Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதாரா!
வலது கண் காலையிலிருந்து துடித்துக்கொண்டிருப்பதை பார்த்த தாமரைக்கு,ஏன் இப்படி இருக்கென்று யோசனையானது.
மனதோ ஒரு பக்கம் படபடப்பாக இருப்பது போலவும் இருந்தது.
யாருக்கு என்னாச்சினு தெரியலையேனு புலம்பியவள், கதவை பூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.
அங்கிருந்து சுற்றி பார்க்க, தூரத்தில் தெரிந்த மலை முகடுகளும், சுற்றி இருக்கின்ற இயற்கையிலும் மனம் லயித்து போனது.
இங்கு வந்ததிலிருந்து பகலில் அவள் மாடிக்கு வந்ததில்லை, அதனால் தான் சுற்றியிருந்த இயற்கையின் அழகு தெரியாமல் போனது.
மாலை நேரச்சூரியன் மேற்கே மறையும் நேரத்தில் அதை பார்க்க, கொழுந்துவிட்டெரியும் நெருப்பு போல இருந்தது.
சூரியன் மறைந்து, இரவும் ஆரம்பமானது.
ஃப்ரஷ் ஆகி விட்டு கீழே வந்தவள், பூஜையறையிலிருந்த விளக்கை ஏற்றி,சாமி கும்பிட்டு வெளியே வர, விஸ்வமும் தூங்கி எழுந்து வந்தார்.
அங்கிள், அம்மா எப்போ வருவாங்கனு தெரியுமா?,ஒரு வார்த்தை கேட்டீங்கயென்றால்,அதற்கு ஏற்ற போல சமைக்கலாம்.
இதோ கேட்குறேன்மானு பூரணிக்கு கால் பண்ணியவர், எங்கிருக்கீங்க என்க, வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றோம்.இன்னும் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவோமென்கவும், சரிமானு கட் பண்ணியவர்,பூரணி சொன்னதை சொல்ல,சரிங்க அங்கிள் என்றவள், கிச்சனிற்குள் சென்று டிபன் செய்ய ஆரம்பித்தாள்.
தாமரை.. நான் கொஞ்சம் வாக் போய்ட்டு வரேன், நீ உள் பக்கமாக வீட்டை பூட்டிக்கோ என்றவாறே விஸ்வம் வெளியே போக, கதவை பூட்டி விட்டு, தனது வேலையை தொடர்ந்தாள்.
சமையல் வேலையை முடித்தவள், வீட்டை பெருக்கி விட்டு, கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்து மடித்து வைக்கும் போது, வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டது.
யாரென்று ,கதவில் இருந்த லென்ஸ் வழியாக தாமரை பார்க்க, மெயின் கேட்டில் விஸ்வம் நிற்பது தெரிந்தது.
பின்னர் கதவை திறக்க, அவரும் உள்ளே வந்து,தனது அறைக்குள் சென்று ஃப்ரஷ் ஆகி வெளியே வந்தவர், தாமரை இங்கு வாம்மா என்றார்.
இதோ அங்கிள் என்றபடியே அவர் உர்கார்ந்திருந்த ஷோஃபாவின் அருகில் வர, இங்கே உட்காரு என்றார்.
சொல்லுங்க அங்கிள் என்க,ஷீரடி தெரியுமா? என்க, ம்ம் கேள்வி பட்டுருக்கேன்.
அப்படியா, சரி,நாம போகலாமா?.
நிஜமாவா என்க,ஆமாமா எனக்கும் ஏதோ மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.ஒரு எட்டு போய் தரிசனம் பண்ணிட்டு வரலானு தோனுதுமா.
எனக்கும் மதியத்திலிருந்து அப்படி தான் இருக்கு.வலது கண் துடித்துக்கொண்டே இருக்கின்றது அங்கிள்னு தாமரை சொல்ல,ஓஓஓ,அதுலாம் ஒன்னும் இல்லை மா.
நைட் கிளம்பினால் தான் காலையிலே முதல் தரிசனத்திற்கு போகலாம் என்றவர்,ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சிக்கோ.மாறனும், பூரணியும் வந்த பிறகு அவங்களையும் கேட்டு விட்டு, பிறகு கிளம்பலாம்
சரிங்க அங்கிள் என்றவளிடம் அவளின் டிசைனிங் ஆர்வத்தை பற்றி கேட்டவர், அவருக்கு தெரிந்தவைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்க,ஹாரன் சத்தம் கேட்டது.
கதவை திறக்க, பூரணியே மெயின் கேட்டை திறந்து, கார் ஷெட் கதவை திறக்க போனார்.
வேகமாக போனவள் நான் திறக்குறேன்மா என்றவாறே திறந்து விட, காரை உள்ளே வந்து நிறுத்தினான்.
பின்னர் அவளே மீண்டும் கதவை லாக் பண்ணி விட்டு பூரணியிடம் வந்தவர், போன இடத்தில் எப்படி இருக்காங்கமா என்க, கொஞ்சம் மோசமா தான் இருக்கு.எப்படியும் ரெக்கவர் ஆக இன்னும் கொஞ்ச நாளாகும் என்றார்.
சரி வாங்க உள்ளே போகலாம் என்றவளுடன், அவரும் சேர்ந்து உள்ளே வந்தார்.
விஸ்வமும் கேட்க, தாமரையிடம் சொன்னதையே கணவரிடமும் சொன்னார்.
சரி போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்கமா சாப்பிடலாமென்றவள், சமைத்த டிபனை டைனிங் டேபிளின் மேல் எடுத்து வந்து வைத்தவள், அங்கிள் உங்களுக்கு தரட்டுமா என்க,ரெண்டு பேரும் வரட்டுமா, ஒன்னாவே சாப்பிடலாமென்றார்.
அதேப்போல் இருவரும் வர, நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, ஷீரடிக்கு போவதைப்பற்றி விஸ்வம் கேட்க, அப்பா நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.
அதனால்,நாளைக்கு நைட் கிளம்பலாமேனு மாறன் கேட்க,சரிப்பா என்றார்.
பின்னர் வழக்கமான வேலையை முடித்தவள், குட் நைட் சொல்லிக்கொண்டு மேலே தனது அறைக்குள் வந்து விட்டாள்.
சிறிது நேரம் ஓவியம் வரைய, ஏனோ மனம் அதில் ஒன்றவில்லை.சரி, நாளைக்கு பார்த்துக் கொள்ளலாமென்று படுத்து விட்டாள்.
சீமக்கரை...
சிவா என்ன சொல்லப்போறானோ என்று அங்கிருந்தவர்களுக்கு கவலையாக இருந்தது.
அய்யா என் மவளுக்கு இப்போ எப்படி இருக்கென்று பேரனிடம் சிவசாமி தாத்தா கேட்க, எதுவும் சொல்ல முடியாமல் சிவா அழுதான்.
எலேய் என்னாச்சினு சொல்லுய்யானு, மகள் வயிற்று பேரனை பிரகாசம் தாத்தா கேட்க,அவருக்கும் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
கீழே உட்கார்ந்திருந்த பார்வதி, சின்னவனே என்றவாறு அவன் அருகில் வந்தவர், சொல்லுய்யா ?, வேதாக்கு இப்போ எப்படி இருக்கென்க,அத்தை ரொம்ப சீரியஸாதான் இருக்குமானு அழுதான்.
அய்யோ, என்னய்யா சொல்லுற என்க?, டாக்டர் சொன்னதையும், மதுரைக்கு போனதையும் சொன்னான்.
அய்யோஓஓஓஓ அய்யனாரே,என் மவள் யாருக்கு என்ன கெடுதல் பண்ணுனானு இப்படி சோதிக்குற சாமி என்று, நெஞ்சில் அடித்துக்கொண்டு கலா அப்பாயி கதறி அழுதார்.
