• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
654
மீஞ்சூர்:

ஏற்கனவே வாங்கி வைத்த கிப்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் அம்மா நான் அண்ணா வீட்டுக்கு போயிட்டு வரேன் என்கவும், சரி பார்த்து போ குட்டிமா என்றார்.இன்று லோக்கல் ஹாலிடே தான்.

மாலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மிருதுளாவுடன் போக முடியவில்லை. தனது சொந்த வேலைக்காக எப்பொழுதும் அரசு வாகனத்தை அவள் பயன்படுத்துவதில்லை.அதனால் அவளது ஸ்கூட்டியை சுரேந்தரும் அனுப்பி விட்டார்.

பரத் அண்ணா இன்னைக்கு உனக்கு இருக்கு கச்சேரி என்றவாறு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவள் கால் மணி நேரத்தில் அங்கே ஹாஸ்பிடலுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பெரிய வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்தவள் வண்டியை நிறுத்திவிட்டு கிப்ட் பாக்ஸ் உடன் உள்ளே போக,அப்பொழுதுதான் தனது கணவருக்கு காபி எடுத்துட்டு வந்து கொடுத்த குமாரி அங்கே வருபவளை பார்த்து குட்டிமா என்கவும்,யாரும் என்கிட்ட பேச வேண்டாம் என்றவாறு ஷோபாவில் உட்கார்ந்து இருக்கும் தினேஷ் பக்கத்தில் வந்து உட்கார்ந்த மிருதுளா குட் மார்னிங் பா என்றாள்.

குட் மார்னிங் குட்டிமா என்னடா நைட் வர ரொம்ப லேட் ஆயிடுச்சா?.மாலா சொல்லிக்கிட்டே இருந்துச்சு என்கவும், ஆமாங்கப்பா கீழுத்துக்கு போயிருந்தேன். பாவம் ப்பா..எப்படித்தான் அங்கே இருக்கிறார்களோ தெரியல ஒரு அவசரத்துக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வர முடியாது என்கவும் ஆமாடா.

புதுசா போற நமக்கு தான் அது பெரிய மலைப்பா தெரியுது காலம் காலமா அவங்க அங்கே இருந்து பழக்கப்பட்டவங்க கீழையும் வரமாட்டேங்குறாங்க. கவர்மெண்ட் அந்த தூரத்தை கணக்கு பண்ணி எதுவுமே செய்ய முடியல உன் மூலயமா அவங்களுக்கு ஏதாச்சும் செய்ய முடிஞ்சா பண்ணுடா குட்டிமா என்று தினேஷ் சொல்ல கண்டிப்பாக ங்க ப்பா.

முதல்ல அந்த காட்டுப்பாதைக்கும் கீழே இருக்கிறதுக்கும் ரோட்டுக்குதான் பிளான்.அந்த ஐடியா தான் இருக்கு. ஆனால் கொஞ்சம் பெரிய லெவலில் காஸ்ட் செலவு ஆகும் என்றாள்.

நிச்சயமாக டா..எல்லாம் பொதுமக்கள் கிட்ட வாங்குறதை தானே கவர்மெண்ட் கொடுக்கப்போவது. அரசியல்வாதிகள் என்ன கைக்காசுப் போட்டா குடுக்க போறானுங்க ...

ஹம்..அது உண்மை தானுங்க ப்பா. இப்போது இருக்கிற முதல்வர் ரொம்ப நல்லவரு கஷ்டத்துல இருந்து வந்ததால இதுபோல கிராமத்துக்கு தான் முதல்ல இம்பார்டன்ட் தராருன்னு நானும் கேள்விப்பட்டேன்.அதனால்தான் நேரடியாகவே அவரை போய் பார்த்து பேசலானு இருக்கேங்கப்பா என்று ஒரு அதிகாரியாக மிருதுளா சொல்ல ரொம்ப நல்ல காரியம் குட்டிமா.

