Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
அமைச்சர்கள் கந்தவேலன் மற்றும் நாகேந்திரன், அரசரது உடலை தூக்கி தேரில் நிறுத்தி, இறுதி ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அரசரது உடலுக்கு, இளவரசன் வல்லாளன் கொல்லி வைத்து. தனது தந்தைக்கு ஆற்றும் கடமையை நிறைவு செய்தான்.
பதினாறாம் நாள் காரியம் நல்லபடியாக நிறைவேறியது. அதன் பிறகு, இளவரசன் வல்லாளருக்கு, முடிசூட்டு விழா விமர்சையாக நடந்து முடிந்தது.
வருணதீரர் இடத்தில் வல்லாளன் இருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஆனால் ஆட்சி அதிகாரம் அனைத்தையும், அரசி கமலியே நடத்திக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் கந்தவேலர் வீட்டில் புதிய வரவாக பிறந்திருக்கும் குழந்தைக்கு, வருணன் என்ற அரசரின் பெயரையே சூட்டிய கந்தவேலர், தனது ராஜா விசுவாசத்தை நிரூபித்தார்.
நாட்கள் வருடங்களாக ஓடிக் கொண்டிருக்க. காதம்பரியின் ஐந்தாம் வயதில் அரண்மனையின் கட்டுமானம் நிறைவு பெற்றது.
அரசி கமலிக்கு அந்த அரண்மனையை விட்டுக் கொடுக்க மனது இல்லை. என்றாலும் அரசர் கொடுத்த வாக்குறுதிக்காக வேறு வழியில்லாமல் புதிய அரண்மனையில், கந்தவேலரை அரசராக முடிசூட்டி அமர்த்தி வைத்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், நீர்த்தேக்க அணையின் கட்டுமானமும் நிறைவு பெற்றது.
புதிய அணையை, அரசி கமலியும், அரசன் வல்லாளரும், அண்டை தேசத்து சிற்றரசன் கந்தவேலனும் திறந்து வைத்தார்கள்.
அதுவரையில் மக்கள், தங்களுக்காக... அரசர் தரவிருக்கும் பொன் பற்றிய நினைவில்லாமல். வேலையை முடித்துக் கொடுப்பதில் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். தற்போது இரண்டு பெரிய வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில், மக்கள் ஆங்காங்கே இன்னும் தங்களுக்கு வந்து சேர வேண்டிய பொற்கவளம் வரவில்லையே... என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மக்களின் மனதை அறிந்த வல்லாளன், தன் தாய் கமலிடம், "அப்பா தருவதாகச் சொல்லியிருந்த பொன் கவளத்தை விரைவில் கொடுக்க வேண்டும். பொய்க்கக்கூடாது." என்று உறுதிபட தெரிவித்தார்.
மகனிடம் மறுப்பு சொல்லாமல், "அப்படியே செய்து விடலாம். என்ற கமலி, மனதிற்குள் புதிய திட்டம் ஒன்று வகுத்து வைத்திருந்தார். மக்களுக்கு ஒரு கவளம் பொன் எதற்கு? எலுமிச்சை அளவு பொன்னே போதுமானது. என்று முடிவு எடுத்தவர். பொற்கொல்லர்களை வரவழைத்து, பொன் உருண்டைகளை பிடிக்க ஏற்பாடு செய்தார்.
மன்னர் இறந்து. தற்போது ஏழாம் வருடம் நிறைவு பெற்று விட்டது. ஏழாம் ஆண்டு. நினைவு தினத்தில் மக்களுக்கு, மன்னர் அறிவித்த பொன்னை கொடுக்க தீர்மானித்துள்ளேன். என்று மகனிடம் அரசி கமலி தெரிவித்துள்ளார். அதன்படியே மன்னரது நினைவு நாளில், மக்கள் அனைவரும் ஒன்றாக அரண்மனையில் குழுமி இருக்க.
அரசி, "அனைவருக்கும் அரசர் அறிவித்த கவள பொன்னை வழங்குகிறேன்." என்று கொடுத்தார்
பெற்றுக் கொண்ட மக்கள், அதிர்ச்சியாய் உறைந்து நின்றார்கள்.
