• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
வைத்தியரின் வீட்டிலிருந்து வந்த கந்தவேலர், தன் வீட்டில் அமைதியாய் அமர்ந்து விட்டார். வள்ளி குழந்தையோடு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தார். பூரணம், அவர்களது அரண்மனை கட்டுமான தொழிலாளர்களோடு... தானும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்போது வீட்டில் வள்ளியையும், கந்தவேலரையும் தவிர யாரும் இல்லை.

வள்ளி, "சுவாமி ஏன் தங்கள் முகம் இப்படி வாடி இருக்கிறது".

"அரசரை, முடக்கி படுக்கையில் போட்டு விட்டார்கள்."

"உடல் என்றால்... ஆயிரம் உபாதைகள் வரும், போகும். அதைப்போய் திட்டமிட்டு நடத்தியதைப் போல சொல்கிறீர்களே?"

"உண்மையிலேயே மன்னரை, திட்டமிட்டு முடக்கி இருக்கிறார்கள்." என்று கந்தவேலர் சொல்ல, வள்ளி பதறிப் போனார்.

"என்ன சுவாமி சொல்கிறீர்கள்?"

"உண்மைதான் வள்ளி"

"மன்னரை திட்டமிட்டு முடக்கி இருக்கிறார்கள், என்றால்... ஏதாவது மாய, மந்திர, கட்டுகள் மூலமாக எதிரிகள் முடக்கி வைத்தார்களா?"

“அப்படி செய்ய மன்னருக்கு எதிரிகள் எவரும் இல்லை. உடனிருந்தே உலை வைத்து விட்டார்கள் பாவிகள்.

வள்ளி, "தாங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று, எனக்கு இன்னும் விளங்கவில்லையே!"

கந்தவேலர், "இந்த மாபாதகத்தை அரசியார், அரசரோடு இருந்தே விட்டார்."

"அரசியருக்கும் அரசருக்கும் அப்படி என்ன விரோதம்"

"விரோதம் எதுவும் இல்லை. அரசர், தனக்கு கிடைத்த பொக்கிஷத்தை, மக்களோடு பங்கிட்டு, பகிர்ந்து கொள்கிறார். அதை தடுப்பதற்காக அரசியார், அப்படி செய்திருக்கலாம். என்று நான் எண்ணுகிறேன்."

"ஆழி போல் குவிந்து கிடந்தாலும் நாழி அளவு குறையக்கூடாது. என்று எண்ணுவது மனித இயல்பு தானே சுவாமி. என்று வள்ளி கேட்க.

"ஆமாம் வள்ளி. அதைக் கருத்தில் கொண்டு. நான் எனக்குக் கொடுக்க இருந்த குறு நில மன்னன் பதவியை வேண்டாம் என்று தெரிவித்து விட்டு. எனக்காக கட்டி தருவதாக. சொன்ன அரண்மனையும் வேண்டாம், தேசமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு. வந்துவிடலாம் என்று எண்ணுகிறேன்." என்று கந்தவேலர் சொல்ல.

என்ன சுவாமி சொல்கிறீர்கள் நீங்கள் ஒருவர் வேண்டாம் என்று சொன்னால் அத்தனை மக்களும் வேண்டாம் என்று திருப்பி கொடுத்துவிடுவார்களா? அல்லது நீங்கள் வேண்டாம் என்று சொன்னதற்காக, மன்னர் எழுந்து அமர்ந்து விடுவாரா? நம்மைப் பற்றிய ரகசியத்தை தெரிந்து கொண்டார் என்று ராணியார் திருந்துவிடப் போகிறார்களா? எதுவும் நடக்கப்போவதில்லை நீங்கள் குறைந்தபட்சம் ஒரு குறுநில மன்னனாக இருந்தாலாவது, அரசருக்கு இணையாக அமர்ந்து பேசும் அந்தஸ்தில் வருவீர்கள். அப்போது நீங்கள் ராணியாரை விசாரித்தால் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டாலும், உங்கள் தேசத்தின் செல்வாக்கை கொண்டு, இந்த தேசத்துக்குள் புதிதாக போர் வந்தது விடுமோ? என்று பயந்தாவது, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் நீங்கள் அவசரப்பட்டு, எதுவும் வேண்டாம் என்று சொல்லி. எல்லோரையும் போல நாமும் சாதாரண குடியாகவே வாழ்ந்து விடலாம் என்கிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரிந்த ரகசியம் என்ன, ராணிக்குத் தெரிந்த அடுத்த கனம், நம் குடும்பம் இந்த உலகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள். அதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது வாரிசு இந்த பூமியில் சுவாசிக்கவில்லை. அதை நாம் எப்போது காண்போமோ என்று ஏக்கத்தோடு காத்திருந்து. கடைசி வரை காணாமலேயே போய் விடுவோம். அதை நினைவில் கொள்ளுங்கள்."

