• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
💕 கண்ணிலே தீட்டிய காதல்
🔱யின்🔱

ஓவியம்7️⃣

ஓவியா என்று கைபேசியில் பேசியதைக் கேட்ட கதிர் கோபம் கொண்டு, “ஏய் நீ என்ன பேர் சொன்ன?” என்று கேட்டான்.
“அது வந்து முல்லைன்னு சொன்னேன்.”
“இல்ல பொய் சொல்ற? நீ ஓவியா. ஓவியான்னு தானே சொன்ன?” என்றான் கோபம் குறையாது.
சிறிதாக பெருமூச்சு விட்டு, “ஆமா மாமா. நான் உன்னுடைய அத்தை மகள் முல்லையோவியம் தான்” என்று முல்லை சொன்ன மறுநிமிடம், கதிர் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான்.
“ஏய்! நான் சாகுற வரைக்கும் உங்க யார் முகத்துலயும் முழிக்கக்கூடாதுன்னு நினைச்சேன். ச்சீ அந்த குடும்பத்தைச் சேர்ந்தவ தான் நீன்னு தெரிஞ்சிருந்தா, உன் பக்கமே நான் வந்துருக்க மாட்டேன். இப்ப என்ன பிளான் பண்ணி என்னை உங்க வலையில சிக்கவைக்க வந்திருக்க. என் சொத்து... அந்த சொத்து தானே உங்களுடைய டார்கெட்.” என்றான் கதிர்.
“மாமா என்ன பேச்சு பேசுற? எந்த சொத்து எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது.”
“ஏய்! வாய மூடு. நீ மாமா மாமான்னு சொல்லும்போது, என் காதில் ஈயத்தை காச்சு ஊத்துற மாதிரி இருக்கு. உன் முகத்தில் முழிக்குறதே பாவம். ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டை விட்டுப் போய்டு.”
“என்னால முடியாது மாமா. நான் ஏன் போகனும்? நீ கட்டின தாலி என் கழுத்துல இருக்கு. நீ என்னோட புருஷன் மாமா.” என்று தன் உரிமையை வேண்டினாள்.
“என்ன புருஷனா? அடிச்சு வாய ஒடச்சிடுவேன். யார் யாருக்குப் புருஷன்? இங்க பாரு. ஒழுங்கு மரியாதையா நான் கட்டின தாலியை என் கையில் கழட்டிக் கொடுத்துட்டு, இந்த வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிடு. உன்னை பார்த்தாலே எனக்கு காண்டாகுது.”
“நான் ஏன் போகணும்? என்னால போக முடியாது மாமா. நீ என்னை ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ண. இப்ப என்ன என்னை பிடிக்காத மாதிரி பேசுற?” என்று அவனிடம் எதிர்வாதம் செய்தாள்.
“ஆமாடி. உன்ன ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்னேன். நீ திருடியா இருந்தாலும் சரி. இல்ல உன் அக்கா தொழில் செய்ற ஆள் மாதிரி நடித்தாலே, அது உண்மையாகவே இருந்தாலும் சரி. நான் சந்தோஷமாக உன் கூட வாழ்ந்திருப்பேன். ஆனா, எப்போ நீ அந்த இந்துவின் குடும்பம்ன்னு தெரிந்ததோ, இந்த உலகத்தில நான் வெறுக்கும் முதல் ஆள் நீ தான்டி. உன் அம்மா பெயரை கேட்டாலே எனக்கு... எனக்குக் கொலை வெறி ஏறுது.” என்று சொன்னபடி கதிர் அருகில் இருந்த டேபிளை எட்டி உதைத்தான்.
“மாமா! இங்க பாரு. என் அம்மா செஞ்ச தப்புக்கு நான் என்ன செஞ்சேன்? அந்த சின்ன வயசிலேயே நான் உன்னை காதலிச்சேன். அது உனக்கு தெரியாதா?”
“ஏய் வாய மூடு. அன்னைக்கு நீயும் தானே அங்க நின்னு, நடந்த விஷயத்தை எல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த. நீ என்ன சின்ன குழந்தையா?”
“ஆமா மாமா. அப்போ எனக்கு வெறும் எட்டு வயசு தானே. எனக்கு என்ன தெரியும்? என்னைபோய் விரோதியா பார்க்குறியே மாமா.”
