Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அன்றைய இரவு பதினோரு மணி அளவில் வீட்டில் கைலி கட்டிக்கொண்டு, கதிர் கையில பைலை வைத்துக்கொண்டு கோவமாக அமர்ந்திருந்தான். அவன் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க, வாசலில் நின்று இருந்தது அந்த பணக்கார தோரணையில் கோவிலில் வம்பிழுத்த அந்த வயதான பெண்மணி ஓவியகீதா.
“ஏய்! என்ன... கோயில்ல கொஞ்சம் கூட உன்னோட பர்பாமன்ஸ் சரி இல்லையே. உனக்கு எங்கேயாவது அறிவு இருக்கா. நான் எப்படி நடிக்க சொல்லிக் கொடுத்தேன். நீ எப்படி நடிக்கிற? உன்ன பாத்தா வாய் பேச தெரியாதவன் என்று யாரேனும் நம்புவாங்களா?” என்று ஓவியகீதா கதிரை திட்ட. கதிர் அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.
நேரம் சரியாக 11.45 மணிக்கு மீண்டும் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, வெளியே நின்று இருந்தது இவர்களின் நண்பன் மணி
“ஹாய் ஓவியா! என்ன அமைதியா இருக்கிற? யாரு உன் அமைதிக்கு காரணம்?”
“ஏய்! வாய மூடு. இவன கோயிலில் பர்பாமன்ஸ் பண்ணச் சொன்னா, உம்மனா சாமி மாதிரி நின்னுக்கிட்டு இருக்கான்.”
“ஆமா ஊமை உம்முன்னு நிக்காம வேற என்ன பண்ணும்?” என்றான் மணி.
“டேய்! அவங்க எல்லாம் திறமையானவர்கள். ஆனா, இவன் அப்படி இல்ல. இவன் வேஸ்ட்.”
“ஆயா நீ பேசறத எல்லாம் இப்பவே பேசிடு. இன்னும் உனக்கு பத்து நிமிஷம் தான் டைம்.”
“என்னடா சொல்ற? என்ன பத்து நிமிஷம்?” என்ற ஓவியகீதா புரியாது கேட்க,
“ஏய்! மணியைப் பாரு” என்றான் மணி.
“அய்யய்யோ! இத நான் மறந்துட்டேன். இல்லடா நான் பேச வந்ததை பேசிட்டு கிளம்பிடுறேன்” என்று ஓவியகீதா சொல்ல,
“சீக்கிரம் ஐந்து நிமிஷத்துல சொல்றத சொல்லிட்டு ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு. ஐயோ இன்னும் மூணு நிமிஷம் தான் இருக்கு” என்றான்.
“டேய்! நான் உன்கிட்ட அடுத்த வாரம் சனிக்கிழமை பேசுறேன். பை” என்று பேசியபடி ஓவியகீதா அந்த இடத்தில் இருந்து ஓடிப்போக,
அவளின் கையை பிடித்து நிறுத்திய கதிர், “அடிங்கொய்யால கிழவி. நேரம் நைட் பனிரெண்டு ஆயிடுச்சு இல்ல. இனிமே சனிக்கிழமை இல்ல. ஆனா, உனக்கு இன்னைக்கு ஏழரை ஆகிப்போகுது பாரு.” என்றான்.
“டேய் டேய் விட்டுடுடா” என்று ஓவியகீத்து கெஞ்ச,
“ம்... வேலைக்கே ஆகாது. ஞாயிற்றுக்கிழமை என் மௌன விரதத்திற்கு என்ட் கார்டு போட்டாச்சு. என்ன சொன்ன உம்மனாசாமி மாதிரி இருக்கேனா, ஏன் கிழவி, நீ எல்லாம் ஒரு சித்திகாரியா. எங்க அப்பன் உன்கிட்ட என்னை ஒப்படைக்கும் போது என்ன சொன்னான்? என்னை படிக்க வைத்து ஒரு பெரிய ஆளா ஆக்க சொன்னான். ஆனா நீ, என்னை ஒரு திருட்டுப் பயலா ஆக்கி வச்சியிருக்க.”
“டேய்! ஏன்டா தம்பி அப்படி சொல்ற? திருட்டு நம்மளுடைய குலத்தொழில்டா. உன் அப்பன் என் அக்கா மனச திருடினான். உன் அம்மா செத்ததும் உன் அப்பன் மனச நான் திருடினேன். ஆனா, என்கூட வாழ உன் அப்பனுக்கு குடுத்து வைக்கல. என்ன கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நினைச்சா அல்பாயுசில் போய் சேர்ந்துட்டான்” என்று பழங்கதைகள் பேச,
“ஏய்! வெத்தலை வாயி. உன்ன ரெண்டாவதா கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் கொஞ்சமா என் அப்பன் சாவறதுக்குப் பதில், ஒரேடியா அப்பவே போய் சேர்ந்துட்டாரு.”
“சரி சரி. ஃபிளாஷ்பேக் எல்லாம் இப்ப தேவை இல்ல. நம்மள நம்பி ஒரு பத்து பேர் இருக்கிறாங்க. அவங்களுக்காக நம்ப இந்த திருட்டுத்தனம் பண்ணி தான் ஆகணும்பா.” என்றார்
“அது எப்படி கிழவி. திருடுற எல்லாருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு” என்றான் மணி.
“அட ஆமாடா. எப்ப என்ன தப்பு தவறு எது நடந்தாலும் சரி. காரணத்தை நமக்கு ஏத்தமாதிரி மாற்றிக் கொண்டால் தான் நம்மால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.”
“நீ எந்த கட்டத்துக்கும் போக வேண்டாம். சரி கோயிலில் அடிச்ச பணம், நகைக்கு எங்களோட பங்கு எங்கே? என்று கேட்டான் கதிர்.
“டேய் அங்க ஒன்னும் வேலைக்கு ஆகல. கூட்டம் கம்மியா தான் இருந்தது. அதுவும் இல்லாமல் நம்ப ஒன்னும் இந்த தடவை நகை பணம்னு திருடுவதற்கு போகலயே டாக்குமென்ட் அடிக்க தான் போனோம்.
“ஆனா, அந்த டாகுமென்ட்டை நமக்கு முன்னாடி யாரு தூக்கி இருப்பாங்க?” என்று சந்தேகம் கேட்டான் கதிர்.
“டேய் ஓவியம்! என்றழைத்தார் ஓவியகீதா.
“ஏய் கிழவி. கதிருன்னு சொல்லு. இல்ல சங்கை கடிச்சுடுவேன்” என்று கோவப்பட்டான்.
“சரி சரி கதிரு. நான் தான் உன்னை கோவிலுக்குள்ளே வச்சு அந்த டாக்குமண்டை அடிக்க சொன்னேன் இல்ல. நீ ஏன் அத பண்ணல?”
“அது ஒண்ணுமில்ல கிழவி. கோவில்ல ஒரு தேவதையை பார்த்தேன்.”
“தேவதை உன்னை பார்த்தங்களா?” என்று மணி கேட்டான்.
“இல்ல. நான் பார்த்த தேவதை என்னை மட்டுமில்ல வேற யாரையும் பாக்கமாட்டா” என்றான்.
“ஏன் தேவதைக்கு கண்ணு தெரியாதோ?” நக்கலாகவே கேட்க,
“ஆமாடா தெரியாது. ஆனா, அழகுனா அழகு அவள் அப்படி ஓரு அழகு.
“ஏய் கதிரு இந்த உலகத்திலேயே நான் தான் அழகுன்னு சொல்லுவ. இப்ப என்ன மாத்திப் பேசுற?”
“அடக் கிழவி நான் எப்ப சொன்னேன்? நீ அழகு இல்ல. சரியான அழுக்கு.” என்றான் கதிர்.
“பயபுள்ளைய சின்னதிலேயே கள்ளிப் பாலைக் குடுத்து சோழியை முடிச்சு இருக்கணும். அதை செய்யாததால தான் இப்படிலாம் பேசிட்டு இருக்க.”
