• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
நீலகிரி!

மாலை போட்டிருக்கும் பெற்றோர்கள் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், ச்சை, எத்தனை நாளைக்கு தான் நல்லவளாக இருக்க போலவே நான் நடிக்கிறது?.


இப்போ தான் நிம்மதியா இருக்கு.சரி போனது தான் போனீங்களே, என்னையும் கூப்பிட்டு போயிருக்க வேண்டியது தானே?.

அப்போ,என்னை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா நீங்க போய் சேர்ந்ததுக்கு, நான் எதுக்கு உங்களை நினைத்து அழனும்?.

நெவர்.... இந்த பவி உங்களுக்காக ஒரு நாளும் கண்ணீர் சிந்த மாட்டாளென்று அங்கிருந்து எழுந்து போய், ஷோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

இவ்வளவு நேரம்,எப்படியும் அந்த தாமரைக்கு நம்ப அப்பா, அம்மா இறந்த விஷயம் தெரியாமலா இருக்கும்?.

ஒரு வார்த்தை கூட அவளுக்கு விசாரிக்க முடியலை போல?...

அது இருந்தாலும், மருது கூட எனக்கு நடந்த கல்யாணத்தை பற்றி வேதா ஆன்ட்டி சொல்லியிருப்பாங்க...

ஹாஹாஹா... அதைக்கேட்டு நீ இடிஞ்சி போய் உட்கார்ந்திருப்படி....என் கிட்ட தோற்றுட்ட தாமரைனு சிரிக்கும் போது, கைத்தட்டும் சத்தம் கேட்டு பட்டென்று திரும்பி பார்க்க,அங்கே மருது நின்று கொண்டிருந்தான்.

அவனைப்பார்த்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தவள்,வாங்க மிஸ்டர். புருஷா என்றாள்.

ஹாஹாஹா.... இப்பவும் நீ தான் டி தாமரை கிட்ட தோற்றுப்போனாயென்று மருது சொல்ல,என்னாஆஆஆ என்று அதிர்ந்து எழுந்தாள்.

எஸ்.... தாமரைக்கு கல்யாணம் ஆகிட்டு. அதும் உனக்கு முன்னாடியே..அவளோட நல்ல மனசுக்கு அவளுக்கு நல்லது தான் நடக்கும் டி. உன் கேவலமான புத்திக்கு என்று சொல்ல வந்தவன்,ச்சை....உன்னை போல விஷப்பாம்போட உண்மை குணம் தெரியாமல்,இத்தனை நாளா இருந்ததை நினைத்து வெட்கமா இருக்குடி.

அப்புறம், கூடிய சீக்கிரம் உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் வரும், மரியாதையா கையெழுத்து போட்டு அனுப்பி வைக்குற.

இதுலையும் எதாவது டிராமா பண்ண முயற்சி பண்ணுனேனு தெரிஞ்சிது வெட்டி போட்டுருவேன் என்றவன், உன் முகத்தில முழிக்கிறதே பாவமென்று அங்கிருந்து சென்று விட்டான் .

என்னா டைவர்ஸா?, இப்படி ஒரு அதிரடியான வார்த்தையை, மருதுவிடமிருந்து பவி சிறிதும் எதிர் பார்க்கவில்லை .

இந்த முறையும் அவள் கிட்ட நான் தோற்றுவிட்டேனா அய்யோஓஓஓ என்று கத்தியவள், கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கீழே தள்ளி விட்டவளோ வெறி பிடித்த போல நின்றாள்.

என்னைக்கு அவள் வந்தாளோ, அதிலிருந்து எனக்கு எல்லாவற்றிலும் இரண்டாம் இடம் தானா?.

ஏன்?ஏன்? எனக்கு மட்டும் இப்படி நடக்குது?.திரும்பவும் அவள் கிட்ட தோல்வியா என்று கண்ணாடியை பார்த்து பேசியவள், முதல்ல இவனை பற்றி யோசிப்போமென்று முடிவெடுத்தாள்.