“ஏன், எட்டு வயசுல எனக்கு அது வேணும், இது வேணும்னு என்னை எடுத்து தர சொல்லி தின்ன தெரிந்தது இல்ல. அப்ப மட்டும் உனக்கு எல்லாம் தெரிஞ்சுதா?” என்றான்.
“மாமா! எதுக்கு எத பேசுற? நான் உன்னை இத்தனை வருஷமா, என் இதயத்தில் வைத்து காதலிச்சேன் தெரியுமா. நீ எங்க இருப்பேன்னு எத்தனை வருடம் தேடி இருக்கேன்னு, உனக்கு என்ன தெரியும்? நான் படிச்சு போலீசான முதல் வேலையே, நீ எங்க இருக்கன்னு நான் தேட ஆரம்பித்து விட்டேன். நீ இந்த ஊர்ல இருக்கன்னு தெரியாமலேயே நான் இந்த ஊருக்கு வந்த முதல் நாள், நீயா தானே என்னை இந்த வீட்டுக்கு தூக்கிட்டு வந்த? நான் என்ன பிளான் பண்னேன். இங்க வந்து உன் போட்டோவை பார்த்த உடனே, நான் விரும்பும் என் கதிரோவியம் மாமா நீதான்னு தெரிஞ்ச உடனே, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இந்த காளையன் சல்மான் பாய் விஷயத்தை முடிச்ச உடனே, நானே உன்னை நேர்ல வந்து பார்த்து விஷயத்தைச் சொல்லி, என் காதலை தெரிவிக்கனும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீ அவசரப்பட்டு என் கழுத்துல தாலி கட்டிட்ட. சரி கடவுளா பார்த்து நமக்கு இப்படி ஒரு கள்வனை, இல்ல இல்ல கணவனை கொடுத்திருக்காருன்னு சந்தோஷப்பட்டேன். நீ என்னடானா இப்போ இப்படி பேசுற?”
“இதோ சொல்லிட்ட இல்ல. கள்வன் என்றால் திருடன் தானே. ஆமாடி. நான் திருடன் தான். உனக்கும் உன்னைப் பெத்த உன் ஆத்தாளுக்கும் நான் திருடன் தான். அதனாலதான என்னை அந்த வயசிலேயே உன் ஆத்தா சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினா. இங்க பாரு. இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தீன்னா கூட, நான் கொலைகாரனாக மாறிடுவேன். ஒழுங்கு மரியாதையா வெளியே போ.” என்று சத்தம் போட்டான்.
“இல்ல மாமா. என்னால போகவே முடியாது. நீ என் புருஷன் நான் இங்கதான் இருப்பேன்.” என்று அடம் பிடித்தாள்.
“இங்க பாருடி. நான் கண்டிப்பா கொலைகாரனாக ஆயிடுவேன். திரும்பத் திரும்பப் பேச வைக்காத.”
“என்னால முடியவே முடியாது. நீ எனக்கு வேணும். நான் சின்ன வயசுல இருந்து உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிச்ச. ஆனா, இப்ப என்னடானா பொய் சொல்ற. என் கண்ணை பார்த்து சொல்லு நீ என்னை விரும்பலன்னு?”
“இல்லடி. உன்னை எனக்கு அறவே பிடிக்காது.” என்று சொன்னபடி கதிர் கோபமாக முல்லையை தள்ளி விட, தடுமாறி அங்கிருக்கும் மேஜையின் ஓரத்தில் இடித்துக் கொண்டவளின் தலையில், சிறிதளவு காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தபடி மயக்கம் அடைய, இதனைப் பார்க்காத கதிர் கோபமாக அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.
“டேய் மவனே! என்னடா பிரச்சனையா? ஐயையோ நான் அப்பவே நினைச்சேன்டா. ஒரு போலீஸ்காரி உன்ன கல்யாணம் பண்றானா லேசுப்பட்ட விஷயம் இல்லடா. சரி உன்னை பார்த்தா அடி வாங்குன மாதிரி தெரியலையே? என்ன மவனே உள் காயம்மா.” என்று கிண்டலாகக் கேட்டார் ஓவியகீதா.
