• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்-சோழனூர்:

ரஞ்சனியும் ஷமீராவும் சேர்ந்து வீட்டை துடைத்து
முடிக்கவும்,ரெண்டு பேரும் வாங்களென்றவாறு ஷமீராவுக்கு காபியை கொடுத்துவிட்டு ரஞ்சனிக்கு டீ கொடுக்கும் போது சுமதி அம்மாச்சியும் எந்திரிச்சு வந்தார்.

அத்தை உங்களுக்கு டீ எடுத்துட்டு வரட்டுமா என்க...அப்படியே உன் மாமனாருக்கும் கொடு மா அவரும் முழிச்சிட்டு தான் இருக்கிறார்.

புவனாவும்,ரஞ்சனியும் வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்ய,அம்மாடி நீ போய் குளிச்சிட்டு வந்துரு என்கவும் சரிங்கங்மா என்ற ஷமீராவும் குளித்து முடித்துவிட்டு சுடிதார் போட்டுக்கொண்டு கீழே வந்தவள்
கண்மணியும் கவிதாவும் தாவணியில் இருப்பதை பார்த்து,அய்யோ நம்ம சுடிதார் போட்டிருக்கோமே ஏதாவது நினைப்பார்களோனு யோசிக்க, அவள் முகத்தை வைத்து புரிந்து கொண்ட கண்மணி ஒன்னும் இல்லையென்று தலையை அசைத்தாள்.

பின்னர் காலை உணவுக்காக கம்மங்களியும் சுண்டைக்காய் வத்த குழம்பு இருவரும் செய்து முடிக்க,அன்பரசனும் கனலரசனும் தோட்டத்திற்கு சென்று விட கவிதாவும் கண்மணியும் சாப்பிட்டு ஸ்கூலிற்கு ரெடியாகினர்.

கண்ணனோ இரவு முழுவதும் கொள்ளையில் காவல் காத்து விட்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தான். அய்யா டீ என்க,முதல்ல குளிச்சிட்டு வரேன் என்கவும் என்ன அதிசயமா குளிக்க போறானென்று கேட்டுக் கொண்டே தம்புசாமி தாத்தா அங்கு வந்தார்..

ஆமா நான் குளிக்காத இந்த ஐயா தான் விளக்கு வைத்து பார்த்தாரென்று பல்லை கடித்துக் கொண்டே சென்றான்..

ஏம்மா..பெரியவன் அந்த புள்ளைங்க போட்டோ காமிச்சானே பார்த்தீங்களா? உங்களுக்கு புடிச்சிருக்கா என்கவும் கண்மணி கவிதாவை தவிர மற்றவர்கள் எல்லாம் பார்த்திருந்தனர்.

எங்களுக்கெல்லாம் காட்டவில்லையே என்று கவிதா கேட்க கட்டிக்க போறவங்கள் பார்த்தா போதும் உனக்கு எதுக்கு சின்ன குட்டிய அதெல்லாம் என்று தாத்தா கேட்க...ஏன் வீட்டுக்கு வர போற அண்ணியையும் மாமாவையும் நான் பார்க்கிறது இல்லையா தாத்தா என்றாள்..

முதல்ல படிச்சு முடி..அப்புறம் இதெல்லாம் கேட்கலாம் பெரிய மனுஷி போல எப்ப பார்த்தாலும் பேச்சென்று பேத்தியை சொல்ல...ஆமாம் கொஞ்சம் அறிவா பேசினால் இந்த வீட்ல தெய்வ குத்தம் ஆகிடுமே என்றாள்.

பின்னர் இருவரும் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து ஸ்கூலுக்கு போகும் மினி பஸ் ஏறும் இடத்திற்கு சென்றனர்.

