Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 38
- Thread Author
- #1

மாயன் சொன்னதை வர்மனால் நம்ப முடியவில்லை.
தோழிகளுக்குள் பொதுவாகப் பேசிக்கொண்ட வார்த்தைகாகவா மகதி தன்னை இந்த அளவுக்கு நேசிக்கின்றாள் என்ற சந்தேகம் வர்மனின் மனதில் எழுந்ததை மாயனும் அறிந்துக்கொண்டான்.
"வர்மா! அன்னைக்கு நீ சித்தப்பா வீட்டில இருந்து மறுநாள் காலையில ராஜன் சாரோட மும்பைக்கு கிளம்புறதா இருந்த தானே" என்று வர்மன் கேக்க, "ம்..." என்று யோசனையாகத் தலையசைத்தான் வர்மன்.
"அந்த நைட் என்ன நடந்துச்சு தெரியுமா?" என்று கேட்ட மாயன் மீண்டும் பத்து வருடத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
மகதியின் வீட்டில் அவளுக்கு நல்ல முறையில் தண்ணீர் ஊற்றி உள்ளே அழைத்து இருந்தார்கள்.
அக்கம் பக்கத்தினர் எதிரே மகதியை வர்மனின் தந்தை ராஜன் மருமகளே என்று உரிமையோடு அழைத்தது மட்டுமில்லாமல், மகதிக்கு சீர் வரிசை எல்லாம் சபை நிறையும் அளவுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்து இருந்தார் ராஜன்.
"என்னடி மகதி! அவரு உன்னை மருமகளேன்னு கூப்பிடுறாரே!அவரோட பையனைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்க போறியா!?" என்று மகதியின் தோழி ஒருவர் கேக்க,
"அப்படியெல்லாம் இல்லையே" என்று தோள்களைக் குலுக்கி பதில் சொன்னாள் மகதி.
"என்ன இல்ல! நீ வேணும்னா பாரு, நீ தான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க போற" என்று இன்னோரு தோழி சொன்னதும்,
"யாரை!?" என்று விளங்காமல் புருவம் உயர்த்தி கேள்வியாகக் கேட்டாள் மகதி.
"அதோ அங்க நிக்கிறாறே ஒரு அழகான பையன், அவர தான் நீ கல்யாணம் பண்ணிப்ப" என்று மகதியின் தோழி சொன்னதும்,
"ஏண்டி அப்படி சொல்றிங்க?" என்ற மகதியின் பார்வை அப்போது தான் வர்மன் மீது வேறு விதமாகப் பதிந்தது.
"நீ பெரிய பொண்ணு ஆனதும் முதல் முதலாக அந்தப் பையனைப் பார்த்தேன்னு நீ தானே டி சொன்ன! அதனால தான் சொல்லுறேன், அவரைத் தான் நீ கல்யாணம் பண்ணிப்ப" என்று தன் தோழி சொன்ன வார்த்தை மகதியின் இதயத்தில் காதல் விதையாக விழுந்தது.
"ஆனாலும் அந்தப் பையன் ஹீரோ மாதிரி இருக்காரு மகதி!" என்று தன் தோழிகள் வர்மனை வர்ணிக்கும் வார்த்தைகளைக் கேட்டு மகதியும் வர்மனின் அழகை கண்களால் அளந்துக்கொண்டு இருந்தாள்.
வர்மன் தன் அண்ணன் மாயனிடம் சிரித்து பேசிக்கொண்டு இருக்க,
"ஏன் மகதி, அந்தப் பையன் என்ன பண்ணுறாரு!?" என்று ஒருவள் கேக்க,
"வர்மன் சினிமால பெரிய நடன இயக்குனராக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு" என்றாள் ரோஜா.
"பார்த்து டி! சினிமாவில் இப்படிப்பட்ட அழகனை வளைத்துப் போடவே நிறைய ஆளுங்க இருப்பாங்க, அதனால இப்போவே போய் நீ அந்தப் பையனை உனக்காகக் காத்து இருக்க சொல்லு" என்ற தன் தோழியின் பேச்சில் மகதிக்கு குழப்பம் தான் ஏற்பட்டது.
