• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
பகுதி – 3

சென்னை ரயில் நிலையத்தில் கால் தடம் பதித்தவளை வரவேற்க, தன் நண்பனின் சகோதரி வந்து இருப்பதை பார்த்தவள் புன்னகையுடன் அவளைச் சந்தித்தாள்.
“வெல்கம் ரோஜா. டிராவல் எல்லாம் ஓகே தானே” என்று கேட்டுக்கொண்டே ரோஜாவின் கையில் இருந்த பையை பெற்றுக்கொண்டு, "அப்புறம் உன் நண்பன் எப்படி இருக்கான்? இங்க நாங்க எல்லாம் அவனுக்காக காத்து இருக்கோம்ன்னு அவனுக்கு தெரியுமா, தெரியாதா?" என்று அவள் கேட்ட கேள்விக்கு, ரோஜாவின் பதில் புன்னகையாக மட்டுமே இருந்தது.
"உன்கிட்ட, உன்னோட பாஸ்ட் பற்றி எதையும் கேக்க கூடாதுன்னு என் தம்பி சொல்லிட்டான் ரோஜா. சோ, நான் உன்கிட்ட என் லிமிட்குள்ள இருந்துக்குறேன்" என்று சொன்ன அந்ப்த பெண்ணின் வயது முப்பதை தொட்டு இருக்கும்.
‘ஆள் பார்க்க சிரித்த முகம். கலகலப்பான பேச்சு. முகத்தை பார்த்தாலே இவரின் பெயர் லட்சுமி என்று தான் இருக்கும்’ என தனக்குள் நினைத்து கொண்டு இருந்த ரோஜாவின் கேள்விக்கு எதுவாக,
"ஆங் என் பெயர் கனகலட்சுமி. உனக்குத் தெரியும் இல்ல. நீ என்னை கனகான்னே கூப்பிடலாம்" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட பெண்ணுக்கு இந்தச் சமூகம் தந்த பெயர் இளம் விதவை.
"நான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுவேன். ஆனா, உனக்கும் பேச ஸ்பேஸ் கொடுப்பேன். சரி சொல்லு. நம்ம வீட்டுல இருக்குற மாடி வீட்டில் தங்க போறியா? இல்ல உனக்கு நான் அப்பார்ட்மெண்ட்ல வீடு பாக்கவா" என்று ரோஜாவை கேட்டுக்கொண்டே ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்து வெளியே வந்த கனகா ரோஜாவின் பெட்டியை அவளின் காரில் வைத்தாள்
"உங்களுக்கு ஏன் சிர்மம்? நான் வாடகைக்கு எங்காவது..." என்று ரோஜா சொல்லும் முன்னதாக
"நீ நம்ம வீட்டு மாடியில் தங்கினாலும் வாடகை தந்து தான் ஆகணும். ஏன்னா அது நம்ம சொந்த வீடு இல்ல. நானும் வாடகைக்கு இருக்கும் வீடு தான் அது" என்று கனகா கண்கள் சிமிட்டி சொல்ல. ரோஜா சிரித்த முகத்துடன்.
"அப்போ நானுமே உங்க கூட உங்க வீட்ல வாடகை தந்துட்டு உங்க கூடவே இருக்கேன்" என்று ரோஜா சொன்னதும்
"சூப்பர் ஐடியா. எல்லாமே நீ பாதி நான் பாதி. ஆனா யாருடைய உடையையும் யாரும் தொடக்கூடாது." என்று கனகா அலட்டிகொள்ளாமல் சொல்லும் சொற்களுக்கு மரியாதை தரும் விதமாக.
"என் புத்தகத்தையும் அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்" என்று ரோஜா சொன்னதும்,
"எனக்கு கிசு கிசு படிக்க மட்டும் தான் பிரியம். அதுவும் இப்போ எல்லாம் போன் வாயிலாக பாத்துப்பேன். சோ, உன் புத்தகத்தை நான் களவாட மாட்டேன். நீ என்னை நம்பு." என்று காரை ஓட்டிக்கொண்டே கனகா சொன்னாள்.
தன் விழிகளில் கலைந்து இருந்த கண் மையை சரி செய்து கொண்ட ரோஜாவை பார்த்த கனகா "வேலை தேடணுமா? இல்ல அதையும் உன் நண்பன் ரெடி பண்ணிட்டானா?"
"கை வசம் ஒரு வேலை இருக்கு. அதனால இந்த மாசம் எனக்கு வருமானத்துக்கு வழி தேட வேண்டியது இல்லை."
