• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
5


“அனு! பு...புரியலை நிழல், நிஜத்துக்கான வித்தியாசம்னா?” ஏதோ புரிவதுபோல் தோன்ற, ‘கடவுளே அதுவா மட்டும் இருந்திரக்கூடாது’ என உடனடி வேண்டுதல் வைத்தாள், அதுவே உண்மை என்றறியாது.

தோழியின் முகம் பார்த்து அவள் எண்ணம் புரிந்த அனுரதி, அதுதான் உண்மையென்று சொல்லி, திருமணத்திற்கு முன்தினம் இரவு நடந்ததில் இருந்து அனைத்தையும் சொல்லி முடிக்க, மாலினி கண்களில் கண்ணீருடன் தோழியை இறுக்கி அணைத்திருந்தாள்.

“சாரி. சாரிமா. நீ என்னை எவ்வளவு தேடியிருப்ப? என்னால உன் பக்கத்துல இருக்க முடியலையே. நைட் உன் கூட இருந்திருக்கணும் அனுமா. இருந்திருந்தா அப்பவே அவனைப் பிடிச்சி விசாரிச்சிருப்பேன். தப்பிச்சிருந்தால் கூட, சிசிடிவி செக் பண்ணியாவது இவன்தான்னு கண்டுபிடிச்சிருப்பேன். இந்தக் கல்யாணமும் நடந்திருக்காது. உன்னை இக்கட்டான நிலையில் விட்டுட்டேனே” என்று புலம்பினாள்.

“உன்னுடைய சூழ்நிலை மானி? இதுதான் நடக்கணும்னு இருந்திருக்கு. அதுக்காக உன்னை ஏன் குற்றவாளியாக்குற?” என்று முதுகை நீவி விட,

“எனக்கேத் தெரியலை அனு. உன்கூடவே இருக்கணும்னுதான் ட்ரெஸ்லாம் எடுத்துட்டு வந்தேன். ஏன் வீட்டுக்குத் திரும்பிப் போனேன்னு தெரியலை. மனசே ஆறமாட்டேன்னுது. நீ இதிலிருந்து மீண்டு வந்ததே போதும்னு இருக்கு” என்றாள் வருத்தம் மேலிட்ட குரலில்.

தோழியைத் தன்னில் இருந்து பிரித்து அவள் கண்ணீர் துடைத்து, “இதையெல்லாம் அனுபவிக்கணும்னு இருந்திருக்கு மானி. இல்லைனா என்னுடனே ஒட்டித் திரியும் நீ, அப்பப் பார்த்து விட்டுட்டுப் போயிருப்பியா? அந்த ஆக்சிடெண்ட்தான் நடந்திருக்குமா? எல்லாம் விதின்னு விட வேண்டியதுதான் மானி” என்றாள் விட்டேற்றியாக.

“அவன் மேல சின்னதா சந்தேகம் வந்திருந்தாலும், உன்னை விட்டுட்டுப் போயிருக்கமாட்டேன் அனு. பக்காவா நடிச்சி ஏமாத்தியிருக்கான். ஏதோ கண்கட்டி வித்தை மாதிரி எதோவொரு மாயை எல்லாத்தையும் தடுத்திருச்சி” என்று புலம்பலைத் தொடர,

“மானி இது ஆஃபீஸ். இன்னைக்குதான் முதல் நாள் வேலைக்கு வந்திருக்கோம். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. முடிஞ்சது முடிஞ்சிருச்சி. நான் அதிலிருந்து வெளில வந்துட்டேன். இனி அதைப்பற்றின பேச்சு வேண்டாமே” என்றாள் கெஞ்சலாக.

“சரிடி சரி. இனி அதைப்பற்றிப் பேசமாட்டேன்” என்றாள்.

“மானிமா எனக்கொரு உதவி செய்யுறியா?” என்றவள் குரலில் அத்தனை இறுக்கம்.

“சொல்லுடி. என்ன செய்யணும்?”

“இனிமேல் ‘டி’ போட்டுப் பேசாதே. அந்த வார்த்தையைக் கேட்டாலே உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி பத்திக்கிட்டு எரியுது. அந்த எரிச்சலோட சேர்ந்து அளவுக்கதிகமான கோவமும் வருது மானி. தயவுசெய்து அப்படி மட்டும் கூப்பிட்டுராத. இல்லைன்னா என்னை மீறி என்ன செய்வேன்னே தெரியாது. அந்தளவு அந்த வார்த்தையை வெறுக்கிறேன்” என்றவள் கண்களில் அக்னி தெரிக்குமளவு கோவம்.

