Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
காரை செட்டுக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டு,வேகமாக வீட்டின் உள்ளே வந்த வெற்றிக்கு,அங்கு தனது குடும்பத்தாரின் ஃபோட்டோவிற்கு முன்பு, சத்தியமூர்த்தி கண்கலங்கி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
"அப்பா என்று கூப்பிட்டவரே அவரின் தோளின் மேல் சாய்ந்து கொண்டவன், இந்த காதலால் நம்ம குடும்பம் சீரழிந்தது போதும் என்ற எண்ணத்தில் தான்பா,நான் இதைப் பற்றி உங்க கிட்ட சொல்லவில்லை".
" இந்த காதலால் தானேப்பா, இன்னைக்கு நீங்க தனி மரமா நிக்குறீங்க,இதையெல்லாம் நினைத்து தான்,உங்க கிட்ட என்னால சொல்ல முடியவில்லைனு அந்த கம்பீரமான ஆண்மகனான வெற்றிவேல் கண் கலங்கினான்".
"மகனின் பேச்சைக் கேட்டவர்,என்ன பேச்சு பேசுற வெற்றி?,காலம் ரொம்ப கடந்து போய்விட்டதுப்பா".
"எவ்வளவோ மாற்றங்கள் மனித மனதிற்குள்ளும்,ஊருக்குள்ளேயும் வந்துடுச்சு".
"அன்று என்னோட தாத்தா இருந்த பிடிவாதத்துக்கு,என்னோட அப்பா அம்மாவை இழந்தேன்".
" உன் அம்மாவை( வசுந்தரா) வேண்டுமென்று நான் பிரியவில்லை, அதை சொல்வதற்கான வேளையும் இப்போது இல்லை".
" போதும்டா".
" இன்னும் எத்தனை காலத்திற்கு நான் உசுரோட இருக்கப்போறோன்?, எனக்கு பிறகு நீ குடும்பம்-குட்டியாக வாழ வேண்டும் தம்பி".
ஒருவேளை,ஜனனி நம்ம வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர் பொண்ணு என்பதால்,உனக்கு கௌரவ குறைச்சலாக இருக்கா?.
" அதைக்கேட்டவனோ,அப்பா என்று பதறியவன்,அந்த கடவுள் சத்தியமாக ஒரு பொழுதும் அவர்களை நான் வேலைக்காரர்களாக பார்க்கவில்லை".
நீங்கள் என்னை அப்படி வளர்கவில்லைப்பா".
"பிறகு என்னப்பா,எதுக்கு உனக்கு இந்த தடுமாற்றம் என்றார் சத்தியமூர்த்தி".
"அப்பா,அது வந்துப்பானு வெற்றி பேச்சை இழுக்க,ம்ம் நீயே சொல்லு".
" உன் ஆசை என்னனு எனக்கு தெரியும்டா மகனே".
" உன்னை மார்லையும்,தோளிலையும் போட்டு வளர்த்தவன் இந்த அப்பன்".
" என் புள்ளையோட ஆசை,கனவுலாம் இந்த கிழவனுக்கு தெரியாதா?என்று சத்தியமுர்த்தி கேட்க,ஏதேஏஏஏஏ கிழவனாஆஆஆஆஆ".
" என்னப்பா நக்கலா".
" பாக்குறவங்க எல்லாம்,உங்க அப்பா இன்னும் யங் மேனா இருக்காறேனு பொறாமை படுறாங்க என்று சொல்லி வெற்றி சிரிக்க,மகன் சொன்னதை கேட்டவரும் சிரித்து விட்டு, அப்படிங்குற என்றவாறே,ஹாலில் இருந்த கண்ணாடிக்கு முன்பு போய் நின்று பார்த்தார்".
" என்னப்பா,என்றும் பதினாறாக இருக்கிறேன்னு நக்கலா என்றான்".
" டேய் டேய் டேய் உடனே பேச்சை மாற்றாதடா".
"என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவேயில்லையே".
" இப்போ உனக்கு உண்மை தெரியணும் அதானே என்று வெற்றி பல்லை கடிக்க, எஸ் டா என்றார்".
