• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தாமரையின் நினைவுகள்!

"இப்படி ஒன்று நடக்கும் என்று, யாரும் நினைத்து பார்க்கவில்லை".

இவ்வளவு நேரம் சுவற்றில் சாய்ந்தமர்ந்தவளோ, கதவை திறந்து வெளியே வந்தாள்."மகளை பார்த்த கவிதா, எம்மாடி என்று எழுந்து அவளிடம் வர, கையை நீட்டி தடுத்தவள், அன்பழகனிடம் சென்றாள்".

மகளை பார்த்தவர், என்னத்தா?.

"உனக்கு என்ன தெரியனும்?.

கவனமாக அப்பா என்று அழைப்பதை தவிர்த்து என்ன நடந்துச்சினு சொல்லுங்க?.

உங்களுக்கும், அவங்க குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை?.

அன்பழகனும் விஷயத்தை சொல்ல தொடங்கினார்.இரண்டு குடும்பத்தின் சொந்தம் எப்படி என்று உனக்கு தெரியும் தான்.அதை மீண்டும் விளக்க வேண்டாம் தானே? என்று மகளிடம் கேட்க, வேண்டாம் என்றாள்.


ம்ம் சரி மா.நன்றாக போய்க்கொண்டிருந்த உறவில் விரிசல் விழ காரணம், பஞ்சாயத்து ஃபோர்டு எலெக்க்ஷன் தான்.எனக்கு விருப்பமில்லை நிற்பதற்கு.

ஆனால் ஊர் மக்களோ, வழி வழியாக நம்ப குடும்பம் அவர்களுக்கு நன்மை செய்வதை கண்டு, என்னோட அப்பாவிற்கு பிறகு,அந்த பதவிக்கு பிடிவாதமாக என்னையும் நிற்க வைத்தனர்.

"ஆனால்,இதற்கு நடுவில் பெருமாளும் அதே போஸ்டிங்கிற்கு போட்டி போட்டார்".எனக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது.

என்னடா, நம்ப மச்சான் ஒரு வார்த்தையும் நம்ம கிட்ட சொல்லாமலே, வேட்பாளரா போட்டியிடுறாரேனு.

நானும் போய் கேட்க, ஏன் உங்களுக்கு மட்டும் தான் இது பொதுச்சொத்தா என்றதும், நான் கிண்டல்னு நினைச்சிட்டேன்.பதவிக்கு யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யனும், என்று தான் என் விருப்பம்.

எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும், நான் பெருமாளுக்கு தான் ஓட்டு போடச்சொன்னேன்.

இந்த நேரத்தில் பேச்சு வார்த்தையிலும் சிறிது இடைவெளி விழுந்தது.

"சொன்ன நாளில் தேர்தலும் வந்தது".

அதைப்போல அறிவித்த நாளில், எலெக்க்ஷன் ரிசல்டும் வந்துச்சி.

என்னால் நம்ப முடியவில்லை.

"ஏனென்றால்,நான் தான் ஜெயிச்சேன்".
எனக்கு பயங்கர அதிர்ச்சியாக தான் இருந்தது அதைக்கேட்டு.

"அப்பொழுது, திடீர்னு என் கிட்ட வந்த பெருமாளுக்கு என்னாச்சினு தெரியலை,சண்டை போட்டான்".

வார்த்தைகள் தடித்து அடி தடி அளவிற்கு போய்விட்டது.

அன்றோடு அவங்க கூட இருந்த உறவும் கட் ஆகிட்டு என்று சொல்லி முடிக்க, அனைத்தையும் கேட்டவள்,மீண்டும் அறைக்குள் சென்று கதவை லாக் பண்ணினாள்.

பின்னர் ரெஸ்ட் ரூமிற்கு சென்றவளோ, ஃப்ரஷ் ஆகி வெளியே வந்தவள், தனது லேப்டாப்பை ஆன் பண்ணி, வி. வி க்கு மெயில் பண்ண, உடனே ரிப்ளை வந்தது.