வழக்கம்போல் தூங்கி எழுந்த செழியனும் பிரஷாகி கீழே வர அங்கே வானதியோ கணவருக்கு டீயை கொடுத்துவிட்டு தானும் குடித்துக் கொண்டிருந்தார்.மகனை பார்த்தவர் உள்ளே போய் ஒரு டம்ளரில் சூடா டீ எடுத்துட்டு வந்து கொடுக்க வாங்கியவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

செழியானு செல்லதுரை கூப்பிட சொல்லுங்கப்பா என்க,முறைப்படி பத்திரிகை அடிக்கணும்.இன்னைக்கு நானும் உங்க தாத்தாவும் பிரசுக்கு போறோம்.அந்த புள்ளையோட அப்பா அம்மா பேரு ஊரெல்லாம் எழுதி கொடு..

நேர்ல போய் அவங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும் தம்பி. வராங்களோ வரலையோ அது அடுத்த பிரச்சனை நம்ம முறைப்படி செய்யணும் என்க..அரைமனதாக சம்மதித்தான்..

அப்புறம் பொண்ணுக்கு துணி எல்லாம் வாங்கணும்.திருபுவனம் போகலாமா இல்ல மதுரைக்கு போகலாமா? திருபுவனத்துக்கே போகலாம் பா என்றான்.

சரி இன்னைக்கு வெள்ளிக்கிழமை நாள் நல்லா தான் இருக்கு.இன்னிக்கு போயிட்டு புடவை எடுத்துட்டு வந்துரலாமா வானதி என்கவும் சரிங்க என்றார்..

அப்போ நான் போயிட்டு ஒரு வார்த்தை உங்க அப்பா வீட்டுல சொல்லிட்டு வரேன்,அது என்ன இன்னும் எங்க அப்பா வீடு?,ஏன் உங்க அத்தை வீடு இல்லையானு வானதி கோவமாக கேட்க,ஏண்டி இது ரொம்ப முக்கியமா?

எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாக பொண்ணு குடுத்து எடுத்து கட்டிக்கிட்டதால எங்க பாத்தாலும் சொந்த பந்தமாக தான் இருக்கிறீங்க.இதுல உன் அப்பா வீடுனு சொன்னதால் என்னடி ஆகிட்டுனு தனது மாமனார் வீட்டை நோக்கி சென்றார்.

அம்மா என்று செழியன் கூப்பிட,ம்ம் சொல்லு பா என்றார்.என் மேல கோவமா இருக்கியா மா?.

"கோவம் இல்லைப்பா" வருத்தம் தான் இருக்கு.ஒரு வார்த்தை என்கிட்ட இது போல விஷயமென்று சொல்லிருக்கலாமே என்க...சூழ்நிலை அப்படி மா.

"அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்".

ஒரு வருஷமா அவள் கிட்ட நான் பேசுறது கிடையாது.2 வாரத்துக்கு முன்னாடி தான் எனக்கு போன் பண்ணி இதைப்போலனு விஷயத்தை சொன்னாள்.கேட்டுகிட்டு நான் எப்படி மா சும்மா இருக்க முடியும் சொல்லு?.

மனசுல இவளை நினைச்சு கிட்டு கண்மணி கூட என்னால எப்படி மா வாழ முடியும்?அதும் இல்லாம பொம்பள புள்ள இல்லாத வீட்டில் கண்மணியும் கவிதாவும் அக்கா தங்கச்சி போல இங்க வந்து ஓடி ஆடி விளையாண்டோம்.

அந்த புள்ளையை போய் நான் எப்படி பொண்டாட்டியா நினைக்க முடியும் மா என்கவும்,அன்று அந்த பாபு பையன் அவங்க அப்பா கிட்ட பேசியது போல மகனும் இன்று அப்படியே சொல்கிறானேனு தோணியது.

சரி ஆனது ஆகிவிட்டது.இனிமே அத பற்றி பேசி ஒன்னும் புண்ணியம் இல்லை.உன் பொண்டாட்டி எப்படி இருக்கிறாள்?.அங்கு எல்லாரையும் புடிச்சிருக்கா?, ம்ம் அத்தைங்க கூட நல்லா ஐக்கியம் ஆயிட்டாள் மா...

ஓஓஓ...ஆமா அவ பேரு என்ன?