"ஏய் என்ன நீ! நம்ம வயசு என்ன! அதுக்குள்ள நீ என்னென்னமோ பேசிகிட்டு இருக்க" என்று மகதி தன் தோழியைக் கண்டித்ததும்,
"அதான் இப்போ நம்ம பெரிய மனுஷி ஆகிட்டோமே! இன்னும் என்ன" எனக் கேட்டாள் மகதியின் தோழி.
"இருந்தாலும் இப்படியெல்லாம் பேசாதீங்க டி! அதெல்லாம் தப்பு" என்று மகதி சொன்னதும்,
"உனக்குத் தப்புனா நீ ஒதுங்கிப் போ, நான் வேணும்னா அந்தப் பையனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்ற பெண் நேராக வர்மன் அருகே சென்று அவனிடம் இயல்பாகப் பேசத் தொடங்கி இருந்தாள்.
இதுவரை வர்மனை பார்த்து எந்த வித உணர்வும் ஏற்படாத மகதிக்கு தன் தோழி வர்மனிடம் சிரித்து பேசிப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுவதை எல்லாம் பார்த்துப் பொறாமை கலந்த கோவம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் கடந்தும் மகதியின் தோழி வர்மனிடம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருக்க, மகதியோ பார்வையால் அவர்களைப் பந்தாடிக்கொண்டு இருந்தாள்.
விஷேஷம் முடிந்து மகதியின் தோழி வீட்டுக்குக் கிளம்பும் சமயம், அவள் வர்மனிடம் என்ன பேசினாளோ தெரியவில்லை, வர்மன் ஒரு துண்டு சீட்டில், 'என்றும் அன்புடன் உங்கள் அருள்மொழி வர்மன்' என்ற கையப்பத்தை போட்டு மகதியின் தோழியிடம் கொடுத்தான்.
வர்மனிடம் சிரித்து பேசியப்படி அவன் அளித்த கையப்பத்தை வாங்கிக்கொண்டு மகதியின் தோழி அவளிடம் வந்தவள், "இங்க பார்த்தியா மகதி, வர்மன் எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து இருக்காரு" என்ற தன் தோழியைக் கொலை காண்டில் முறைத்தாள் மகதி.
"அதுமட்டும் இல்ல, நான் மும்பை வந்தா என்னை அவரை வந்து பார்க்கச் சொன்னாரு" என்று பெருமை பீத்தும் விதமாகப் பேசியவளின் கையில் இருந்த வர்மனின் கையெழுத்து அடங்கிய துண்டுச் சீட்டை வேகமாகத் தன் வசம் பிடுங்கினாள் மகதி.
மகதியின் கோவமான முகத்தைப் பார்த்து அவள் தோழிக்கே சற்று பயமாகத் தான் இருந்தது.
"ஏய்! அந்த ஆட்டோகிராப் வர்மன் எனக்குக் கொடுத்தது" என்று மகதியின் தோழி சொல்ல, அவள் தலையில் குட்டு வைத்து,
"இனி நீ வர்மனை பற்றிப் பேச மட்டும் இல்லை!அவரைப் பற்றி நினைக்கவே கூடாது" என்று கண்டித்த மகதியின் வார்த்தையைக் கேட்டு அவள் தோழி உதட்டைச் சுலித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
தன் தோழியின் செயலில் கடுப்பான மகதி, வர்மனின் கையப்பம் அடங்கிய துண்டுச் சீட்டை மடித்து பத்திரப்படுத்தியவள் தூரத்தில் தன் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்த வரமனை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
பள்ளி பருவத்தில் தான் காதல் உணர்வும் ஏற்படும், ஆனால் அந்த உணர்வுகளுக்கு எல்லாம் அடிபணியாமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிந்துடாத மகதி தன் தோழியின் தூண்டுதலில் வர்மனை தன் இதயத்தில் இணைத்துக் கொண்டாள்.