தனது சூழ்நிலையை தெளிவாக மெயில் அனுப்ப, அதை படித்து பார்த்தவர், ஆறுதல் சொல்லி மேலும் அவளுக்கு நடந்ததை நினைவு படுத்த விரும்பவில்லை.

உனக்கு என்ன செய்யனும் ஏஞ்சல்? என்று பதில் மெயில் வந்தது.

என் கனவு நிறைவேறனும்.

இப்பொழுது என் எண்ணமெல்லாம், அதில் தான் இருக்கின்றது.கண்டவன் செய்த முட்டாள்தனமான செயலை நினைத்து, நான் ஏன் உடைந்து போகனும்?.இப்பொழுது நான் சிங்கப்பூர் வந்தாலும் வீட்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சிடும்.அதனால்,யாருக்கும் தெரியாத இடத்திற்கு நான் போகனும்.
இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு மூச்சு முட்டுற போல இருக்கின்றது.

என் லட்சியம் என்னவென்று, நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை வி. வி.அதை நானே அழிக்க நினைச்சேனென்றால், உயிரோட இருந்தும் பிணம் போல தான் நான் ஆகிடுவேன்.நீங்க கொடுத்த ப்ராஜெக்ட் வேலையை நல்ல படியாக நான் முடிக்கனும்.என் கனவு நிறைவேறனும் என்று மெயில் அனுப்பியிருந்தாள்.

அவள் மெயிலை படித்தவர், பதில் அனுப்பினார்,வெரிகுட்.

இந்த செயலை தான் உன்னிடம் நான் எதிர் பாக்குறேன்.

பெண்கள் குணமே பொதுவாக எதாவது நடந்து விட்டால்,உடைந்து போய் விடுவதையே வழக்கமாக வைத்துக்கொள்கின்றனர்.மீண்டும் ஒருமுறை, நன்கு யோசித்து முடிவு செய் ஏஞ்சல்.இந்திய பெண்கள் தாலி சென்டிமென்டில் ஊறிப்போனவர்கள்.

ஊரறிய நடந்தாலும், இல்லை ஒருவருக்கும் தெரியாமல் நடந்தாலும் அதற்கு பெயர் திருமணம் தான்.நீ அதில் விதி விலக்கென்று உணர்த்திவிட்டாய் மை டியர்.இன்னும் 6 மணி நேரத்தில் உனக்காக, உன் வீட்டு தெரு முனையில் ஒரு கார் நிற்கும்.என் மேல் நம்பிக்கை இருந்தால், உனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதில் ஏறு.மற்றது எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ளுவாங்கள் என்றார் வி. வி.

நம்பிக்கை இல்லாமலா இத்தனை வருஷமாக பேசிக்கிட்டு இருக்கேன்? என்று,கோவமாக இமோஜிகளை போட்டு அனுப்ப, கூல் மைடியர்.

புதிய பயணத்தை தொடங்க வாழ்த்துக்கள் என்று சொல்லி, ஆஃப் லைனிற்கு சென்று விட்டார் வினிதா வில்லியம்ஸ் அலைஸ் வி. வி.

லேப்டாப்பை ஆஃப் பண்ணியவள், தேவையானவைகளை, பேக்கிங் பண்ண ஆரம்பித்தவளுக்கு,கண்ணீர் வழிந்து ஓடியது.

இத்தனை வருடம் தன்னை வளர்த்த, அத்தையம்மாவிடம் கூட சொல்ல முடியாமல், ஓடி ஒளிய வைத்து விட்டானே என்று, கதிர் மேல் கோவம் அதிகமானது.நேரடியாக மோத துப்பு இல்லாமல், இப்படி ஓர் வழிய தேர்ந்தெடுத்திருக்கான் என்றால், பல நாளாக இவன் யோசித்திருக்கனும்.

இவ்வளவு நடந்துருக்கு, ஆனால் நம்மிடம் எதுவும் சொல்லவில்லையே என்று, பெற்றோர்களின் மீதும் கோவம் அதிகமானது தாமரைக்கு.