சிவா வீட்டிற்கு வந்து சொன்னதிலிருந்து, யாரும் பச்ச தண்ணீர் கூட குடிக்கவில்லை.
போய் இவ்வளவு நேரம் ஆகுது ஏன் இன்னும் யாரும் கால் பண்ணலை என்று சொல்லிக்கொண்ட சிந்து, தனது ஃபோனிலிருந்து நவீனுக்கு கால் பண்ண, அட்டென் பண்ணியவன், நிகிலேஷ் இங்கு இருப்பதையும், அவன் சொன்னதையெல்லாம் சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.
நவீன் சொன்னதையெல்லாம் கேட்ட சிந்துக்கும் ,வேதாவை நினைத்து கவலையாக இருந்தது.
தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு விஷயத்தை சொல்லியவர், நிகிலேஷ் இருப்பதால் கவலை வேண்டாம் என்றவர்,நிகிலேஷ் யாரென்று சுருக்கமாக சொன்னார்.
மதியம் கோயிலில் சாப்பிட்டதோடு சரி, இதுவரை யாரும் ஒரு டீ கூட குடிக்கவில்லை. சீதா எழுந்து உள்ளே போய் டீயை போட்டு எடுத்து வந்து, அவர்களை வற்புறுத்தி கொடுத்தார்.அந்த டீயோடு அங்கையே எல்லாரும் படுத்து விட்டனர்.
மதுரை...
அங்கிள் பிரச்சினை இல்லை,கொஞ்ச நாள் டேப்லட் எடுத்துக்குங்க, இந்த மந்த் என்ட்ல சர்ஜரி பண்ணிக்கலாம் என்றவன், எதுக்கு இத்தனை பேர் இங்கே.யாராவது ரெண்டு பேர் இருங்க, மற்றவங்க வீட்டுக்கு போங்க.
சர்ஜரி முடிந்த பின்னர் வாங்க.
நிக்கி சொல்வது தான் சரி என்றார் வெற்றி வேல்.
இல்லை மச்சான் வேதா கண் முழித்த பின்ன, அடுத்ததை பற்றி யோசிக்கலாம். அங்க போனாலும் மனசு அடிச்சிக்கும் என்றார் செல்வம்.
அதுவும் சரி தானென்றவர்கள், சரி நாம வேன்லே படுத்துக்கலாம் என்றனர்.
பேஷன்ட் கூட யாரும் இப்போதைக்கு இருக்க விடமாட்டாங்க என்று சொல்லிய நிக்கி, நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இன்னும் ரெண்டு ரூம் போட்டுக்கலாம், வாங்க போகலாமென்று எல்லாரையும் அழைத்துக்கொண்டு போனான்.
லாரன்ஸும் வேதாவை பார்த்துட்டு , நாளைக்கு போய்கலாம்பானு சொல்லி விட்டார்.
கவிதா மட்டும் ஹாஸ்பிட்டலில் இருக்கேனென்க, சரி என்றவன் அங்கிருந்த சிஸ்டரிடம் பேசி விட்டு, அவரை வேதா இருக்கும் ஐ. சி. யு. அறையில் விட்டு விட்டு, மற்றவர்களெல்லாரும் ரூமிற்கு வந்து, வாங்கி வந்த டிபனை கடமைக்கு சாப்பிட்டு படுத்து விட்டனர்.
படுத்தாலும் யாருக்கும் உறக்கம் அவ்வளவு சீக்கிரமாக வரவில்லை, பின்னர் உறங்கி விட்டனர்.
விடியல் ஆரம்பமானது. ரூமிலே ஒவ்வொருவராக குளித்தவர்கள், நேற்று போட்டிருந்த டிரஸையே போட்டுக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.
நிகிலேஷ் உள்ளே போய் பார்க்க, வேதா விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.
அங்கிருந்த சிஸ்டரிடம் எப்போ எழுந்தாங்கனு கேட்டு தெரிந்து கொண்டவன், வேதாவின் அருகில் சேரை போட்டு உட்கார்ந்தவன், நான் என்று சொல்லவர, டாக்டர். நிகிலேஷ் சந்தர் கார்டியாலஜிஸ்ட் என்றார் வேதா.