சிரித்துக் கொண்டவன் இதுவரை ஷமீரா தாஸ் இனி ஷமீரா இளஞ்செழியன் என்றான்...ஏன் தம்பி அவங்க சாமிக்கும் நம்ம சாமிக்கும் ஒத்து வருமா யா?நம்ம வேற வெள்ளி செவ்வாயில சாம்பிராணி புகை போட்டு சூடம் கொளுத்துவோம்...

உன் பொண்டாட்டி பைபிளை தூக்கிட்டு இருந்தாக்க நல்லாவா இருக்கும்?


செழியனோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டான்.

செல்லதுரையும் தனது மாமனார் வீட்டிலும் தனது பங்காளி வீட்டிலும் விஷயத்தை சொல்ல,சரி பா நல்லபடியா போயிட்டு வந்துடலாம் என்றனர்.

ஷமீராவிற்கு துணையாக சுமதி அம்மாச்சி வீட்டில் இருந்து கொள்ள மற்றவர்கள் எல்லாம் வேனில் ஏறினர்.

காலை 11 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் எல்லாரும் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருபுவனத்திற்கு புடவை எடுக்க சென்றனர்.

மனைவிக்கு என்ன மாதிரியான புடவை வேணுமென்று செழியனே தேர்ந்தெடுக்க வந்தான்.அங்கிருந்த புடவை குவியல்களில் தேடி அலசியவன் மனைவிக்கு ஏற்ற புடவையை எடுத்தான்.

மற்ற பொருட்களையும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீடு வந்து சேரவே மாலை ஆனது.அதேபோல் பத்திரிக்கையும் அன்றே தயாராகும்னு சொல்லிவிட்டதால் செல்லதுரையும் அதை வாங்கிக் கொண்டு வந்தார்.

மறுநாள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அவர்கள் குல தெய்வத்திடம் பத்திரிக்கையை வைத்து படைத்து விட்டு,ஊர்காரர்கள் இரண்டு பேரையும் தனது சித்தப்பா சித்தி மாமனார்,மைத்துனர்,மற்றும் தனது மனைவியோடு செல்லதுரையும் காரில் ஏறி சோழனூரை நோக்கி பயணமானார்.

நம்ம முறைப்படி சொல்லுவோம் அது ஏத்துக்கிறது அவங்களோட விருப்பம் என்று வீரையன் சொல்ல மற்றவர்களும் அதுதான் சரி என்றனர்.

அதிகாலை கிளம்பியவர்கள் சோழனூருக்கு வந்து சேர மதியம் மூன்று மணிக்கு மேலானது.ஷமீராவின் வீட்டுக்கு எப்படி போகணுமென்று செழியன் சொல்லியிருக்க,அதே போல் அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் ஓரமாய் வந்து காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியவர்கள் அந்த ஏரியாவை சுற்றி பார்த்தனர்.

பின்னர் அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து காலிங் பெல்லை அழுத்த சிறிது நொடியில் கதவை திறந்த எஸ்தரோ அங்கிருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போனார்.

பின்னர் சுதாரித்தவர் வீட்டிற்கு வந்தவர்களை வாங்களென்று சொல்வதுதான் பண்பாடு என்பதால் வாங்கயென்று உள்ளே கூப்பிட்டார்.

மகியோ யாரு என்ற யோசனையோடு ஹாலுக்கு வந்தவர் அங்கே இருப்பவர்களை பார்த்து அதிர்ந்தார்.தங்கள் வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது மற்றவர்களுக்கும் தெரிந்தது.

பின்னர் வாங்க என்றவர் குடிக்க எதாச்சி எடுத்துட்டு வா என்கவும்,உள்ளே போன எஸ்தரும் எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலையே என்றபடி டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

வீரையனே பேச்சை ஆரம்பித்தார்.வணக்கங்க எதுக்கு வந்திருக்கோம்னா அடுத்த வாரத்தில் பிள்ளைகளுக்கு எங்கள் குலதெய்வ கோயில்ல வரவேற்பு வச்சிருக்கோம்.

அவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.அதுக்காக நாம அப்படியே விட முடியாது இல்லையா??நாளைக்கு சொந்த பந்தங்கள் முகத்துல முழிக்கணுமே என்றார்..

நான் தான் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டேனேங்கனு மகி சொல்ல,நீங்க வேண்டான்னு சொல்லிட்டீங்க.ஆனால் முறைன்னு ஒன்னு இருக்குங்க..

மதிச்சு சொல்ல வேண்டியது எங்களோட கடமை.வாங்க என்று தான் கூப்பிட முடியும்.வர்றதும் வராததும் உங்களோட விருப்பமென்றவர் மச்சானென்று தம்புசாமியை கூப்பிட..இருவரும் எழுந்து தாம்பாளத்தில் பத்திரிகை பூ பழத்தை வைத்து மகியின் முன்பு நீட்ட என்ன சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை.

பின்னர் எஸ்தர் என்று கூப்பிட்டு மனைவியோடு தட்டை வாங்கியவர் எங்களை மதித்து கொடுக்குறீங்க பெரியவங்க என்பதால் தான் நான் வாங்கிக்கிறேன்.

மத்தபடி எனக்கு என் பொண்ணு மேல இருக்கிற...அதை எப்படி சொல்றதுன்னு தெரியல..உங்களுக்கு புரியுமென்று வார்த்தை வராமல் அவர் தவிப்பது தெரிந்தது.

நல்லவேளை வீட்டிற்கு வந்தவர்களை அவமானப்படுத்தாமல் இந்த அளவுக்கு நடந்து கொண்டாரேனு நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பின்னர் அந்தோணியின் வீடு எங்கே இருக்கு என்க,தங்கை வீட்டை மகியும் காட்டிவிட அங்கே சென்று பத்திரிக்கை வைத்தனர்.

ராணியும் தனது கணவருக்கு போன் பண்ணி வர வைத்தார்.அவர் டீ போட போக அதெல்லாம் வேண்டாம் இப்பதான் குடிச்சோம் என்றனர். கண்டிப்பாக நீங்க ஃபங்ஷனுக்கு வரணும் அவங்க தான் இல்லனாலும் நீங்க நிச்சயமா வாங்க என்று சொல்ல கண்டிப்பா என் மருமகளுக்காக நாங்கள் வருவோமென்றனர்.

மேலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசியிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

தட்டிலிருந்த பத்திரிகையை கிழித்து குப்பை தொட்டியில் எறிந்த மகியோ,பொண்ணே இல்லைங்குறேன் அவளுக்கு காரியம் ஒன்றுதான் கேடுனு சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க சென்றார்.

எஸ்தரோ மகளை நினைத்து அழுது கொண்டே அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்திருந்தார்..

ஷமீராவிற்கோ திக் திக்கென்று இருந்தது.ஊரில் என்ன நடக்குமோ என்று தெரியலையே?எங்கே வந்தவர்களை தனது தந்தை அவமானப்படுத்தி அனுப்பிடுவாரோ?
இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை முற்றி ஏதாவது பிரச்சனை நடக்குமோ? என்று பயந்து கொண்டே இருந்தாள்.

அவள் முகத்தை கவனித்த புவனாவோ அப்படியெல்லாம் ஒன்று நடக்காது.எதுக்கு தேவையில்லாம பயப்படுறனு ஆறுதல் சொன்னாலும் இயல்பாக இருக்க முடியலை.

தனது கணவனை உடனே பார்க்கணும் போலிருக்க மனைவியின் மனநிலை உணர்தானோ என்னவோ தெரியவில்லை..

நேற்றிலிருந்து தன்னவளிடம் பேசவில்லையே கண்டிப்பாக வருத்தமாக இருப்பாளென்று நினைத்தவன்,தனது தோட்டத்தில் காய்கறி பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் நீங்கள் வேலையை பாருங்கள் இதோ வந்துடுறேனென்று சொல்லி வண்டியில் ஏறி தனது தாத்தா வீட்டிற்கு வந்தான்.

