• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
🌹காதல்🌹ஓவியம்....3

“அப்போ என் அழகிக்கு கண்ணு தெரியுமா?” என்று கதிர் ஆச்சரியத்தோடு கேட்க, அதே சமயம் மணியின் செல்போனுக்கு கதிரின் சித்தி ஓவியக்கீதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ சொல்லு கிழவி?”
“டேய்! நான் வீடியோவ பாத்துட்டேன்டா.” என்றார் கீதா.
“அறிவில்ல உனக்கு. இந்த வயசுல பலான வீடியோவ பாத்துட்டு, அத மகன் வயசுல இருக்குற என்கிட்டயே சொல்லுவியா” என்று திட்டினான்.
“அடிங்கொய்யால. நான் சொன்னது அந்த பத்திரத்தை யார் திருடியது என்கிற வீடியோவை பார்த்தேன்னு. நீ என்ன சொன்னடா வெண்ணை.”
“ஆங்... சொல்றத ஒழுங்கா சொல்லு கிழவி. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டா எனக்கு எப்படி தெரியும்” என்றான் மணி.
“டேய் பாவிகளா! அந்த பத்திரத்தை திருடினது வேற யாரும் இல்லடா” என்று ஓவியா சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் முல்லை செல்போனுக்கு கால் வந்தது.
போன் எங்கே அடிக்கிறது என்று கதிரும், மணியும் தேட, முல்லை சோபாவிலிருந்து திமிராக எழுந்தவள், “ஏய் டோபர் மண்டையா. அறிவில்ல உனக்கு ஒரு வயசுப்பொண்ணு எதிர்க்க இப்படியா பேன்ட்டை கழட்டுவ?” என்று திட்டினாள்.
கதிர் அவளின் அழகை ரசித்து கொண்டே நின்று இருக்க
“மேடம் உங்களுக்கு தான் கண்ணு தெரியாதே” என்று மணி கேட்க,
“கண்ணு தெரியலனா இப்படி தான் எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு பிறந்த மேனிக்கு நிர்பீன்களா” என்று பல்லைக்கடித்தாள் முல்லை.
“அய்யோ! என் மச்சி எதையும் கழட்டலங்க.”
“உன் மச்சி எதை கழட்டவும் லாயக்கில்லை என்று எனக்கு கோயிலிலேயே தெரிஞ்சிருச்சு. அடச்சீ இந்த போன்ல வேற யாருன்னு தெரியல” என்று எரிச்சல்பட்டாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம். ரொம்ப நேரமா போன் அடிக்குது .ஆனால் சத்தம் எங்கிருந்து வருதுன்னு தான் தெரியல. உங்க போன் எங்க இருக்கு?” என்றான் மணி.
“அதெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கு.” என்று அலட்சியமாகப் பதில் சொன்னாள்.
“டேய் அறிவுகெட்ட பசங்களா. நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க யாருகிட்ட பேசுறீங்க. கதிர் எங்கடா. முதல் போனை லவுட் ஸ்பீக்கரில் போடுடா” ஓவிய கீதா அதட்டல் போடா,
“இரு கிழவி நான் போடுறேன்.” என்று முல்லையின் அழகை மேலும் ரசித்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்து, “டேய் கதிர்! இங்கே பாரு இந்த கிழவி ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கு. டேய் உன்ன தான்டா இங்க பாரு கிழவி போன்ல கத்துது” என்று தோழனின் ரசனையைக் கலைத்தான் மணி.
கதிரோ முல்லையை பார்த்து, “ஹாய் பியூட்டி” என்றான்.
“நான் பியூட்டி தான் அது இந்த உலகத்துக்கே தெரிந்த உண்மை” என்றார் ஓவியகீதா.
“ஏய் கிழவி! உன்னை யார் சொன்னது? நான் என் எதிர்க்க இருக்கிற தேவதையை சொன்னேன்.” என்று வழிந்தான் கதிர்.
“டேய் மவனே! அவள் தேவதை இல்லடா. அவ தான் நம்ப ஆட்டையை போட இருந்த பத்திரத்தைத் திருடின திருடி” என்றார்.
“என்ன கிழவி சொல்ற? அப்போ இவளும் நம் இனத்தை சேர்ந்தவளா?”
“ஏய்! என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா. எனக்கு போன் வருது” என்றாள் முல்லை.