“ஏய் கிழவி! ஷட் அப்.” என்று கத்தினான்.
“இப்போ ஏன் பீட்டர் விடுற? சொல்லு என்ன மேட்டர்?” என்றார்.
“இங்க பாரு. நான் போயிட்டு இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வருவேன். அ...”
“ஏன்டா மவனே! வயிறு சரியில்லையா? அப்பவே சொன்னேன் நைட்டு பாதாம் பயிறு போட்ட பால் எல்லாம் வேண்டாம்னு.” என்று அவனை முடிக்க விடாது இடையிட்டார் கீதா.
“ஏய் சுண்ணாம்பு மண்டை. கொன்னுடுவேன் உன்னை. நான் போயிட்டு இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வருவேன். நான் வரதுக்குள்ள அவ இந்த வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது.”
“டேய்! யாரடா வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது சொல்ற?
“அதுதான். உள்ள இருக்கிறாள் இல்ல. அவளைத் தான். அவ இந்த வீட்டிலேயே இருக்கக்கூடாது.” என்று சொன்னபடி கதிர் கோபமாக போனான்.
கீது பயந்துகொண்டே அறைக்குள் செல்ல, முல்லை மயங்கிய நிலையில் கீழே படுத்திருக்க, அவளைப் பார்த்து பயந்த்து போன கீதா, கதிருக்கு போன் செய்தார். கதிர் போன்னை வீட்டிலேயே விட்டு சென்றதால், மணிக்கு அழைக்க அவனோ பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்தான்.
“ஐயோ! மர்டர். பாவீங்களா இந்தப் புள்ளைய கொன்னுட்டீங்களா?” என்று அலறினான்.
“டேய்! வாயை மூடு, சும்மா இருக்கும் மணியை நீ அடிக்காத, அவள் மயக்கத்தில் தான் இருக்காள்.”
“ஏய் கிழவி! ஏன் என்ன ஆச்சு? ஒரு வேலை அவங்களுக்குள்ள அடிதடின்னு ஆகிடுச்சா? என்றான்.
“தெரியலடா. மயக்கம் வர்ற அளவுக்கு, இவ அவன அடிச்சி இருந்தா ,அவனுக்கு தானே மயக்கம் வந்து இருக்கணும். இவளுக்கு எப்படி?” என்று மணியிடமே சந்தேகம் கேட்டார் கீதா.
“அதானே” என்றான் அவனும்.
“இல்ல. இவங்களுக்குள்ள வேற ஏதோ பிரச்சனை இருக்கு. அவன் கோபத்தில் இந்த பொண்ணத் தள்ளி விட்டுட்டு போய் இருக்கான். இவ அந்த மேசையிலே இடிச்சு மயக்கத்துல விழுந்துட்டா. இப்பதான்டா நான் படுக்கவச்சேன்.
“என்ன கிழவி சொல்ற? உன் மகன் அவ்வளவு கோவக்காரன் இல்லையே. நான் நினைச்சேன் இந்த பொண்னுடைய ஸ்ட்ரக்சர்ல்ல அவன் விழுவான்னு. பார்த்தா கடைசியில இவள ஸ்ட்ரெட்சர் ஏத்திடுவான் போல.”
“டேய் மணியா! வாயை மூடுடா. அவ கண்ணு முழிக்கிறா.” என்று அமைதிப்படுத்தினார்.
முல்லை கண் விழித்ததும் அழுது கொண்டிருக்க, கீதா பயந்தபடியே, பாப்பா ஏன் அழுவுற?” எனக் கேட்டார்.
“அத்தை இங்க கிட்ட வாங்க.” என்றழைத்தாள்.

“இல்லம்மா நான் இப்படி ஓரமா நிக்கிறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றார் கீதா.
 
Joined
Feb 6, 2025
Messages
111
அத்த இங்க வாங்க சொல்லுறேன்ல. வரமாட்டீங்களா? சரி எங்க அவரு?”
“அவன் வெளிய போய்ட்டான்மா.”