"அதுவரை மன்னர் உயிரோடு இருக்க வேண்டுமே வள்ளி."

"அது மன்னர் வாங்கி வந்த வரம். நல்லவர்களுக்கு இந்த உலகில், நல்ல சாவு கிடைத்ததில்லை என்பார்கள். அப்படித்தான் மன்னரது வாழ்க்கை இங்கே முடிய போகிறது. நாம் வருந்துவதால் பயனில்லை. மன்னர் கொடுத்த வாக்குப்படி, நமக்கு தேசம் கிடைக்கும். அது கிடைத்த பிறகு மன்னர் உயிரோடு இருந்தார் ஆனால், மன்னரை நமது தேசத்தில் உயர் வைத்தியர்களை வைத்து, மலையாள தேசத்தில் சிகிச்சை பெற்று வரவழைத்து, மன்னரை கவனித்து, பார்த்து, மீண்டும் எழுப்பி விடலாம். அதற்கு மன்னர் உயிரோடு இருந்தால் மட்டுமே செல்லும். இல்லை என்றால் நமக்கும் விவரம் தெரியாதது போல இருந்து கொள்வோம். காலமே கண்டிக்கட்டும்."

வள்ளி சொல்வது சரிதான். என்று எண்ணிய கந்தவேலர் மௌனமாக வீட்டிலேயே அமர்ந்து விட்டார்.

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

வள்ளிக்கு பிரசவ காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் மன்னருக்கு மூச்சு அளவு குறைந்து கொண்டே சென்றது. வள்ளி பிறந்த வீடு சென்று, பேறுகாலம் ஆவதற்கு காத்திருந்தார். அவரோடு சேர்ந்து சென்றிருந்த கந்தவேலரும், புதிய மைந்தரை காணும் ஆவலிலும், வள்ளியோடு சேர்ந்து இருந்து வந்தார். வள்ளிக்கு திடீரென இடுப்பு வலி கண்டது. வீட்டிற்குள் வைத்து மருத்துவச்சியின் உதவியோடு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வள்ளியின் குழந்தை பூமியில் விழும் அதே நேரத்தில், அரசர் வருணதீரரின் உயிர் பிரிந்தது.

மருத்துவச்சி, குழந்தையை துணியில் சுற்றிக் கொண்டு வந்து கந்தவேலரின் கையில் கொடுத்துவிட்டு. உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. என்று கூடுதல் தகவலையும் சொல்லிவிட்டு. வள்ளியை சுத்தப்படுத்தச் சென்றார்.

காதம்பரி கந்தவேலரின் மடியில் அமர்ந்தபடி, "வ...ரு வ...ரு" என்று கொஞ்சும் மொழியில் அழைத்தாள்.

கந்தவேலர், "தம்பியாடா தங்கம் 2 உன்னோட தம்பியாடா?" என்று மகளோடு சேர்த்து, மகனை கொஞ்சி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சிக்கு கால வரையறை ஒரு மணி துளிகளே.