"என்ன சொல்ற? என்ன வேலை?" என்றாள் கனகா.
“போகப் போக தெரிஞ்சிப்பிங்க" என்று ரோஜா சொல்ல, கனகா ஏதும் புரியாத நிலையில் காரை தன் வீட்டின் முன் நிறுத்தினாள்.
"ரோஜா இந்தா சாவியைப் பிடி. அந்த ரோஸ் கலர் வீடு தான். நீ அங்க வெயிட் பண்ணு. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்" என்று சொன்னவள் தன் காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த.
ரோஜா தன் கைபேசியில் இருந்து அவள் கனகாவின் வீட்டை வந்தடைந்த விஷயத்தை, மெசேஜ் மூலம் தன் தோழன் தோழிக்கு தெரியப்படுத்தி, அவள் தந்தையிடம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கச் சொன்னாள்.
கனகாவின் வீடு பார்க்க சின்னதாக இருந்தாலும், அந்த வீட்டை சுற்றி ரோஜா செடிகள் பல வண்ணங்களில் இவளை பல் இளித்து வரவேற்றது.
"வா உள்ள வா ரோஜா" என்று கனகா அழைக்க, ரோஜா வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் கண்ணில் பட்டது ஒரு ஆணின் புகைப்படம்.
"என்ன அப்படி பாக்குற. இவர் தான் என்னவர். பெயர் மோகன். அதுக்குன்னு மைக் எங்கன்னு கேக்காத" என்று போலியாக சிரித்த கனகாவின் கண்ணில், மோகனின் மீது உள்ள காதல் குறையவே இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
"மாடியில ஒரு ரூம் இருக்கு ரோஜா. நீ அங்க ஸ்டே பண்ணிக்கோ. கிச்சன் கீழே தான். அடுத்த மூணு நாள் நான் தான் உனக்கு எல்லாமே பண்ணுவேன். ஆனா, அதன்பிறகு வாரம் மூணு நாள் நீயும், மீதி நாள் நானும் தான் கிச்சன் ராணிகள். சரியா?” என்றாள் கனகா.
"விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என்ற கூற்றை அறிந்தவள் தான் நானும்" என்று சிரித்துக் கொண்டே சொன்ன ரோஜா, தன் பையை எடுத்து கொண்டு மாடிப்படியில் கால் வைத்தாள்.
"நீ மேல போ ரோஜா. நான் மாடி ரூம் சாவி கொண்டு வரேன்" என்று சொன்ன கனகா, கண் இமைக்கும் நேரத்தில் ரோஜாவைப் பின் தொடர்ந்து மாடிப்படி ஏறி அங்கு உள்ள அறையைத் திறந்தாள்.

"வா ரோஜா. ரூம் எப்பவும் சுத்தமா தான் இருக்கும். நான் வீக்லி ஒன்ஸ் கிளீன் பண்ணிடுவேன். உன் திங்க்ஸ் எல்லாம் நீ இங்க வச்சிக்கோ" என்று கனகா சொன்னதும், ரோஜா சுவற்றின் மூலையில் உள்ள டேபிளின் மேல் பையை வைத்தவள், முதல் வேலையாக தன் பையில் இருந்த தாய், தந்தையின் போட்டோவை எடுத்து மேசை மேல் வைத்தாள்.
"உங்க அம்மா அப்பாவா?" என்று கனகா கேட்டதும், ரோஜா "ம்" என்று சொன்னவள் அதே பையில் இருந்து நைட்டியை எடுத்தாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“ஓகே ரோஜா. நீ பிரெஷ் ஆகிட்டு கீழே வா. நான் போய் டின்னெர் ரெடி பண்றேன்" என்று சொன்ன கனகா, கீழ் தளத்தை நோக்கி நடையை கட்ட,
ரோஜாவும் தன் ஆடைகளை மாற்றிக் கொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் கீழே இறங்கினாள்.
"வா ரோஜா. இன்னைக்கு இட்லி சாம்பார் தான். உனக்குப் பிடிக்கும் இல்ல." என்று கேட்டுக்கொண்டே கனகா மூன்று தட்டில் இட்லியை எடுத்து வைத்தாள்.
‘மற்றுமொரு ப்ளேட் யாருக்கா இருக்கும்?’ என்று ரோஜாவின் மனதில் எழுந்த கேள்விக்கானப் பதிலை, கனகாவின் செய்முறை விளக்கியது.
"என்ன ரோஜா அப்படி பாக்குற. நான் எப்பவும் என் மோகன் கூடதான் சாப்பிடுவேன். அதான் அவருக்கும் ஒரு தட்டு சாப்பாடு எப்பவும் டேபிள் மேல் வச்சிடுவேன். இதெல்லாம் நீ கண்டுக்காத. வா சாப்பிடலாம்" என்று கனகா அழைக்க, தன் கணவன் மீது கனகா கொண்ட காதலை கண்டு சற்று அசந்து தான் போனாள் ரோஜா.
இருவரும், இல்லை இல்லை மோகனின் ஆன்மாவையும் சேர்த்து மூவரும் இரவு உணவை சாப்பிட்டு முடிக்க, "ரோஜா நாளைக்கு ஏழு மணிக்கு எல்லாம் என்னை கேப் வந்து பிக் அப் பண்ணிக்கும். நீ எத்தனை மணிக்கு எழுந்தாலும் எனக்கு அதுல ப்ரோப்ளம் இல்ல. வீட்டுச் சாவி மொத்தம் ரெண்டு. இந்தா இதுல நீ ஒண்ணு வச்சிக்கோ. அப்புறம் என்னோட ஸ்கூட்டி சாவி கூட எண்ட்ரன்ஸ் கீ போர்டுல தான் மாட்டி வச்சிருக்கேன். உனக்குத் தேவைன்னா நீ வண்டியை எடுத்துக்கோ. அண்ட் இது என்னோட போன் நம்பர். எப்போ வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு" என்றாள்.
கனகா அளித்த விளக்கத்திற்கும், அன்புக்கும் பரிசாக ரோஜா அவளை கட்டி தழுவி, “குட் நைட். காலை ஆறு மணிக்கு சந்திப்போம்" என்று சொன்னவள் மாடிக்குச் சென்றாள்.
ரோஜா தான் தங்கி இருக்கும் அறையில் சில மாற்றங்களை செய்த பின், பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுக்க. அந்தப் புத்தகம் புதுமைப்பித்தனின் எழுத்தில் படைக்க பட்டதாக இருந்தது. மூளையில் எந்த யோசனையும் இல்லாமல் ரோஜா அந்த புத்தகத்தை முழு மூச்சாக வாசிக்கத் தொடங்கினாள்.
அந்தக் கதை: பொன்னகரம், புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் அன்றாடம் காய்ச்சியான, ’அம்மாளு’ அடிபட்டுக் கிடந்த தன் கணவனின் பால்கஞ்சி சாப்பிடும் ஆசைக்குப் பணம் சம்பாதித்த நிகழ்வைக் கருவாகக் கொண்டது.
ஒரு வழியாக ஒரு புத்தகத்தின் ஆதி முதல் அந்தம் வரை வாசித்து முடித்தவள், புத்தகத்தை மீண்டும் பையில் வைத்த பின்பு தன் படுக்கையில் படுத்து கண்கள் மூட, புத்தக நண்பனின் துணை இன்று கிடைத்ததால், ஐந்து வருடம் கணவன் என்ற அங்கீகாரத்துடன் இவள் அருகில் இருந்த ஒரு உருவம் இன்று இல்லை என்ற நினைப்பை அறவே மறந்து உறங்கவும் செய்தாள்.
காலை ஐந்து மணிக்குக் கண் விழித்த ரோஜா, தன் அப்பாவிற்கும் தோழன், தோழிக்கும் கைபேசி மூலமாக காலை வணக்கம் தெரியப்படுத்தியவள், குளித்த பின் கீழே இறங்கி செல்ல, அங்கே கனகா மூன்று கப் காபியுடன் மேசையில் அமர்ந்து இருந்தாள்.
“குட் மார்னிங் ரோஜா" என்று சொல்லி, மேசை மேல் இருக்கும் காபியை காட்ட, முகத்தில் சந்தோஷ ரேகை தெரியும்படி சிரித்துக் கொண்டே கையில் கப்பை எடுத்தாள் ரோஜா.
"ஏன் சிரிக்கிற ரோஜா? உனக்கு காபி பிடிக்காதா?" என்று கனகா அவள் குடித்த கப்பை அலம்பியப்படி ரோஜாவை பார்த்து கேள்வி கேட்டதும்,
"எனக்கு காபி பிடிக்கும் என்பதையே மறந்து ஐந்து வருஷமாச்சு. புகுந்த வீட்டில் ஆளுக்கொரு முறை. அடுப்பை பற்ற வைக்கக்கூடாது என்பது பெரியவர்களின் கட்டளை" என்று சொன்ன ரோஜா, காபியின் நறுமணத்தை நுகரந்தப்படி ரசித்து ருசித்து குழம்பியை அருந்துபவளை பார்த்து கனகா சிரித்துக் கொண்டாள்.
"இருபது ரூபாய் கடையில் தந்தா காபி கிடைக்கப் போகுது. இதுக்காக நீ ஏன் உன்னோட புகுந்த வீட்டு சம்மதத்தை கேக்கணும்?" என்று சொன்ன கனகா வாசலில் இருந்து கேட்கும் காரின் ஹார்ன் சத்தத்தை கேட்டு வேகமாக செருப்பை மாட்டிக்கொண்டு கைப் பையுடன் வாசலுக்கு சென்றதும், “ரோஜா நான் ஈவினிங் ஆறு மணிக்கு தான் வருவேன். எந்த நேரமா இருந்தாலும் நீ என்னை போன்ல கூப்பிடலாம். ஹேப்பி டே மா" என்று சொன்ன கனகாவை கேப் சுமந்து கொண்டு சென்றது.
அன்று மதிய நேரம், ரோஜாவிற்கு வீட்டு வாடகை தரும் அளவுக்கு இப்போதைக்கு பணம் இருந்தாலும், முதலில் ஏதாவது ஒரு வேலைக்கு சேர வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
"நம்ம படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை எல்லாம் இங்க கிடைக்குமா? ஏன் கிடைக்காம? வந்தாரை வாழ வைக்கும் சென்னை நமக்கும் ஒரு வழியைக் காட்டும்" என்று தனக்குள் எண்ணியவள், தன் சான்றிதழ்களை எடுத்து கொண்டு வீட்டை பூட்டியதும், செராக்ஸ் கடையை தேடி மெயின் ரோடுக்கு போனாள்.
தனக்கு தேவையான ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்டு, மீண்டும் வீடு திரும்பும் வழியில் காப்பி ஷாப்பைப் பார்த்தவள் மனதில் காலை கனகா சொன்ன வார்த்தை தான் ஓடிக்கொண்டு இருந்தது.
“இருபது ரூபாய்க்கு காபி வெளியே கிடைக்கும் என்பது எனக்கும் தெரியும். ஆனால், அந்த இருபது ரூபாயை எடுத்து கொண்டு இருபது நிமிடம் செலவு செய்து நான் காபியை அருந்த வெளியே செல்ல, வீட்டின் பெரியவர்களிடம் சம்மதம் கேட்டால் தானே நடக்கும்" என்று தனக்குள் எண்ணியவள், ‘இனி யாரு நம்மை கேள்வி கேக்க போறாங்க? உச்சி வெய்யில் மண்டையை பிழக்குது. இந்த நேரத்தில் காபி எல்லாம் வேண்டாம். அதோ அங்கே ஒரு பெண்மணி நன்னாரி சர்பத் தயார் செய்து தருகிறார். நம்ம இன்னைக்கு ஐஸ் போட்டு ஒரு சர்பத் குடிப்போம்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றவளின் சேலை முந்தியை பிடித்தது அந்தப் பிஞ்சுக் கரங்கள்.
"அம்மா! ஏன் அம்மா என்னை விட்டுட்டு போனீங்க? வாங்க அம்மா என்கூட. வாங்க அம்மா நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று நான்கு வயதுப் பெண் குழந்தை ரோஜாவை அம்மா என்று அழைப்பதைக் கேட்ட ரோஜாவின் முகம் கேள்வியில் சுருங்கிப் போன சமயம், வேகமாக வந்த கார் ஒன்று, அந்தப் பிள்ளையை இடிக்கப் போகும் நேரத்தில், ரோஜா அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு, பின் நோக்கி தன் கால் தடத்தைப் பதித்த தருவாயில், மல்லாந்து விழுந்து பின் தலையில் அடிபட்டு மயங்க, "அம்மா... அம்மா" என்று சிறுமி கண்களில் கண்ணீருடன் அழைத்தாள்.
அன்று நான் குழந்தையின் உருவத்தில் தெய்வத்தை கண்டேன்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
அம்மா டி கனகா இது உனக்கு🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶உன்னை போல தேவதைகள் பூமியில் உலா... இது என்ன புது திருப்பம் 🤔🤔🤔🤔🤔குழந்தையோட அம்மா ரோஜா போல இருப்பாளோ
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top