“ஏன் அவர் இப்படி பண்றாரு? அவர்தானே என் கழுத்தில் தாலி கட்டினார். இப்ப என்னை பிடிக்கலை என்று சொன்னால் நான் எங்க போவேன்? ஏன் அவர் இப்படிப் பண்ணுறார் அத்தை?” என்றாள் வருத்தமாக.
“இங்க பாருமா. உங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனை எல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒரு மரமண்டை. நீ கொஞ்சம் விவரமா சொன்னா நான் புரிஞ்சிப்பேன்” என்றார் கீதா.
“அத்தை! என்னை யாருன்னு உங்களுக்குத் தெரியலயா?
“ம்... தெரியுமே. இந்த ஊருக்குப் புதுசா வந்த போலீஸ் ஆபீஸர்.”
“ஐயோ அது இல்ல அத்தை. நான்தான் முல்லை.”
“ம்... கேள்விப்பட்டேன்.” என்றார்.
“அய்யோ அத்த. என் பெயர் முல்லையேவியம். உங்க அண்ணன் சந்திரனுடைய இரண்டாவது பொண்ணு நான்” என்றாள் வேகமாக.
“என்ன நீ... நீ அந்த ஓவிய இந்துவின் பொண்ணா?” என்றார் அதிர்ந்துபோய்.
“ஏன் அத்த? அம்மாவுடைய பெயர் தான் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? ஏன் உங்க அண்ணன் சந்திரனுடைய பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்காதா? என் மேல கூடவா நீங்க கோபத்துல இருக்கிறீங்க? நான் என்ன பண்னேன்? கதிர் மாமாவை நான் சின்ன வயசிலிருந்து எவ்வளவு காதலிச்சேன்னு உங்களுக்கு தெரியாதா? என் காதல் மேல அவருக்கு தான் நம்பிக்கை இல்லை. என்னை தூக்கி வளர்த்த உங்களுக்குமா நம்பிக்கை இல்லை? என்று அழுதபடி சொன்னாள்.
முல்லையைப் பார்த்த கீதா அவளை கட்டி அணைத்தப்படி அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “என்னடா செல்லம் இப்படிச் சொல்ற? உன்னையும், கதிரையும் இதே கையால தூக்கி வளர்த்து இருக்கேன். எனக்கு அவனும் நீயும் வேற வேற இல்ல. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிப் பாக்கணும் என்பது, என்னுடைய ஆசை மட்டும் இல்ல. என் அக்கா லக்ஷ்மியின் ஆசையும் தான். ஆனா, உன் அம்மா அந்த இ...ந்...து.” என்று பல்லைக் கடித்தார்.
முல்லை அய்யோ அத்த. அம்மா... அம்மா... அம்மா. அவங்களையே ஏன் இங்க இழுக்குறீங்க. அவங்க செஞ்ச தப்புக்கு எதுக்காக என்னை அவர் வெறுக்கிறார்? பெரியவங்க செஞ்ச தப்புக்கு ஏன் எங்கள மாதிரி சின்னஞ்சிறுசுங்க வாழ்க்கையை கெடுக்குறீங்க. நீங்க அவர்கிட்ட சொல்ல கூடாதா?” என்று கேட்டாள்.
“இல்லமா. நானுன்னு இல்ல. நம்மளப் படைத்த கடவுளே வந்து சொன்னாலும், அவன் உன் அம்மா மேல இருக்கிற கோபத்தில் இருந்து ஒருபடி கூட கீழே இறங்கி வர மாட்டான். சரி அதை விடு. நீ எப்படி இருக்க? என் அண்ணன் சந்திரன் எப்படி இருக்காரு?”
“இருக்கோம் அத்தை. எல்லாரும் நல்லா இருக்கோம். ஆனா, அப்பா தான் உங்க நினைவிலேயே இருக்காரு. அப்பாவை விட, என் மாமா பழனி உங்க நினைவாக மட்டுமே இருக்காரு. அவர் இன்னும் யாரையும் கல்யாணம் கூட பண்ணல தெரியுமா? கல்யாணம் பண்ணா கீதுவை தான் கல்யாணம் பண்ணுவேன்னு, அவர் பெயருக்கு ஏற்றது போலவே இன்னும் பழனிக்கு போயிட்டு போயிட்டு வந்துட்டு இருக்காரு.” என்றாள்.