இவன் சொன்னா செய்யுற ஆளாச்சே, இவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவளுக்கு, மயிலாவின் அப்பாவி குணம் ஞாபகம் வந்தது.

சூப்பர்... இந்த அம்மாவை வைத்து தான் அவனை நம்ப வழிக்கு வர வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தவள், எப்படியும் இரவு உணவு சமைக்க இங்கே வருவாங்க.

அவங்க கிட்ட அழுது நடித்தால் நம்பிடுவாங்களென்று கணக்கு போட்டவள், மதியம் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுறதே பரம சுகமென்று சொல்லிக்கொண்டே, தனது அறைக்குள் சென்று மெத்தையில் படுத்தவள், நிம்மதியாக தூங்கி எழுந்து கண்ணை திறக்க அறை முழுவதும் இருட்டாக இருந்தது.

என்ன இவ்வளவு இருட்டாயிடுச்சு?,ரொம்ப நேரம் தூங்கிட்டோமோனு சொல்லிக் கொண்டு, வெளியே வந்து பார்க்க,வீடு முழுவதும் இருட்டாக தான் இருந்தது.

இவ்வளவு நேரம் அவங்க சமைச்சிக்கிட்டு இருப்பாங்களே, என்று யோசித்துக் கொண்டே ஹாலில் இருக்கும் லைட் சுவிட்சை ஆன் பண்ணி விட்டு, கதவை திறந்து வாசல் பக்கம் பார்க்க,அங்கும் இருட்டாக தான் இருந்தது.

என்னாச்சு இவங்களுக்கு?, என்று முணுமுணுத்தவள், வெளியேயும் லைட்டை ஆன் பண்ணி விட்டு, உள்ளே வந்தவள் பால் அடுப்பில் வைத்து விட்டு, முகத்தை கழுவி விட்டு வர, பாலும் கொதித்துக்கொண்டிருந்தது.

பின்னர் அடுப்பை ஆஃப் பண்ணி,காஃபி போட்டு எடுத்துக்கொண்டவள், ஷோஃபாவில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது, வெளியே இருக்கும் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

அதானே,அவங்களாவது இவ்ளோ நேரம் வராமல் இருப்பதானு உள்ளுக்குள் குதூகலித்தவளோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.

முன் கதவை இரண்டு முறை தட்டி விட்டு, கையிலிருந்த உணவு கூடையை, உள்ளே எட்டி வைத்த மூக்கையன், இதுல சாப்பாடு இருக்குமானு சொல்லி விட்டு, திண்ணைக்கு வந்து படுத்தவர், போர்வையால் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டார் .

அதேப்போல் அதற்கு அடுத்த வந்த நாட்களிலும், மூக்கையன் தான் பவிக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துட்டு போனார்.

மயிலா அவள் இருக்கும் திசை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. ரொம்ப கோவமா இருக்காங்க போலனு மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், ஒன்பதாம் நாள் காரியம் முடியட்டும் பிறகு பேசி ஒரு வழி பண்ணிடலாமென்று மிதப்பாக இருந்தாள்.

சதாரா....

பூரணி சொல்லிய பொருட்களை எடுக்கப் போக, அங்கிருந்த ஜன்னலுக்கு தோரணம் கட்டிக் கொண்டிருந்தவன், முன்னாள் கணவனுக்காக விரதமா?,இல்லை வரப்போற கணவனுக்காக விரதமா? என,தாமரை காதில் மட்டும் விழும் படியாக கேட்டான்.

அவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவள், எவனுக்காகவும் இல்லையென்றாள்.

அப்படியா என்று சந்தேகமாக கேட்டவன், பெண்கள் விரதம் இருந்தால் புருஷனுக்காக இருப்பாங்கள்.

இல்லை என்றால் வரப்போற புருஷனுக்காக இருப்பாங்கள். இது ரெண்டுமே இல்லாமல்,நீ எதுக்கு இருக்குற?, சும்மா என்று சொல்லி விட்டு பொருட்கள் இருந்து பையை எடுத்துக் கொண்டு,சாமி அறைக்குள் சென்று விட்டாள்.

