• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீட்டு வயல்...

"ஏத்தா செல்வி என பிரகாசம் கூப்பிட, இதோ வரேன் தாத்தா என சொல்லிக்கொண்டே சேற்று வயலில் இருந்து, வரப்பின் மேலே ஏறி வந்தவள், சொல்லு தாத்தா என்க, குடிக்க கொஞ்சம் நீராகரம் ஊத்திட்டு வா என்றார்.

ம்ம் என சொல்லியவள்,வரப்பின் கீழே ஓடும் வாய்க்காலில் இறங்கி கையை கழுவி விட்டு,மரத்து நிழலில் இருக்கும் மண் பானையை திறந்தவள், அங்கிருந்த சில்வர் செம்பால் உள்ளே விலாவி விட்டு,பானையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே நாற்று பறித்து கொண்டிருக்கும் தாத்தாவிடம் சென்றாள்.

"தாத்தா என கூப்பிட,இதோ என்றவர், பறித்த நாற்றை முடி போட்டு சேற்றில் வைத்து விட்டு,தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்தவர்,பேத்தி கொடுத்த மோர் கலந்த நீராகரத்தை வாங்கிக் குடித்தார்.

பின்னர் போத்தா,எல்லாருக்கும் கொடு என்றவர்,அங்கிருந்த வரப்பில் உட்கார்ந்து கொண்டு இளைப்பாற தொடங்கினார்.

வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லியாச்சி,வயலில் இறங்கி வேலை பாக்க வேண்டாமென்று, இவரோ அதை கேட்ப்பதில்லை.உசுரு இருக்கும் வரை இந்த கட்டை சேத்துல தான் உறவாடும் என உறுதியாய் சொல்லி விட்டார்.

நாற்று பறித்தவர்களுக்கு நீராகரத்தை கொடுத்து முடித்தவள்,தூரத்தில் வேலை செய்யும் தனது தந்தையை நோக்கி சென்றாள்.முத்துவோ அங்கு நடவு நடப்போகும் வரப்பிற்கு,அண்டை வெட்டி கொண்டிருந்தார் .

"அப்பா என்ற மகளின் குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவரிடம் சொம்பை நீட்ட, இன்னுமா வளவன் வரலை என்க,வந்து கிட்டே இருக்கும் பா என்கும் மகளிடமிருந்து செம்பை வாங்கி அதிலிருந்ததை குடித்து முடித்தவர்,மணி என்ன ஆகுது? எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பாங்க பெரியவங்கனு யோசிக்கிறது இல்லையா? எப்ப தான் இவனுக்கு பொறுப்பு வரப்போகிறதுனு தெரியவில்லை.

அப்பா...அங்க ஏதாச்சு வேலையா இருக்கும், அதனால தான் அண்ணன் வர நேரம் ஆயிடுச்சு என்றவள், அங்கிருந்த மரத்தடிக்கு வந்து பானையை முன்பு இருந்த இடத்திலே வைத்து விட்டு,அவளும் கொஞ்சம் மோர் எடுத்து குடித்தாள்.

"அப்பொழுது,வயலில் நாற்று அடித்துக் கொண்டிருந்தவர்கள்,காலை சாப்பாடு சாப்பிடுவதற்காக அங்கிருந்து வீட்டை நோக்கி கலைந்து சென்றார்கள். போகிறவர்கள் காதில் விழுவது போல,சாப்பிட்டு கொஞ்சம் சீக்கிரமா வாங்கப்பா,உச்சி வெயில் ஏறுறதுக்குள்ள இந்த வயல்ல நாற்றை பறிச்சாகனும் என்க,அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க முடிச்சிடலாம் பெரியப்பா என்று ஒருத்தர் சொல்லிக்கொண்டே செல்ல,வெயில் உச்சில ரொம்ப ஏறிட்டா உங்களுக்கு தான் கஷ்டம் அதனால தான் பார்க்கிறேன் என்றார் பிரகாசம்.

"செல்வியும் பிரகாசமும் மரத்தடி நிழலில் அமர்ந்து கொண்டு,நாளைக்கு நடக்க போகும் நடவை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது,பள்ளி கூடம் படிக்கிற பிள்ளை எதுக்கு இந்த வயல்ல வந்து கஷ்டப்படனும் என்க, நம்ப வயல்ல செய்யாம,வீட்லே தின்னுட்டு தூங்கனுமா என்றவள்,இப்ப லீவு தான்,இதுக்கப்புறம் பொங்கல் முடிஞ்சுதான் பள்ளிக்கூடம் கவலைப்படாத தாத்தா.

தூரத்தில் வளவன் நடந்து வருவதை பார்த்தவர், அம்மாடி அப்பாவ சாப்பிட கூப்பிடு என்று சொல்ல,அப்பா என்று அங்கிருந்து செல்வி கூப்பிட, திரும்பி பார்த்த முத்துவிடம் வளவன் வரும் திசையில் கையை நோக்கி காட்டினாள்.

அவரும் பார்த்துவிட்டு சரி என்று தலையசைத்து, மண்வெட்டியை வரப்பில் வைத்து விட்டு,அங்கிருந்த வாய்க்காலில் கை,கால்களை கழுவிக்கொண்டு, இருவரும் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்.

"அங்கு வந்தவனிடம்,ஏப்பா மணி என்ன ஆகுது இப்பதான் வர என்று முத்து கோபமாக கேட்க,அது வந்துப்பா,அம்மா கடைக்கு அனுப்பி இருந்துச்சு.அங்க போய்ட்டு வர லேட் ஆயிடுச்சு.தினமும் ஒங்கொம்மாக்கு கடையில் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்லிட்டு இருக்கனும்,மொத்தமா வாங்கி வைத்துக்கனும்னு பழக்கமே கிடையாது,என்று முத்து சத்தம் போட்டு போட, ஏன்பா என்று பிரகாசம் பார்க்க, தந்தை கேட்டதிலையே அமைதியாகிவிட்டார் முத்துவும் .

பிறகு, அண்ணன் எடுத்துட்டு வந்திருந்த சோள சோற்றையும்,கத்தரிக்காய் குழம்பையும்,ஆளுக்கு ஒரு தட்டில் போட்டு கொடுத்தவள்,அவளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.

பெரியவன் வந்துட்டானா? என்று தாத்தா கேட்க,இன்னும் இல்லையென்றான். ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அம்மாங்க கிட்ட சொல்லி, குடிக்க டீயும், அவங்களுக்கு சாப்ட எதாவது வாங்கிட்டு வந்துருப்பா என சாப்பிட்டுக்கொண்டே மகனிடம் சொன்னார் முத்து.

இப்பதானே சாப்பிட்டு இருக்காங்க அதுக்குள்ள எப்படிப்பா டீ குடிப்பாங்க? என்று செல்வி கேட்க,உச்சில வெயில் வரப்போகுது இல்லையா, வேலை வேகத்துல சாப்பிட்டது சீக்கிரம் செரிச்சிடும் கண்ணு.

ம்ம்... அதுவும் சரிதான் என்றவள், நால்வரும் சாப்பிட்ட பாத்திரங்களை, வாய்க்காலில் கழுவி கூடையில் வைத்து விட்டு,அண்ணனிமிருந்து போனை வாங்கி யூடூப் பாக்க ஆரம்பித்தாள்.

முத்துவோ,ஏர் ஓட்டும் வயலை பார்த்திட்டு வருவதாக சொல்லிட்டு சொல்ல,தாத்தா ஒரு விஷயம் என்றான் வளவன்.

சொல்லுய்யானு சொல்லிக்கொண்டே வெத்தலையின் மேல் சுண்ணாம்பை தடவி,வாயில் ஏற்கனவே போட்டிருந்த பாக்கோடு சேர்த்து மென்று கொண்டே, சொல்ல சொல்லி தலையசைக்க,உன் பேத்தி வந்திருக்கிறாள்.

"பேரன் அல்லியை தான் சொல்கிறான் என்று நினைத்தவர்,அல்லி புள்ள வீட்டுக்கு வந்துச்சா? என்று அதிர்ச்சியாக கேட்டார் பிரகாசம்.அய்யோஓஓஓஓ தாத்தா,உன் பெரிய பேத்தி தாமரை இருக்காளே, அவ ஊருக்குள்ள வந்துருக்காள் என்க, என்னப்பா சொல்லுற என மீண்டும் அதிர்ந்து கேட்டார் பிரகாசம்!.

ம்கும்.... காது அவுட்டா என்றவனின் தோள் பட்டையில் தட்டிக்கொண்டே, வாயில் போட்ட வெற்றிலையை துப்பியவர்,நெசமாவா அய்யா? என்க, ஆமா தாத்தா நான் பார்த்து பேசிட்டு தான் வரேன்.

எப்படி இருக்காய்யா?,பெரிய பொண்ணா இருப்பாளா?,நம்மளை எல்லாம் அவளுக்கு ஞாபகம் இருக்கா? என்று தனது மகள் வயிற்று பேத்தியை பற்றி பேரனிடம் கேள்விகளை அடுக்கினார் பிரகாசம்.

"அவளுக்கு என்ன தாத்தா ஜம்முனு இருக்கா என்று சொல்லி சிரித்தவன், எல்லாரையும் விசாரிச்சா தான் எனறவனிடம்,ம்ம்... அந்த அய்யனாரு என்ன முடிவு பண்ணி எங்குடும்பத்துல விளையாடுறான்னு தெரியலை,இப்படி சிதைஞ்சிட்டேனு வருத்தப்பட்டார்.

அதை கேட்டவன்,ஆமா அய்யனாருக்கு வேற வேலையே கிடையாது?,உங்க ரெண்டு பேர் குடும்பத்தில் தான் விளையாடுறது பாரேன்.மனுஷால் செய்த தப்புக்கு கடவுள் மேல எதுக்கு பழி போடுறீங்க? என்றான்.

சற்று தொலைவில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்த செல்விற்கு இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு இருவரும் காரசாரமாக ஏதோ விவாதிப்பது தெரிந்து, அங்கிருந்து எழுந்து அவர்கள் அருகில் வந்தவள், என்னாச்சிணா?.

தாத்தா முகத்தில் கவலை இருப்பது போல தெரிய,நல்லா தானே இருந்தாங்க?,அதுக்குள்ளே என்ன ஆச்சு என்று யோசனையானவள்,தாத்தா எதுக்கு உம்முனு இருக்கீங்க என்க, உன் அத்தமவள் வந்துருக்காளாம் என்றார்

அல்லி நம்ப வீட்டுக்கு வந்துருக்காளா? என அவளும் அதிர்ச்சியாக கேட்க, அல்லி இல்லை,அவளோட அக்கா தாமரை என்றான் வளவன்.

என்னாஆஆஆஆ அல்லிக்கு அக்கா இருக்காங்களா? என்று அதிர்ந்தவளுக்கு,என் முதல் பேத்திம்மா தாமரை எனச் சொல்லி வருத்தப்பட்டார் பிரகாசம்.

என்ன தாத்தா சொல்லுற என்க, ஆமாம்மா, னதாமரை தான் உன் அத்தைக்கு தலைச்சன்,பிறகு தான் சிவாவும்,அல்லியும் என்றவர்,இத்தனை வருஷமா அவளோட அத்த கூடவே வளர்ந்தாள்.இப்போ தான் ஊருக்குள்ள வந்துருக்காள்.

ஓஓஓ... என்றவள்,இப்படி ஒரு ஆள் இருக்குனு யார் தான் சொல்லியிருக்கீங்க என அங்கலாய்த்தவள்,ஆமா இது எப்படி தெரியும் என்க,அது வந்து என்று வளவன் இழுக்க,டேய் அண்ணாஆஆ நீ தானே அத்தை வீட்டுக்கு போன?.

ஏய்... நான் ஏண்டி அங்க போகப்போறேன்?,கொழுப்பா உனக்கு என தங்கையை சத்தம் போட,சும்மா நடிக்காதடா,நீ அத்தை கிட்ட பேசுறதும், அவங்க வீட்டுக்கு போவதும் அல்லி சொல்லிருக்காள்.

அடிப்பாவி என அல்லியை மனதிற்குள் திட்டியவன்,உன்கிட்ட அப்படி சொன்னாளா? என தங்கச்சியிடம் வளவன் கேட்க,அது வந்து என இப்பொழுது என்ன சொல்வதென்று செல்வி முழித்தாள்.

அவளின் முக மாற்றமே ஏதோ இருவருக்கும் சொல்ல,ஏம்மா செல்வி, நீ அல்லி கிட்ட பேசுவியா? என்றார் பிரகாசம்.தாத்தா... அது வந்து, அது வந்து என இழுக்க,சொல்லும்மா என்றவரிடம், அப்பாகிட்ட சொல்லிடாத, நானும் அல்லியும் ப்ரண்டு தான்.

பள்ளி கூடத்துல மட்டும் தான் பேசிப்போம் என்றவள் தலையில் கொட்டினான் வளவன். ஆஹான்.... தோழிக்கு அக்கா இருக்குறது மட்டும் தெரியாது, ஆனால் வீட்டுக்கு யார் வராங்க?,யார் வரலைனு? மட்டும் பேசிக்குறீங்க போல.

பேரன் பேத்தியை பார்த்தவர் உரிமை உள்ளவங்கள் இப்படி மறைமுகமாக பேசி பழகவேண்டிய சூழல் வந்து விட்டதே,என்று தான் எல்லாம் சரியாகுமோ அது அய்யனாரப்பனுக்கு தான் வெளிச்சமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

அண்ணா,நிஜமாவே அந்த குள்ளி, அக்கானு ஒருத்தவங்க இருப்பதை இதுவரை என்னிடம் சொன்னதேயில்லைணா என வருத்தமாக செல்வி சொல்ல,ஓஓஓ... உனக்கு தெரியும்னு இருந்திருப்பாள், அதான் சொல்லலை போல.

வரட்டும் கிளாஸ்க்கு அப்போ இருக்கு அந்த குள்ளச்சிக்கு என்ற செல்வி, தாத்தா சாப்ட போன ஆளுங்களாம் வராங்க என்றவள்,நான் அண்ணா கூட வீட்டுக்கு போறேனென்று சொல்லிக்கொண்டே,சாப்பாட்டு பேகை கையிலெடுத்தவள்,போலாமாணா என்றாள்.

ம்ம் என்றவன் தங்கை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வரப்பில் நடந்தவனின் செல்லுக்கு கால் வர, பாக்கெட்டில் இருந்த எடுத்தவன் புது நம்பராக இருக்க,யோசனையோடே அட்டென் பண்ணி ஹலோ என்க,
அந்தப்பக்கத்தில் இருந்து மாமா..நான் தாமரை பேசுறேன் என்றாள்.

"அந்த மென்மையான குரலும், அவளின் உரிமையான அழைப்பும் வளவனுக்கு ஏதோ உள்ளுக்குள் குறு குறுத்தது. ஹலோஓஓ..மாமா இருக்கீங்களா என மீண்டும் அவள் கேட்பதில் சுதாரித்தவன்,சொல்லு தாமரை என்க, ஒரு ஹெல்ப் பண்ணனும்.

சொல்லு, என்ன பண்ணனும் என வளவன் கேட்க, தன்னோடு நாளைக்கு பக்கத்து டவுனுக்கு வர முடியுமா? என்றாள் தாமரை.


ஓஓ என்றவன்,நாளைக்கு மதிய ஷிப்ட் தான் எனக்கு.அதனால,காலை 11 மணிக்கு மேல போகலாமா என இவன் கேட்க,ம்,மாமா என்று சொல்லியவளின் அழைப்பு கட்டானது.
கதிர்:


"வயலுக்கு தேவையான உரங்களை வாங்கியவன்,தங்களது வண்டியில் ஏற்றி விட்டு,அம்மா சொல்லிய பொருட்களை வாங்கிட்டு வரேன், நீங்க டெம்போல போய்டுங்கப்பா என பெருமாளிடம் சொல்ல,சரிப்பா என்றவர் வழக்கம் போல தன் மகனை ரசித்து பார்த்தார்.

"அடர் குங்கும கலர் சட்டையும்,அதே கலரில் சிறு பார்டர் வைத்த வெள்ளை வேட்டியும்,கழுத்தில் வெந்தய விதை மாடலில் செயினும்,நெற்றியில் சிறு கீற்றாக சந்தனமும்,அதன் மேல் சிறிது குங்குமமும்,இரு புறமும் முறுக்கி விட்ட மீசையும்,அளவான தாடியுடன் கதிரை பார்க்க அவ்வளவு கம்பீரமாக இருந்தது.இவன் என் மகன் என்ற பெருமிதம் அவர் முகத்தில் சிரிப்பை தந்தது.


"ஒரு கையால் லேசாக வேட்டியின் முனையை தூக்கி பிடித்து அவன் நின்ற தோரணம் ஆஹாஆஆஆ.... தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தந்தைக்கு, என்னப்பா என்க, ஒன்றும் இல்லைபா என்றவர்,டெம்போவில் ஏற வண்டி அங்கிருந்து சென்றது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346

"பின்,தனது ராயல் என்பீல்டில் ஏறியவன், வழக்கமாக வாங்கும் மளிகை கடைக்கு சென்று,பாக்கெட்டில் இருந்த பில்லை எடுத்து கொடுக்க, கடையில் உள்ள ஆள் அதை வாங்கி பொருட்களை எடுக்க சென்றார்.

"நீங்க போட்டு வைங்க செட்டியார் வரேனென்று சொன்னவன், பக்கத்திலிருக்கும் டீக்கடைக்கு சென்று, டீ ஒன்னு குடுங்கண்ணா என்று சொல்லி அங்கிருந்த சேரில் உட்கார்ந்தான்.

"சில நொடியில்,தம்பி டீ என மாஸ்டர் சொல்ல,எழுந்து வாங்கியவன்,மீண்டும் அமர்ந்து கொண்டு குடித்து முடித்து விட்டு,டீ க்கு ஆகிய காசை கொடுத்து, அங்கிருந்து மளிகை கடைக்கு செல்ல, பொருட்களும் அட்டை பெட்டியில் பேக் பண்ணி தயாராக இருந்தது.

"எவ்வளவு செட்டியார் ஆச்சு? என்றவனுக்கு பில் தொகையை அவரும் சொல்ல,பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தவன்,பொருட்களோடு வண்டிக்கு வந்து,முன் பக்கத்தில் வைத்துக்கொண்டு தனது வீட்டை நோக்கி சென்றான்.

"மதிய நேரம் என்பதால் ரோட்டில் ஆட்களின் நடமாட்டமில்லை.அதனால் வண்டியை வழக்கமான வேகத்தை விட வேகமாகவே ஓட்டிக்கொண்டே வந்தவன்,தனது ஊருக்குள் இருந்த பஸ் ஸ்டாப்பில் நிற்பவளை பார்த்து,இவ என்ன பண்றாள் இங்கே? என யோசித்து கொண்டே வந்தான்.

"அவன் வண்டி சில அடி தொலைவில் வந்து கொண்டிருப்பதை பஸ் ஸ்டாப்பின் உள்ளே இருக்கும் ஜன்னல் வழியாக பார்த்தவள் எழுந்து வந்து, அவன் பார்வை படுவது போல நிற்கும் பொழுது தான் கதிரின் கண்ணுக்கு தெரிந்தாள் தேவி.

அவளருகில் வந்து வண்டியை நிறுத்தியவன்,இங்கே என்ன பண்ற? என சுற்றியும் பார்த்து கொண்டே கேட்க, உங்களுக்காக தான் காத்திருக்கேன் மாமா.

"அவள் சொன்னதை கேட்டவன்,ப்ச்... என்று சொல்லி விட்டு என்ன பிரச்சினை உனக்கு? என்க, ஏம் மாமா இன்னும் எத்தனை வருஷம் தான் இப்படியே இருப்பீங்க?,வீட்ல அண்ணன் மாப்ள பார்த்து கிட்டு இருக்கு,மனசுல உங்களை நினைச்சி கிட்டு,எப்படி வேற ஒருத்தனை கட்டிக்கிட்டு வாழ முடியும் என்றவளை தேவிஈஈஈ.... என்று அதட்டினான்.

"எத்தனையோ முறை உன்கிட்ட நான் சொல்லிட்டேன்",எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லைனு,நீ தான் அதை புரிஞ்சிக்கலை.உன் மேல எனக்கு அப்படி ஒரு எண்ணமே இது வரை வரலை.

ஏன் மாமா... 5 வருஷமா உங்க பின்னால சுத்தி சுத்தி வரேனே இன்னுமா உங்களுக்கு என் மனசு புரியலை? என தேவி கண் கலங்க, சொன்னா புரிஞ்சிக்கடி, முறைப்பொண்ணு என்ற எண்ணம் தவிர,வேற எந்த ஆசையும் உம் மேல எனக்கு வரலைடி.

"இதை பல தடவை உங்கிட்ட சொல்லிட்டேன்.ஒழுங்கா வீட்ல பாக்குற பையனை கட்டி கிட்டு வாழுற வழியப் பாரு என்றவன்,வந்து உட்காரு வீட்ல விட்டுட்டு போறேன் என்க,வாழ்க்கை முழுவதும் உங்க கூட வர நினைப்பவளை,பாதியிலே விட்டு போறேனு சொல்றீங்களே என்று அழுதவள்,அப்பாவ வேண்டுமானால் வீட்ல பேச சொல்லட்டுமா மாமா? என கேட்க,ஏய் என்று கத்தியவன்,அடிச்சி பல்லை ஒடைச்சிருவேன்டி.

"விருப்பம் இல்லைனு கிளி பிள்ளைக்கு சொல்றது போல பல தடவை சொல்லிட்டு இருக்கேன், திரும்ப திரும்ப அதே கதைய பாடிகிட்டு இருக்க,ஏன் ஊர் உலகத்துல வேற எவனும் கிடைக்கலையா? என்று கதிர் கேட்க, அடிப்பட்ட பார்வையில் அவனை நிமிர்ந்து பார்த்தவளோ அங்கிருந்து ஊருக்குள் போகும் பாதையில் நடந்து சென்றாள்.

" தன் கேள்வியால் தேவியின் மனம் படும் பாடு கதிருக்கு புரிந்தாலும், விரும்பாதவளை எப்படி ஏற்றுக்கொள்வது? என்ற எண்ணமே அவனுக்கு.அவளருகில் வந்து வண்டியை ஸ்லோ பண்ணியவன்,ஏறுடி வீட்ல விடுறேன் என்க,அவளோ, கதிரவன் உங்க வேலைய பாருங்க என்று சொல்லி கொண்டே நடந்தாள்.

"இதும் என் வேலை தான் ஏறுடி என மீண்டும் அவன் சொல்ல,இப்போ வண்டியில் ஏறுனா வாழ்க்கை முழுவதும் இறங்க மாட்டேன் பரவாயில்லையா? என்க,எதுக்கு இந்த பிடிவாதம் என்றவனிடம்,மனசுல நீ இருக்கியே என்ன செய்ய என்றவளை, திருந்தாத கேஸ்டி நீ என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றான்.

போகும் அவனின் பின் தோற்றத்தை கண்ணீரோடு பார்த்துக்கொண்டே நடந்தவள்,இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே ஓடுவீங்கனு பாக்குறேன் என்றவள்,மனதிற்குள் இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு எடுக்கனும் என சொல்லிக்கொண்டே வீட்டிற்கு சென்றாள்.

கதிர் வீடு:

என்னடி யோசனை என கேட்டுக்கொண்டே அங்கு வந்து அமர்ந்த சீதா,கையில் எடுத்து வந்த சின்ன வெங்காயத்தை உரிக்க,அத்தை சொன்னதை பற்றி தான் யோசனை என்றவர், அக்காவுக்கு உதவி செய்ய தொடங்கினார்.

"குழம்பிற்கு தேவையானதை தயார் செய்து விட்டு,இருவரும் சமையலறைக்குள் சென்று வேலையை ஆரம்பித்தனர்.ராதாவோ அடுப்பில் வேக வைத்தை மொச்சையை இறக்கி கீழே வைத்து விட்டு,வயலில் நாற்று பறிப்பவர்களுக்கு டீ போட்டார்.

"மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும்,தயாராக கட் பண்ணி வைத்திருந்த வாழைக்காயை,கரைத்து வைத்திருக்கும் கடலை மாவில் முக்கி பஜ்ஜியை பொரித்தெடுத்தார் சீதா.

"இரண்டும் தயாரானதும் எடுத்து வைத்து விட்டு,மதிய உணவை சமைக்க ஆரம்பித்தார்கள்.என்னைக்கு தான் எனக்கு இந்த குழம்பு வரும் சீதா என கேட்டுக்கொண்டே,தனது அக்கா செய்யும் குழம்பை கவனித்த ராதாவிற்கு,சிரிப்பை மட்டுமே பதிலளித்தார்.

"இந்த முறை சரியா பார்த்துக் கொள்ளனும் என்றவர் சீதாவை கவனிக்க,எரியும் தீயில் வாணலியை வைத்தவர்,நல்லெண்ணைய் ஊற்றி அது காய்ந்ததும்,வெந்தயம் போட்டு, அது கருகுவதற்குள் வீட்டில் தயார் செய்து வைத்திருக்கும் கரவடத்தை போட்டு ஒரு கிளறு கிளறி,உரித்து வைத்த சின்ன வெங்காயத்தையும் ஒரு கொத்து கறிவேப்பிலையும் ஆய்ந்து போட்டார்.