“அனு!” என அதிர்ந்து விழித்தவளைப் பார்த்து கோவம் தணிந்து, “அட வா நட்பே” என எழுப்பி கூட்டிச் சென்றாள் அனுரதி.

வேலையில் சேர்ந்து ஒரு வாரமாக, வேலையில் ஓரளவு கற்றுத் தேர்ந்திட, சகஜ நிலைக்கு வந்திருந்தனர்.

“அனு ஒருமாதிரி அன்ஈஸியா இருக்கு. ஐ திங்க், பீரியட்ஸ் டைம்னு நினைக்கிறேன். நாப்கின் வச்சிருக்கியா?”

“பீரியட்ஸா?” எதையோ யோசித்து, “நாப்கின் என்கிட்ட இல்லடா. இரண்டு மாசமா வரலைன்றதால அதை வச்சிக்கத் தோணலை. சாரி மானி” என்றவள், “ஹ்ம்... மானி ஏன் இரண்டு மாசமா வரலை? டி.என்.சி பண்ணினா ரெகுலரா வரணுமே” என்று கேட்டு யோசனையிலாழ்ந்தாள்.

“ஆமா அனுமா. இரண்டு மாதம் ஆகுதுன்னா உடனே செக் பண்றது நல்லது. இந்த சண்டே நாம போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்றாள்.

அந்த வாரம் ஞாயிறும் வர, தனக்கு மருத்துவம் பார்த்த இடத்திலேயே பார்க்க வேண்டும் என்பதால், காலை பதினோரு மணியளவில் இருவரும் மருத்துவமனை சென்று வரவேற்பறையில் உள்ள பெண்ணிடம், “டாக்டர்.வர்ஷாவைப் பார்க்கணும்” என்றாள் அனுரதி.

பரிச்சயமான ஒரு பார்வை பார்த்து, “நீங்களா? அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியாச்சா?” என கேட்க,

“இல்லமா. என் பெயர் சொன்னா தெரியும். கேட்டுச் சொல்லுங்க” என்று தன் பெயரைச் சொன்னாள்.

“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க மேம்” என்று தொலைபேசியில் மருத்துவரை அழைக்கையில், அவரே அங்கு வந்து வரவேற்புப் பெண்ணிடம் எதோ சொல்ல வாய் திறந்தவர், அங்கு நின்ற அனுரதியைப் பார்த்து அதிர்ந்தார்.

பின் அவளிடம் என்ன கண்டாரோ, முகத்தைச் சாதாரணமாக வைத்து, “அனுரதி! இங்க எங்க? எதாவது பிரச்சனையா?” என கேட்டார்.

“செக்கப் பண்ணணும் டாக்டர்.”

“சரிமா என் ரூமுக்கு வாங்க” என்றழைத்துச் சென்று, “சொல்லுமா?” என்றார்.

“டாக்டர் இங்க இருந்து போனதில் இருந்து பீரியட் வரலை. மாசம் இரண்டாகுது. டி.என்.சி பண்ணினதுல ஐந்து நாள் போல வந்தது. அதுக்கப்புறம் வரலை. சில நேரம் இருந்தாப்ல தலை சுத்துது. அதீத டென்சனால பிரசர் வந்திருச்சி நினைக்குறேன். அதான் கேட்டுட்டு செக்கப் பண்ணிக்க வந்தேன் டாக்டர்” என்றதில் மருத்துவர்.வர்ஷா எச்சில் விழுங்க அவளைப் பார்த்தார்.

அருகிலிருந்த பாட்டில் தண்ணீரை எடுத்து தொண்டைக்குள் சரித்து, தன்னை நிதானப்படுத்தியவர், ஸ்டெதஸ்கோப் எடுத்து காதில் மாட்டி அனுரதியின் கைபிடித்து நாடியில் வைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னவரோ, நாடி கூறிய செய்தியில் மூச்சடைத்துப் போனார்.

அவரின் செயலில் புரியாது பார்த்து, “என்ன டாக்டர்?” என பெண்கள் கேட்ட கேள்விக்கு, “ஒண்ணுமில்லை. சரியான ஓய்வு கிடைக்காததால சின்னதா ஹெல்த் இஷ்யூ எனக்கு. அதேதான் உனக்கும். நல்ல புக்ஸ் மோட்டிவேஷனல் ஸ்பீச், ஏன் வேலைக்குக் கூட போகலாம். எப்பவும் சுற்றிலும் பாசிட்டிவ் வைப்ரேட் இருக்கிற மாதிரி பார்த்துக்கோ. சீக்கிரமே எல்லாம் சரியாகும்” என்றார்.