"உன்னை, வள்ளி,அப்புறம் அப்புறம் அவளையும் விட்டு பிரிந்து போக மனசு இல்லாம தான்பா,எனக்கு புடிச்ச ஐபிஎஸ் வேலைக்கு கூட நான் முயற்சி பண்ணலை என்று,கீழே குனிந்து கொண்டு வெற்றி சொல்ல, தெரியும்பா".பிறகு, திடீர்னு எப்படி ஐயாவுக்கு ஞானோதயம் வந்து,போலீஸ் எக்ஸாம் எழுதுனீங்க?".
ம்ம்,நீதான் எல்லார்கிட்டயும் பெருமையா சொல்றியே, என் பையன் ஐபிஎஸ் ஆகப் போறான்,என் கண்ணு ஐபிஎஸ் ஆக போறான்னு.சரி என் ஆசை நிராசையா போகட்டும். எனக்காக வாழுற உன் ஆசையாவது நிறைவேறட்டும் என்ற எண்ணத்தில் தான் பா நான் எக்ஸாம் எழுதினேன்.
நிச்சயமா நான் பாஸ் பண்ணுவேன். உன் பையன் ஐபிஎஸ் ஆகப்போவதை நீ பார்க்க போற என்று சொல்லி,மூர்த்தியின் தோளில் சாய்ந்து கொண்டான்.
27 வயது ஆண் மகன் இன்னும் குழந்தையாக இருக்கிறியேடானு மகனின் கண்ணீரை துடைத்தவர்,காதல் என்ன சாதாரண விஷயம்னு நினைத்து விட்டாயா?.வேணும்னா எடுத்துக்கறதும், வேண்டாம்னா தூக்கி போட்டு போறதுக்கும் அது என்ன போட்டுக் கொள்ளும் சட்டையா?.
" இந்த உலகத்துல எந்த மூலையில போய் நீ ஒளிஞ்சி நின்னாலும்,அந்த நினைவுகள் உன்னை சும்மா விடாது".
அப்போ, ஜனனி இல்லாமல் உன்னால் வாழ முடியுமா சொல்லு?.
"அவ இல்லாமல் நிச்சயமா என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாதுப்பா என்று உறுதியாக வெற்றி சொல்ல,பிறகு ஏன்டா அவள் மனசை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறாய்?.
அப்பா,அவள் சின்ன பொண்ணுப்பா, வீணாக அவள் மனதில் ஆசையை வளர்த்து கஷ்டப்படுத்த,எனக்கு துளியும் மனசு வரலைப்பா.
ஹாஹாஹா என்று சிரித்தவர்,இந்த குடும்ப நிர்வாகத்தையே பாக்குறவளா சின்ன பொண்ணு?.
அப்பா அது வந்தென்று வெற்றி நெளிந்தான்.
"சரி போனதை விடு,நல்ல நாள் பார்த்து மாரியப்பன் கிட்ட இதை பற்றி அப்பா பேசுறேன் கண்ணு".
எனக்குனு இருக்குறது நீ தானடா, உன் சந்தோஷம் தான் எனக்கு பெருசென்று கண்கலங்கி சொல்லி விட்டு,அங்கிருந்து தனது அறையை நோக்கி சென்றவர்,கதவை திறந்து உள்ளே போனார்.
போகும் தனது சித்தப்பாவை பார்த்தவனுக்கு கவலையாக இருந்தது.
தன்னை வளர்பதற்காக,சித்தப்பாவும், வள்ளியும்,இத்தனை வருஷமாக கல்யாணமே வேண்டாமென்று இருந்து விட்டார்களே என்பதை நினைத்தவனுக்கும் கண்கள் கலங்கியது.
இலங்கை இரத்தினபுரி:
"கிரிஜாஆஆஆஆஆ,முதல்ல அவனை முழுவதுமாக பேச தான் விடுமா".
உன் பேரன் ஒன்னும் பன்னிரெண்டு வயசு பாலகன் இல்லை.நேரத்திற்கு ஏற்றப்போல தனது வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கும் பக்குவமும்,வயதும் அவனுக்கு இருக்கின்றது.