அரசன் வல்லாளர் தற்போது 16 வயது நிறைந்த, அழகு ததும்பும் ஆண்மகனாக அரியணையில் அமர்ந்திருந்தவனுக்கும், அன்னையின் செயல்பாடுகள் அவமானமாக இருந்தது. ஆனால் மக்கள் மத்தியில் தாயை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
மக்கள் அரசனின் மாளிகையில் நின்று கொண்டு, அவனது குடும்பத்தை குறைத்து பேச முடியாது என்பதால், கொடுத்தது போதும் என்று வாங்கிக் கொண்டு அவரவர் இல்லங்களுக்கு சென்றவர்கள், கவள பொன்... தற்போது கடுகாய் போனது இன்னும் சில ஆண்டுகள் தாமதமாக பொருத்திருந்தோமானால், கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மண்ணை கொடுத்து ஏமாற்றி இருப்பார்கள் அரசி. என்று தூற்றிக்கொண்டு சென்றனர்.
மக்கள் சென்ற பிறகு, மன்னன், அரசிடம் "ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்தீர்கள்? கவளம் என்பது உங்களுக்குத் தெரியாதா?"
மக்கள், மக்கள், மக்கள், எந்த நேரமும் மக்கள்தானா? உனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. உனக்கும் வாரிசுகள் பிறக்கும். அவர்களுக்கெல்லாம் பொன், சொத்து என்பது தேவை. இந்த பொன், உன்னுடைய மூதாதையர்கள் சேர்த்து வைத்திருந்தது. அதை உன்னால் மட்டும் எடுக்க முடியாது என்று, அவர்கள் அப்போதே வழிவகை செய்தார்கள். மறைத்து வைத்திருந்தார்கள். மற்றபடி இது ஒன்னும் புதையல் அல்ல. அதை எடுக்க உதவிய மக்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறேன். இதோடு இந்த பேச்சை நிறுத்திவிடு. என்று சொல்லிவிட்டு கமலி, அவரது அறைக்குச் சென்று விட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பொன்னைப் பற்றியும், வருண தீரர் பற்றியும் முழுமையாக மறந்து போயினர்.
அதேபோல கந்தவேலர் குடும்பத்தில், காதம்பரியை கண்டெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் குழந்தை என்பதையும் மறந்து போய்விட்டார்கள். முழுமையாக கந்தவேலர் பெற்ற மகள் என்று சொல்வழக்காக புழங்க தொடங்கி இருந்தது.
காதம்பரி தனது பன்னிரண்டாம் வயது நிறைவு பெற்ற பிறகு, 13 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பூத்து மலர்ந்தாள்.
கதம்ப வன தேசத்தில், இளவரசி காதம்பரி குமரியாய் பூத்திருக்கிற காரணத்தினால். கானகத்தில் கன்னிமாடம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்கள் தனியாக குடியமர்த்தி வைத்திருந்தார்கள்.
காதம்பரிக்கு துணையாக பூரணம் அம்மையார் அங்கே கன்னி மாடத்தில் தங்கி இருந்தார். தினமும் காதம்பரிக்கு சமைப்பதற்கு அரண்மனையிலிருந்து தினமும் ஒரு நபர் வீதம், ஏழு நாட்களுக்கு, ஏழு பெண்கள் சமையல் வேலை செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அதேபோல இரவு நேர காவல் புரிய, அந்த தேசத்தில் 200 வீடுகளில், தினம் ஒரு வீட்டில் இருந்து ஒரு இளைஞர் காவல் புரிய வேண்டும் என்பது விதி. அதன் படி நித்தம் ஒருவராக இரவு காவல் புரிய சென்று வந்தார்கள்.
ஒரு முழுமதி நாளில், வல்லாளனோடு குருகுலத்தில் ஒன்றாய் கல்வி கற்ற சிவம், காவல் புரிய சென்றான்.
அவன் புதிதாய் உதயமான கதம்பவன தேசத்தில் நில கிழார் சொக்குவின் மகன்.சொக்குவிற்கு கதம்பவனத்தில் 7 காணி நிலம் இருந்ததால் இந்த கதம்பவன தேசத்தில் குடியேறியுள்ளார்.
இன்று சொக்கு மகன் சிவனின் முறை. சிவன் அவனது நண்பர்கள் ரகு, சந்தா என இருவரை உடன் அழைத்துக் கொண்டு கன்னி மடத்தின் காவலுக்கு சென்றிருந்தான்.