இது மட்டும் நீ செஞ்சிட்டேனு வச்சுக்க அந்த மக்கள் உன்னை கடவுளுக்கு மேல பார்ப்பாங்க என்றவர் அங்கே முறைத்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவர் என்னடி புடிச்சு வச்ச பிள்ளையார் போல நின்னுட்டு இருக்க பாப்பா வந்திருக்கு போ அவளுக்கு காபி எடுத்துட்டு வந்து குடு என்கவும் ,எந்த நோப்பாவுக்கும் நான் போட்டுக் கொடுக்க மாட்டேன்.
வேணுமென்றால் அவளை போய் போட்டு குடிக்க சொல்லுங்க. அம்மாகாரி ஒருத்தி இருக்கிறாளேனு வந்து பாக்கணும்னு அவளுக்கு எண்ணம் இருக்கா என்றார்.

இதே கேள்வி நானும் கேட்கலாம் இல்லைங்கப்பா?

பருப்பு உருண்டை குழம்பு செஞ்சு தரேன்னு சொல்லிட்டு இன்ன வரைக்கும் செஞ்சு குடுக்கல அப்ப எனக்கு கோபம் வராதா என்று மிருதுளா முறுக்கி காட்ட, அம்மா தாய்க்குலங்கலா..

உங்க ஆத்தா மகள் பிரச்சனையில் தயவுசெய்து என்னை இழுக்காதிங்க என் தலையை உருட்டாதிங்கம்மா உங்க பஞ்சாயத்தில் நான் மாட்டிக்க விரும்பவே இல்லை என்று தினேஷ் கையை தூக்கி கும்பிடு போடவும் அந்த பயம் இருக்கட்டும் என்று குமாரியும் மிருதுளாவும் சத்தமாக சிரித்து விட்டனர்.

சரி சரி அண்ணா இன்னும் எந்திரிக்கவில்லை தானே?.

ஆமாடா.இன்னைக்கு டூட்டி லீவு தான் தூங்கிட்டு இருக்கான் என்று குமாரி சொல்லவும் ஓகே டன் என்றவாறு அங்கிருந்து படிகளில் ஏறி மேலே போனவள் வலது பக்கமாக இருக்கும் இரண்டாவது ரூம் கதையை திறந்து பார்க்க ,பெட்டில் படுத்திருக்கும் உருவம் போர்வையை தலை முதல் பாதம் வரை போர்த்திப் படுத்திருக்கவும்,அண்ணா இன்னைக்கு பாருடி உனக்கு எப்படிப்பட்ட அபிஷேகம் என்று பொறுமையாக ரெஸ்ட் ரூமுக்கு போய் பக்கெட்டில் தண்ணீர் நிறப்பி எடுத்துட்டு வந்தவளோ 123 என்றவாறு அங்கு படுத்திருப்பவனின் மேல் ஊத்த...

பதறி அடித்து போர்வையை தூக்கி எறிந்து விட்டு கீழே இறங்கி நிற்பவனை பார்த்து நீங்களா என்று அதிர்ந்து போனாள்.
:

அய்யய்யோ...

இந்த கடுவன் பூனை மேல ஊத்திட்டோமே?.

ஏய் மிருது இன்றைக்கு நீ தொலைஞ்ச டி என்று அவள் முணுமுணுப்பது விக்ரமின் காதில் நன்கு விழுந்தது.

தண்ணீர் சொட்ட சொட்ட நின்றவன் ஏன் டி கூறுகெட்டவளே... தை மாத குளிர் மனுசனை தின்னு எடுக்குது. அது தெரிந்து இப்படி பண்ணிருக்கியே நீயெல்லாம் என்னத்தை டி படிச்சி கிழிச்ச?. இந்த லட்சணத்தில் இவள் கலெக்டர் வேற?.

இப்படியா பண்ணுவாங்க? என்றவன் அதிர்ந்து நிற்பவளை பார்த்துக்கொண்டே முன்னேற, அந்த வலிமையான கால்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்தவள் பயத்தில் பின்னாடியே நகர்ந்தாள்.