" சும்மா, இந்த பால்வாடி பயலை டிரீட் பண்ற போல பண்ணாதே என்று மனைவியை கண்டித்த சிம்ஹன் தாத்தா,நீ மேற்கொண்டு சொல்லு வீரா என்றார்".
" ஓகே தாத்தா என்றவன், தாத்தா கனடாவில் நானும்,ஆதுவும் ஒரு வருஷம் ஒர்க் பண்ணிட்டு தான் இங்கே வந்தோம்".
நாங்க அங்கு இருக்கும் போதே, இந்த பிஸ்னஸ் பிளானை ரெடி பண்ணிட்டு தான் வந்தோம்".இப்போதைக்கு எங்க ரெண்டு பேர்கிட்டயும்,பத்து லட்சம் இருக்கின்றது".
" மேற்கொண்டு பேங்கில் லோனுக்கு அப்ளை பண்ணலான்னு இருக்கோம்".
" ஸ்யூரிட்டி கேட்குறாங்க".
" அதுக்கு தன்னோட லேன்ட் டாக்குமெண்ஸை அங்கிள்( ஆதவன் என்ற ஆதுவின் அப்பா)தரேன்ணு சொல்லிருக்காங்க".
" பிறகு அட்வான்ஸ் கொடுக்க பத்து லட்சமும்,திங்க்ஸ் வாங்கி ஷாப் ஓப்பன் பண்ணவும்,இப்போதைக்கு உடனடியா பணம் வேண்டும்".
" பேங்க் லோன் கண்டிப்பாக கிடைத்ததும்,நான் அந்த பணத்தை கொடுத்துடுவேன்".
" நாங்க பார்த்திருக்கும் பில்டிங், மெயின்ல இருப்பதால்,அந்த இடத்திற்கு ஏகப்பட்ட போட்டி நிறைய வருத்துங்க தாத்தா".
" அதனால் தான் முதல்ல அட்வான்ஸை குடுத்து புக் பண்ணிக்குங்கனு இடத்தோட ஓனர் சொல்லுறாரென்று,இருவரிடமும் ருத்ரன் சொல்லி முடித்தான்"
" சிறிது நொடிகள் அங்கு அமைதியே நிலவியது".
" தனது தாத்தா- பாட்டி இருவரையுமே, ருத்ரன் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்".
" வெல்டன் மை பாய் என்று கைத்தட்டியவர்,பேரனை நோக்கி தனது இரண்டு கைகளையும் நீட்ட, சேரிலிருந்து எழுந்து வந்தவனை, கட்டிக்கொண்டார்".
"தன் வீட்டு பெரியவர்கள் சேர்த்து வச்ச சொத்தில் முன்னேறனுமென்று நினைக்காமல்,உனக்கான ஒரு பாதையை உருவாக்க நினைத்ததே, இந்த தாத்தாக்கு பேரானந்தம் வீரா".
" ஓகே வீரா.நீ கேட்ட போல,இருபது லட்சம் உனக்கு கடனாக நான் தரேன்".
" இரண்டு வருஷத்தில்,
வட்டியோடு நீ என்கிட்ட வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கணும்".
" இதற்கு சம்மதமா?".
" என்னாஆஆஆ வட்டி போட்டு தரணுமா,மாமா என்ன விளையாட்டுங்க இது?,என்னமோ என் பேரனை ஆறுமாசம் கடன்காரன் போல நடத்துறீங்க,இது கொஞ்சம் கூட நல்லாவேயில்லை சொல்லிட்டேனென்று கோவமாக சொல்லியவாறு அங்கிருந்து கிரிஜா பாட்டி எழுந்து சென்றார்"
" போகும் மனைவியை பார்த்தவர், அவள் கிடக்குறா வீரா,எனக்கு ஒரு முக்கியமான ஃபோர்டு மீட்டிங் இருக்கு,நான் வரேனென்று கிளம்பிச்சென்றார்".
" டார்லிங் உங்க சிங்கம் போயாச்சு என்று ருத்ரன் குரல் கொடுக்க, வேகமாக வெளியே வந்த கிரிஜா பாட்டி,சக்சஸ் என்று பேரனுக்கு ஹை- பை கொடுத்தார்".
" ம்ம்,எப்படி வீரா உன் பாட்டியோட நடிப்பு?".
" அடி தூள் தான் என்றான்".
முதல் நாள் இரவு தனது பாட்டியிடம் விஷயத்தை சொல்ல,கண்டிப்பா நீ வெளியே கடன் வாங்க தாத்தா ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.அதனால் இப்படி ஐடியா பண்ணலாமென பாட்டியும்,பேரனும் சேர்ந்தே இந்த பிளானை போட்டனர்.
" அதுவும் நன்றாக சிம்ஹன் தாத்தாவிடம் வொர்கவுட் ஆனது".
" அப்பொழுது,வீரா,அடேய் வீரா தடிமாடு எங்கடா இருக்கே என்ற குரலோடு ஆதவன் உள்ளே வந்தான்".
" ஹாலில் இருந்த இருவரையும் பார்த்தவன்,உங்க வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க?, இங்க தான் இருக்கேன்னு ரெண்டு பேரும் சொன்னால் என்னவாம் என்றபடியே மேலே இருக்கும் ஹாலிற்கு வந்தான்".
" அங்கு வந்தவனை பார்த்து பாட்டி முறைத்துக்கொண்டிருக்க,அய்யோ பேங்கிற்கு போகணுமென்று சொன்னானே என்று தலையில் தட்டிக்கொண்டே வீரா தனது அறைக்குள் வேகமாக சென்றான்".
" இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருக்கும் கிரிஜா பாட்டியை பார்த்தவன்,என்னடா கிரி,இவ்வளவு பாசமா பாக்குற??என்றபடியே அங்கிருந்த ஃஷோபாவில் உட்கார்ந்தான்".
" அப்புறம் கிரி, சிங்கம் உலாவ போயாச்சா என்றவனை, ஃஷோபாவின் மேல் இருந்த அலங்கார தலகாணியால் அடித்தார்".
" நோ கிரி நோ வயலன்ட், மீ பாவமென்றவனின் தலையில் குட்டியவர்,பிச்சுபுடுவேன்டா படுவா".
" நீ தான் என் கூட ஷாப்பிங்கிற்கு வரும் ஆளா?".
" என்னடா கிரி செய்ய, திடீர்னு எதிர்த்த வீட்டு சேட்டு பொண்ணு நம்ப வீட்டுக்கு வந்துட்டாள்.அவ கொஞ்சம் பார்க்க வெள்ளை பனியாரம் போல உருண்டையா இருந்தாலும்,கொஞ்சம் அழகா இருப்பாளா,அதான் இலவசமா கொஞ்சம் சைட் அடிச்சிக்கிட்டே பேசுனேன்,அதுல நேரம் போயிட்டு".
அந்த நேரம் ரெடியாகி அங்கே வந்த வீரா,போலாமாடா என்க,இருப்பா, ஆது கண்ணா எதுவுமே சாப்பிடவில்லை என்றவர்,ஆதவன் பக்கம் திரும்பி, ஆது என்ன சாப்பிடுறப்பா என்க, வயிறு ஃபுல்லா இருக்கு கிரி,அதனால் எனக்கு எதுவும் வேண்டாமென்றான்".
" அப்படியா, நேற்று தான் மோத்திசூர் லட்டு செஞ்சேன்,உன் பங்கை எடுத்து தனியே பேக் பண்ணி வச்சிருக்கேன் என்றவர்,சரி நீ போ கண்ணா".
" என்ன கிரி சொல்லுற?, லட்டாஆஆஆஆ?,அட என்னடா கிரி, உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை".
"இதை நான் உள்ளே வந்த உடனே சொல்லியிருக்க வேண்டியது தானே என்றவன்,வா வா கிரி என்று பாட்டியின் தோளில் கையை போட்டு கிச்சனை நோக்கிச்சென்றான்".
" போகும் இருவரையும் பார்த்த ருத்ரன்,இரண்டும் சரியான லட்டு பைத்தியங்களென்று தனது தலையில் அடித்துக்கொண்டான்".