உள்ளே வந்தவன் அங்கே சோபாவில் சோகமான முகத்தோடு உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்து என்னாச்சென்று கண்களால் கேட்க கணவனை பார்த்தவளுக்கு மனம் நிம்மதியாக இருக்கவும்,ஒன்றும் இல்லையென்று தலையசைத்தாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

கிச்சனிலிருந்து வெளியே வந்த ரஞ்சனி அங்கிருந்த
செழியனை பார்த்தவர் குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரட்டுமா என்க ஒன்றும் வேண்டாங்கத்தை.எங்கே பெரியத்தையை காணுமென்றான்...

அக்கா நம்ம தோட்டத்துக்கு தான் போயிருக்கிறார்கள் என்றவர் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு தனது ரூமிற்கு சென்று விட்டார்.வேகமாய் வந்து மனைவியின் அருகில் உட்கார்ந்தவன் ஏன்டி ஒரு மாதிரியா இருக்க??

உடம்பு ஏதாவது சரி இல்லையாடி?என்ன ஆச்சென்று பதட்டமாய் கேட்க,தனது மனதில் இருக்கும் விஷயத்தை கணவனிடம் சொல்லவும் தன்னவளுக்கு இருப்பது நியாயமான பயம் தானென்று நினைத்துக் கொண்டவன் அதெல்லாம் வீடு தேடி வந்தவங்களை அவமானப்படுத்த மாட்டாங்கடி.

எதுக்கு தேவை இல்லாம யோசிச்சிட்டு இருக்க?அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது பாரென்றான்.

உனக்காக ஒரு பொருள் வாங்கிருக்கேன்டி எடுத்து வர மறந்துவிட்டேன்.சாயந்திரம் வரும் போது எடுத்துட்டு வரேனென்க சரியென்றாள்.

மேலும் சிறிது நேரம் மனைவியிடம் பேசி அவளை இயல்பாக்கியவன் அங்கிருந்து சென்றுவிட வழக்கம்போல் ரஞ்சனி சமையல் வேலை ஆரம்பிக்க ஷமீராவும் அவரோடு வேலையை செய்ய நேரமும் போனது...

பஸ்ஸில் வந்து கொண்டிருந்த கண்மணிக்கு வீட்டில் நடந்த நிகழ்வுகள் தான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது..

ஐயோ இப்ப என்ன பண்ணுவதென்று தெரியவில்லையே அப்பா வேறு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டேன்னு சொல்றாங்க..இவர் வேற இப்படி சொல்லிட்டு போறாரு என்று நினைக்க அவள் கண் முன்னால் ஒரு உருவம் வந்து சென்றது.

வேண்டாம் ஏற்கனவே நம்ம வீட்டில் மூன்று பேர் இப்படி பண்ணிட்டாங்க நாமளும் இப்படி இருக்க கூடாதென்று சற்று முன்னால் தன்னிடம் காதலை சொன்னவன் நினைப்பிலிருந்து தனது தலையை உதற அவளை பார்த்த கவிதா என்னாச்சுக்கா என்க.. ஒன்னும் இல்லடி என்றாள்.

பின்னர் வீட்டிற்கு வந்து சேர ஷமீராவோடு அவர்களுக்கும் நேரம் போனது.

அப்பொழுது கம்ப்யூட்டர் சம்பந்தமான பாடங்களை கவிதாவிற்கு சொல்லிக் கொடுக்க,அக்கா நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?

எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் என்க, நிஜமாவா?.எங்க ஸ்கூல்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் டீச்சர் தான் இல்லை.வேக்கன்சி இருக்கு நீ வரியானு கண்மணி கேட்க அவளுக்கும் வேலைக்கு போகணுமென்று ஆசையாக தானிருந்தது.

செழியன் வீட்டில் விடுவார்களானு ஒரு பக்கம் யோசனையா இருக்க,உங்க மாமா விடுவாராயென்று தெரியவில்லையே?.