“உன் மாமன் பழனிக்குப் போய் ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தத்தை வாங்கி நக்கினாலும், இந்த கீதா உன் மாமன் பழனிக்கு இல்லை. அந்த கதையை விடு. சரி நீ சொல்லு அப்போ இவனை கதிருன்னு தெரிஞ்சுதான் அவன் கையாள தாலி கட்டிக்கிட்டியா?” என்றார்.
“ஆமா அத்த. என்னை இந்த மணி மாமாவும், கதிர் மாமாவும் இந்த வீட்டுக்கு தூக்கிட்டு வரும்போது, இங்கு இருந்த போட்டோவை நான் பார்த்தேன். அப்பவே நீங்களும், கதிர் மாமாவும் இங்கதான் இருக்கிறிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். உங்க ரெண்டு பேரையும் நான் இந்த சூழ்நிலையில் சந்திப்பேன்னு நினைச்சு கூட பாக்கல. உங்களைப் பார்த்த உடனே என் மனசுல அவ்வளவு சந்தோஷம் இருந்தது. சரி இந்த ஊர்ல இருக்கிற பொறுக்கி பசங்களை எல்லாம், அடித்து துரத்திவிட்டு அதுக்கப்புறம் நானே வந்து என் காதலை மாமாகிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள மாமா என்னை வழியிலேயே வைத்து என் கழுத்துல் தாலி கட்டிடுச்சு. இப்ப என்னடானா என்னை பிடிக்கலன்னு சொல்லுது. ஏன் அத்தை அங்கு நடந்த விஷயத்தில் என்னுடைய தப்பு என்ன இருக்கு? நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன்/ அதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?”
“ஆமாம்மா. நீங்க எல்லாரும் உங்க தரப்பு நியாயத்தை தான் பேசுறீங்க. னா 13 வயசுல என் மகன் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும். அவன் சீர்திருத்தப்பள்ளியில் எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? உங்க அம்மா செஞ்ச தப்பால, என் வாழ்க்கையும், என் அக்கா லட்சுமியின் பையன் கதிரின் வாழ்க்கையும் போச்சே. அது திரும்பி வருமா?” என்றார் ஓவியகீதா.
“அடச்சே! நிறுத்துங்க. எப்ப பாரு அப்ப நடந்துச்சி... அப்ப நடந்துச்சு என்றே சொல்றிங்க. அப்படி அப்போ என்னதான் நடந்துச்சுன்னு சொல்லாம பேச்சிட்டிருக்கீங்க. சொன்னா தான தெரியும்.” என்று கேட்டான் மணி.
“ஹலோ என்ன கேட்டிங்க?”
‘ஐயோ இவங்க போலீஸ்னு மறந்து, அதிகமா மணி அடித்துட்டேன் போல.’ என மனதினுள் நொந்து வெளியே, “இல்லமா. தயவு செய்து சொல்லுங்க அப்போ என்னதான் நடந்தது?” என்றான் பவ்யமாய்.
“ஓவியா. அங்க நடந்த கதையை நீயே சொல்லுமா.”
“இல்ல அத்த. என் பழைய ஞாபக கதையை எல்லாம் நான் இப்போ சொன்னா எனக்கு கோபம் வந்து, இதோ இந்த மணியை அடித்து விடுவேன். நீங்களே சொல்லுங்கள்.” என்றாள் முல்லை.
“என்னது உங்க பிளாஷ்பேக்கை சொல்லுறதுக்கு, என்னை அடிப்பீங்களா? என்ன விளையாடுறீங்களா? உங்க பிளாஷ்பேக்கே வேணாம் சாமி. ஆளை விடுங்க” என்று நடக்க ஆரம்பித்தான்.
“மணி நில்லுடா. ஃப்ளாஷ்பேக் உனக்கு வேணாம் மக்களுக்கு வேணுமில்ல. அதுக்காகவாவது நில்லுடா” என்று கீதா அழைக்க,
“அப்போ என்ன, இப்ப நீ பிளாஷ்பேக் சொல்ல போறியா?”
“ஆமா. ஏய்! எங்கடா போற?”