நேரமும் கடந்து சென்றது.

பின்னர் லட்டர் எழுதி வைத்தவள், தன்னிடமிருந்த பணத்தில் இருந்து, ஏழாயிரத்தை தனியாக எடுத்து, டிராவினுல் வைத்தாள்.

"கலா அப்பாயி கொடுத்த நகைகளையும் சூட்கேஸில் இருந்து எடுத்து, பணத்தோடே வைத்தாள்".

தனது ஃபோனில் இருந்து மணி எத்தனை என்று பார்க்க, நள்ளிரவு இரண்டு என்று காட்டியது.

இன்னும் இரண்டு மணி நேரம் தான் இந்த வீட்டிற்கும், நமக்கும் உள்ள சம்பந்தம் என்று நினைத்தவள்,கண்ணை மூடி தரையில் படுத்தவளுக்கு, வேதாவோடு இருந்த நாட்களெல்லாம் நினைவிற்குள் வந்தது.

அப்பொழுது மருதுவும், பவியோடு இருந்த தருணங்கள் கண் முன் வந்து செல்ல, தரையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

மூன்று வருடமாக தனக்காக காத்திருக்கும் மருதுவை நினைத்து பார்த்தவளுக்கு, வேதனையாக இருந்தது.நிச்சயமாக அவனால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, என்பது தாமரைக்கு புரிந்தது.மானசீகமாக வேதாவிடமும், மருதுவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.

வேதாவிடமே திரும்ப செல்லலாம்.
ஆனால் இந்த நிகழ்வுகளை மீண்டும் நினைக்க அவள் விரும்பவில்லை.
வேதாவின் மேலும் ஒரு பக்கம் வருத்தம் இருந்தது.அவரும் உண்மையை மறைத்து விட்டாரே என்று.

நான் சீமக்கரைக்கு போய் வருகிறேன் என்று சொல்லியபோது, அத்தையம்மா என்னிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கலாம்.அப்பவே தெரிந்திருந்தால் நிச்சயமாக நான் இங்கு வந்திருக்க மாட்டேன்.

இப்படி ஒரு அவலம் எனக்கு நடந்திருக்காதே என்று மனதிற்குள் பேசினாலும், கண்கள் மட்டும் நீரை சிந்த மறக்கவில்லை.தனது செல்ஃபோனில் இருந்து மீண்டும் மணியை பார்க்க, நான்கு ஆக இன்னும் அரைமணி நேரம் இருப்பதாக காட்டியது.

ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவள்,முன்பே எடுத்து வைத்த டிரஸ்ஸை போட்டுக்கொண்டாள்.

பின்னர் தனது நீண்ட முடியை பின்னி முடித்தவள், நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையானது எல்லாம் இருக்கின்றதானு மீண்டும் ஒரு முறை செக் பண்ணி டிராலியை லாக் பண்ணியவள் சத்தம் வராமல் கதவை பொறுமையாக திறந்து பார்க்க, முற்றத்தில் அங்கங்கே வீட்டினர் தூங்குவது தெரிந்தது.

ஒரு கையில் செல்ஃபோனும், இன்னொரு கையில் டிராலி ஃபேகை எடுத்து வெளியே வந்தவள், கதவை மீண்டும் பொறுமையாக சாத்தி விட்டு, கவனமாக நடந்தவள், வீட்டின் இன்னொரு சாவியை எடுத்து,முன் கதவை திறந்து மெல்ல வெளியே வந்தவளை, சுற்றி இருக்கும் இருட்டு தான் வரவேற்தது.

கையில் இருந்த சாவியால் லாக் பண்ணி விட்டு,முன்னெச்சரிக்கையாக திறந்து வைத்த ஜன்னல் வழியாக,சாவியை உள்ளே போட்டு விட்டு ஜன்னலை மூடினாள்.

