• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
அரசர் குடும்பமும், மந்திரிமார்களும் புதையல் இருந்த குன்றை விட்டு, அவர்களது வகுள ஆரண்ய தேசத்திற்கு, நடந்தே சென்றனர்.

வருண தீரருக்கும், கமலி நாச்சியாருக்கும், அன்று இரவில் கண்ணுறக்கம் கொள்ளவில்லை.

அதேபோல, அவர்களோடு வந்த அமைச்சர் பெருமக்களுக்கும், புதையலை பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்ததே தவிர, உறக்கம் வரவில்லை.

அதிகாலையில், பொழுது புலர்வதற்கு முன்பாக, வகுள ஆரண்ய தேசத்தில், ஆங்காங்கே புதையலைப் பற்றிய பேச்சுக்கள் தொடங்கின.

முரசு அறிவிப்பவர், "இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... வகுள ஆரண்ய தேசத்து மக்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! மன்னர் பெருமான் கண்ட பொற்குன்றம் புதையலை பற்றி அறிந்திருப்பீர்கள். அங்கே இருக்கும் புதையலை வெட்டி எடுத்து வர, தேசத்தில் இருக்கும் மக்கள் அனைவரையும் மன்னர் அழைத்து இருக்கிறார். மன்னருக்கு அந்த புதையலை எடுக்க உதவும் அனைத்து மக்களுக்கும் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆதலால் காலதாமதம் இன்றி, இன்று பொழுது புலர்வதற்கு முன்பாகவே... இங்கு இருந்து அனைவரும் புறப்பட வேண்டும். வருபவர்கள் அனைவரும், நமது அரண்மனை வாயில் முன்பாக வந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என்று முரசறைந்து சொல்லிவிட்டு சென்றான்.

தேசத்தின் மக்கள் அனைவரும், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக, புதையலைக் கொண்டுவரும் பணிக்கு, யார் யாரெல்லாம் செல்ல வேண்டும் . ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் சொல்லலாம் என்றும் பேசிக்கொண்டே... அரண்மனை வாயிலை அடைந்திருந்தார்கள்.

அரசரும், அரசியும் மக்கள் முன்பு தோன்றி, "ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு நபர்கள் வந்தால் போதுமானது" என்றும். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள், வேலை செய்யும் இருவருக்கும், எப்போது ஓய்வு தேவைபடுகிறதோ, அப்பொழுது மாற்றி விட வரலாம்." என்றும் சொல்லிவிட்டு. அனைவரும் அரண்மனையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

புதையல் இருக்கும் குன்றை அடைந்த மக்கள், ஆர்வமாகவும், பொன்னால் வார்க்கப்பட்ட குளத்தைப் பார்த்து. திகைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

பொன்னை, வெட்டி எடுக்க உரிய ஆயுதங்களோடு சிலர், அவர்களது தேசத்தில் இருந்தே வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் பொன்னை வெட்டி கொடுக்க, மக்கள் அனைவரும் கூடையில் சுமந்து கொண்டு, அரசரின் கருவூலத்தில் கொண்டு சென்று சேர்த்தார்கள். ஒவ்வொருவரும் கொண்டு செல்லும் பொற்கூடைக்கு உடன், ஒவ்வொரு காவலர்களும் சேர்ந்தே சென்று வந்தனர்.

அன்று தொடங்கிய பொன் எடுக்கும் பணி முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

பொன் முழுவதையும் எடுத்து கொண்டுவந்து கருவூலம் சேர்த்த பிறகு அரசர் மக்கள் சபையை கூட்டினார்.

வருண தீரர், "மக்கள் அனைவருக்கும் நன்றி! பொன் எடுக்க உதவிய குடும்பங்களுக்கு தலா ஒரு கவளம் பொன் பிரதி உபகாரமாக கொடுக்கப்படும்." என்று சொன்னதுமக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தார்கள்.

"அதேபோல காவல்புரிந்த காவலர்களுக்கு தலா 2 கவளம் பொன் கொடுக்கப்படும்" என்று சொன்னதும் அதற்கு மக்கள் ஆரவாரம் செய்தார்கள்.

"அதேபோல என்னோடு இருந்த மந்திரிகள், எனக்கு உண்மையாக நடந்து கொண்டதால், அவர்களுக்கு, ஒரு கவளம் பொன் பரிசாக வழங்கப்படும்.

இந்த முறை மக்கள் யாரும் அரவாரம் செய்யவில்லை. மாறாக சலசலத்துக் கொண்டார்கள்.

வருண தீரர், "உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. எந்த வேலையும் செய்யாமல், இருந்த அவர்கள்,எனக்கு துரோகம் நினைக்காமல் எனது பொக்கிஷத்தின் மீது ஆசை கொள்ளாமல் இருந்தார்களே அதற்கான பரிசுதான்" என்று விளக்கம் கொடுத்தார்.