“டேய் மணி! கிழவி கிடக்குது. நான் சொல்றத கேளு.”
“ம்ம்ம்... சொல்லித் தொலையும்” என்றான் மணி.
“நீ காலையில கேட்ட தெரியுமா ஓரு ஓவியம். அந்த ஓவியத்துக்கு ஏத்த கண்ணுக்கு சொந்தக்காரி தான் அந்தப் பொண்ணு.”
“கவிதை கவிதை.”
மணியின் வார்த்தைக்கு, “கழுதை மேப்பது எல்லாம் கவிதையை ரசிக்குது.” என்றார் ஓவியகீதா.
“ஏய் கிழவி யாரை சொன்ன?”
“நான் மணியை சொன்னேன்பா. சரி இப்ப என்ன பண்றது அந்த சல்மான் பாய் வேற காலையில வந்து டாக்குமெண்ட் கேப்பானே.”
“அவன் கேட்டா நீதான் பதில்லை சொல்லணும். நாங்க என்ன செய்ய?”
“டேய் கதிர்! நான் பாவம் இல்ல. நான் வேற அந்த ஆளு தந்த அட்வான்ஸ் காசை செலவு பண்ணிட்டேன்டா.”
“அடக் கிழவி நான் கேட்டதுக்கு அவன் இன்னும் பணமே தரலன்னு சொன்ன. எவ்வளவு பணம் வாங்கின? என்ன செலவு பண்ண? என்று கதிர் கேட்டான்.
“அ...அது அவன் அட்வான்ஸ் பணம் இருபது ஆயிரம் தந்தானா அதுல நான் ஓரு செல்போன் வாங்கிகினேன்.”
“போன வாரம் தானே கிழவி, பீச் ரோட்ல ஓரு வெள்ளைக்காரன்கிட்ட ஓரு செல் போனை ஆட்டையை போட்டு தந்தேன். இப்ப எதுக்கு இன்னுமொரு போன் வாங்கின?”
“அது ஒண்ணுமில்ல மவனே. அந்த போன்ல சித்தி செல்பி எடுத்தா பிக்சர் ஒழுங்கா கிடைக்கல அதான்.”
“ஸெல்ப் எடுக்காத உனக்கு செல்பி கேக்குதா. சரி சரி முதல்ல இடத்தை காலி பண்ணு. எனக்கு தூக்கம் வருது” என்றான்.
“டேய்! என்னடா. அப்ப அந்த டாக்குமெண்ட்?”
“என்னைக் கேட்டா. நீ தானே அட்வான்ஸ் வாங்கின. நீயே அனுபவி. நாளைக்கு அந்த பாய் வந்து சங்கு மேல மிதிப்பான் வாங்கிக்கோ.”
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா மவனே. சித்திக்காக கொஞ்சம் அந்த டாக்குமெண்ட் எங்கன்னு பாருடா” என்றார் கெஞ்சலாக.
“டேய் பாவம்டா. சீக்கிரம் எதாவது பிளான் பண்ணு.” மணியும் அவருக்கு சப்போர்ட் வந்தான்.
“இல்லடா. நான் கோவிலுக்குள் போகும்போது அந்த சேட்டு பொம்பளைக்கிட்ட டாக்குமெண்ட் இருந்துச்சு. அப்புறம் அந்த பொம்பள நான் சொன்ன தேவதைகிட்ட சண்டை போட்டா. அப்புறம் தான் இந்த கிழவியை வச்சு என் சைக்கிள்ல காரை மோதி, நம்ம அங்க ஒரு ட்ராமா போட்டு. அந்த பூக்கார பாட்டியை வச்சு, அந்த சேட்டு பொம்பளை காரில் இருக்கும் டாக்குமண்டை எடுக்க சொன்னோம். ஆனா, அந்த பூக்கார பாட்டி குடுத்த பைல்ல பேப்பெர்ஸ் இல்லை” என்றான்.