தனது இஷ்ட தெய்வமான மலையம்மனிடம் கண்ணை மூடி வேண்டியவள், டிராலிஃபேகேடு தெருவில் நடந்து செல்ல,சொன்ன போலவே அவளுக்காக அங்கே கார் நின்று கொண்டிருந்தது.

வேக எட்டுக்களோடு நடந்தவள் காரின் அருகில் நடந்து செல்லும் போது,முன் பக்க கதவை திறந்து ஒரு இளம் பெண் இறங்கினாள்.கிட்ட வந்த தாமரையிடம் ஃபோனை நீட்ட, யோசனையோடே வாங்கி,தனது காதில் வைக்க லீனா தான் பேசினாள்.

தாமரை அவங்களோடு பயப்படாமல் போ என்று சொல்லி லீனா ஃபோனை வைத்ததும், பின் பக்க கதவை திறந்து தாமரையும், அந்த இளம்பெண்ணும் ஏறியதும், கார் அங்கிருந்து கிளம்பியது.


பிளாஷ் பேக்!

மாணவர்களை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் இருவரும் அவரிடம் மதுரைக்கு சென்றதில் இருந்து திரும்ப வந்தது வரை ஒன்று விடாமல் சொல்லினர்.

சரி வாங்க.

அவங்க வீட்ல இருந்து வந்தவங்கள் கிட்ட உண்மைய சொல்லலாம் என்றவர், சிந்து வீட்ல இருந்து யாரு வந்திருக்கா? என்று பார்க்க, பெருமாள் வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.

தலமையாசிரியரோ அட்டென்டரை விட்டு, பெருமாளை அழைத்து வரச்சொன்னார்.வழக்கம் போல் தங்கையை பாராட்ட தான் கூப்பிடுகிறார்கள்னு,மகிழ்ச்சியாக வந்தவரிடம் விஷயத்தை சொல்ல, அதைக்கேட்டவரோ அதிர்ந்தவர்,"என்ன சார் சொல்றீங்க?.உங்களை நம்பி தானே அனுப்பி வச்சோம்".

இப்போ இப்படி சொன்னால் என்ன அர்த்தம்?? என்று சண்டை போட்டவரை,தலைமையாசிரியரும், மற்றவர்களும் சமாதானப்படுத்த வழி தெரியாமல் நின்றார்கள்.

பெருமாள், எங்களுக்கும் இது பேரதிர்ச்சி தான்.உங்கள் நிலமையில் தான் நாங்களும் இருக்கின்றோம். எல்லாரும் இருக்கும் போது, சிந்து மட்டும் எங்கே போனாளென்று தெரியவில்லை.

மதுரையில் உள்ள போலிஸ் ஸ்டேஷனிலும், அந்த ஸ்கூல் தலைமையாசிரியரை விட்டு கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லியிருக்கோம்.

உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால், நீங்களும் வாங்க நேரிலே போய் பார்க்கலாம் என்றார்,அந்த பள்ளியின் தலைமையாசிரியர்.

சார்.... உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை.இப்போ என் தங்கச்சிக்கு என்ன ஆச்சி என்றே தெரியாமல், இதை வீட்டில் எப்படி நான் சொல்வேன்?.ஊருக்குள்ளே இருக்கவங்களுக்கு என் தங்கச்சிய காணும் என்று தெரிந்தால், யாரும் நல்ல விதமாக யோசிக்க மாட்டாங்க சார்.தப்பு தப்பா தான் பேசுவாங்க.

மக்களோட மனநிலை எப்படி யோசிக்கும் என்று, நான் சொல்லி தான் தெரிய வேண்டாம்.சின்ன பொண்ணு சார், என்ன ஆச்சோ?, ஏதாச்சோனு தெரியலையே? என்று கண் கலங்கினார் பெருமாள்.

உங்களை என்னால் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடிகிறது.சீக்கிரமாக சிந்துவை தேடி கண்டுபிடிக்க எல்லா வழியிலும் முயற்சி பண்ணலாம்.