“ஓ... சரிங்க டாக்டர்” என்றதும் அங்கிருந்த பெட்டில் படுக்கச்சொல்லி சோதித்துப் பார்த்து தன் இடத்திற்கு வந்தவர் அனுரதி வந்ததும், “ஒண்ணுமில்ல அனு. சிலருக்கு இப்படி நடக்குறதுதான். மூணு நாளைக்கு டேப்லட் தர்றேன் ரெகுலரா போடுங்க. அப்படியும் வரலைன்னா நெக்ஸ்ட் மன்த் ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்” என்று மாத்திரை எழுதிக் கொடுத்து, “அப்பறம் அனு வெய்ட் தூக்காதீங்க. லாங் டிராவல் போகணும்னா என்னை கன்சல்ட் பண்ணிக்கோங்க. ஹெல்தி ஃபுட் எடுத்துக்கோங்க” என்றவர் சில பழங்களின் பெயர் சொல்லி அதை எடுத்துக்க வேண்டாம் என்றார்.

“மேக்சிமம் அம்மா எதையும் செய்ய விடுறதில்லை டாக்டர். உடம்புக்கு எது நல்லதோ அது மாதிரிதான் சாப்பாடு, பழம்னு கொடுக்கிறாங்க. அதனால பிரச்சனை இல்லை” என்றாள்.

“குட். ஆட்டோவில் போகும்போது ஸ்பீடா போகவேண்டாம் சொல்லிருங்க. என்னதான் அம்மா பார்த்துக்கிட்டாலும், நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மாத்திரை எழுதிக்கொடுத்து அவளை அனுப்பினார்.

மாத்திரை வாங்கி வந்து எதை எப்பொழுது போடா வேண்டுமென செவிலியிடம் கேட்டு வெளியே வர, “ஏன் அனு, ஒரு டி.என்.சிக்கு இவ்வளவு ரூல்ஸா? ஆனாலும், ரொம்ப கேர் எடுத்துக்குறாங்க” என்றாள் மாலினி.

“அது நிஜம்தான். நர்ஸை விட இவங்கதான் கூடயிருந்து பார்த்துக்கிட்டாங்க. ஒருவேளை என்னோட கேஸ் வித்தியாசமா இருந்ததால எக்ஸ்ட்ரா கேர் எடுக்குறாங்களோ என்னவோ. நல்லதுக்குத்தானே சொல்றாங்க. ஃபாலோ பண்ணிக்கலாம். ஆமா வீட்டுக்கு வர்றியா?”

“இல்ல அனு. இப்படியே ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குப் போயிர்றேன். இல்ல உங்கண்ணன் எனக்கு தீபாவளி கொண்டாட சான்ஸ் இருக்கு” என்றாள்.

“எது... உன்னையா? ஹ்ம்... எங்கண்ணாவுக்கு நீ கொண்டாடாம இருந்தா சரி” என அவரவர் வீடு சென்றனர்.

அடுத்த இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஏதோ ஒரு வித்தியாசத்தைத் தன்னுடலில் கண்டவள் தாயிடம் கேட்க, “மாதம் மாதம் சரியா தலைக்கு ஊத்துறதான அனுமா?” என கேட்டார் சாரதா.

“இல்லையேம்மா. இரண்டு மாதம் முன்ன டாக்டர்கிட்ட செக்கப் பண்ணி டேப்லட் வாங்கிட்டு வந்தேன். போன மாசம் வரச்சொன்னாங்க. வேலைப்பளுவில் போக மறந்துட்டேன். ஆனாம்மா, வயிறு லேசா தொப்பை போட்டிருக்கு” என்றாள் வருத்தக்குரலில்.

“நாள் தள்ளிப்போனா, ஒவ்வொரு மாதத்திலும் வெளிவரும் இரத்தம் நிறுத்தப்படுறதால, வயிறு கொஞ்சம் உப்பலாதான் இருக்கும். நேரத்திற்கு சரியா வந்தா உடல் ஒரு நிலைக்கு வந்திரும். சனி இல்லை ஞாயிறு அப்பாய்ண்ட்மெண்ட் போட்டுரு. இன்னும் நாள் போனா பக்க விளைவு எதுவும் வந்திரப்போகுது” என்றார்.