என்னை குளிக்க வைக்க மேடம்கு அவ்வளவு ஆசையா டி என்றவாறு போட்டிருந்த டீ ஷர்டை கழட்டிக்கொண்டே விக்ரம் சொல்ல, நீர் வடிவதோடு உடற்பயிற்சியில் உரமேறிய உடலமைப்பை பார்த்து எச்சில் விழுங்கியவள் அய்யோ என்றவாறு கீழே குனிந்து கொண்டாலும் நகர்ந்து செல்வதை மட்டும் நிறுத்தவில்லை.

பாத்ரூம் கதவு திறந்து இருப்பது கூட தெரியாமல் பின் வாக்கிலேயே போனவள் பாத் டப் மேலே இடித்து அதன் உள்ளே விழப்போன அந்த நொடியில் எட்டி அவளது கையை பிடித்து இழுத்தவன், எப்போ பார்த்தாலும் உனக்கு இதான் வேலையா டி?. முன்ன பின்ன பார்த்தே போகமாட்டியா?

நீ விழ போற நேரத்திற்கு தடுத்து பிடிப்பது தான் எனக்கு வேலையா என்றவனின் பார்வைகளோ ஊசியை போல அவள் முகத்தை துளைத்தெடுக்க...

இதுவரை பெயரை சொல்லி கூட கூப்பிடாதவன் இன்று வார்த்தைக்கு வார்த்தை அவளை டி போட்டு பேசுவதை கேட்டு அதிர்ந்து போனவளுக்கு வார்த்தையே வரவில்லை.

பயத்தில் அவளது விழிகள் விரிந்திருக்க, பேச்சை மறந்த உதடுகள் துடித்துக் கொண்டிருக்கவும், தனது பிடியில் அவளது உடல் நடுங்குவதை உணர்ந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை தனது வன்மையான உதடுகளை அவளின் மெல்லிய இதழ்களில் புதைத்தான்.

தாடி மீசையின் குத்தலும், அவனது பற்களின் செயல்களிலும் உணர்வு பெற்ற மிருதுளா தன்னிடமிருந்து போராடி அவனை விலக்கியவளோ ஓங்கி ஒரு அரையை விட, அதில் தன் நிலைக்கு வந்த பிறகே தான் செய்த செயல் விக்ரமிற்கு புரிய ஓ ஷிட் என்று அங்கிருந்த சுவற்றில் ஓங்கி தனது கைகளை குத்தவும் வேகமாக வெளியே வந்தவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

கடவுளே யென்று தன்னை நிதானம் பண்ணிக் கொண்டவளுக்கு இன்னும் விக்ரமின் வலிமையான உதடுகளும் காடு போன்ற அவனது மீசையும் தாடியும் தனது கன்னத்தில் உரசுவது போல இருக்கவும் சிலிர்த்து போனவள் வேகமாக படியிலிறங்கி கீழே வர, கார் சாவியை சுற்றிக்கொண்டே பரத் உள்ளே வந்தான்.

வேகமாக படியிலிறங்கி வரும் தங்கையை பார்த்தவன் ஹேய் பாப்பு... என்ன டா ரன்னிங் ரேஸ் போறியா?..

ஹா ஹா ஹா...

இப்படி வீட்டிற்குள் இருக்கும் பன்னிரண்டு படிகள் ஏறி இறங்க கூடாது டா. அது ஹெல்திற்கு நல்லது இல்லை என்றவன், தங்கை திருதிருவென முழிப்பதை பார்த்து விட்டு, அடியேய் மேல மச்சான் தூங்கிட்டு இருந்தானே...என் மேல உள்ள பாசத்தை அவனுக்கு காட்டிட்டியா யென அதிர்ச்சியாக கேட்க, இல்லை என்றவளோ பின்னர் ஆமாமென்று தலையசைக்க ஹா ஹா ஹா...

