர்ந்தாள் தீபா..

ருக்மணி தன் அக்காவிடம் சென்று அக்கா என்று மாடியில் இது வரை தீபா செய்த கூத்து அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு, அது மட்டும் இல்லாமல் அக்கா.. கவிப்பிரியாவை அக்கா என்று சொன்னால் நான் எப்படி தாங்குவேன் நீங்களே சொல்லுங்கள். அதோடு நிறுத்தாமல் அக்கா சாப்பிட்டு விட்டு கிளம்பினாளா என்று அக்கறையாக வேறு கேட்கிறாள்... என் பிஞ்சு இதயம் தாங்குமா திடீரென்று இப்படி ஒரே நைட்ல மாறிய இவளை பார்க்கும் போது என் மனசு எப்படி தாங்கும் நீங்களே சொல்லுங்க என்று சொல்லும் தன்னை கொலை வெறியில் பார்க்கும் தன் மகளையும் தன் அக்காவையும் பார்த்து ஹிஹி என்று சிரித்து வைக்க...

தீபா மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் தன் தட்டில் என்ன வைத்தார்கள்... எதை சாப்பிட்டோம் என்பதை கூட அறியாமல் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள் வெளியே...

வெளியே செல்லும் தன் மகளை பார்த்த வண்ணம் ... தன் அக்காவிடம் அக்கா எனக்கு என்னமோ பயமாக இருக்கிறது இவள் ஏன் அக்கா திடீரென்று பிரியாவை பாசமாக அழைத்து அவளைப் பற்றி யோசிக்கிறாள்... பேசுகிறாள் என்று தன் பயத்தை இப்பொழுது நிஜமாகவே தன் அக்காவிடம் கேட்க...

அடியே என்னடி இப்படி ஒரு மாறுதல் இந்த வீட்டில் நடக்காதா என்று நான் ஒவ்வொரு கோவிலுக்குமாக ஏறி இறங்கி கொண்டு இருக்கிறேன். அக்காவும் தங்கையும் நல்லபடியாக நம்மை போல் கடைசி வரை பிரியாமல் இருக்கணும்னு ஒவ்வொரு சாமி கிட்ட நான் வேண்டிக்கிட்டு இருக்கேன்..‌ அதன் பலனாய் இப்பொழுது இவள் இறங்கி வந்திருக்கிறாளே என்று சந்தோஷப்படுகிறேன் நான். இந்த நேரத்தில் நீ ஏன் பயப்படுகிறாய் என்று தன் தங்கையை பார்த்து கேட்க..

அப்படி இல்லக்கா இவள் திடீரென்று நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் பொழுது பெரியவளுக்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயமா இருக்கு என்று சொல்லும் தன் தங்கையை அதட்டியவர்...

எது நடந்தாலும் நன்மை தான் நடக்கும் என்று நினைத்துக் கொள்... தேவையில்லாமல் பயப்படாதே பெரியவளுக்கு எந்த பிரச்சனையும் வராது அவளுக்கு.

அவளால் மற்றவர்களுக்கு தான் பிரச்சனை வரும் என்று தன் மகளை புரிந்து கொண்டவராக சொல்லி விட்டு செல்ல...

அவளைக் குழந்தையில் இருந்து வளர்த்த ருக்மணியும் ... நானும் அதே தான் அக்கா நினைக்கிறேன். அக்கா அவள் கொண்டு வரும் பிரச்சினையால் அவளுக்கு ஏதும் ஆபத்தாகி விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு சென்றார்... தன் அக்கா பெற்ற பிள்ளையால் தான் அனைவருக்கும் தொல்லையாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட ருக்மணி,அவளை நினைத்து ....
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top