“டேய் மணி! அவன் அவ அழகுல மயங்கி நின்னுகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். அவன் மூஞ்சில தண்ணீர் தெளித்து, அதன் பின் அந்த பொண்ணுகிட்ட இருக்குற பத்திரத்தை புடுங்குற வழியே பாருங்கடா.”
“மச்சான் முதல்ல அந்த பொண்ணு கழுத்துல கத்திய வச்சு, பத்திரம் எங்கன்னு கேளு” என்றான் மணி.
“ஏய்! டுபாக்கூருங்களா. என்ன என் கழுத்துல நீ கத்தியை வைப்பியா? என் கழுத்தில் கத்தி வைக்க ஒருத்தவன் பொறந்து வரணும்” என்று எகிறினாள்.
“பொறந்துட்டான். என் மச்சான் இவன் தான் அது. இப்போ பாரு உன் கழுத்தில் கத்தி வைக்க போறான். மச்சான் கழுத்தில் கத்தியை வைத்து பத்திரம் எங்கன்னு கேளுடா” என்றான்.
“ஏய் நீ சொன்னா, இந்த தாடிக்குள்ள மூஞ்சிய வைத்து இருக்கும் ஹீரோ என் கழுத்துல் கத்தி வச்சிடுவானா? தைரியம் இருந்தா வைக்கச் சொல்லு பார்க்கலாம்.”
“மச்சான் நான் சொன்னா நீ அவ கழுத்தில் கத்தி வைப்ப தானேடா?”
“ஆமா அவ கழுத்துல நான் தாலி கட்டிய தீருவேன்.” என்றான் வேகமாக.
“அட லூசு பயலே. டேய்! உன் சித்தி இங்கே வாலுவால்லுன்னு கத்துகிட்டு இருக்கேன். நீ என்னடா அங்க அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது பத்தி பேசிகிட்டு இருக்க. நாளைக்கு சல்மான் பாய் வந்து சங்கு மேல மிதிக்க போறான். அவக்கிட்ட பத்திரம் எங்கன்னு கேளுங்கடா” என்றார் கீதா.
“ஏய் முதல்ல வாயை மூடுங்க. எனக்கு முக்கியமான போன் வருது. அக்கா சொல்லு” என்று அவர்களை அமைதிப்படுத்தி அக்காவிடம் பேசினாள்.
“ஓவியா எங்க இருக்க?
“அதுவா, இங்க ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒரு கார் மோதிருச்சு எப்படின்னு தெரியல. நான் ரெண்டு லூசுகிட்ட மாட்டிக்கிட்டேன். சரி நீ எங்க இருக்க?
“நான் உன்னுடைய வாட்ச்சில இருக்கிற ஜிபிஎஸ் கனெக்சன் வச்சு, நீ இருக்கிற இடத்து பக்கத்துல தான் இருக்கேன். ஆனா சரியா கனெக்சன் கிடைக்க மாட்டேங்குது” என்று கேட்டாள் ஷாமிலி.
“ஏய்! இது ஏதோ ஒரு ஓட்ட வீடு மாதிரி தான் இருக்கு. சரி சரி இங்க இரண்டு பேர் தான் இருக்கிறானுங்க. இவனுங்கள போட்டுத் தள்ளிட்டு நானே வரேன். நீ அங்கேயே வெயிட் பண்ணு” என்றாள் அக்காவிடம்.
“ஹலோ யாரை போட்டுத்தள்ள போறீங்க? நீங்க என் மேல கூட கையை வைத்துடலாம். ஆனால், என் மச்சான் மேல கையை வைத்துட்டு நீங்க தப்பிக்கவே முடியாது.”
“டேய் உன் மேல கால வைக்கிறன். உன் மச்சான் மேல இதோ பார் கையை வைக்கிறேன்”என்று சொன்ன முல்லை, தன்னிடமிருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து மணியின் கண்ணில் அடித்தவள் கதிரைப் பார்த்து, “ஏய் நீ என்ன பிரம்ம புடிச்ச மாதிரி நிக்கிற” என்று கேட்டாள்.
“கண்ணே கண்மணியே...” கதிர் ஆரம்பிக்க,
“அடப்பாவி பெப்பர் ஸ்ப்ரே எடுத்து என் கண்ணுல அடிச்சி ,என் கண்ணை கபடி ஆட வச்சிட்டா. நீ என்னடானா அவள கண்ணு மண்ணுன்னு சொல்ற? இது சரியில்லடா.”