“சரிம்மா” என்று அலுவலகம் வர, அவள் அமரும் இடத்தில் இருந்த காகிதத்தை வினோதமாகப் பார்த்துக் கையில் எடுத்து அமர்ந்தபடி காகிதத்தில் உள்ளதைப் படிக்கப் படிக்க கோபமேறி, “ஏய்! ச்சீ...” என்று அதைத் தூக்கிப் போட்டாள்.

“என்னாச்சி அனு? ஏன் டென்சனாயிருக்க?” என்றபடி வந்த மாலினியிடம் அந்த காகிதத்தைக் காண்பிக்க, அதை எடுத்துப் படிக்கலானாள் மாலினி.

அனு! தினம் விழித்தே கனா

திரளுது நெஞ்சில் வினா

ஒரு துளிப் பார்வை தனா

தூண்டிடும் காதல் சனா!

சுற்றும் முள்ளெனச் சுற்றி வருகிறேன்

சற்று நிமிர்ந்தென்னைப் பார்ப்பாயா?

ரெட்டை விழிகளில் பார்வையாகிட

லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா?

இதுவரை கேட்டிராத பாடல் வரிகள் நீண்டுகொண்டே செல்ல, அதைக் கிழித்தெறிந்த மாலினி தோழியைப் பார்க்க, “நான் நிம்மதியா இருக்கிறது யாருக்கோ பிடிக்கலை போல மானி. காதல் கண்றாவின்னு சே...” என முகம் சுளித்தாள்.

“காதல் அழகான உணர்வு அனுமா” என்ற மாலினி கனவுலகிற்குச் செல்ல,


“ஏய்! லூசு! முதல்ல கனவை விட்டு வெளியே வா. எங்கண்ணன் நல்லவர்ன்றதால நீ அதை காதல்னு பிணாத்துற. இதுவே சரியில்லாத ஆளா இருந்தா என்ன பண்ணியிருப்ப?” என்று திட்டினாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
“காதல்னு வந்துட்டா, அவங்க எப்படியிருந்தாலும் நம்ம மனசு ஏத்துக்கும். ஜந்து மாதிரி இருப்பவன் கூட, ஜம்முன்னு தெரிவான். சிங்கிள் டீக்கு வழியில்லாதவன் கூட, சிக்ஸ்பேக் பாடியா தெரிவான். திருடனெல்லாம், திமிரழகனா தெரிவான். வத்தலும் தொத்தலுமா இருக்கிறவன், வசீகரமா தெரிவான். பொறுக்கி எல்லாம், பொக்கிஷமா தெரிவான். பிள்ளை பிடிக்குறவன் எல்லாம், பிள்ளை கொடுக்கிறவனா தெரிவான். பிச்சைக்காரன் கூட, பளிச்சின்னு தெரிவான்னா பாரேன். காதலுக்குக் கண்ணில்லைன்னு சும்மாவா சொன்னாங்க” என்று சிரித்தாள்.

“அதைதான் நானும் சொல்றேன். லவ் இஸ் ப்ளைண்ட். பட் லைஃப்? காதலின் முடிவு காமமும்! கட்டிலுமே!” என்றாள் அனுரதி.

அதுவரை விளையாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருந்த மாலினி தோழியின் வார்த்தையில் சுதாரித்து, “அப்படியில்லைடா” என்றாள்.

“அப்படித்தான்” என்று அழுத்தமாகச் சொன்னவள், “படிக்குற புத்தகங்களும், பார்க்கிற படங்களும், உணர்வுகளைத் தூண்டுமே தவிர, உண்மையைச் சொல்வதில்லை. காமத்தை அனுபவிக்க காதல் ஒரு ட்ரம் கார்டு” என்றளுக்கு உள்ளுக்குள் அவ்வளவு கொதிப்பு.

தோழியின் கொதிப்பை உணர்ந்ததுமே மேலே பேசுவதை விட்டுவிட்டாள் மாலினி. பாதிக்கப்பட்டவள் தன் ஆதங்கத்தை வார்த்தையாய் கொட்டும் பொழுது என்ன பேசிட முடியும். இனி அவளிடம் பேசும் பொழுது வார்த்தையில் கவனம் வைக்க வேண்டுமென்று குறித்துக்கொண்டாள்.