"பிறகு,அதில் நடுத்தர அளவு தக்காளியையும் போட்டு,அதன் மேலே இடித்த பூண்டை போட்டு வதக்கி விட்டு, அறிந்து வைத்திருந்த,முருங்கைக்காய், கத்தரிக்காயையும் அதில் போட்டவர், அனைத்தையும் சில நிமிடம் வதக்கி விட்டு,கரைத்து வைத்த புளி தண்ணியை ஊற்றி,தேவையான உப்பு, காரம் சேர்த்து நன்கு கலந்து விட்டு, வாணலின் மேல் தட்டை மூடியாக போட்டு கொதிக்க வைத்தார்.

"இதுவரை பார்த்திருந்த ராதா, இதே தான் செய்யுறேன்,பிறகு எனக்கு மட்டும் ஏன் குழம்பு சரியா வரல? என்று மீண்டும் கேட்க,எல்லாம் சரியா செய்ற தான்.ஆனா அவசரம் அவசரம் செய்யணும்னு நினைக்கிறியே தவிர ஈடுபாடோடு செய்றியா?என்று முதல் முறையாக தங்கையை பார்த்து கேட்டார் சீதா.

"பொறுமையா செஞ்சா தான் நல்லா வருமா என்று ராதா கேட்க,அப்படி கிடையாது.சமையல் ஒரு கலை தான். அதை அன்போடு செய்யணும்டி.நீ அன்பு இல்லாம செய்யுறேன்னு நான் சொல்லலை.

"சீக்கிரம் செய்யணும்னு எண்ணம் தான் இருக்கிறது தவிர,உன்னுடைய கவனம் சமையல்ல இல்லை.இதுதான் விஷயம் என்று தங்கைக்கு பதில் சொல்லிய சீதா,சிறிது நிமிடம் சென்று வாணல் மேலிருந்து மூடியை திறந்து,சுத்தம் செய்து வைத்திருந்த கருவாட்டு துண்டுகளையும் வேக வைத்த மொச்சையும் சேர்த்து,நன்கு கலந்து விட்டு, அது கொதி வரும் போது, அரைத்து வைத்த தேங்காயையும், அதில் ஊற்றி மேலும் 5 நிமிடம் தணலை குறைத்து வேக வைத்து விட்டு அடுப்பை நிறுத்தவும்,வளவனும் செல்வியும் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.

"ம்மாஆஆஆ..டீ ரெடியா என்றவனுக்கு, ஆச்சுப்பா என்று சொல்லிக்கொண்டே, ராதா ரெடியாக இருந்ததை கொண்டு வந்து அவனிடம் கொடுக்க,அதை வாங்கி டேபிள் மேலே வைத்து விட்டு, தனது அறைக்கு சென்றவன்,செல்லை சார்ஜிங்கில் போட்டு விட்டு வெளியே வந்து, டீ கேனை எடுத்துக்கிட்டு வயலுக்கு சென்றான்.

"ஸ்ஸப்பாஆஆஆ என்று தரையில் படுத்த மகளை பார்த்த இருவரும், எதுக்கு இந்த வேலை? என்றனர் சீதாவும், ராதாவும்.வேலை செஞ்சி களைச்சி வந்துருக்கவளுக்கு கை கால் அமுக்கி விடாம,இப்படி கேள்வி கேட்குறீங்களே நீங்களாம் தாயா? என்றாள்.

எடுக்கா அந்த தொடப்ப கட்டைய என ராதா சொல்ல,ஏய் வாலு அடம் புடிச்சி வயலுக்கு போனவள் நீ, அப்போ அனுபவி என சொல்லி விட்டு தனது மாமியாரிடம் சென்றார் சீதா.

"எவ்வளவு வேலை நடந்துருக்குடா என்ற ராதாவிற்கு,அவள் வரும் வரை நடந்ததை சொல்லியவள்,இன்னும் அண்ணன் வரலையாம்மா?,நிலவன் போன் பண்ணினானாம்மா என்றாள்.

இல்லைடா,நேற்று பேசுனது தான், இன்றைக்கு கடைசி போட்டினு சின்னப்பு சொன்னான் என்றவரிடம்,நீங்க பாருங்க கண்டிப்பா ஜெயித்துட்டு தான் வருவாங்கம்மா.

ம்ம்.... முழுபரிச்சை எழுதனும் இன்னும் விளையாட்டு,விளையாட்டுனு சுத்திட்டு இருக்கான்.மார்க் மட்டும் எடுக்கலைனா இருக்கு என்றார் ராதா.