அய்யா எப்படி தப்பிச்சேன் பார்த்தியானு தனது டி ஷர்ட் காலரை தூக்கிக் காட்டியவாறு பரத் சொல்ல, என்னா விக்கி மேல இருக்கானா யென்று தினேஷும் குமாரி யும் அதிர்ந்தனர்.

ஆமாம் மா..

மித்து நேற்று தான் வந்தான் அவனை ரிசீவ் பண்ண தான் சென்னை போயிருந்தோம். 10 வருஷம் தானே சர்வீஸ்கு எழுதி கொடுத்திருந்தான் அது முடிஞ்சதும் பங்காளியை துரத்தி விட்டார்கள் என்றவன், நீ தான் டா பாப்பா என் உடன் பிறப்பு. நானும் அந்த அய்யனாரை எதாவது பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன். அதை நீ வெற்றிகரமாக முடித்துவிட்டாப்.

ப்ரொவ்டு ஆப் மை குட்டிமா. ஆமாம் என்ன பண்ணுன என்று ஆர்வமாக கேட்க, அது வந்து ணா.. நீ யென நினைத்து..

ம்ம் சொல்லு டா...

ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றிட்டேன் என்க,எதேஏஏ என்று மூவரும் அதிர, ம்ம் ணா என்று பாவமாக சொல்லியவளை பார்த்து சிரித்தவன், ஆமா என்ன தண்ணீர் ஊற்றின?

பச்சை தண்ணீர் தான் ணா..

எதே... அட பாவி... ஹா ஹா ஹா... மாப்ளை ஐஸ் போல விரைச்சி போறிருப்பானே... ஏன் டா ஊற்றனும் னு முடிவு பண்ணியே , அதான் ஹீட்டர் இருக்குல கொஞ்சம் தண்ணீர் மிக்ஸ் பண்ணி ஊற்ற வேண்டிய தானே என்னும் போது அவன் தலையில் வந்து வாட்டர் பாட்டில் விழ, யாத்தே என்று திரும்ப விக்ரம் தான் படியிலிறங்கி வந்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவளோ நைசாக போய் தினேஷ் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, அவளின் செய்கைகளை பார்த்து சிரிப்பு வந்தாலும் காட்டிக்காமல் வந்தவன் குடும்பமா இது?.

மனுஷனை நிம்மதியாக தூங்க விடுவதில்லையா? இப்படியா அடங்காத பிள்ளைகளை பெற்று வைப்பது குமாரி என்றவாறு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவனின் பார்வையோ மிருதுளாவின் மேல் தான் அவ்வப்போது தழுவியது.

நீலாங்கரை:


நீலாங்கரை:

சாப்பிட்டு முடித்து மனைவியோடு ரூமிற்கு வந்தவன், துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே அவன் கழித்த இரவுகளையும், அவனது நினைவுகளுடன் அவள் கழித்த நாட்களையும் பகிர்ந்துகொண்டான்

அடுத்த நாள் காலை, ஜன்னல் வழியாக விழுந்த சூரிய ஒளி ருத்ரனின் முகத்தில் விளையாடியது. வழக்கமாக தலையணையை கட்டிக்கொண்டு எழுபவன், அன்று ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான்.

அவன் முகத்தின் அருகே ஒரு கதகதப்பான மூச்சுக்காற்று. மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தவனுக்கு ஒரே ஆச்சரியம்!

பக்கத்தில் அம்மா இல்லை. அதற்குப் பதிலாக, கருகருவென மீசையோடு, அகலமான மார்போடு ஒரு புது மனிதர் படுத்திருந்தார். ருத்ரன் பயந்துவிடவில்லை; மாறாக, அந்த முகத்தில் தெரிந்த ஒரு இனம் புரியாத நெருக்கம் அவனை ஈர்த்தது.

சுவரில் இருந்த புகைப்படத்தில் பார்த்த அதே முகம்!