ஞாயிற்றுக்கிழமை தாயும் மகளுமாக மருத்துவமனை செல்ல மருத்துவர்.வர்ஷா அவர்களுக்காக மட்டும் ஞாயிறன்று வந்திருந்தார். வாசலில் நின்றிருந்தவரிடம், “ஹலோ டாக்டர். என்ன இங்க நிற்கறீங்க?” என்று தங்கள் வருகையை உணர்த்தினர்.

அதுவரை எதோ நினைவில் இருந்தவர், “வா... வாமா அனு. வாங்க சாரதா. ஃப்ரண்ட் ஒருத்தர் வர்றதா சொல்லியிருந்தாங்க. இப்பதான் வரலைன்னு போன் வந்தது. உங்க அப்பாய்ன்மெண்ட் டைம் என்ன?”

“பதினொன்று முப்பது டாக்டர். இப்ப பதினொன்று இருவது” என்றாள்.

“பரவாயில்லை நான் ஃப்ரீதான் வாங்க” என்று உள்ளே அழைத்து உட்காரச்சொல்லி தானும் அமர்ந்து, “எப்படியிருக்கீங்க அனு? என்ன பிரச்சனை?” என கேட்டார்.

“நல்லாயிருக்கேன் டாக்டர். அதே பிரச்சனைதான். இன்னும் பீரியட்ஸ் வரலை. மாத்திரை எடுத்தும் வேலைக்காகலை. அதான் அம்மாவைக் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றாள்.

“ஓ... நாலு மாசமா இந்தப் பிரச்சனை இருக்குல்ல. ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். வேறெதுவும் இருக்கா? அதாவது, நெஞ்செரிச்சல், வாமிட்டிங், தலைசுத்தல் இப்படி எதாவது?”

“இல்லை டாக்டர். நான் எப்பவும் போலதான் இருக்கேன். போன மாசம் வரை ஒருமாதிரிதான் இருந்தது. ஏன் இரண்டு மூன்று முறை வாமிட் எடுத்திருக்கேன். வெளில சாப்பிட்டது ஒத்துக்கலை போல. இப்ப ஓகே” என்றதும் நிம்மதி மூச்சுவிட்டார் அவர்.

ஊடுகதிர்(ஸ்கேன்) அறிக்கை வர அதைப் பார்த்து, “ஒண்ணும் பிரச்சனையில்லைமா. எல்லாம் நார்மலாதான் இருக்கு. எதுக்கும் ஒன் மன்த் டேப்லட் மாற்றி எழுதித் தர்றேன். பார்த்துட்டு வாங்க” என்றார்.

“டாக்டர் பீரியட்ஸ் வராததால வயிறு இன்னும் பெருசா தெரியுது. ஒரு மாதிரி அன்ஈஸி ஃபீலாகுது.”

“எஸ். எனக்குமே வித்தியாசம் தெரியுதுதான். டேப்லட் போடுங்க வரலைன்னா நெக்ஸ்ட் மன்த் ஃபுல் செக்கப் போட்டுப் பார்த்திரலாம். வேற எந்த பிரச்சனை இருந்தாலும் தெரியும். அதற்கேற்றார்போல் ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்” என்றார்.

“டாக்டர் ஒண்ணு சொல்லணும்” என்றதும் ‘சொல்’ என்பதாய் அவர் தலையசைக்க, “சட்சட்டுன்னு எமோஷனல் ஆகிடுறேன். ஏன்னே தெரியாமல் கோவம் வருது. எதாவது பிடிக்கலைன்னா அதிகமா வாக்குவாதம் பண்றேன். மனஅழுத்தம் அதிகமாயிருக்குமோ?” என்றாள் கேள்வியாக.

“இந்த டைம்ல அப்படித்தான்மா இருக்கும்” என்று பேசிக்கொண்டே சென்றவர், “எந்த டைம்ல டாக்டர்?” என்ற அனுரதியின் கேள்வியில், தான் செய்யும் தவறு புரிந்து “மெ...மென்சர்ஸ் வராத நேரத்தைச் சொல்றேன்மா. சீக்கிரமே சரி பண்ணிரலாம்” என்றபடி மாத்திரையை எழுதிக்கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார்.