ஓஓஓ... என்னை தெரியுமானு நிக்கி கேட்க?,எஸ் டாக்டர். நான் அசாம்ல வொர்க் பண்ணிய ஹாஸ்பிட்டலுக்கு, நீங்க வந்துருக்கீங்க.
இதழ் பிரியாமல் சிரித்தவன், அப்போ உங்க ஹெல்த் கன்டிஷன் பற்றி உங்களுக்கு தெரியும் தானே?.
ம்ம் என்றவரிடம் சர்ஜரி பண்ணனும் என்க, கண்ணை மூடி திறந்தவர், என் தாமரையை பார்க்காமல் நான் டிரிட்மென்ட் எடுத்துக்க மாட்டேனென்று சொல்லி விட்டார்.
டாக்டராக எவ்வளவோ நிக்கி பேசி பார்த்து விட்டான். ஆனால் தனது முடிவிலிருந்து வேதா மாறவில்லை.
வெளியே வந்தவன் விஷயத்தை சொல்ல, கேட்டவர்களுக்கு இப்போ என்ன செய்வதென்று புரியவில்லை.
நான் போய் வேதா கிட்ட பேசி பார்க்கட்டுமானு பெருமாள் கேட்க, போங்க என்றான்.
கதவை திறந்து உள்ளே வந்த பெருமாளை,பெட்டில் படுத்திருந்த வேதா சிறிதும் எதிர் பார்க்கவில்லை.
அம்மாடி வேதா என்று கண் கலங்க, நல்லா இருக்கீங்களா மாமா என்று கேட்க, நீ எப்படி இருக்க தாயி?.
உசுரோட தான் இருக்கேன் மாமானு வேதா சொல்லும் போதே, அவர் கண்ணிலிருந்து நீர் வழிந்தோடியது.
இந்த மாமனை மன்னிச்சிடுத்தா, உன் வாழ்க்கையை நான் தெரியாம கெடுத்துட்டேனென்று கை கூப்ப, அய்யோ மாமா, என்று பதறிய வேதாவிற்கு மேல் மூச்சு வாங்கியது.
மானிட்டரின் சத்தம் கேட்டு ஓடி வந்த நர்ஸ், சார் அவங்க கிட்ட அதிர்ச்சியான விஷயம் எதுவும் பேசாதீங்க.
தயவு செய்து கொஞ்சம் வெளியில போங்க சார் என்றவர், மேடம் நீங்க ரொம்ப ஸ்டெயின் பண்ணாதீங்க என்றார்.
ஒரு நிமிஷமென்ற வேதா, மாமா தாமரையை பார்க்காமல் நான் எந்த முடிவுக்கும் வரமாட்டேனென்று சொல்லிவிட்டார்.
வெளியே வந்த பெருமாளும் நிக்கி சொன்னதையே சொல்லி கண்கலங்க, இப்போ என்ன தாமரை வந்தால் சரியாகிட போகுது என்றபடியே, தனது ஃபோனிலிருந்து யாருக்கோ கால் பண்ணி பேசிய வெற்றிவேல், ஏதோ சொல்லி விட்டு வைத்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் வெற்றிவேலுக்கு கால் வந்தது. அட்டென் பண்ணி பேசியவர் அங்கு சொன்னதை கேட்டு விட்டு, சரி இனி நான் பார்த்துக்குறேன்.
உங்க உதவிக்கு நன்றி என்றார்.
பின்னர் தனது ஃபோனிற்கு வந்திருந்த மெசேஜை ஓப்பன் பண்ணியவர், அதிலிருந்த நம்பரை பார்த்து புருவத்தை சுருக்கினார், பின்னர் அந்த நம்பருக்கு கால் பண்ணினார்.
அங்கிருப்பவர்களுக்கு, வெற்றிவேல் என்ன செய்கிறார் என்பது புரியவில்லை.