பையில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்து கீழே வைத்துக் கொண்டிருக்கும் போது, பூரணியும் அவளோடு வந்து இணைந்து கொண்டார்.

முதல்ல அம்மனுக்கு கலசத்தை ரெடி பண்ணிடலாம் தாமரை என்றவர்,கையோடு கழுவி எடுத்து வந்த கலசத்தில்,மஞ்சள், குங்குமம், சந்தனத்தை பொட்டாக சுற்றியும் வைத்தார்.

அந்த மஞ்சள் நூல் கண்டை குடுமா என்க, தாமரை எடுத்துக்கொடுக்க, அதை கலசத்தின் கழுத்து பகுதியில் சிறிது சுற்றி, முடிச்சை போட்டு விட்டு, மீதம் உள்ள நூலை கட் பண்ணி எடுத்து வைத்தார்.இத்தனை வருஷமா என் மாமியாருக்கு பிறகு, நான் தான் இதை செஞ்சிட்டு வரேன்.

லீனா இதையெல்லாம் செய்ய மாட்டாள்.இந்த வருஷம் நீ செய்யுறியா?, எனக்கு என்ன செய்யனுமென்று தெரியாதுங்கம்மானு தாமரை சொல்ல, நான் சொல்லி தரேன்.அதே போல செய்யுமா.

சரிங்கம்மா என்றவளிடம், மகாலட்சுமியை நல்லா வேண்டிக்கிட்டு, முதல்ல பச்சரிசி எடுத்து கலசத்துக்குள் போடு தாமரை என்க, அதேப்போல் போட்டாள்.

அடுத்து என்னம்மா பண்ணனுமென்க,எலுமிச்சம் பழம், மஞ்சள், நாணயம், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு,காதோல கருகமணி,இதை எல்லாத்தையும் கலசத்துக்குள் வை என்க, அனைத்தையும் உள்ளே வைத்ததும் கலசம் நிரப்பிட்டு.

இந்தா, அந்த தேங்காயை போய் நல்லா கழுவி எடுத்துட்டு வா.

தாமரையும் சொன்னதை செய்து வர,இதை கலசத்தின் மேல வைம்மா.சரிம்மா என்றவள், தேங்காயை கலசத்தின் மேலே வைத்தாள்.

இப்போ, இந்த கலசத்தில் மேல இருக்கும் தேங்காய் தான் நமக்கு அம்மன் சரியா.இதை அம்மன் போல அலங்காரம் பண்ணென்று சொல்லிவிட்டு எழுந்து சென்றவர்,பீரோவிலிருந்து சிறிது நகைகளை எடுத்துட்டு வந்தார்.

அதற்குள் தாமரை, அங்கிருந்த பொருட்களை வைத்து தேங்காயை அம்மன் போல் அழகாக ஜோடித்திருந்தாள்.

அம்மா மகாலட்சுமி எல்லாரையும் நீதான் காப்பாற்றனுமென்று வேண்டிக்கொண்டு, நகைகளை அவளிடம் கொடுத்தவர் இதை அம்மன் கழுத்தில் போடு என்க, தாமரையும் அவர் சொல்லிய போலவே செய்து முடித்தாள்.

அவ்வளவு தான் இனி பிரசாதம் செய்ய வேண்டியது தான்.அழகா பண்ணிருக்கமானு அவள் நெற்றியின் இருபுறமும் கைகளால் சுழற்றி நெட்டி முறித்தவர், மாறா இங்கு வந்து பாறேனென்றார்.

என்னமானு அங்கு வந்தவனிடம் அம்மனை பாருடா என்க, வாவ் சூப்பரா இருக்குமா..இத்தனை வருஷம் இல்லாமல்,இந்த வருஷம் மட்டும் ரொம்ப அழகா பண்ணிருக்கியேமா.