“ஏய் வாயை மூடு” என்றாள் முல்லை.
“ஹாய் பட்டுக்குட்டி. நீ... இல்ல இல்ல நீங்க திருடியா?”
“ஆமாம்மா நான் திருடி தான். இவர் மட்டும் பெரிய வெள்ளாள கண்டன்.”
“ஐ... நீயும் திருடி. நானும் திருடன். நம்ப ரெண்டு பேரும் திருடனும் திருடியுமா? ஆகா! என்ன ஒரு அருமையான பொருத்தம்.”
“நீ என்ன லூசா. உன்னால ஒரு பத்திரத்தை கூட ஒழுங்கா அடிக்க தெரியல. உன்னை எல்லாம் நான் காதலிப்பேன்னு கனவுல கூட நினைக்காத. ஓடிப் போயிடு. இல்ல முகத்துல ஸ்ப்ரே அடிச்சிப்புடுவேன்.
“நீ என்ன அடித்தாலும் பரவாயில்ல.. நான் உன்னைக் காதலிக்கிறது தான் உண்மை.”
“உனக்கு இந்த பெப்பர் ஸ்பிரே எல்லாம் வேஸ்ட். உனக்கு வேற ட்ரீட்மென்ட் இருக்கு” என்று சொன்னபடி முல்லை, கதிரின் அருகில் சென்றவள் அவனின் இதழ்களை பார்த்து, “ஏய்! திருடா. உனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுக்கவா?” என்றாள்.
சந்தோசத்திற்கு கேட்கவும் வேண்டுமா அங்கே. வேகமாக, “ம்... எஸ் எஸ்” என்றான்.
அவளோ, நான் முத்தம் கொடுத்தால் நீ பிளாட் ஆயிடுவ. அதனால இந்தா”என்று சொன்னபடி அவன் நெற்றியில் தன் நெற்றியால் ஒரே ஒரு இடி இடிக்க, கதிர், முல்லையின் அழகில் மயங்கி விழ... அவள் அங்கிருந்து எஸ்கேப் ஆனாள்.
மறுநாள் காலை 8 மணிக்கு ஓவியக்கீதா கோபமாக சோபாவில் வந்து அமர்ந்து இருக்க, இவர்கள் இருவரும் மயக்கத்திலிருந்து எழுந்து வந்தார்கள்.
“ஐயோ! எனக்கு கண்ணு தெரியலையே. அந்த பாழா போன பொண்ணு என் கண்ணுல அடித்துட்டாலே” என்று கத்தினான் மணி.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“டேய் அவ என் தேவதை. அவள அந்த மாதிரி எல்லாம் சொல்லாத. மணி யாருடா இது? ரத்த காட்டேரி மாதிரி இருக்கு.”
“தெரியல இதுதான்டா நம்ம செத்துப்போன ஆயாவா இருக்கும்.”
“செத்து போன ஆயாக்கு சுடுகாட்டுல தானே வேலை. இங்கே என்ன பண்ற?”
“நான் ஆயா இல்லடா பாவிகளா. நான் தான் உங்க சித்தி.”
“ரெண்டும் ஒன்னும் தான். நீ மேட்டர சொல்லு. என்ன இது மூஞ்சில?” என்று கேட்டான் கதிர்.
“அடக்கடவுளே! யாருடா ஓவியா மூஞ்சில ஓவியமா வரைஞ்சி வச்சி இருக்காங்க?”
“அது ஓவியம் இல்லடா. அந்த சல்மான் பாய் காலையிலேயே வந்து என் முகத்தில் போட்ட கோடு” என்றார் ஆத்திரமாக.
“இதுதான் சல்மான்கான் உன் முகத்தில் எழுதிய காதல் காவியமோ.”
“அய்யய்யோ.... சல்மான்கான் உன் முகத்துல சால்னா ஊத்திட்டானா?”
“ஆமாண்டா பாவிங்களா! உங்கள நம்பி அந்த பாத்திரத்தை எடுக்க சொன்னேன் பாரு. நானே களத்துல இறங்கி இருக்கனும். நேத்து அவ இங்க வந்து இருக்கும் போது கூட, அவளை பிடித்து பத்திரத்தை வாங்குறதுக்கு பதில் அவகிட்ட இப்படி அடி வாங்கிட்டு படுத்துக்கொண்டு இருக்கிங்களே. உங்களை எல்லாம் பாலும் தேனும் தந்து திருட்டு பழக்கத்தை சொல்லி சொல்லிக் கொடுத்து வளத்தேனே. என்ன சொல்லணும்” என்று புலம்பினார் கீதா.
“அத என்னமோ கல்லு உடைச்சு கஷ்டப்பட்டு எங்களுக்கு கஞ்சி ஊத்தன மாதிரி பில்டப் கொடுக்கிற. பூட்டை உடைத்து தான் எங்களுக்கு பூரி கிழங்கு வாங்கி கொடுத்த.”
“மச்சான் அது கூட கிழங்கை மட்டும் நம்ம கிட்ட குடுத்துட்டு, பூரி எல்லாம் இதுதான் மச்சான் தின்னுச்சு. மறந்துட்டியா?”
“மறக்கல மச்சான் மறக்கல சரக்கு வாங்கிட்டு வரச்சொல்லி, ஒன்டி ஆளா சொம்புல உத்தி குடிப்பா பாரு, மறக்கல.”
“நீங்களா சின்ன பசங்க? தண்ணி அடிச்சி கெட்டு போக கூடாதுன்னு தான் உங்களுக்கு நான் சரக்கெல்லாம் குடுக்கல.”
“அடிங்கொய்யால பொய் சொல்லாத. எங்க நாங்க குடிச்சா உனக்கு பத்தததான்னு தான் நீ கொடுக்கல.”
“ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க கூடாது. ஒரு வீட்டில் இரண்டு குடிகாரன் இருக்கவே கூடாது. அம்மா குடிக்கணும் புள்ளைங்க பாக்கணும்.”
“நீ குடிச்சிட்டு பண்ற அலப்பறையை பார்த்து, நான் வாழ்க்கையில குடிக்கவே கூடாது என்று முடிவு எடுத்துட்டேன். நான் டீட்டோட்லர்.”
“நீ எந்த டோட்லரா இருந்தாலும் பரவால்ல. ஆகமொத்தம் அந்தப் பத்திரத்தை கோட்டை விட்டுட்டியே. நீ நல்லா இருப்பியா” என்றார் கீதா.
“எனக்கெல்லாம் போய் சாபம் விட்டுறாத. என்மேல எந்தத் தப்பும் இல்லை. இதோ இருக்கிறானே இவன் தான், அந்தப் பொண்ண பாத்ததும் அவ அழகுல விழுந்துட்டான்.”
“போயும் போயும் ஒரு திருடியவா காதலிக்கிற. உனக்கு அறிவு இல்லை” என்று திட்டினார்.
“ஏய்! கிழவி! அப்ப நீ யாரு? நீ என்னமோ பெரிய டாடா பிர்லா ரேஞ்சுக்கு பேசுற/ நீயும் திருடி தானே/ நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகள் தான் அவ/ யார் என்ன சொன்னாலும் சரி. நான் அவளை தான் காதலிக்கப் போறேன். சரி நான் போய் குளிச்சுட்டு வரேன் முதல் வேலையா என் அழகி எங்க இருக்கான்னு தேடுவோம். காரை ரெடி பண்ணு சித்தி” என்றான் கதிர்.
“இல்லடா மவனே. என்கிட்ட கார் இல்ல.”
“என்ன விளையாடுறியா? எவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தத்தை வியர்வையா சிந்தி அந்த காரை திருடி, அதில் பெயிண்ட் அடிச்சு உனக்கு கொடுத்தேன்.. அத போய் தொலைச்சுட்டு நிக்கிற?”
“நான் தொலைக்கலாம் இல்லடா மவனே. அந்த சல்மான் பாய் கார தூக்கிட்டு போய்ட்டான். அவன் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துட்டா நம்ம காரை நமக்கு குடுத்துடுவான்.”
“அய்யய்யோ அப்போ இனி சைக்கிளில் தான் போகணுமா?”
“அது இல்லடா மணி. சைக்கிளையும் தான் காணோம்” என்றார் சோகமாக.
“ஏய் கிழவி.! ஏன் அவன் அதையும் சேர்த்து தூக்கிட்டு போயிட்டானா? அதை ஏன் குடுத்த?”
“இல்லடா மவனே! சைக்கிள அவன் தூக்கல. நேத்து வந்தாலே ஒரு திருடி அவ தூக்கிட்டு போய் இருக்கா.”
“ஆஹா... திருடனிடம் திருடிய கள்ளி என் தேவதை” என்று வசனம் பேச,
“கொல்ல போறேன் உன்னை. இங்க பார் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. நான் இழந்த எல்லாத்துக்கும் அந்த பொண்ணு தான் பதில் சொல்லி ஆகணும். அதனால அந்த பொண்ணு எங்க இருந்தாலும் நம்ம அவளை தூக்குறோம். கேக்குறோம்” என்றார்.
“தூக்குறோம் இல்ல தூக்கறேன். சரி எல்லாரும் குளிச்சிட்டு கிளம்புங்க. நம்ம வீட்டுக்கு வர போற மருமகளை நம்ப போய் தேடுவோம்” என்று கதிர் சொன்னான்.
கதிரும் மணியும் ஓவியகீதாவும், முல்லையை தேடி வெளியே கிளம்ப, அன்றைய இரவு 11மணி அளவில், “என்ன மச்சான் ஏன் சோகமா இருக்க?” என்று மணி கேட்டான்.
“இல்லடா எங்கு தேடியும் என் தேவதைய காணமே.”
தோழனின் கவலையில், “டேய் மச்சான் அங்க பாரு ஒரே தேவதை கூட்டம்” என்றான்.
“டேய் இரு அங்க நிக்குறது, என் அழகியோட அக்காடா.”
“ஐயோ! அப்போ உன் அழகியோட அக்கா பக்காவா. அப்போ நம்ம மட்டும் அந்த குடும்பத்தை தேடலடா. நிறைய பேர் தேடுறாங்க.”
“என்னடா சொல்ற?”
“அங்க பாரு உன் தேவதை அவுங்க அக்காகிட்ட பேசிகிட்டு நிக்குறா. அவங்க அக்கா என்னடானா, சைடுல பேக் மாட்டிகிட்டு லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு பூ வச்சிக்கிட்டு ஓரு டைப்பா நிக்குது. அப்ப உன் தேவதையும்...”
அவன் முடிக்கும் முன், “கொன்னுடுவேன் உன்னை. என் தேவதை அந்த மாதிரி எல்லாம் இல்ல” என்றான்.
“அட ஆமாடா. உன் தேவதை அந்த மாதிரி பொண்ணு இல்ல. ஆனா அந்த பொண்னோட அக்கா அப்படி தான் போ.”
“ஏய் கிழவி ஏன் சிரிக்கிற?”
“ஹ்க்கும்... உனக்கு நல்லா வேணும்டா. இந்த பொண்ணுக்காக தானே என்னை அந்த சல்மான் பாய் கையால் அடிவாங்க வச்ச. பார்த்தியா இப்ப இந்த பொண்ணு குடும்பம் சரியான விவஸ்தகெட்ட குடும்பம் போல”என்று ஓவியக்கீதா கதிரை கலாய்க்க, கோபம் கொண்ட கதிர் நேராக முல்லையிடம் சென்றான்.
“ஏய் உன் அக்கா இப்படிப்பட்ட பொண்ணா?” எனக் கேட்டான்.
“ஏய் டால்டா பிஸ்னஸ் நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாத” என்றாள் ஷாமிலி.
“ஏய் நீ வாயை மூடு. இந்தாடி திருடி. உனக்கு அறிவு இல்ல. நீ எவ்வளவு அழகா தேவதை மாதிரி இருக்க. கடைசில இந்த மாதிரி தொழில் செய்ற அக்காக்கு தங்கச்சியா நீ” என்றான்.
“மச்சான் எனக்கு அப்பவே இந்த பொண்ண பாத்ததும் ஒரு டவுட்டுடா. என்னடா இது நேரங்கெட்ட நேரத்தில் வெளிய சுத்திக்கிட்டு இருக்கேன்னு. பாத்தியா என்னுடைய கணிப்பு சரியாதான் போச்சு. ஏய் உன் அக்கா அப்போ அந்த மாதிரி ஆளா?” என்று மணி சொல்ல, முல்லை அவன் கன்னத்தில் பளாரென ஒன்று வைத்தாள்.
“ஏய் யாரு இடத்துல வந்து யார் சீன் போடுறது? ஆமாடா என் அக்கா இந்த தொழில் செய்து தான் எங்களை இத்தனை வருடம் காப்பாத்தினா. நான் திருட்டு தொழில் பன்றேன். என் அண்ணன் அடிக்கடி ஜெயிலுக்கு போவான். இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்ற? அது என்னங்கடா தொழில் செய்ற பொண்ணுன்னு ஒரு நக்கல் பேச்சு. ஏன் உடம்பை விக்கிர பொண்ணுங்கள மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுதா? கூட வந்து படுக்குற ஆம்பளைங்களை பற்றிய என்னைக்குமே எதுவுமே பேச மாட்டீங்க இல்ல. ம்... ஏன்னா நீங்க எல்லாம் ஆம்பளைங்க. கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் இருக்கணும் இல்ல. உங்களை சொல்லி குத்தம் இல்லடா. சில பெண்களே இவங்களை அப்படி தான் பேசுறாங்க” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
“ஏய்! என்ன நீ? பேசிக்கிட்டு இருக்கும்போதே அடிக்கிற.”
“ஏய் சைலேன்சர் வாயி. நான் எல்லாம் அடிச்சிட்டு தான்டா பேசுவேன். ஏய் அக்கா இவனுங்க கிடக்குறாங்க. நீ உன் பிசினசைப் பாரு. அங்க ஒரு பணக்கார காரு உன்ன பார்த்து தான் வருது. வேலையை முடிச்சிட்டு பணத்தை வாங்கிட்டு சீக்கிரம் வீடு வந்து சேரு. நாளைக்கு அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகணும்.”
“ம்.... நீ சீக்கிரம் போ. எவன் ஆவது உன்னை பார்த்தால் அப்புறம் உனக்கும் என் தலையெழுத்து வரப்போகுது” என்றாள் ஷாமிலி.
“ம்.... நீ பார்த்து வாக்கா. நான் போறேன்.”
“ஏய் நில்லு. நில்லு. இங்க பாரு அவன் ஒரு லூசு. நீ எப்படி இருந்தாலும் பரவாயில்ல. ஆனா, நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
“ஒ.... வாழ்க்கை தரபோறீங்களா? அப்போ சரி. அதோ ஒரு கோவில் இருக்கு இல்ல. அங்க இருந்து தாலியை எடுத்து வந்து என் கழுத்துல கட்டி எனக்கு வாழ்க்கை குடு” என்றாள் நக்கலாக.
“ஏய் பொண்ணு. நான் என் மவனை ஒரு அடக்கமான பொண்ணுக்கு தான் கட்டி வைப்பேன்.”
“ஏய் பஞ்சி மிட்டாய் மண்ட கிழவி. அப்போ நீயும் உன் மகனும் சுடுகாட்டில் போய் அடக்கமான பொண்ணை தேடுங்க. வந்துட்டான் வாழ்க்கை தரேன், வாழைக்கா பஜ்ஜி போடுறேன்னு. ஆளப்பாரு. போடா அப்படி. தாடிக்கார திருடா” என்றாள்.
“மவனே நீ வாடா. நான் உனக்கு உலக அழகியை கட்டி வைக்கிறேன்.”
“ஏய் என்ன லுக்கு அதான் உள்ளூர் கிழவி கூப்பிடுது இல்ல. போ”என்று சொல்லி முல்லை திமிராக நடந்து சென்று கொண்டு இருக்க, ஐந்து நிமிடம் கழித்து கதிர் அழைத்தவன் “ஏய் அழகி. வெயிட்...” என்று அழைத்த படி அவள் அருகில் போனான்.
“ஏய் ஏய்! என்ன பண்ற?
“மச்சான் என்னடா பண்ற?” என்றான் மணி.
“டேய் மவனே. விடுடா அவளை” என்று கீதாவும் சொல்ல,
“ஏய் விடு என்னை...” என்று அவனிடம் இருந்து விலக நினைக்க,
அவனோ, “ஒன்னு, ரெண்டு, மூனு. ம்... இப்ப ஒகேவாடி என் திருடி” என்று அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு அதிர்ந்து நின்றவர்களைக் கவனிக்காது கேட்டான் கதிரோவியன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top