நீங்க தைரியமாக போயிட்டு வாங்க என்று, ஒரு வழியாக பெருமாளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
ஏன் டி, உன் மவளை கூப்பிட போன, மகனையும் இன்னும் காணும்?பொழுதும் சாய்ஞ்சிட்டே, என்றார் பிரகாசம்.கணவரின் பேச்சை கேட்ட வள்ளி,அவங்க மதுரைல இருந்து வர வேணாமா?.என்னமோ,மதுரை எட்டி பாக்குர தூரத்துல இருக்க போல பேசுறீயே?.

அதுவும் சரி தான், மத்ததுங்களாம் எங்கேனு பிரகாசம் கேட்க, கலா கூட காய்கறி தோட்டத்துக்கு போயிருக்குங்க என்றவாறே, தயாரான டீயை எடுத்து வந்து கொடுத்தார்.

அதை வாங்கி குடித்த பிரகாசம், கடைசி வரைக்கும் இவைங்களாம் ஒற்றுமையா இருக்க அந்த ஐயனார் தான் கண் பார்க்கனும் என்று சொல்லிய படியே, டீயை குடித்து முடித்தவர், பாதியில் விட்ட வேலையான, பனை ஓலை பாயை பின்ன தொடங்கினார்.

அரை மணி நேரம் சென்று, வாசலில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு, சோக முகத்தோடு பெருமாள் மட்டும் உள்ளே வந்தார்.

மகனை பார்த்த இருவரும், என்னப்பா?, தங்கச்சி பரிசு வாங்கலைனு சோகமா வெளியேவே இருக்காளா?.

அதான் சத்தம் இல்லை போல என்றவாறு வெளியே வந்து வள்ளியோ திண்ணையில் பார்க்க,அது காலியாக இருந்தது. பெரியவனே, எங்கப்பா உன் தங்கச்சி?வெளியேயும் அவளை காணும் என்க, பெருமாளோ கீழே குனிந்து கொண்டே இருந்தார்.

எலேய் பெரியவனே, அதான் உன் ஆத்தாகாரி கேக்குறாளே?, வாயை தொறக்காம, நீ உம்பாட்டுக்கு பாறைய முழுங்குனவன் போல இருக்கியே என்றார் பிரகாசம்.

தந்தையின் சொல் கேட்டு கண்ணீரோடு நிமிர்ந்தவர், அய்யோ அம்மாஆஆஆ, தங்கச்சிய காணும் மா என்று அழுதார்.

என்னாஆஆஆ என்று இருவரும் அதிர்ந்தனர்.

அடேய் என்னடா சொல்லுறா? என்றவாறே செய்த வேலையை விட்டு விட்டு, பெருமாளிடம் ஓடி வந்தவர்,என் பொண்ணு எங்கேடா?.

அய்யோ அப்பா.... தங்கச்சிய மதுரை பள்ளி கூடத்திலையே காணுமாம்,என்றவர், பள்ளியில் அவரிடம் சொன்னதையெல்லாம் தனது பெற்றோரிடம் சொல்லி அழுதார்.

அதைக்கேட்ட வள்ளியோ நான் பெத்த மவளே எங்கேடி போன?,உனக்கு என்னடி ஆச்சுடி? என்று, நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ, அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.விஷயமோ, காட்டுத்தீ போல கிராமத்திற்குள் பலவிதமாக பரவியது.
சிலரோ சிந்து காணாமல் போய்விட்டாள் என்று பரிதாபப்பட்டனர்.

சில மக்களோ என்ன சமாச்சாரமோ, வயசு அப்படி?, என்று கதையை திரித்தனர்.ஆளாலுக்கு தோன்றிய கதைகளை கட்டினார்கள்.

வயலுக்கு போய்விட்டு வீட்டிற்கு வரும் போது சிவசாமி காதில் சிந்து விஷயம் விழ,அரக்க, பரக்க, மச்சான் வீட்டிற்கு ஓடி வந்தார்.

மச்சான்... மச்சான் என்று குரல் கொடுத்துக்கொண்டே வீட்டிற்குள் வந்தவர், என்ன நடந்துச்சி?. என்னென்னமோ கதை சொல்றாங்களே? என்று பதறினார்.