நான் பண்ணலை.இந்த முறை அம்மனுக்கு அலங்காரம் செய்தது எல்லாம் தாமரை தான்பா

ஓஓஓ என்றவன், அவளை பார்த்து ரொம்ப அழகா இருக்கென்றான். தேங்க்யூ சாரென்கவும், மூஞ்சியும் மொகரையும் பாரு, திரும்ப சாரு, நோருனு மனதிற்குள் அவளை திட்டியவனோ அங்கிருந்து சென்று விட்டான்.

பின்னர் பூரணியும், தாமரையும் கிச்சனிற்குள் சென்று,எதற்காக வரலட்சுமி நோன்பு இருக்கிறோம் என்பதை அவளுக்கு சொல்லிக் கொண்டே, சாய்ந்தரம் அம்மனுக்கு படைப்பதற்காக பிரசாதத்தை செய்து முடித்தனர்.

எல்லாம் முடிய நான்கு மணியானது. இடையில், பால், பழம் சாப்பிடச்சொல்லி அவளை சொல்ல, வேண்டாம்மா என்று சொல்லி விட்டாள்.சரிடா தாமரை, நீ போய்ட்டு ரெடியாகிட்டு,மாலை 5:00 மணிக்குலாம் கீழே வந்துருமா.

எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்கனு பூரணி சொல்ல, சரிங்கம்மானு சொல்லிக்கொண்டு மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்தவள், பூஜைக்கு என்ன டிரஸ் போடலாமென்று டிராலி பேகை எடுத்து ஆராய்ந்தவள், எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்த புடவை அவள் கண்ணில் பட்டது.

அதை எடுத்து வைத்தவள், பெரியவர்கள் நிறைய பேர் வருவாங்க, நாம சுடிதார் போட்டுகிட்டு நின்றால் நல்லா இருக்காது.புடவையே கட்டிப்போமென்று முடிவு செய்தவள், கதவை லாக் பண்ணி விட்டு குளிக்கச்சென்றாள்.

சிறிது நேரத்தில் குளித்து வந்தவள், ஆரஞ்சு நிறத்தில் அங்கங்கே, கோல்டன் கலரில் சின்ன சின்ன மயில் போட்டிருந்த மைசூர் சில்க்ஸ் புடவையை கட்டிக்கொண்டவள், அதற்கு மேட்சாக உள்ள நகைகளை தேடினாள்.

கோல்டே நல்லா இருக்குமென்று தோன்ற, ஆரி வொர்க் செய்த பிளவுஸும் கோல்டு கலர் என்பதால், கழுத்திற்கு மட்டும் வேதா வாங்கி கொடுத்த நகையை போட்டவள், கைக்கும், காதுக்கும் ஆரஞ்சு கலர் தோடும், வளையலையும் தேடி எடுத்து போட்டுக்கொண்டாள்.

நல்லவேளை வரும் அவசரத்தில் இந்த மேக்கப் கிட்டை எடுத்து வந்தோமென்று சொல்லிக்கொண்டே பொட்டை நெற்றியில் வைத்தவள், ஒரு முறை கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது.

ஓகே தாமரை இனி கீழே போகலாமென்று சொல்லியவள், தனது ஃபோனை ஆப் பண்ணி வைத்து விட்டு, அறைக்கதவை பூட்டிக்கொண்டு கீழே வந்தவளை, வாசலில் நின்று கொண்டிருந்த மாறனோ,இரு கண்களை அகலமாக விரித்து பார்த்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சென்னை விமான நிலையம்!

அசாமிலிருந்து வந்த விமானம், நள்ளிரவு மூன்று மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து லேண்ட் ஆனது.


நால்வரும் இறங்கி வந்தவர்கள்,அடுத்த மதுரைக்கான பிளைட் இன்னும் ஒரு மணி நேரம் இருப்பது தெரிய, ஏர்போர்டின் உள்ளே இருக்கும் ரெஸ்டாரன்டிற்குள் மூவரையும் அழைத்துப்போன நவீன், அவர்களுக்கு விருப்பமான, டீ, காஃபியை ஆர்டர் செய்தான்.

