- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
31
“இது என்னன்னு சொல்லுடி?”
தன் முன் கிடந்த திருமணப் பத்திரிக்கையை அமைதியாகப் பார்த்து, தோழியின் துளைத்தெடுக்கும் கேள்விக் கணையைத் தாங்கியபடி நின்றிருந்தாள் மின்னல் பெண்.
“நதீரா! இந்த கேரக்டர் என் வாழ்க்கையில் வந்ததில் இருந்து, எல்லாமே தப்புத் தப்பாதான் நடக்குது. யார் நதீரான்னு கேட்டா யார்கிட்டேயும் பதில் இல்லை. அப்ப நதீரான்னு ஒருத்தி இல்லவே இல்லையோன்னு தோணுது. நீயும் ஏன்டி என்னை ஏமாத்தின?” கோவத்தில் வந்து விழுந்தன நட்சத்திரப் பெண்ணின் வார்த்தைகள்.
சட்டென்று அடிபட்ட பார்வை பார்த்த மின்னல், “நதி நான் உன்னை ஏமாத்துவேனா? நீ இந்த வீட்டு மருமகளா ஆகுறதுக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும்தான் செய்தேன். நீ சொல்லு, என் அண்ணனைத் தவிர வேற யாரையாவது உன்னால கல்யாணம்... கல்யாணம் கூட வேண்டாம். அந்த இடத்துல இன்னொருத்தனை வச்சிப்பார்க்க முடியுமா? அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீ செத்துருவடி. அதை எங்களை வேடிக்கை பார்க்கச் சொல்றியா?”
நட்சத்திராவின் மனமோ உண்மைதானே என்பதை உணர்த்த அமைதியாக இருந்தாள்.
“உங்க கல்யாணம் நடக்க எத்தனை பேர் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டுருக்காங்க தெரியுமா? பொண்ணு பையனுக்குத் தெரியாம பத்திரிக்கை அடிச்சி கல்யாணம் முடிக்குறது லேசுப்பட்ட வேலை நினைச்சியா? பொண்ணு மாப்பிள்ளையைப் பக்கத்துலயே வச்சிக்கிட்டு சாத்தியமான்னு யோசி. அதுவும் பிரபல வக்கீல் ரவிச்சந்திரன் குடும்பத்துல.! எல்லாம் யாருக்காக? உங்களுக்காக மட்டுமே! அன்னைக்கே சொன்னேன்.. கண்டதையும் யோசிக்காம உன் வாழ்க்கையை நீ வாழ்னு.”
“நா... நான் என்னடி பண்ணுவேன்” என்று கட்டிலில் ஓய்ந்துபோய் அமர்ந்து முகம் மூடி அழும் தோழியின் அருகில் அமர்ந்து, அவளைத் தன் தோள்சாய்த்து “என்ன குழப்பம் நட்டுமா உனக்கு?” என்றாள் மென்மையான குரலில்.
“எல்லாமே குழப்பம் கொடி. என்னை வேண்டாம் சொன்ன உன் அண்ணன்! இன்னொருத்தியை உயிரா விரும்பிய உன் அண்ணன்! எங்களுக்குக் கல்யாணம்னு தெரிஞ்சும் நாடகமாடிய உன் அண்ணன்! என்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பை மட்டுமே தரும் உன் அண்ணன்! கல்யாண மேடையிலேயே ஐ லவ் யூ சொன்ன உன் அண்ணன்! இன்னுமின்னும் எவ்வளவோ சொல்லலாம். என்னால ஜஸ்ட் லைக் தட்னு தூக்கிப் போட்டுட்டுப் போக முடியலடி. ரொம்ப குழம்பிப் போயிருக்கேன். நான் எப்படி ஃபீல் பண்ணனும்னு நீயே சொல்லு?”
“உனக்கேத் தெரியுது, உன் அண்ணன் இல்லன்னா நான் செத்துருவேன்னு. அப்படிப்பட்ட என்கிட்ட உண்மையைச் சொல்லியிருக்கலாமே! நதீரான்னு ஒரு கேரக்டர் இல்லன்னா, உங்க சர்ப்ரைஸ் கல்யாணத்துல எல்லாரையும் விட அதிகம் சந்தோஷப்பட்டிருப்பவள் நான்தான். யாரோ ஒருத்திக்குப் பதிலா நானான்னு வந்தப்ப, நான் எவ்வளவு துடிச்சிருப்பேன். அதை ஏன் யாரும் புரிஞ்சிக்கலை? உன் அண்ணன் பெயரோட என் பெயரைப் பார்த்தப்ப, அதிர்ச்சி, சந்தோஷம் தாண்டி கேள்விதான் நிற்குது.”
“பழையதை மறந்திருன்னு ஈஸியா சொல்லிட்டாங்க. அப்ப உன் அண்ணன்மேல நான் வச்ச காதலும் அந்த லிஸ்ட்ல போயிரும்தான? இது ஏன்டி உன் அண்ணனுக்குப் புரியலை? ஏன் என்னை ஏமாத்தினாங்க?” என்றவள் குரலில் ஏமாற்றம் மட்டுமே!
“ந...நதிமா?” பேச முடியா தவிப்பு மின்னல் பெண்ணிடம்.
“நதீரா யார்?” அழுத்தமாக வந்தன வார்த்தைகள்.
“அண்ணன்கிட்ட கேட்டுக்கோயேன்” என்றாள் கெஞ்சலாக.
“ஏன் யாரும் என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களா? விடு நான் மாமாகிட்ட கேட்டுக்கறேன்” என்று மின்னலின் அறையில் இருந்து வரவேற்பறையில் இருந்த மாமனாரைத் தேடி வந்தாள்.
“நதி... ஏய் நதி வேண்டாம்.” என்ன தடுத்தும் நிற்காமல் செல்லும் தோழியை இயலாமையுடன் பார்த்தபடி பின்னாடியே வந்தாள்.
தொலைக்காட்சியில் செய்தி பார்த்தபடி அமர்ந்திருந்த ரவிச்சந்திரன் முன்னால் வந்து நட்சத்திரா நிற்க, தகப்பன் அறியாமல் நட்சத்திராவின் கைபிடித்து, “வேண்டாம் நதி. எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்” என்றாள் மெல்லிய குரலில்.
“பேசத்தான் வந்திருக்கேன். மாமாவாவது சொல்றாங்களா பார்க்கிறேன்” என்று மின்னலிடம் முணுமுணுத்தாள்.
“என்ன ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டிருக்கீங்க? என்னமா நட்சத்திரா? ஏன் டென்ஷனாயிருக்க? ஏதாவது பிரச்சனையா?” என கேட்டார்.
“அப்பா நான்தான் டென்ஷனா இருக்கேன். அவள் கிடையாது” என்று மகள் இடையிட,
“என்னாச்சி என் பொண்ணுக்கு? திடீர் டென்ஷன் ஏன்? நான் மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொல்லவேயில்லையே? அப்புறம் டென்சனுக்கு என்ன வேலை?” என்றார் கிண்டலாக.
“டேடி...” என சிணுங்க.
“ஹா...ஹா என்ன விஷயம்? ரொம்ப டீப் டிஸ்கஸனா இருக்கு. என்கிட்ட கேட்க என்ன தயக்கம்?”
“அப்படிலாம் எதுவும் இல்லப்பா.”
“நீ சொல்லுமா நட்சத்திரா?” என்று கேள்வியை மருமகளிடம் திருப்பினார்.
“நதீரா யார் மாமா? பட்டென்று அவள் கேட்டுவிட,
“நதீரா யார்னு உனக்குத் தெரியாதா?” வியப்பாய் புருவம் உயர்த்தி யோசனையில் ஆழ,
“யாராவது ஒருத்தர் சொன்னால்தான மாமா தெரியும். அத்தையில் தொடங்கி பாட்டி, அப்பா, அம்மா தாண்டி, இதோ இவள் கூட என்கிட்டே மறைக்கிறா. நீங்க சொல்லுங்க மாமா?” என்றாள்.
‘இந்த அரி பையன் திருந்தவே மாட்டானா? எல்லாத்துலயும் சொதப்பல்.’ மகனை மனதார திட்டி, “மறைக்கிறது அவங்க எண்ணமா இருக்காதுமா. எதுக்குத் தேவையில்லாததைப் பேசணும்னு நினைச்சிருக்கலாம்” என்றார் நிதானமாக.
“நதீரா எப்படி மாமா தேவையில்லாதவளா ஆவா?”
அவளை ஆழ்ந்து பார்த்து, “உனக்கு நதீராவைத் தெரிஞ்சிருச்சி போல?” என்றார்.
“கன்பார்மா தெரியாது. இதுதான்னு ஒரு கெஸ்ஸிங் மட்டும் இருக்கு.”
அதில் புன்னகை எழ, “சம்பந்தப்பட்டவனை விட்டுட்டு மத்தவங்ககிட்ட கேள்வியா கேட்டுத் தள்ளுறியா? எல்லார் மூஞ்சிலும் ஒரு மிரட்சி தெரியுது.”
“மனசுக்குக் கஷ்டமாயிருக்கு மாமா. இந்தக் கொடி அவள் அண்ணனோட சேர்ந்து நிறைய மறைச்சிருக்கா” என்று குற்றம் சாட்டினாள்.
“ஏய் விட்டா எல்லாமே நான்தான் செஞ்சேன்னு சொல்லிருவ போல? எங்க கேள்வி கேட்டுருவியோன்னு இன்னும் வராமல் இருக்கிற உன் புருஷனைக் கேளு. ஊருக்கு இளைச்சவன்... அதென்ன பழமொழி க்ரேன்மா?” என்றாள் பாட்டியிடம்.
“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மின்னல்மா.”
“ஹான் அதேதான். நீங்க அடிக்கிற லூட்டிக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்?”
“வேணாம் மயிலு ரொம்பப் பேசின ரெக்கையை உடைச்சிருவேன்” என்று நட்சத்திரா விரல் நீட்டி மிரட்டிட,
“உடைக்கிற வரை நாங்க ஊறுகாயா சாப்பிட்டுட்டு இருப்போம். போவியா!” என அசால்ட்டாகத் தட்டிவிட்டாள்.
“அத்தை பாருங்கத்தை” என்று மாமியாரிடம் செல்ல,
“அடடா புருஷன் எவ்வழியோ பொண்டாட்டியும் அவ்வழியா? ஒற்றுமை பிரமாதம் நதிமா” என மின்னல் கிண்டலில் இறங்கினாள்.
“அமைதியா இரு மின்னல். புள்ள ஏற்கனவே பயந்திருக்கு” என்று சகுந்தலா மகளை அடக்க,
“அப்பா” என்று கண்ணைக் கசக்க,
“என்னடா ஹார்ட் பஞ்சராகிருச்சா?”
“எஸ் டேட்.”
“அப்ப பஞ்சரடைக்க ஆள் பிடிச்சிரலாமா?” என்றார் புன்னகையுடன்.
“ஐயய்யே! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் டேட்” என்று அலறவும் அனைத்தும் மறந்து நட்சத்திரா புன்னகைத்தாள்.