அரசர் இறந்து போன செய்தி கந்தவேலரின், மாமனார் வீடு வரை சென்று சேர, ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. கந்தவேலர் காதுகளுக்கு எட்டிய போது, காதம்பரி, வா... ரு... என்று சொன்ன வாக்கியம் நினைவில் வந்து போனது. “அப்படி என்றால் என் குழந்தை அரசரின் ஆன்மாவா?அரசர் என்னுடைய இல்லத்தில் மறு அவதாரம் எடுத்து இருக்கிறாரா?


பூரணம்அம்மையார், துக்க செய்தி தெரிந்த பிறகு, வீட்டில் இருக்க வேண்டாம். உடனடியாக அரண்மனைக்குச் சென்று, ஆக வேண்டியதை செய்து வை. என்று கந்தவேலரை அனுப்பி வைத்தார்.

கந்தவேலர் உடனடியாக தனது புறாவியில், அரண்மனை நோக்கி புறப்பட்டு சென்றார்.

அப்போதுதான் மன்னரின் வாரிசான வள்ளலனை அழைத்து வர, ஆட்களை நியமித்துக் கொண்டிருந்தார் மந்திரி நாகேந்திரன்.

கந்தவேலர், அரண்மனைக்கு வந்தவுடன். இளவரசரை அழைத்து வர ஆவண செய்து விட்டதை, அறிந்து கொண்ட பிறகு. அரசரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.

"நாகேந்திரர் அவர்களே, இளவரசர் வருவதற்கு இன்னும் 10 நாழிகைகள் ஆகும். விடலாமா?" என்று கந்தவேலர் கேட்க. நாகேந்திரருக்கும் அது சரி என்று தோன்ற,

காவலர்களை அழைத்து, அரசரின் பூத உடலை மைய மண்டபத்தில் கிடத்தி வைக்க உத்தரவிட்டனர்.

அரசரின் காலடியில் அமர்ந்த ராணி, தனது தலையில் முக்காடு போட்டு, முழுவதும் முகத்தை மறைத்து, அனைவரையும் கவனிக்க தொடங்கினார்.

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, மன்னரை வணங்கி, அழுது, வழிபட்டு, தங்கள் எண்ணத்தை சொல்லி, அத்தனையும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தார். மகாராணி.

வந்திருந்த மக்கள் அனைவரும், மன்னரை இழந்ததற்காக அழுது துடித்தார்களே தவிர, தங்களுக்கு சொன்னபடி கவளம் பொன் கொடுக்கவில்லையே என்று எவரும் கலங்கி அழவில்லை.

யாரும் பொன்னை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்படியே பொன்னை மறந்து போய்விட வேண்டும், என்றும் மனதிற்குள் எண்ணிய ராணி. கருவூலத்தில் இருக்கும் பொன்னைப் பற்றிய விவரம், இங்கே வந்திருக்கும் அத்தனை மக்களுக்கும் தெரியும். அதனால் அந்த இடத்தில் இனியும் பொன்னை வைத்திருப்பது நல்லதல்ல. முதலில் மன்னர்கள் காரியம் முழுமை அடையட்டும் அதன் பிறகு பொன்னை பத்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று அமைதியாக அமர்ந்த ராணி.

வல்லாளனை அழைத்து வர சென்றிருந்த காவலர்கள், நடுநிசி பொழுதில், வல்லாளனோடு வந்து சேர்ந்தார்கள்.

பிணத்தை வைத்துக் கொண்டு, யாரும் உறங்க கூடாது. என்பதற்காக அந்த தேசத்தின் மக்கள் அனைவரும் உறங்காமல் விழித்திருந்தார்கள்.

ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக, கூடி நின்ற மக்கள், மன்னர் போரில் ஆற்றிய பங்கையும். மன்னர் மக்கள் மீது செலுத்திய அன்பைப் பற்றியும், மன்னர் மக்களுக்காகக் கொடுத்த தான தர்மங்களைப் பற்றியும், பேசிக் கொண்டும், சிலாகித்துக் கொண்டார்கள்.