மர பலகைகளால் கட்டமைக்கப்பட்ட உறுதியான, சிறிய வீடாக அமைந்திருந்தது அந்த கன்னி மாடம். அந்த வீட்டினுள் இருவர் உறங்கி எழுந்து அதற்கு மேலும் எதுவும் செய்ய இயலாது. சமையல் கூடம் மைய மண்டபம் போன்ற அமைப்புகள் அதில் கிடையாது. இந்த வீட்டைச் சுற்றி நிறைய தென்னை மரங்கள் சூழ்ந்து ஒரு வேளி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அங்கே தேவையான உணவை சமைப்பதற்கு கல் அடுப்பு உள்ளது., குளிப்பறை போன்றவை ஏற்படுத்தப்பட்டது. ககாவல் புரிய வந்தவர்கள் வேலி தாண்டி செல்ல அனுமதி கிடையாது இதில் உள்ளே இருக்கும் இளவரசியை காண்பது மிகவும் அரிதான செயல்.
இன்று காலை பூரணம் அம்மையார், தன்னுடைய வீட்டுக்குச் சென்று, முந்தைய நாட்களில் களைந்த துணிகளை கொடுத்துவிட்டு, புதிதாக துணிமணிகளை எடுத்துக்கொண்டு வந்தார். அப்படி வரும்பொழுது... தன்னுடைய வலது கையில் இருந்த மோதிரத்தை வீட்டில் கழற்றி வைத்து விட்டாரா? அல்லது தொலைத்து விட்டாரா? என்று அவருக்கே விளங்கவில்லை. மாலையில் வந்ததிலிருந்து அதைப் பற்றி சிந்திக்காமல் இருந்திருந்தார். தற்போது சாப்பிடும் போது மோதிரத்தை காணவில்லை என்று அறிந்து கொண்டார்.
தற்போது இரவு காவல் பணி செய்து ஆட்கள் வந்துவிட்டனர். இனிமேல் பயமில்லை என்று எண்ணிய பூரணம் அம்மையார், காதம்பரி நான் தற்போது வீட்டுக்குச் சென்று துவைக்கும் இடத்தில் தேடிப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். நான் இங்கு இல்லை என்று வெளியில் காவல் செய்யும் வாலிபர்களுக்கு தெரிய வேண்டாம். நீயும் வெளியில் தலையை காண்பிக்காதே." என்று சேலையை முக்காடித்துக் கொண்டு மறைந்து மறைந்து வெளியே சென்று. வேக வேகமாக கதம்ப வன தேசத்தை நோக்கி சென்றார்.
பூரணம் அம்மையார் தற்போது வெளியே சென்று இருப்பதை, சிவனின் நண்பர்கள் சந்தாவும், ரகுவும் கண்டுகொண்டார்கள். இருவரும் கண்களால் பேசிக் கொண்டார்கள். முதலில் சிவனை உறங்க வைத்துவிட்டு. உள்ளே செல்லலாம் என்று அங்கே நிறுவப்பட்டிருந்த கல் திண்ணையில், சிவனை, "தற்போது நீ படுத்து ஓய்வெடு. அடுத்த ஜாமத்தில் நான் சிறிது நேரம். படுத்து ஓய்வெடுக்கிறேன் அதற்கு அடுத்த ஜாமத்தில் சந்தா படுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும். அப்படி இருந்தால் தான் நமக்கு உடல் நலம் கேடு எதுவும் நேராது." என்று சொல்ல நண்பர்கள் சொல்வதை நம்பிய சிவன், கல் திண்ணையில் படுத்து கண்ணயர்ந்தான்.
சிவன் உறங்கிய உடனே, சந்தாவும், ரகுவும், கன்னி மாடத்தின் வாயிலுக்கு சென்றார்கள்.
மர வீட்டின் மர கதவில் ரகு, கைவைத்து தட்டினான்.
கதவைத் திறந்து வெளியில் வந்தாள் காதம்பரி. காதம்பரியை பார்த்த இருவரும் திகைத்து நின்று விட்டார்கள்.
காதம்பரிக்கும் அவர்கள் இருவரையும் பார்த்ததும் சிறிது மனது படபடத்தது இருந்தாலும் பயத்தை காட்டிக் கொள்ளாமல் எதற்காக வந்திருப்பார்கள் என்று யோசித்தாள்.
காதம்பரி, "என்ன வேண்டும்?"
சந்தா, "பல்லை இளித்தபடி தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி..."
அந்த வீட்டில் எதிர்புறத்து வாயில் இருக்கும் தொட்டியை காணவில்லை "அதிலே தண்ணீர் உள்ளது" என்றாள் காதம்பரி.
ரகு, தலையை சொரிந்து கொண்டு. காதம்பரியை ஒரு மாதிரியாக பார்த்தான்.
காதம்பரிக்கு, இவர்கள் இருவரது நோக்கம் என்னவென்று நன்றாகவே விளங்கியது. காதம்பரி இவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டும். "இருவராக இருக்கிறீர்களே... ஒவ்வொருவராக வரலாமே" என்றாள் சினுங்கலோடு.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் "இதோ ஒரு நிமிடத்தில் வருகிறோம்" என்று இருவரும் வாயில் கடந்து வெளியே சென்றனர்.
ரகு, "சந்தா... முதலில் நான் சென்று வருகிறேன். அதன்பிறகு நீ போ..."
சந்தா, "இல்லை ரகு. நான் முதலில் சென்று வருகிறேன். அதன் பிறகு நீ செல்."
ரகு, “நாம் இருவரும் இப்படி அடித்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவள் திட்டமிட்டு சொல்லி இருக்கலாம். முதலில் நீயே சென்று வா...” என்ற சந்தனை. வழி அனுப்பி வைத்தான்.
சந்தன் வேகமாக உள்ளே வர, காதம்பரி அவனுக்காகவே காத்துக் கொண்டு நின்றாள். பின்பு சந்தனது கையைப் பிடித்து மர வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
காதம்பரியின் கை, சந்தன் மீது பட்டதும் சந்தன் சில்லிட்டு உறைந்து போனது போல, சிலிர்த்துப் போய் நின்று விட்டான்.
உள்ளே அழைத்துச் சென்றவள், கதவை மூடி, பின்பு சந்தன் இடம், ஒரு நீளமான துணியை கொடுத்து, இதை வைத்து உங்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என்றாள்.
சந்தன், "எதற்காக அப்படி சொல்கிறாய்"? என்று கேட்டவனிடம்
"அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அதனால் உங்களுக்கு இது பக்கபலமாக இருக்கும். அதேபோல எனக்கும் வெட்கமாக இருக்கிறது. பார்ப்பதற்கு சற்று கூச்சம் மேலிடுகிறது. என்று அவள் சொல்ல
காதம்பரி சொல்வது சரிதான் என்று தோன்றியது, சந்தன் உடனடியாக அவள் கொடுத்த துணியைவாங்கி, முகத்தை மூடி பின்புறம் முடிச்சிட்டு கொண்டான். "நான் ஒற்றை தலையில் முகத்தை மறைத்திருக்கிறேன். நீ நிற்பது எனக்கு தெரிய வேண்டுமல்லவா" என்றான் ஆர்வம் பொங்க.
"உங்கள் பேச்சு எனக்கு நாணத்தை அதிகமாக்குகிறது. நீங்கள் முதலில் திரும்பி நில்லுங்கள்." என்று அவனை திருப்பிவிட்டு, துணியை வேகமாக இழுத்துபிடித்தாள். அந்த அறையை சுற்றினாள். அவளது இழுவைக்கு கட்டுப்பட்டு, இவன் அறையை சுற்றி வந்தான்.
அறையின் மையத்தில் நின்ற காதம்பரி, அந்தத் துணியை விடாமல் இழுத்துச் சுற்றினால் அவன் அங்குமிங்கும் மோதி சோர்ந்து தரையில் சரிந்து விழும் வரை சுற்றிக் கொண்டே இருந்தாள் காதம்பரி.
பிறகு அவனது முகத்தில் இருந்த துணியை எடுத்துவிட்டு, "நீ ஒரு ஆண்மகன். வெளியே சென்று இங்கு நடந்ததை தெரிவித்தால் உனக்கு தான் அவமானம். நீ அந்த அவமானத்தை சந்திக்க ஆசை கொண்டாள், தாராளமாக சொல்லிக்கொள்." என்று சொல்லி கதவை திறந்து அவனை வெளியே தள்ளி விட்டாள்.