“இரு தலயணை எல்லாம் எடுத்துட்டு வந்து வச்சிக்கிட்டு, ஒழுங்கா உட்காந்துகிறேன்.” என்று எடுத்து வந்தவன் அவர்கள் அருகே போட்டு, “ம்... இப்ப ஆரம்பி” என்றான்.
“பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி. பாவாடை தாவணி கட்டிக்கிட்டுத் தலை நிறைய பூ வச்சுகிட்டு, நெத்தி நிறைய பொட்டு வச்சுக்கிட்டு, கை நிறைய வளையல் போட்டுக்கிட்டு, சிக்குன்னு பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி...”
“முல்லை மேடம்! நீங்க 30 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு அழகா இருப்பிங்களா? ஆனா அப்போ நீங்க சின்ன பொண்ணா இருப்பிங்களே? அப்ப எப்படி பாவாடை தாவணி எல்லாம்...” என்று தலையைச் சொறிந்தான்.
“டேய்! அறிவு கெட்டவனேஇன்றோடக்சன். இது ஹீரோயின் இன்ட்ரோடக்சன் இல்லடா. இது என்னுடைய இன்ரோடக்சன்” என்றார் கீதா.
“அட சோன்பப்படி மண்டை. நீ ஸ்ரீதேவியா? உனக்கு இவ்வளவு பில்டப்பா ஒழுங்கு மரியாதையா கதைய சொல்லு. இல்ல வாய் மேலே குத்துவேன்.” என்றான் மணி.
“ஆமாடா. நான் அழகு என்று சொன்னால் யாரும் நம்பாதீங்க. எனக்குன்னு ஓரு தனி கூட்டம் இருக்கு. அது தானா...”
“அது தானா சேர்ந்த கூட்டம் இல்லை. வீணா போன கூட்டம். சரியா?” என்று இடையிட்டான் மணி.
“ம்... போதும்டா. நான் கதையை ஆரம்பிக்கிறேன். நான், என் அண்ணன் சந்திரன், என் அக்கா லட்சுமி மூணு பேரும் ஒரு தாய் வயித்துப் புள்ளைங்க. என் அண்ணன் சந்திரன் பெரிய போலீஸ் ஆபீஸர். அவரு எனக்காகவும், என் அக்கா லட்சுமிக்காகவும் கல்யாணம் பண்ணாம தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தார். ஆனால், அவர் வேலை செய்யப் போன இடத்தில, "இந்து ஓவியம்" என்று சிங்கப்பூர்ல இருந்து வேலை செய்ய வந்த ஒரு பொண்ண காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.”
“அவரு கல்யாணம் பண்ண முதல் இரவிலேயே, என் அண்ணி அந்த இந்துவிடம் சொல்லிட்டாரு. நமக்குக் குழந்தை பிறக்கக்கூடாது. என் பெரிய தங்கை லட்சுமியும், சின்னத் தங்கை கீதாவும் வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்குப் போனதுக்கு அப்புறம்தான், நம்ம வாழ்க்கைய பத்தி நம்ம யோசிக்கணும். அப்படின்னு சொல்லி தான் அந்த இந்துவ கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தார். அந்த இந்து எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லி, முதல் இரவிலேயே என் அண்ணனுக்கு நிறைய தலைப்பில் கவிதை சொல்லி,
அடுத்து தலைக்கு குளிக்காமலேயே, அடுத்த பத்து மாததில் நவீன்னு ஒரு பையன பெத்துக்குச்சு.”
“வாஸ்தவம் தானே. உங்களுக்காக அவரு குழந்தையே பெத்துக்காம இருப்பாரா? இதுல உங்களுக்கு என்ன பிரச்ச்னை?”
“அவங்க குழந்தை பெற்றதெல்லாம் எங்களுக்குப் பிரச்சனை இல்ல. ஆனா, என் அண்ணன் பொண்டாட்டி இந்து லேசுபட்ட ஆள் இல்ல. அவங்க சொந்தக்காரப் பையன் ஒருத்தன் இருக்கிறான். அவனும் இந்த இந்துவும் சேர்ந்து எங்களை என்ன பாடு படுத்துனாங்க தெரியுமா?” என்றார்.

“அப்படி என்ன பண்ணாங்க?” என்று ஆர்வமானான் மணி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top