ரத்தத்தில் இருந்து இறங்கி நடந்து வந்த வல்லாளன், நடந்து வரும் வழியில், மக்கள் தன்னுடைய தந்தையைப் பற்றி, எவ்வளவு உயர்வாகப் பேசுகிறார்கள்? ஏசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டே வந்தான். தந்தையின் உடல் கிடத்தி இருக்கும் மையக் கூடத்திற்கு வந்தது,

தாயைப் பார்த்து, ஓடிச்சென்று கட்டி அழுதான்.

அவனுடைய அம்மா, அவனை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தார், "எனக்கு இப்போது, நீ மட்டுமே சொந்தம். தந்தையும் என்னை விட்டு போய்விட்டார். விட்டு எப்போதும் பிரிந்து செல்லக்கூடாது. என்னுடனே இருக்க வேண்டும் என்று சொல்லி அழுதார்."

வல்லாளன், "நான் இனி என்றுமே உங்களை விட்டு பிரிய மாட்டேன் அம்மா." என்று அவனும் சொல்லி அழுதான்.

தாய் மகன் அழுவதை பார்த்து மக்கள் அனைவரும் கதறி துடித்தார்கள். வருண தீரர் மக்களுக்கு மன்னர். வல்லாளனுக்கும் அவனது தாய் கமலைக்கும் உலகமே அவர்தான். என்று அவர்கள் இருவர் மீதும், மக்கள் பரிதாபப்பட்டார்.

அரசி நடத்தும் நாடகத்தை பார்க்க சகிக்காத கந்தவேலர், இப்போதே இந்த மக்கள் முன்னிலையில், இவரது வேடத்தை கலைத்து விடலாமா என்று தோன்ற, ஆவேசமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் மன்னர் மரணத்திற்கு அரசிதான் காரணம் என்று சொன்னால், அங்கு இருக்கும் மக்கள், யார் சாட்சி என்று கேட்பார்களே? அந்த சாட்சிக்கு யாரை அழைப்பது? தன்னிடம் நல்ல விதமாக எடுத்துச் சொன்ன வைத்தியர். குடும்பம் தற்போது அரசிக்கு அடிபணிந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசி சோர்ந்து மயங்கி விழும்போதெல்லாம், அருகில் இருந்து தோள் கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் வைத்தியரின் மனைவி. அரசிக்கு அவ்வப்போது சோர்வு நீங்க, கஷாயம் கொண்டு வந்து கொடுப்பது போல, உற்சாகபானம் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறாள் வைத்தியரின் மகள். வைத்தியர் தன்னுடைய வீட்டு விசேஷம் போல, வந்திருப்பவர்கள் அனைவருக்கும் சுக்கு கசாயம் கொடுத்து ஆறுதல் படுத்தி அமர்விருக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார். இவன் எப்படி சாட்சியம் கூறுவான்? என்று அமைதியாய் நின்று கொண்டிருந்தார் கந்தவேலர்.

மன்னர் உயிரோடு இருந்திருந்தால் ஆவது அவரை மீட்பதற்காக சிறிது பிரையத்தனம் பட்டிருக்கலாம். தற்போது அவரும் போனபிறகு. யாருக்காக? எதற்காக? இத்தனை பிரயத்தனப்பட வேண்டும்? என்று யோசித்த கந்தவேலர். கண் திறந்திருந்தாலும், குருடு என்பது போல நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். தற்போது மக்களோடு மக்களாக, தனக்கும் எதுவும் தெரியாது என்பது போல் இருந்து கொண்டார்.

மறுநாள் காலை, மன்னரது இறுதிச் சடங்கு, அரசியின் பிறந்த வீடான, பக்கத்து தேசத்தில் இருந்து அரசனும் அரசியும் வந்திருந்தார்கள்.

அவர்களிடத்தில் அரசி, தான் நிர்கதியாக நிற்பதை பற்றி சொல்லி கதறி அழுதது, அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் மன பாரத்தை உண்டாக்கியது. ஆனால் கந்தவேலர், கல் போல் நின்று கொண்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பேராசை இவளுக்கு என்ன பாடம் வைத்திருக்க போகுதோ
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
பேராசை இவளுக்கு என்ன பாடம் வைத்திருக்க போகுதோ
அவர் கதையின் நகர்வு
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top