மாப்பிள்ளை நம்ப புள்ளை சிந்துவ காணும்யா என்றவாறு பிரகாசமும் கதறி அழ,யோவ்...என்ன சின்ன புள்ளை தனமா அழுதுகிட்டு.உடனே வண்டிய கட்டுயா, அந்த ஊரை போய் அலசி எடுத்துடலாம்.

இந்த யோசனை எனக்கு வராம போச்சே என்று சொல்லி, நெற்றியில் அடித்துக்கொண்ட பிரகாசம், பெரியவனே, நாம மதுரைக்கு போய் தேடி பாக்கலாம்யா.

சரிப்பா என்றவன்,பெண்களை வீட்டில் விட்டு விட்டு, பிரகாசம், சிவசாமி, பெருமாள், செல்வம், நால்வரும் அங்கிருந்து சைக்கிளில் ஏறி தேனூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர், சைக்கிள் ஸ்டேன்டிற்குள் போய் சைக்கிளை நிறுத்தி விட்டு நால்வரும் மதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர, சிறிது நிமிடத்தில் பேருந்தும் அங்கிருந்து கிளம்பியது.

விடியற் காலையில் மாட்டுத்தாவணி வந்துட்டு இறங்குங்க என்று நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டே,பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிச்சென்றார்.

நால்வரும் கீழே இறங்கி, அங்கிருந்த டீக்கடையை நோக்கி சென்றவர்கள், நாலு டீ என்று சிவசாமி சொல்லி விட்டு, அங்கிருந்த குவளையில் இருந்த தண்ணீரை டம்ளரில் மொண்டு, சில அடி தள்ளிப்போய் வாயை கொப்பளித்து விட்டு வந்தார்.

அதைப்போல மூவரும் செய்து முடித்து வரவும்,டீ யை போட்டு மாஸ்டர் கண்ணாடி கிளாஸில் ஊற்றி தயாராக வைத்தார்.

எடுத்து குடித்தவர்கள், பள்ளியின் பேரைச்சொல்லி, இங்கிருந்து எவ்வளவு தூரம்? என்று கேட்க,ஐந்து கிலோ மீட்டர் தூரம் என்றும், அந்த பள்ளிக்கூடம் வழியாக போய் வரும் லோக்கல் பஸ்ஸின் நம்பரைச்சொல்லி, அதில் போகச்சொன்னார்.

நான்கு டீக்கும் எவ்வளவு காசு ஆனது என்று கேட்டு, தனது பாக்கெட்டிலிருந்து செல்வம் கொடுத்து விட, பின்னர் அங்கிருந்து, டீக்கடைக்காரர் சொல்லிய பேருந்தை தேடிச்சென்றனர்.

அவர் சொன்ன இடத்தில் போய் நிற்க, பத்து நிமிடங்கள் கடந்து சென்றது.

என்னடா மாப்ளை, இன்னும் பஸ் வரலைனு செல்வம் பெருமாளிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் செல்ல வேண்டிய பஸ்ஸும் அங்கு வந்து நின்றது.

காலை நேரமென்பதால் அங்கங்கே பரபரப்பாக மக்கள் போய்க்கொண்டிருந்தனர்.

நால்வரும் பஸ்ஸுக்குள் சென்று, காலியாக இருந்த சீட்டில் உட்கார,பஸ்ஸும் அங்கிருந்து புறப்பட்டது.

பத்து நிமிடம் சென்ற பின்னர்,இவர்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயரை நடத்துனர் சொல்ல, நால்வரும் இறங்கினர்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து பத்தடி தொலைவில் ,பள்ளிக்கூடம் இருப்பது இவர்களுக்கு தெரிந்தது.நால்வரும் நடந்து சென்று கேட்டின் அருகில் செல்ல, அதுவோ பூட்டியிருந்தது.