அய்யோஓஓஓ அம்மா,அவன் தான் கிளாஸ்ல பஸ்ட் வரான் பின்ன எதுக்கு உனக்கு கவலை? என்றவள்,நல்லா படிப்பான்னு நம்பி தான் அண்ணன் அனுப்பியிருக்கு புரிஞ்சிக்கோ.

" அப்பொழுது,என்ன என் தலை உருளுது என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் கதிர்.அண்ணன் குரலை கேட்டு, எழுந்து அமர்ந்தவள், ஒன்னும் இல்லைணா என்றாள்.ம்மா, சாப்பாடு,டீ குடுத்து அனுப்புனீங்களா என்க,ஆச்சுப்பா என்றவர்,நீயும்,பெரிய மாமாவும் தான் இன்னும் சாப்டலை.

குளிச்சிட்டு வரேன் எடுத்து வைங்கனு சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றான்.

குட்டி... நீயும் போய் குளிச்சிட்டு வா என மகளிடம் சொல்ல,இதோம்மா என்றவளும் அவளுக்கான ரூமிற்குள் சென்றாள்.

கிராமத்து ஓட்டு வீடு என்றாலும் வீட்டின் உள்ளே,சில வசதிகளை நவீன யுகத்திற்க்கு தகுந்த போல மாற்றி அமைத்திருந்தான் கதிர்.

"பிள்ளைகள் நால்வருக்கும் மாடியில் ரூம்.வீட்டின் உள்ளே இருக்கும் படிகட்டின் வழியே ஏறி செல்லலாம்.ஆனால் வளவனுக்கும்,கதிர் அறைக்கு மட்டும் வெளியே இருந்து உள்ளே போவதற்கும் இன்னொரு வழி உண்டு.

"இரவு நேர வேலை முடித்து வரும் போது வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவர்கள் இருவருக்கும் இந்த வழியை தயார் செய்தான்.மேலேயிருக்கும் ரூமிற்குள் வந்தவன் போட்டிருந்த சட்டை, பனியனை கழட்டி துவைக்க போட்டு விட்டு,குளிக்க டவலை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்னாடி இருக்கும் கிணற்றடிக்கு சென்றான்.

வாளியில் நீரை இறைத்து குளித்து முடித்தவன்,மேலே போய் டிரஸை மாற்றி கீழே வந்து தரையில் அமர்ந்தவன்,சிறிது நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தான்.

"பின் வரவு செலவு நோட்டில் இன்றைக்கு ஆகிய செலவை குறித்து வைக்கும் போது,நிலவனின் டீச்சரிடமிருந்து கால் வந்தது.அட்டென் பண்ணியவனுக்கு,மறுபுறமிருந்து சொல்லப்பட்ட செய்தி மகிழ்ச்சியாக இருந்தது,நன்றிங்க சார் என சொல்லி கட் பண்ணியவன்,அம்மா என குரல் கொடுக்க,உள்ளேயிருந்து வந்த ராதா சொல்லுப்பா என்க,நிலவன் மேட்ச்ல வின் பண்ணிட்டான்மா என்று சொல்லி சந்தோஷப்பட்டான் கதிர்.

மகன் சொன்னதை கேட்டவர், அப்படியாப்பா என்கவும்,ஆமாம்மா இப்போ தான் அவங்க பி இ டி சார்,போன் பண்ணி சொன்னாங்க.

சரியப்பு என சொல்லிக்கொண்டே சாமியறைக்கு சென்ற ராதா,அங்கிருந்த கடவுள்களிடம் நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தவர்,இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு அப்பு, அவனை படிக்க சொல்லு என்றார்.

அதெல்லாம் நல்லா படிக்கிறான்மா,நீ எதுக்கு அதை நினைச்சி வருத்தப்படுற, படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லையே, எல்லாம் தெரிஞ்சிக்கிறது நல்லதுனு நீ தானே சின்ன வயசுல எனக்கு சொல்லுவம்மா என திருப்பி கேட்க,இவன் எப்போதும் விளையாட்டே கதினு இருக்கான் கண்டிச்சு வைப்பா என்றார்.

அப்பொழுது உள்ளே வந்த பெருமாள், யாரை கண்டிக்கனும் ராதா என்று கேட்க,சின்னவனை தான் சொல்றேன் மாமா என்றவர்,சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?என்க,எடுத்து வைம்மா, எங்கே உன் அக்காவ காணும்? என கேட்டுக்கொண்டே அவருடைய அறைக்குள் சென்றார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top