"அப்பா...?" என்று மிக மெல்லிய குரலில் அவன் கூப்பிட, அந்தச் சின்னஞ்சிறு குரல் கேட்ட அடுத்த நொடியே மித்ரன் பட்டென்று கண்ணைத் திறந்தான். எல்லையில் எதிரிகளின் சிறு சத்தத்தையும் கவனித்துப் பழகிய அவனுக்கு, தன் மகனின் அழைப்பு ஒரு தேவாமிர்தமாக இருந்தது.

மகனைப் பார்த்து மெல்லச் சிரித்தவன், "ருத்து குட்டி... அப்பாவைத் தெரியுதா?" என்று கேட்டான்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
654
படுத்திருந்த சிறுவனோ வேகமாக எழுந்து உட்கார்ந்தவன் "நீங்க... நீங்க நிஜமாவே அப்பாவா? போட்டோல இருந்து வந்துட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே தந்தையின் மீசையைத் தொட்டுப் பார்த்தான்.

அப்படியே வாரி தனது மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன், "ஆமாம் கண்ணா, அப்பா வந்துட்டேன். இனி உன்னை விட்டுப் போகமாட்டேன்" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

காபியுடன் வந்த ரேகா, வாசலில் நின்றபடி இந்த அழகிய காட்சியை தான் ரசித்துப் பார்த்தாள்.

அப்பொழுது தற்செயலாக திரும்பிய ருத்ரன் அங்கிருந்த தனது அம்மாவை பார்த்தவுடன்"அம்மா! அப்பா வந்துட்டாங்க பாரு... துப்பாக்கி கொண்டு வந்தீங்களாப்பா?" என்று அவன் குதிக்கத் தொடங்கினான்.

ஆமா கண்ணா அதோட உனக்கு ஒரு கிப்ட் பிளான் பண்ணிட்டு தான் வந்திருக்கிறேன் என்று தனது மனைவியை பார்த்து மார்க்கமாக சிரித்துக் கொண்டு தன் மகனைத் தூக்கித் தோளில் அமர வைத்துக்கொண்டு, அந்த அறை முழுவதும் சுற்றி வந்தான்.

மனைவி கொடுத்த காபியை குடித்தவன் மகனை தூக்கிக் கொண்டு கீழே வந்தவன் தனது தாத்தா பாட்டி காலில் விழ நல்லாரு கண்ணு என்றார்கள்.

பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்த போது, எத்தனை மாசம் தொரைக்கு லீவ் னு சுந்தரி கேட்க, சர்வீஸ் முடிந்து தான் வந்துட்டேன் என்று சிரித்தான்.

ஆர்மியில் வேலை க்கு சேர்ந்த பொழுது எத்தனை வருஷம் எழுதி கொடுத்தான் என்பது வீட்டினருக்கு தெரியாதே..

இதைக் கேட்டவர்கள் சந்தோஷத்தில் அதிர்ந்தனர். அப்பா வா உனக்கு ஒன்னு காட்டுரேனு கீழே இருந்த அறைக்குள் அழைத்து போன ருத்ரன் இங்கு பாருங்கள் என்க... சுவர் முழுவதும் மகனின் கை வண்ணத்தில் ஏகப்பட்ட கிறுக்கள்களும் ஓவியங்களையும் பார்த்து சிரித்து விட்டான்.

நேரமும் கடந்து செல்ல மனைவி மகனை அழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.

இனி கணவன் நம்மோடு தான் இருப்பானென்ற உண்மை தெரிந்ததில் இருந்து ரேகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. முதலில் குடும்பமாக கோயிலுக்கு போனவர்கள் அடுத்து மாலுக்கு கூப்பிட்டு போனவன் மகனை கேமில் விளையாட விட்டு மனைவியோடு வந்து உட்கார்ந்தவன் மேடம் அப்புறம் என்க...

என்னவாம் என்றாள்.

இன்னும் எத்தனை நாளைக்கு தான் டி தம்பி தனியாக விளையாடுவானென்று சிரிக்க, அய்யோ மாமா யென்றவள் என்ன பேச்சு இதுவென முறைத்தாலும் வெட்கத்தில் சிரிப்பு வராமலில்லை.

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top