மணி என்னனு தெரியலையேபானு சிவசாமி கேட்க, நான் போய் கடையில கேட்டு வரேன் சித்தப்பா என்ற செல்வமோ அங்கிருந்த பெட்டிக்கடைக்கு சென்று விசாரித்து வந்தவர்,வாட்ச்மேன் வரும் நேரம் தானாம் என்றார்.

நால்வரும் இரண்டு பக்கம் ரோட்டையும் பார்த்துக்கொண்டிருக்க, ஐம்பது வயது தக்க ஆண் ஒருவர் சைக்கிளில் வந்து, பள்ளி கேட் முன்பு நிறுத்தி விட்டு, பேன்டில் இருந்த சாவியை எடுத்து, பூட்டை திறந்தார்.

பின்னர் இரும்பு கதவை இரண்டு பக்கம் திறந்து விட்டு, தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று, வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தினார்.

மாமா வாங்க போகலாம் என்று செல்வம் சொல்ல, ம்ம் என்று சொல்லிக்கொண்டே நால்வரும் உள்ளே வந்தனர்.இவர்களை பார்த்த வாட்ச்மேன், என்னவென்று விசாரிக்க, சிவசாமி விஷயத்தை சொன்னார்.

அதற்கு வாட்ச்மேனும், நேற்றே போலீஸ்ல, தலமையாசிரியர் கம்ப்ளைன்ட் குடுத்து விட்டதாகவும், கவலை வேண்டாம் என்று ஆறுதல் படுத்தினார்.

பின்னர் தன்னிடம் உள்ள சிந்துவின் ஃபோட்டோவை காட்டி, கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்கண்ணா.

இந்த புள்ளை நேற்று இங்கேயிருந்து வெளியே போகும் போது பார்த்த ஞாபகம் இருக்கா? என்று கேட்டான் பெருமாள்.

பெருமாள் காட்டிய ஃபோட்டோவை வாங்கி பார்த்தவர்,இந்த பொண்ணா என்று அதிர்ந்தார்!.

ஆமா தம்பி, என் பொண்ணு தான்.

எங்கேப்பா போனாளென்று கண்ணீரோடு பிரகாசம் கேட்க, அய்யா, நேற்று பேச்சு போட்டில பெண்களை பற்றி பேசுனதை கேட்டேன்.என்னா பேச்சு என்று பாராட்டியவர், எல்லாரையும் அனுப்பிய பிறகு தான் நான் வீட்டுக்கு போனேங்கைய்யா.

ஆனால் நீங்க சொல்லுற பாப்பாவ மேடையில் பேசும் போது பார்த்ததோடு சரி என்றார்.

அப்பொழுது தலைமையாசிரியரின் பைக் உள்ளே வர, சார் வந்துட்டாங்க.

நான் சொல்லுறேன், பிறகு உள்ளே வாங்க என்று வாட்ச்மேனும் வேகமாக அங்கிருந்து சென்றார் .

எப்பா ஐயனாரே... எம் புள்ளைக்கு என்ன ஆச்சுனு தெரியலையே என்று சொல்லி பிரகாசம் அழுதார்.

மச்சான் புள்ளைய கண்டு புடிச்சிடலாம், அழாதைய்யா என்றார் சிவசாமி.

குட்மார்னிங் சாரென்று வாட்ச்மேன் சொல்லி விட்டு, வெளியே நின்று கொண்டிருப்பவர்களை பற்றி சொல்ல, உடனே அவங்களை அனுப்பு என்றார்.

அவர்களிடம் வந்தவர், சார் உங்களை கூப்பிடுறாங்க.கவலைப்படாமல் போங்க. நல்லதே நடக்கும்,சரிங்க அண்ணா என்று பெருமாள் சொல்ல, பின்னர் நால்வரும் தலமையாசிரியரின் ரூமிற்கு சென்றனர்.

வணக்கம் சார் என்க, வாங்க வணக்கம் என்றவர் முன்னாடி இந்த சேரை காட்டி அதில் உக்காருங்க.எங்களுக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இந்த ஸ்கூல் ஆரம்பிச்சு 35 வருஷமாகிவிட்டது.இதுவரைக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.