மக்களின் சலசலப்பு சற்று குறைந்த பிறகு, வருணதீரர் தொடர்ந்து பேசலானார்.

“என் அருமை மக்களே... எனக்கு இந்தப் பொக்கிஷத்தின் குறியீட்டை சரியாகக் கணித்துச் சொன்ன, எனது அமைச்சர் கந்தவேலன் அவர்களுக்கு, இந்த வகுள ஆரண்ய தேசத்தின் எல்லைக்கு அப்பால், ஒரு சிறிய கிராமத்தை பரிசாகக் கொடுத்து. அதற்கு அரசனாக முடிசூட்ட இருக்கிறேன். இதற்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன். என்று சொல்ல, மக்கள் அனைவரும் அரசர் வருணதீரர் வாழ்க! சிற்றரசர் கந்தவேலர் வாழ்க! என்று வாழ்க கோஷங்களை எழுப்பி, அவர்களின் ஆதரவை தெரிவித்தார்.

"அந்த மக்கள் வெள்ளத்தில் நின்று கொண்டிருந்த, கந்தவேலரின் தாயார், பூரணம், மகிழ்ச்சி பெருக்கில் கண்கலங்கி போனார்." காதம்பரியால்... எத்தனை அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கிறதே... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

கந்தவேலரின் மனைவி வள்ளிக்கு மிகுந்த சந்தோஷம் தான் வீட்டில் ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் வந்திருப்பது தற்போது ஒரு சிறிய தேசத்திற்கு அரசனாக தனது கணவன் ஆகப்போவதையும் எண்ணி மிகவும் பெருமை கொண்டார்.

அரசர் வருணதீரர், "புதிய கிராமத்தில் அரண்மனை கட்டி கொடுத்து, அங்கே சில குடியிருப்புகளை நிறுவி, போதிய வசதிகள் செய்ய தங்கத்தை, நமது பொக்கிஷத்தில் இருந்து பங்காக கொடுக்கிறோம்." என்றதும்.

மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"இறுதியாக பொன் எடுத்த குன்றத்தில் உள்ள குழியை, நீர்த்தேக்க அணையாக மாற்றி அமைக்க, இதில் ஒரு பகுதியை செலவிட முடிவு செய்துள்ளேன். அதேபோல நமது அரண்மனையை புதிய அரண்மனையாக மாற்றுவதற்கு, ஒரு பகுதியை செலவிட்டுவிட்டு. இந்த பொக்கிஷத்தை எனக்கு அடையாளம் காண்பித்தேன், எனது தந்தைக்கு ஒரு பொற்சிலை ஒன்றை நிறுவுகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சி தானே?. என்று மக்களிடம் கேட்க.

மக்கள், "மகிழ்ச்சி மகிழ்ச்சி" என்று ஒன்றாக சொன்னார்கள்.

கந்தவேலன் அந்த மக்கள் முன்பாக வந்து நின்று, "அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு. "மன்னர் பெருமானுக்கு வணக்கங்கள். தாங்கள் எனக்கு ஒரு தேசத்தையே பரிசாக கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படிப்பட்ட பரிசுக்கு நான் தகுதியானவனா? என்று எனக்கே தெரியவில்லை." என்று சொல்ல.

அரசர், "கந்தவேலரே... நீங்களும் மற்ற அமைச்சர்களைப் போல, எனக்கு தெரியவில்லை என்று சொல்லி இருந்தால். அது வெறும் மலைக்குன்றாகவே எப்போதும் நிலைத்து இருந்திருக்கும். அதை எடுக்க உடைமை பட்டவனான, என் மைந்தனும், அவனது தற்போதைய பருவத்தை தவறவிட்டிருப்பான். யாருக்கும் உபயோகமற்று வெறும் மலைக்குன்றாக, கேட்பாரற்று போயிருக்குமே. நீங்கள் செய்தது வெறும் உதவி என்று மட்டும் எண்ணுகிறீர்களா? இல்லை. உங்கள் தேசத்தை விஸ்தரிக்க, உங்கள் தேசத்து மக்களுக்கு நன்மை பயக்க, உங்கள் ஒருவரால் செய்யப்பட்ட உயர்ந்த காரியம். அதை நினைவில் கொள்ளுங்கள்."

மக்கள் அனைவரும், "ஆமாம்' நீங்கள் செய்தது உதவி அல்ல. பெரிய சாதனை." என்று குரல் கொடுத்தார்கள்.

இத்தனை நிகழ்வுகளையும், அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த, கமலை நாச்சியாருக்கு, தங்கள் குடும்பத்துக்கே உரிமையான பொக்கிஷத்தை, மன்னர் இப்படி தாராள மயமாக்கி விட்டாரே... என்று வருத்தம் சூழ்ந்து விட்டது. ஆனாலும் மக்கள் முன்னிலையில் வாய் திறக்காமல் மௌனமாக நின்று கொண்டார்.