“ஷப்பா” என மூச்சை இழுத்து விட்டவர் யாருக்கோ கைபேசியில் அழைத்து, “என்னால முடியலைங்க மேடம். என்மேல சந்தேகம் வர சாத்தியக்கூறுகள் அதிகமாகிருச்சி. வேற யார்கிட்டயாவது போயிட்டாங்கன்னா என் ஆட்டம் க்ளோஸ்” என்றதும் எதிரில் என்ன சொல்லப்பட்டதோ, “தப்புதான். எல்லாமே என் தப்புதான். இது நியூஸானா என்னோட டாக்டர் படிப்பே காலியாகிரும். தயவு செய்து எதாவது பண்ணுங்க மேடம்” என்றதும் எதிரில் உள்ளவர் சொல்வதைக் கேட்டு, “சரிங்க. சீக்கிரம் எதாவது பண்ணுங்க. எனக்கு ஒவ்வொரு நாளும் பயத்தோடவே போகுது” என்று அலைபேசியைத் துண்டித்தவருக்கு உள்ளூர எதோவொரு பயம் கவ்வ, முகமெங்கும் வியர்வைத் துளிகள்.

“அம்மா டாக்டர் என்னவோ மாதிரி இருந்தாங்கள்ல?”

“ஆமா அனுமா. ட்ரீட்மெண்ட் கூட ஏனோதானோன்னு செய்த மாதிரி தெரிஞ்சது. என்னதான் மறைத்தாலும் அவங்க முகத்துல கள்ளம் தெரியுது. இந்த மாசம் மட்டும் பார்க்கலாம். சரியா வரலைன்னா வேற ஹாஸ்பிடல் போகலாம்” என்றார்.

மறுநாள் மாலினியிடம் அதையே சொல்ல, “ம்... எனக்கும் அந்த டாக்டர் வித்தியாசமா நடக்கிற மாதிரிதான் தெரியுது. அம்மா சொன்னது சரி. அவங்க கைனகாலஜிஸ்ட்தான நாம நியூரோ டாக்டர் பார்க்கலாம்” என்றாள்.

பேசிக்கொண்டே மின்தூக்கி அருகில் வர, “ஹாய் கேர்ள்ஸ்! என்ன இந்த லிஃப்ட் முன்னாடி நிற்குறீங்க?” என்று அங்கு வேலை பார்க்கும் ஒருவர் கேட்க,

“ஏன் சார்? எப்பவும் போறதுதான்” என்றார்கள் அவர் கேள்வி ஏனென்று புரியாது.

“எப்பவும் போறதா? இது விஐபிஸ் லிஃப்ட்மா. யாரும் இதைச் சொன்னதில்லையா?”

“இல்லையே சார். ஃபர்ஸ்ட் டைம் வந்தப்ப ரிசப்ஷன்ல இதில்தான் போகச்சொன்னாங்க. நாங்க போகும்போது ஆஃபீஸர்ஸ் வந்தாலும் எதுவும் சொல்றதில்லையே?” என்றனர்.

“ஓ... அப்ப எனக்குத் தெரியலைமா. நீங்க போங்க” என்று யோசனையில் சென்றவர், வரவேற்புப் பெண்ணிடம் சென்று அதைப்பற்றி விசாரிக்க, “அது எம்.டி சாரோட ஆர்டர் சார்” என்று மட்டும் சொல்ல, ‘ஒருவேளை அவருக்கு உறவா இருக்குமோ’ என புலம்பியபடியே சென்றார்.

“மானி! அந்த சார் சொன்ன பிறகுதான் எனக்கே புரியுது. நம்ம கூட ஸ்டாப்ஸ் யாரும் வர்றதில்லையே. அவங்க வேற லிஃப்ட் மூலமாதான் போறாங்க. நமக்கு மட்டும் ஏனிந்த சலுகை?” தன் சந்தேகத்தைத் தோழியிடம் கேட்டாள்.

“தெரியல அனுமா. அதைவிடு இந்தக் கம்பெனி எம்.டி யாரு?”

“தெரியலையே மானி. நம்ம கேட்டப்ப பெங்களூர்ல இருக்காருன்னு சொன்னாங்க. போட்டோ கூட பார்த்ததில்லை. ஆன்லைன்ல தேடினப்ப கூட, எம்.டி நேம், போட்டோ கூட இல்லை. சரி எதுக்கு இந்த ஆராய்ச்சி?” என்றபடி மின்தூக்கியினுள் நுழைய, அவர்களைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி ஜெகதீஷூம், மேலாளர் அறிவழகனும் உள்ளே வர, சட்டென்று மூலையில் ஒதுங்கிக்கொண்டாள் அனுரதி.