அதற்கு கவிதாவோ அதெல்லாம் மாமா ஒன்னும் சொல்ல மாட்டாங்கக்கா.நீங்க வாங்களேன் ஜாலியா இருக்குமென்றாள்

உங்க மாமா கிட்ட கேட்டுட்டு சொல்கிறேன் என்றவளுக்கு தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போவதும் ஆசையாக தானிருந்தது.

கணவன் வேலைக்கு போன பின்னால் வீட்டிலேயே இருப்பது கடுப்பாக தான் இருக்கும் சரி அவர்கிட்ட இதை பத்தி பேசணுமென்று நினைத்தவாறு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

காரில் வந்து கொண்டிருந்த செழியன் வீட்டினரோ பரவாயில்லை இந்த அளவுக்கு மரியாதையா நம்மிடம் பேசினார்களே அதே பெரிய விஷயம் தான் என்க...

நான் கூட எங்க எங்கே நம்மளை பார்த்த உடனே அவர் சண்டை போடுவாரோனு நினைத்துக்கொண்டே இருந்தேனென்று வானதி சொல்ல,ஏமா வீடு தேடி வந்தவங்க கிட்ட யார் இப்படி நடந்துப்பாங்க?.

படிச்சவங்க,மரியாதை தெரிஞ்சவங்க.நம்ம கிட்டயும் பொண்ணு இருக்கு... அதுங்க இப்படி இப்படி செய்திருந்தால் நம்ம என்ன பண்ணி இருப்போம் சொல்லு மா என்று வீரையன் தனது அண்ணன் மருமகளிடம் கேட்க, என்ன வீடு தேடி போய் வெட்டிட்டு வந்திருப்போம் மாமா என்றார்..

ம்ம் சரியா சொன்ன.இதுதான் நம்மளுடைய குணம்.நம்ம பையன் அவங்க பொண்ணை இழுத்துட்டு வந்தானே,அப்ப கூட நம்ம பையனை நீ கண்டிக்கல,அந்த பொண்ணை தானே திட்டுன.

ஆனா அவங்க அப்படி பண்ணல. பண்பாடு தெரிந்த மனிதர்.வீடு தேடி வந்து பேசினார்.நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாயிடும்.ஆனா வானதி நீ எந்த காரணத்தை கொண்டும் மருமகளை இப்படி ஓடி வந்தவளென்று சொல்லிக் காட்ட கூடாது.

ஏன் இதை உனக்கு நான் தெளிவா சொல்றேன் என்று கேட்டால் நம்ப புள்ளை தான் வீடு தேடி போய் அந்த பொண்ணை அழைச்சிட்டு வந்துருக்கான் புரியுதா...

அந்த பொண்ணு ஒன்னும் நம்ம புள்ளைய தேடி வீட்டை விட்டு ஓடி வரலை என்க,அய்யோ மாமா நான் ஏன் சொல்லப் போறேன் என்கவும்,உன் குணத்தை பத்தி தெரிஞ்சதால தான் மச்சான் அப்படி சொல்லுறார் என்ற தம்புசாமி தனது மகளுக்கு அவரின் சுயத்தை உடைத்து சொன்னார்.

நம்ம மேல தெரு வாசன் மவனும் ஐயர் பொண்ணை இழுத்துட்டு வந்துட்டான் அதுக்காக மகன் வேண்டாம் மருமக வேணாம்னு இழுத்தா தள்ளிட்டாங்க....

அங்கேயான் போகணும்...நம்ம வீட்டுல தீரனும் மாறனும் இருக்காங்களே, மாறன் பொண்டாட்டி பானு நம்ப ஜாதியா?தீரன் பொண்டாட்டி முஸ்லிம் பொண்ணு.அதுக்காக நம்ம வீட்டு பிள்ளை இல்ல அவங்க புருஷன் பொண்டாட்டி இல்லன்னு நம்மளால சொல்ல முடியுமா?.