வருணதீரர், "நாளை... முதல் வேலையாக, நாட்டு மக்களுக்கு உபயோகம் உள்ள நீர்த்தேக்கம் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படும். அதே நேரத்தில் கந்தவேலரின் தேசத்தில் அவருக்கான புதிய அரண்மனையின் கட்டுமான வேலைகளும் தொடங்கப்படும் என்றார்.

கந்தவேலர், "அரசே... தங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம்."

அரசர், என்ன என்பது போல கந்தவேலரை பார்க்கவும்.

"தங்களுக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது போல, எனக்கும், திருச்செந்தூர் முருகன் பொக்கிஷத்தை கொடுத்து இருக்கிறான். அதைப்பற்றி உங்களிடம் நான் சொல்ல. வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது."

"என்ன பொக்கிஷம்"?

"நான் பிள்ளை செல்வம் வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று இருந்த போது, ஒரு மாமுனிவர், ஒரு குழந்தையை எனக்குக் கொடுத்து அனுப்பினர். குழந்தை வந்த பிறகு, என் மனைவியும் கருவுற்று இருக்கிறாள். அதே நேரத்தில் நம் தேசத்திற்கும் அரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேலாக, நானும் அரசனாக ஆக இருக்கிறேன். இதற்கெல்லாம் என் இறைவன் எனக்கு கொடுத்த, அந்த குழந்தை செல்வமே காரணம் என்று, நான் எண்ணுகிறேன். எனக்காக நீங்கள் தர இருக்கும் அந்த புதிய தேசத்துக்கு, என் மகளின் பெயரை ஒட்டினார் போல, பெயர் வைக்க விரும்புகிறேன். அதற்கு தாங்கள் அனுமதிப்பீர்களா அரசே"

"முதலில், உங்கள் குழந்தையின் பெயர் என்ன என்று சொல்லுங்கள் கந்தவேலரே?"

"என் குழந்தையின் பெயர், காதம்பரி."

"நல்லது. உங்களுக்கு நான் கொடுக்க விரும்பும் புதிய தேசத்தின், புதிய பெயர், கதம்பவனம். என்று அரசர் சொல்ல.

மக்கள் அனைவரும், கதம்பவன தேசம் வாழ்க! மன்னர் கந்தவேலர் வாழ்க! என்று வாழ்த்தினார்கள்.

"நாளை அரண்மனை கட்டுமான வேலைகள் ஆரம்பமாகட்டும். இப்போது அனைவரும் கலைந்து செல்லலாம்." என்று அரசர் சொல்லிவிட்டு அனைவருக்கும் வணக்கம் கூறி விடை பெற்றார்.

மக்கள் கூட்டம் அரண்மனையை விட்டு கலைந்து சென்ற பிறகு அரசி கமலை நாச்சியார், "மன்னரே தாங்கள் செய்தது சரியா? நாம் ஆண் வாரிசு இல்லாமலா போய்விட்டோம். எதற்காக தேசத்தை இன்னொருவருக்கு பங்கிட்டு கொடுத்தீர்கள்

அரசருக்கு ராணியின் எண்ணம் விளங்க, "தேவி நான் செய்த காரியத்தில் ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கிறது."

"அப்படி என்ன உள்ளார்ந்த அர்த்தம்,"

"சொல்கிறேன் தேவி. நமது வடக்கு எல்லையில் இருக்கும் வேம்ப நாடு தேசம், அடிக்கடி நம்மோடு போருக்கு நிற்பார்கள். இப்போது கந்தவேலனை வென்ற பிறகே நம்மிடம் வருவார்கள். இப்போது கந்தவேலன் நமது வடக்கு எல்லையின் அரணாகத்தான் இருக்கிறானே தவிர, அரசனாக அல்ல."

"தாங்கள் சொல்வது உண்மை என்று நான் நம்ப வேண்டுமா அரசே? வேம்ப நாடு தேசம், என் தாய் வழி உறவினர் தேசம். அவர்கள் எப்படி நம்மிடம் போருக்கு கொடி பிடிப்பார்கள்?"

"தேவி ராஜதந்திரம் என்னவென்று இன்னும் உனக்கு சரியாக விளங்கவில்லை. பொறுத்திருந்து பார்... அப்போதே உனக்கு புரியும்.' என்று சொல்லிவிட்டு அரசர் அவரது அறைக்கு சென்று விட்டார்."
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அதானே சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்களே.. அரசனா கொக்கா 😁😁😁
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50

அதானே சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்களே.. அரசனா கொக்கா 😁😁😁
நன்றி பாப்பா
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top