அமைச்சர் வெற்றிவேலின் பாதுகாப்பு கருதி வந்திருந்த எஸ்கார்ட் இருவரும்,எங்களுக்கு வேண்டாமென்று சொல்லி விட்டதால், இவர்களை மட்டும் இங்கு கூப்பிட்டு வந்தான்.

பின்னர் இவர்களுக்கான ஏர் இந்தியா விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும், வழக்கமான பார்மாலிட்டீஸை முடித்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

ஒரு மணி நேரம், பத்து நிமிடம் வானில் பறந்து வந்த விமானம், மதுரையில் வந்து லேண்ட் ஆனது.

அங்கும் வழக்கமான செக்கிங்கை முடித்துக்கொண்டு வெளியே வர, இவர்களுக்காய் வர்ஷன் அனுப்பி வைத்த இன்னோவா கார் வந்து நிற்க,அதில் ஏறிக்கொண்டனர்.

திலகாவிற்கும், சிந்துவிற்கும் எங்கே தான் இவன் கூப்பிட்டு போறானோ என்று குழப்பமாக இருந்தது.

ஆனால் அதைக்கேட்டு, நவீனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விருப்பமில்லை.

கார் மதுரையை தாண்டி சென்றது. பயண களைப்பில் நடு சீட்டில் உட்கார்ந்திருந்த திலகா, சிந்து இருவரும் சீட்டில் சாய்ந்து தூங்கி விட்டனர்.

ஃபோனில் இருக்கும் மேப்பை பார்த்துக்கொண்டே இதுவரை தன் வாழ்வில் ஒரு முறை கூட கேள்விப்படாத ஊரை நோக்கி, காரை ஒட்டிக் கொண்டிருந்தான் நவீன்.

போகும் வழியில் இருந்த ஹோட்டலில் காலை டிபனையும் முடித்துக்கொண்டனர்.டேய் எவ்வளவு நேரம் நீயே டிரைவிங் பண்ணுவ,வந்த டிரைவரையும் வேண்டானு சொல்லி விட்டாய்.

காரை ஓரமா நிறுத்துடா, நான் ஓட்டுறேனென்று வெற்றிவேல் சொல்ல, வயசான காலத்தில் எதுக்கு இந்த விளையாட்டுனு சிரித்தான்.

சார் நாங்க டிரைவிங் பண்ணுறோமென்று எஸ்கார்டுக்கு வந்த ஆபிஸருங்கள் சொல்ல, பிரச்சினை இல்லை என்று நவீனே ஓட்டினான்.

தெரியாத ஏரியாவாக இருந்தாலும்,எட்டு மணி நேரத்தில் சீமக்கரை எல்லைக்குள் வந்து சேர்ந்திருந்தான்.

சரியா தூக்கமில்லாததால் வரும் வழியில் தலைவலி என்று சொல்லி, சிந்து டேப்லெட் போட்டு படுத்துவிட்டாதால் தனது பூர்வீக எல்லைக்குள் வந்தது தெரியவில்லை.

சீமக்கரை...

சீமக்கரையின் செம்மண் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது, கதிரின் வீடு இருக்கும் லொக்கேஷனை, நவீன் நம்பருக்கு வர்ஷன் அனுப்பியிருந்தான்.

ஊரை பார்த்ததும் திலகாவிற்கு புரிந்து இந்த ஊரென்று வாயை திறக்க, அதற்கு நவீனோ எதுவும் பேசக்கூடாதெ ன்று சொல்லி விட்டான்.

நவீனுக்கு எப்படி இந்த ஊர் தெரிந்ததுன திலகாவிற்கோ மண்டையை பிய்துக்கொண்டு போனது.

கணவரிடமும் கேட்க முடியவில்லை.

பக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் தனது பள்ளிகால தோழியை பார்த்தவர், கடவுளின் சித்தம் இது தான் போலனு உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்.

முக்கால் மணி நேரம் பயணம் செய்த கார், அந்த பெரிய வீட்டின் முன்பு வந்து நின்றது.அக்கம் பக்கத்தினர் யார் வந்திருப்பார்களென்று எட்டி பார்ப்பது தெரிந்தது.

காரில் இருந்தபடியே, நவீன் தனது தாயின் பிறந்த வீட்டை பார்த்தான்.

பின்னர், அத்தை உங்க தோழியை எழுப்புங்க என்க, கண்ணா என்னடா இப்படியென்று திலகா கேட்க, எதுவும் சொல்லாமல் நவீன் முறைத்து பார்க்க, எழுப்புறேன் இரு கண்ணா.

ஏய் சிந்து, சிந்து என்று தோளில் தட்ட, சொல்லு திலோ என்றவாறே தூங்கி எழுந்தவர், நாம எங்கே வந்திருக்கோமென்க,டிரைவர் சீட்டில் இருந்த நவீன்,ம்ம் விண்வெளிக்கு என்றான்.

மாமா கீழே இறங்குற எண்ணமில்லையா என்றவாறே கதவை திறந்து வெளியே இறங்க போக, போலிஸ் வாகனமும் அங்கு வந்து நின்றது.

ஊருக்குள் போலிஸ் வந்ததை பார்த்து, என்னாச்சோ?, ஏதாச்சோனு கதிரின் வீட்டிற்கு சில அடி தொலைவில் நின்று மக்கள் எட்டி பார்த்தனர்.

காரிலிருந்து இறங்கிய போலீஸ்கள் வெற்றிவேல் அருகில் வர,அவரும் கீழே இறங்கி வந்தார்.

அவருக்கு மரியாதை நிமித்தமாக போலீஸ்காரர்கள் வணக்கம் வைக்க, தலையசைப்போடு ஏற்றுக்கொண்டவர், எதற்கு இதெல்லாம்?.

அந்த நேரம் வயலுக்கு சென்றிருந்த கதிர், வேலு, பிரகாசம் தாத்தா மூவரும் வீட்டிற்கு வர, வாசலில் கூட்டம் நிற்பதை தூரத்திலிருந்து பார்த்து, என்னாச்சு என்று பதறிப்போய் வேகமாக வந்தனர்.

அங்கிருந்த போலிஸையும், மற்றவர்களையும் பார்த்து, இவங்க எதுக்கு நம்ப வீட்டுக்கு முன்ன வந்து நிக்கிறாங்களென்று யோசனையாகினர்.

வாசலுக்கு சில அடிகள் தூரத்தில் வந்தவர்களை பார்த்த நவீன், காரிலிருந்து கீழே இறங்க, அவனை பார்த்து மூவரும் அதிர்ந்தனர்.

சார் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எங்களோட கடமையென்ற எஸ். ஐ, இரண்டு போலீசுங்களை அங்கு இருக்க சொல்லி விட்டு, வெற்றிவேலிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஆமா, இது எந்த ஊருடி திலோ என்றபடியே கீழே இறங்கிய சிந்துவிற்கு, அது சீமக்கரை என்று தெரியவில்லை.

முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு வந்திருப்பதால், அங்கிருந்த மாற்றங்களால், தனது ஊர் என்பதை கண்டு பிடிக்க வழியில்லாமல் போய்விட்டது.

பார்வையை சுழற்றி பார்த்தவரின் கண்களில்,அவர் நிற்கும் இடத்திலிருந்து சில அடி தொலைவில் நின்று கொண்டிருந்த பிரகாசம் தெரிய, அப்பா என்று சொல்லியபடியே மயங்கி கீழே சரிந்தார்.

கோவை....

எம். டி வந்திருப்பாரா என்ற யோசனையோடே தான் வேலை பார்க்கும் டெக்ஸ்டைல்ஸின் ஆபிஸிற்குள் மருது வந்து சேர்ந்தான்.

அவனை பார்த்த அங்கிருந்த அட்டென்டர், என்ன தம்பி, நேற்று தான் ஒரு மாசம் லீவ் கேட்டு போனீயேப்பா என்க, ஆமாணா.

ஒரு முக்கியமான விஷயமா சாரை பார்க்கனும்ணா.

சார் வந்துட்டாங்களாணா?.

வரும் நேரம் தான்.வா,வந்து உட்காரென்று அங்கிருந்த சேரை காட்டினார்.

இருக்கட்டும்ணா என்றபடியே மணியை பார்க்க,காலை பத்து மணியாக ஐந்து நிமிடம் இருந்தது.

அப்பொழுது ஷூவின் சத்தம் கேட்டு, எம்.டி தான் வருகிறார் என்பது இருவருக்கும் புரிந்தது.

அருகில் வந்தவரை பார்த்து இருவரும் விஷ் பண்ண,ஒரு நொடி மருதுவை பார்த்தவர்,பின்னர் தலையசைத்து விட்டு,தனது ரூம் கதவை திறந்து உள்ளே வந்தவர்,அங்கிருந்த அவரின் தாத்தாவின் படத்திற்கு முன்பு நின்று வணங்கி விட்டு, தனது சேரில் உட்கார்ந்து கொண்டார்.

சிறிது நொடிகள் சென்று கதவை தட்டி உள்ளே வந்த அட்டென்டர்,சார் மருது தம்பி உங்களை பார்க்க வந்துருக்கு, வரச்சொல்லட்டுமா?

ம்ம் வரச்சொல்லுங்க.

சரிங்க சார் என்றவர்,சார் வர சொல்லுறாங்க போப்பா என்க, சரிங்கண்ணா என்றவன், கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவனை பார்த்தவர், சொல்லுங்க மருது.

சார்... என்று மருது இழுக்க, நேற்று தானே லீவ் கேட்டு போனீங்க ,ஆமாம் சார்.

உங்க கிட்ட ஒரு விஷயமா கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேனென்றான்.

சொல்லுங்க மருது, எதாவது பண உதவி வேண்டுமா?, தயங்காமல் கேளுங்க. அய்யோ இல்லைங்க சார்.

நீங்கள் குடுக்கும் சம்பளமே தேவைக்கு அதிகமாகவே இருக்குங்க சார் என்றவனுக்கு,உங்க திறமைக்கான ஊதியம் பா.

சரி வேற என்ன?

நம்ப சவுதில இருக்க பிராஞ்சுக்கு போகுறியானு ரெண்டு மாசத்துக்கு முன்பு கேட்டீங்களே சார்,இப்போ அங்க நான் போகட்டுமானு தயங்கிக்கொண்டே கேட்டான்.

தெய்வமே என்று இரு கையையும் தனது தாத்தாவின் புகைப்படத்தை நோக்கி வணங்கியவர், உண்மையாவா?.

ஆமாங்க சார்.

ம்ம்..அதிகாலையில நம்ப சவுதில இருக்கும் பார்ட்னர் கால் பண்ணி,அங்கிருந்த மேனேஜர்கு ஆக்ஸிடென்ட் ஆகிட்டு.உடனே அந்த இடத்திற்கு வேறு நம்பிக்கையான ஆள் போடனும்னு சொன்னார்.

அதைக்கேட்டதிலிருந்து என்னடா பண்ணுறது?, திடீர்னு யாரை நம்பி அவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்குறதுனு, இவ்வளவு நேரம் மனசுக்குள்ள பயங்கர யோசனை ஓடிட்டு இருந்துச்சு.அந்த தெய்வமே உன் மூலயமாய் உதவி செய்துட்டாரென்றவர், தாராளமா போங்க.

பாஸ்போர்ட் இருக்கு தானே?.

இருக்குங்க சார்.

ஒரு நிமிஷம் என்றபடியே, தனது பார்ட்னருக்கு ஃபோன் பண்ணி மருதுக்கு உடனடியாக விசாவையும், டிக்கெட்டையும் அனுப்பச்சொல்லி வைத்தார்.

மருது அங்க நம்ப கம்பெனி குவாட்டர்ஸ் இருக்கு,போக வருவதற்கு கார் வசதி, குக்கிங்குக்கு நம்ப தமிழ்நாட்டுக்கார தம்பதிகள் இருக்காங்க.

உங்களோட சம்பளம் டீட்டைல்ஸ் எல்லாம் அங்க போன பிறகு,நசீர் சொல்லுவரென்றார்.அவர் சொன்னதையெல்லாம் கேட்டவனுக்கு, ஆனந்த அதிர்சியில் தலை கால் புரியவில்லை.

இவ்வளவு சீக்கிரம் நான் கேட்டதற்கு ஓகே சொல்லுவீங்கனு கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. ரொம்ப நன்றிங்க சார்.

நோ,நோ,மருது.

எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலில் நம்ப கம்பெனிக்கு நீங்களாக வந்து கேட்டது பரம திருப்தி.எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் நீங்க சவுதிக்கு போற போல இருக்கும்.

அதுக்குள் மெடிக்கல் டெஸ்ட் எடுத்துக்குங்க என்றவரிடம், சார் போன வீக் தானே நம்ப ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் புல் பாடி மெடிக்கல் டெஸ்ட் எடுத்தோமென்றான்.

ஆமா.அதை ஒரு காப்பி என் மெயிலுக்கு அனுப்பிடுங்க என்றவர்,அதுவரை உங்கள் வேலையை இங்க பார்ப்பதாக இருந்தாலும் பாருங்க.இல்லை லீவ் எடுத்துக்கோங்க.

நோ சார்.நாளையிலிருந்து நான் வேலை பார்க்குறேன் என்றவாறு அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவன், அட்டென்டரிடம் விஷயத்தை சொல்ல,நல்லது தம்பியென்றார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்தவன் தனது பைக்கில் ஏறி, தெரிந்த வக்கீலை பார்க்க சென்றான்.

இவன் போன நேரம் அவர் ஏதோ கேஸ் விஷயமாக, சிலரிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்து,வெளியே வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தான்.

அரை மணி நேரம் சென்ற பின்னர் அவர்கள் வெளியே வர,உள்ளே வந்து விஷ் பண்ணியவனை பார்த்தவர், வாங்க மருதென்றார்.

சார், நண்பனோட டைவர்ஸ் விஷயமா உங்களை பார்க்க வந்தேனென்று சொல்ல,ஓஓ என்றவர்,என்ன விஷயமென்று முதலில் டீடையிலாக சொல்லுங்க.

அவரிடம் இக்கட்டான சூழலில் நடந்த திருமணத்தையும், இருவருக்கும் அது பிடிக்காத திருமணமென்றும், அதிலிருந்து மணவிலக்கு வேண்டுமென்க,கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுதென்றார்.

ஒன் வீக் ஆகப்போகுதுங்க சாரென்று மருது சொல்ல,என்ன ஒன் வீக்கா?, அதற்குள்ளே பிரிய முடிவு பண்ணிட்டாங்களா?.கொஞ்ச நாள் போகட்டும் மருது.

அதாவது நம்ப இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 14 ன் படி, திருமணமான ஒரு வருடத்திற்குள் யாரும் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று சட்டம் சொல்கின்றது.

எதற்காக இந்த இடைவெளி என்றால்,இந்த இடைப்பட்ட நாளில் இருவருக்கும் புரிதல் வந்து சேர்ந்து வாழலாம்.இல்லை புரிதல் வராமலும் போகலாம்.

ஒரு வருடத்திற்கு பிறகும், இருவரும் பிரிந்து போவதில் உறுதியாக இருந்தால்,அப்போ தாராளமாக அப்ளை பண்ணலாம்.

வக்கீலின் வார்த்தைகளை கேட்டவன், சரிங்க சார்,ரொம்ப நன்றி,நான் வரேனென்று கிளம்ப,ஓகே போய்ட்டு வாங்களென்றார்.

சரி முதலில் நாம் சவுதிக்கு போவோம், மற்றதை பிறகு பார்க்கலாமென்று, மனதில் சொல்லிக்கொண்ட மருதுவும் அங்கிருந்து கிளம்பினான்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top