சாதி மதத்தை எல்லாம் காலங்காலமா தாத்தா பூட்டன்னு நம்ப காலத்திலும் கட்டிட்டு இருக்காங்க.இப்ப இருக்குற பிள்ளைகளுக்கு எல்லாம் அதெல்லாம் தெரியல.சாதி மதத்தில் ஊறிப்போன நம்மளால இவைங்கள போல மாற முடியலை...

நம்மை போல தான் செழியனோட மாமனாரும்.அவங்க குடும்பம் பரம்பர பரம்பரையா கிறிஸ்தவங்க அவங்க எப்படி இருப்பாங்கன்னு நமக்கு சொல்லித்தான் தெரியணும் என்று இல்லை. .

எது நிதர்சனமோ அதை ஏத்துக்கிட்டு வாழ்க்கையை கடந்து போக வேண்டியதுதான் என்று எதார்த்தத்தை பேசிக்கொண்டே வந்தனர்

சோழனூருக்கு போனவர்களும் வீட்டிற்கு வந்து சேர நள்ளிரவுக்கு மேலானது.அவர்களும் ஊருக்குள் வந்து சேர்ந்தார்கள் சேவலும் கூவியது. வழக்கம்போல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சோழனூர்:

வரப்பில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது மகி என்ன முடிவு பண்ணிருக்க என்கவும் நான் தான் பொண்ணே வேணாம்னு சொல்லிட்டேன் மாமா எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை என்றார்.

ஓஓஓ என்ற அந்தோணி,அப்ப நான் உன் தங்கச்சியை கூப்பிட்டு போறேன் என்க... அதற்கு மகியோ உங்களோட விருப்பம் மாமா. அதான் சொல்லிட்டீங்களே உனக்காகயெல்லாம் என் தங்கச்சி மகளை வேண்டாம்னு என்னால தூக்கி போட முடியாதென மகி கோபமாக சொல்ல...

ஆயிரம் தான் இருந்தாலும் அது நம்ம வீட்டு பிள்ளை.அப்படியெல்லாம் விட முடியாது மகியென தனது மைத்துனரோடு பேசிக் கொண்டே தங்கள் விளைச்சலை சுற்றிப் பார்த்துக் கொண்டே அந்தோணி வர,அப்பொழுது பக்கத்து வயல்காரர் என்ன மகி உன் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சாமேனு குத்தலாக கேட்கவும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மகிக்கு இன்னும் கோபம் அதிகமானது.

"எனக்கு பொண்ணு இல்லைங்க"

அவ செத்து ரெண்டு நாளாகுது.இனிமே இதை பற்றி பேசுனீங்க நல்லா இருக்காதென்று கத்தி விட்டு அங்கிருந்து செல்ல,அந்தோணியோ அவரை பார்த்து முறைத்தவர் உனக்கு எதுக்கு இந்த வேலை?.

ஏன் உனக்கு இந்த விஷயம் தெரியாதானு கோவமாக கேட்க,இல்ல சும்மா உன் மச்சான் கிட்ட கேட்டேன்.அதுக்கு போய் இப்படி கோபப்படுறாரே என்றார்.

வீட்டில் வேலையாகயிருந்த எஸ்தரின் நம்பருக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க ஈர கையை புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டு கிச்சன் செல்பிலிருந்த போனை எடுத்து பார்த்தவர் அட்டென் பண்ணி பாபு நல்லா இருக்கியா என்க...

அத்தை நான் நல்லா இருக்கேன் நீங்க மாமா எப்படி இருக்கீங்க?.எங்க அவள்?போன் பண்ணினால் எடுக்கவே மாட்டேங்குறாள்.

மூன்று நாளா போன் பண்றேன்?. அட்டென்ட் பண்ண கூட அவளுக்கு நேரம் கிடையாதா என்கவும்,பாபு என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் எஸ்தர் அழுக,அய்யோ அத்தை என்னாச்சென்று பாபு பதட்டமாக கேட்க...

பின்னர் ஷமீரா செய்துவிட்டு போன காரியத்தை தனது அண்ணன் மகனிடம் சொல்லியவர் நேற்று நீ போன் பண்ணும் போது நாங்கள் அங்கு தான் பா இருந்தோம் என்றார்.

அப்படியா.... ஏங்கத்தை ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவே இல்லை?சரி நீங்க உடம்ப பாத்துக்கோங்கனு சொல்லி போனை வைத்தவன்,உடனே தனது அம்மாவிற்கு கால் பண்ணியவன் அவ என்ன ஊருக்கு போயிருக்கா என்கவும் உனக்கு எப்படி பா விஷயம் தெரிந்ததென்று கேட்க அத்தை கிட்ட இப்பதான் பேசினேன்னு அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னான்.

பின்னர் அவர்கள் வீட்டில் பத்திரிக்கை எடுத்துட்டு வந்த விஷயத்தை பற்றி சொல்ல அதை எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்பு மா என்று போனை வைத்தான்.

இரண்டு நிமிடத்தில் வாட்ஸப்பிற்கு மெசேஜ் வந்த நோட்டிபிகேஷன் சவுண்ட் வர உடனே அதை ஓபன் பண்ணி பார்க்கவும் அதில் இளஞ்செழியன்-ஷமீரா தாஸ் என்றிருந்தது.

ஓஓஓ இந்து பையனோ என்று நினைத்தவன்,அந்த ஊர் எங்கே இருக்கின்றது என்று கூகுளில் செக் பண்ணியவன் உடனே மதுரைக்கு போறதுக்காக ப்ளைட் டிக்கெட் தேட,அவன் நேரமோ அன்று இரவே அவனுக்கு கிடைக்க அதிலே டிக்கெட் புக் பண்ணினான்.

ஒரு வாரத்துக்கு முன்பு தான் ஊருக்கு போக வேண்டும் என்பதற்காக எல்லாருக்கும் பர்ச்சேஸ் பண்ணி தயாராக வைத்திருந்தான்..

ஏற்கனவே லீவ் அப்ளை பண்ணிருந்ததால் அவனுக்கு பிரச்சனை இல்லாமல் போனது.
ஆனால் வீட்டில் மட்டும் தான் இந்திய வருவதை சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் அவனது நண்பன் பரத் மதுரைக்கு சென்றிருக்க,உடனே அவனுக்கு கால் பண்ணியவன் தான் மதுரைக்கு வருவதாக மட்டும் சொல்லி விட்டு தனக்கு ஒரு கார் மட்டும் வேண்டுமென்றும் அரேஞ்ச் பண்ண சொல்ல,தங்களது வீட்டிலே ஒரு கார் எக்ஸ்ட்ரா இருக்கு அதையே எடுத்துக் கொள்ளலாமென்று சொல்லவும் மற்றதை நேரில் வந்து பேசிக் கொள்வதாக சொன்னான்.

சரிடா என்றவனும் காரணம் இல்லாமல் பாபு எதுவும் சொல்ல மாட்டான் என்பதால் மேற்கொண்டு நண்பனிடம் எந்த கேள்வியும் கேட்டு பரத்தும் தொந்தரவு பண்ணவில்லை. ..

நேரமும் கடக்க, ஏர்போர்ட்டுக்கு வந்த பாபுவும் மதுரை செல்வதற்கான பிளைட்டிற்கு காத்திருக்க மாமன் மகளான ஷமீராவின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

நேரில் வந்து உன்னை வச்சிக்கிறேன் டி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.ஒரு மணி நேரம் சென்று அவன் செல்வதற்கான ப்ளைட் வந்ததும் அதில் ஏறி உட்காரவும்,சிறிது நிமிடத்தில் ஏர் இந்தியா விமானமோ துபாயிலிருந்து மதுரையை நோக்கி வானில் பறந்தது....

வீழ்ந்தேனடி...
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Appa Babu vandhu don’t create any scene, Anna author kudutha build up paths engallukku bulbunu theriyudhu.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
முதல் பக்கத்தை வைத்து கதையை தீர்மானிக்க முடியாதே 😁😁😁இப்போது தானே ஆரம்பம்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top