அன்றைய தினம் இரவு நேரம் மகதியிடம் இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்த வர்மனிடம் தன் மனதில் உள்ள உணர்வுகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணினாள் மகதி.
அந்த வயதில் தனக்கு இருக்கும் உணர்வுகளுக்குப் பெயர் தான் காதல் என்று நம்பியவள்,' வர்மனை நான் காதலிக்கிறேன், வர்மனை நான் தான் கல்யாணம் பண்ணிப்பேன்' என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
விடிந்ததும் காலை நான்கு மணி ரயிலில் மும்பைக்கு செல்ல ஆயுத்தமான வர்மனிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் எண்ணிய மகதி அவனைத் தேடி அவன் இருக்கும் அறைக்குச் சென்றாள்.
வர்மன் இருக்கும் அறையின் கதவை மகதி தட்டியதும், வர்மனின் அறையிலிருந்து எதிர் பாராத விதமாக வந்தது என்னவோ மாயன் தான்.
"என்ன பாப்பா இன்னும் நீ தூங்கலையா!" என்று மாயன் கேக்க, "வர்மா எங்கே அண்ணா!?" என்று கேட்டாள் மகதி.
"அவன் நல்லா தூங்குறான் பாப்பா, ஏன் என்ன விஷயம்!?" என்று மாயன் கேக்க, "அண்ணா! நான் வர்மாகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று சொன்னாள் மகதி.
"என்ன விஷயம் பாப்பா சொல்லு, அவன் நடுவுல எழுந்தா நான் சொல்லிடுறேன்" என்று மாயன் சொல்ல,
"நான் வர்மனை காதலிக்கிறேன், அவரு என்னைக் கல்யாணம் பண்ணிப்பாரான்னு கேளுங்க" என்று தேங்காயை போல உடைத்து சொன்னாள் மகதி.
"அவ்ளோ தானா! சரி எழுந்ததும் கேட்டுச் சொல்லுறேன்" என்ற மாயன் வாயைப் புலந்து கொட்டாவி விடும் நேரம் மகதி பேசியதை மீண்டும் எண்ணி பார்த்தவன்,
"பாப்பா நீ என்ன சொன்ன!? மறுபடியும் சொல்லு!" என்று கேட்டவனின் கண்களில் தூக்கம் மறைந்து அதிர்ச்சி நிறைந்து இருந்தது.
"அதான் சொன்னேனே! நான் வர்மனை காதலிக்கிறேன், அவரை என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேக்க வந்தேன்" என்று அழுத்தமான குரலில் பேசும் தன் தங்கையின் வார்த்தையைக் கேட்டு மாயனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
மகதியின் மனநிலையை யோசித்து பார்த்த மாயன், "பாப்பா... என்ன நீ! படிக்கிற பொண்ணு இப்படியெல்லாம் பேசக் கூடாது" என்று சொன்னதும், "அண்ணா! நீங்க முதல்ல நான் சொன்ன விஷயத்தை வர்மன்கிட்ட சொல்லுங்க" என்ற மகதியின் குரலில் கண்டிப்பு தெரிந்தது.
"நீங்கச் சொல்றிங்களா இல்ல நானே உள்ள போய் அவரை எழுப்பிச் சொல்லிடவா!" என்று மகதி கேக்க,
"பாப்பா பாப்பா இரு, உள்ள ராஜன் சாரும் தான் தூங்குறாரு, அதனால வர்மன் எழுந்ததும் நானே சொல்லிடுறேன்" என்ற மாயன் தன் தங்கையை இப்போதைக்கு அங்கிருந்து அனுப்பி வைக்க முடிவு செய்தான்.
"சரி அண்ணா! நடவுல வர்மன் எழுந்ததும் சொல்லுடுங்க, நாளைக்கு காலையில அவர் ஊருக்குப் போகும்போது எனக்கு அவர் நல்ல பதிலா சொல்லணும்னு சொல்லுங்க" என்ற மகதி கண்கள் முழுதும் எதிர்பார்ப்புடன் அவள் அறைக்குச் சென்றவளை மாயன் என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்து இருந்தான்.
Attachments
Last edited: