முத்துப்பேச்சுவுடன் வெளியே சென்றிருந்த கார்த்திகேயன் மாலை நான்கு மணியளவில் வீட்டிற்கு வந்த போது, வாசலில் மனைவியின் செருப்பைக் கண்டதும் மனம் துள்ள, "முத்தண்ணா என் வைஃப் வந்துட்டா" பரவசமாய் உரைத்திருந்தான்.
"அதெப்படி சொல்லுத கார்த்தி? அவங்க காதல் காத்து உன்னை அடிச்சிருச்சா?" என்று முத்து கேலிச்...
மறுநாள் காலை யாரோ சத்தமாய்க் கத்தும் சத்தத்தில் தான் கண் விழித்தாள் வள்ளி.
கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தவள் ஜன்னல் வழியாகச் சத்தம் வருவதை உணர்ந்து ஜன்னலினருகே சென்று பார்த்தாள்.
அந்த வீட்டின் பின்கட்டில் இருந்த தோட்டத்தில் நின்று மல்லிகாவும் உதயாவும் ஏதோ கோபமாய்ப் பேசிக் கொள்வதைப்...
வள்ளி தனது தந்தையின் வீட்டிற்கு வந்து இரண்டு நாள்கள் கடந்திருந்தன.
அங்கே விருந்தினர் அறையில் தங்கியிருந்தவள் கணவனை நினைத்தவாறு படுத்திருந்தாள்.
ஒரே ஊரில் சில தெருக்கள் தள்ளியிருக்கும் வீட்டில் தன்னைத் தனித்து இருக்க விட்டு அவன் தங்கியிருப்பது அவளின் மனத்தை வெகுவாய் வருத்தியது. இந்த ஊருக்கு...
ஆனால் அவனது வண்டி சென்று நின்றதோ அவளின் பாரம்பரிய வீட்டில்.
அவளின் முன்னோர்கள் தலைமுறையாய் வாழ்ந்த பாரம்பரிய வீடு அது!
அவன் வண்டியை நிறுத்தியதும் வீட்டைப் பார்த்தவாறு இறங்கியவளுக்கு உடலும் உள்ளமும் நடுங்கியது. கண்கள் கலங்கின.
உள்ளே செல்லவே விருப்பமில்லை அவளுக்கு.
"இப்ப எதுக்கு என்னை இங்கே...
"உங்கப்பா அம்மாவை கண்டுபிடிச்சி உன் கூடச் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்குப் பிறகு என் கூட இருக்கிறதும் இல்லாம போறதும் உன் முடிவு தான் வள்ளி"
அன்று சண்டையிட்டப் போது கார்த்திகேயன் உரைத்தது இவளின் காதில் ரீங்காரமிட, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நிற்க வைத்திருக்கும் கணவரைக்...
மறுநாள் காலை எழும் போதே மனம் இறகில்லாமல் பறப்பதைப் போன்ற உணர்வில் தான் எழுந்தாள் வள்ளி.
அவனை விட்டு விலகி இவள் படுத்திருக்க, இவளைப் பின்னிருந்து அணைத்தவனாய் உறங்கியிருந்தான் அவன்.
'ஹப்பாடா கோபம் போயிடுச்சு போல' என்று நினைத்தவளாய் எழுந்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கொஞ்சியவளாய் தனது...
நான் நானாகவே இல்லை,
பல நாட்களாக!
நாம் நாமாகவே இல்லை,
சில நாட்களாக!
சொல்லித் தெரிவதில்லை
சொல்லாமலும் புரிவதில்லை
சொல்லிய காதலும்
சொல்லாத தனிமையும்!
வீசும் காற்றில்
விசும்பும் ஒலி!
என்னிலா?
உன்னிலா?
வீணாய் போகட்டும், நம்
வீண் பிடிவாதம்!
வந்துவிடு என்னிடமே
தஞ்சமாய் நான் உன்னிடமே!
உன்னைக் கடிந்து...
ஒரு மாதத்திற்குப் பிறகு...
இருவரும் கட்டிலில் ஈர் ஓரங்களில் படுத்திருந்தனர்.
காலைச் சூரியனின் ஒளி ஜன்னலின் வழியாக முகத்தில் விழவும் கண் விழித்த வள்ளி, திரும்பி கார்த்திகேயனைப் பார்த்து பெருமூச்சு விட்டவளாய் கழிவறைக்குச் சென்று விட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள்.
பார்வதி அடுப்பில் பாலை...
விமான நிலையத்தில் தாமோதரன் மூலமாகத் தனது பெற்றோரைப் பற்றிக் கேட்டதிலிருந்து அழுதுக் கொண்டிருந்தாள் வள்ளி.
தன்னால் தான் தனது பெற்றோர் இந்த ஊரை விட்டே எங்கோ சென்று விட்டனர் என்ற குற்றயுணர்வு மேலெழும்ப அவள் உடலும் உள்ளமும் நடுங்கியது. ஏதோ செய்யக் கூடாத தவற்றைத் தான் செய்து விட்டது போன்ற உணர்வை...