“ஹேய் அனு” என்ற மாலினியின் கிசுகிசுப்பான குரலில் என்னவென்பதாய்ப் பார்க்க, “அறிவழகன் சார் பெயருக்கு ஏற்ற மாதிரி அறிவாகவும், அழகாகவும் இருக்காருல்ல” என்று கண்சிமிட்டினாள்.

“இதை கண்ணன் அண்ணனிடம் சொல்லு நட்பே! அப்புறம் அறிவுன்னு சொல்லு, அவன் இருக்கிற போஸ்டிங் வைத்து ஒத்துக்குறேன். அழகுன்னு வெளில சொல்லிவிடாதே” என்றாள் கிண்டலாக.

“ப்ச்... ரசிக்கத் தடை போடாத அனுமா” என்று முகம் சுருக்க,

“ரசனையா? கருமம் முகமூடி போட்ட மாதிரி முகமெல்லாம் முடி போட்டு மறைச்சிருக்கான். வாய் எங்க இருக்குன்னு ஆள் வச்சித் தேடணும் போலயிருக்கு. இன்னும் ஒரு மாதம் போனா, தலைமுடியை இழுத்துப் பிடிச்சி போனிடெய்ல் இல்லை இரட்டை ஜடையே போடலாம். வாந்தி வர்ற மாதிரி இருக்கான். அவனைப்போய் ரசிக்கிற, உன்னோட ரசனை எந்தளவு கேவலமாயிருக்கு. உவ்வே! என்ன கண்றாவி ரசனையோ உனக்கு. உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லு, அவன் அழகாவா தெரியுறான்? கலரா இருந்தா அழகாகிருவாங்களா மானி. உன்னையெல்லாம் அண்ணன்கிட்டச் சொல்லி...” என்று முடிக்காது நிறுத்தினாள்.

முதலில் சாதாரணமாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுப்பான குரலில் ஆரம்பித்தவள், அடுத்தடுத்துப் பேசுகையில் குரல் சற்றே உயர்ந்திருந்தது. சற்று தான். அருகில் இருப்பவருக்கு அப்பட்டமாகக் கேட்கும் வகையில் கிடையாது.

“சொல்லிக்கோ. நான் அவர்கிட்டேயே சொல்லுவேன். அன்னைக்கு அந்த லாவண்யா பொண்ணு யங்னு சொன்னதுல கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொன்னா...” என மேலும் பேசுவதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய தளம் வர இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

சட்டென்று ஏதோ தோன்ற, திரும்பிப்பார்த்த அனுரதியின் கண்கள் புரியாமொழி பேசி, சுருங்கி, பின் கூர்ந்தது. அவள் பார்ப்பாள் என்றறியாத அறிவழகன் அவள் மீதிருந்த பார்வையை வேகமாக விலக்கி, பின் புருவம் உயர்த்தி அவளிடமே என்னவென்பதாய்ப் பார்த்துச் சிரிக்க, அச்சிரிப்பு அவனைத் தவிர யாருக்கும் தெரியாதளவு தாடி, மீசை மறைத்திருந்ததோ!

“மானி! இந்த அறிவழகன் சார் பார்வையே சரியில்லை” என்றாள் யோசனை முகமாக.

“எல்லாரையும் சந்தேகப்படாத அனுமா. அறிவழகன் சார் ரொம்ப நல்ல டைப். பார்க்கிற எல்லாரும் ரவிசங்கர் கிடையாது. நல்...”

“மானி ப்ளீஸ். இப்ப ஏன் அவனை இழுக்கிற? நீ என்ன சொன்னாலும் அறிவழகன், அறிவே இல்லாத அழகன்தான். பார்வையே சரியில்லை” என சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்க்க, யாருமறியாது கையசைத்து விடைபெற்று வேகமாகச் சென்றான் அவன்.


“அடப்பாவி!” என வாயில் கைவைத்து நின்றுவிட்டாள் பெண்.
 
Member
Joined
Nov 8, 2025
Messages
51
டாக்டர் வர்ஷா யாருக்காக இந்த சின்ன வேலைய பாத்துட்டு இருக்கா அவள்தான் ஒரு பொம்பளையா
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
டாக்டர் வர்ஷா யாருக்காக இந்த சின்ன வேலைய பாத்துட்டு இருக்கா அவள்தான் ஒரு பொம்பளையா
:):):)
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top