இப்படி விஷயம் என்று கேள்விப்பட்ட உடனே, எனக்கு தெரிஞ்ச போலிஸ் மதுரையில் எஸ்.ஐ ஆக இருக்கிறார். அவரிடம் உடனே நான் சொல்லிவிட்டேன்.அவரும் வந்து விசாரிச்சிட்டு தான் போனார்.

அக்கம் பக்கம் கடையில் உள்ளவங்க எல்லார்கிட்டையும் கேட்டார்.ஆனால் யாருக்கும் எதுவுமே தெரியலைங்க.

அவர் சொன்னதை கேட்ட நால்வருக்கும் குழப்பமாகத்தான் இருந்தது.என்ன நடந்தது என்று தெரியாமல் எங்கே போய் விசாரிப்பதென, மண்டையை பிய்த்துக்கொண்டு போனது.

பாப்பாவை யாரைவது கடத்திருந்தாலும் இவ்வளவு நேரம் எதாவது ஃபோன் வந்திருக்கும், இங்கே அதுவும் இல்லை.

ஒரு வேளை உங்களுக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என்றார் தலமையாசிரியர்.

அந்த அளவுக்கு யாரும் இல்லைங்க சார் என்ற பிரகாசம்,சரிங்க சார். நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல போய் விசாரித்து விட்டு ,ஊருக்கு போகிறோம் என்று சொல்ல, கவலைப்படாம போங்க.
எஸ்.ஐ ரொம்ப நல்லவர். எவ்வளவோ கேஸை சால்வ் பண்ணி கொடுத்திருக்கிறார்.பத்திரமா உங்க பாப்பாவ மீட்டு கொடுப்பாரென்று அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.

மீண்டும் நால்வரும் வெளியே வந்து, அங்கிருந்த பஸ் ஸ்டாப்பிற்கு செல்ல, பேருந்தும் வந்தது.அதில் ஏறி மாட்டுதாவணிக்கு வந்தவர்கள், அங்கிருந்து நடந்தே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

நானும் மாமாவும் உள்ள போய்ட்டு வரோம்.நீங்க ரெண்டு பேரும் வெளியே இருங்களென்று சிவசாமியையும், பிரகாசத்தையும் விட்டு விட்டு, பெருமாளும் செல்வமும் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்றனர்.

அங்கிருந்த ரைட்டரிடம் சென்று எஸ்.ஐ சாரை பார்கனுமென்று சொல்ல,இன்னும் அரை மணி நேரத்தில் அவர் வந்துடுவார் என்றார்.

அதே போல் அரை மணி நேரத்தில் எஸ். ஐ வந்து விட,இருவரும் சென்று வந்த விஷயத்தை சொல்ல அவரும் பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

என்னால் முடிந்த அளவுக்கு நான் தேடி பார்க்கிறேன் என்று எஸ். ஐ சொல்ல,சரிங்க சார் என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர்.

தம்பி எஸ்.ஐ என்ன சொல்றார் என்று சிவசாமி கேட்க,உள்ளே பேசியதை எல்லாம் செல்வம் சொன்னார்.

பின்னர் மனமே இல்லாமல் தேனூருக்கு பஸ் ஏறினர்.பெருமாளோ எஸ்.ஐ கேட்டதையே யோசித்துக்கொண்டு வந்தார்.நடந்த விஷயத்தை பார்த்தால் கடத்தல் போல தெரியவில்லை.

ஒரு வேளை காதல், கீதல் என்று போயிருக்கனும், இல்லை வேறு எதாவது காரணத்திற்காக சிந்துவே ஒளிந்து இருக்கனும்.மற்றபடி வேறு எந்த உள் நோக்கமும் இருப்பது போல தெரியவில்லை என்றார் எஸ்.ஐ.

அதேப்போல் செல்வமும் ,எஸ்.ஐ சொன்னதை பற்றி தான் யோசித்துக் கொண்டே வந்தார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top