Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
வருணதீரர்," சென்ற பௌர்ணமி அன்று, என் தந்தையார் கனவில் வந்தார். அவர் ஒரு மலைக்குன்றின் மேல் நின்று கொண்டு, என்னை அழைத்தார்."
கந்தவேலன், "தாங்கள் அவர் இடத்திற்கு சென்றீர்களா அரசே?"
அரசர், "இல்லை. என்னால் குன்றில் ஏற முடியவில்லை."
கந்தவேலன், "நல்ல வேளை. இறந்தவர்கள் அழைத்தால்... அவ்விடத்திற்கு நாம் செல்லக்கூடாது என்பார்கள். அப்படி எதுவும் நடந்து விடவில்லை."
அரசர், "என்னுடைய தந்தை, என்னை ஆபத்து வழிக்கு அழைக்க மாட்டார். நான் சொல்ல வந்ததை, முழுவதும் சொல்லி விடுகிறேன். என் தந்தை அழைத்த கனவை, நான் அன்றே மறந்து போனேன். மறுநாள் என்னுடைய குமரன் வல்லாளனை, குருகுலத்தில் சென்று பார்க்க ஆசை கொண்டு. நானும், அரசியாரும்,புதிய கோட்டம் நோக்கி புறப்பட்டு சென்றோம். போகும் வழியில் அந்த மலை குன்றோம். அப்போதுதான்... நான் மறந்து போன கனவு நினைவுக்கு வந்தது. அரசி இடம் தெரிவித்துவிட்டு, மலைக் குன்றின் அருகில் சென்று பார்த்தேன். அங்கே ஒரு பாறையில், சில ஓவிய குறிப்புகள் இருந்தது. அதை அரசி இடம் காண்பித்தேன். அரசிக்கும் விளங்கவில்லை. பின்பு நமது அவையில் இருக்கும் மந்திரிகளை அழைத்துச் சென்று, அந்த குறிப்புகளை காண்பித்தேன். அவர்கள்... ஆளுக்கு ஒரு தகவலை சொல்கிறார்கள். அதன் உண்மை நிலை எனக்கு சரியாக விளங்கவில்லை. நமது அவையில் புத்திசாலிதனம் நிறைந்தவர் நீங்கள் தான். அதனால் உங்கள் வரவுக்காக எதிர்பார்த்து காத்திருந்தேன்."
கந்தவேலன், "தங்கள் மனதில், இப்படி ஒரு உயரிய இடத்தை எனக்கு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அரசே... என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன் பார்க்கிறேன். வாருங்கள் மலை குன்றினை தரிசிக்கலாம்." என்று கந்தவேலன் சொன்னதும். அரசர் தனது ஒற்றை குதிரை பூட்டிய தேரில், கந்தவேலனை அழைத்துக் கொண்டு. மலை குன்றை நோக்கி புறப்பட்டு சென்றார்கள்.
வகுள ஆரண்யத்தின் எல்லைக்கு அப்பால், 10 கதை தூரத்தில் மலை குன்று அமைந்திருந்தது. அவ்விடத்தை அடைந்து. மலை குன்றை நோக்கி இருவரும் நடந்து சென்றனர். வழியில் மூன்று ஆள் நிற்கும் அளவிற்கு உயரமான பாறையில், வரிசையாக ஓவியங்கள் செதுக்கப்பட்டு இருந்தது. ( நாம் சிறுவயதில் வரைந்த ஓவியங்களை போல பாறையில் செதுக்கப்பட்டு இருந்தது)
அதில் ஒரு பெரிய மனித உருவமும்
அதன் அருகில் சிறிய மனித உருவமும்
முதலில் ஓவியமாக இருந்தது. அதற்கு அடுத்த பகுதியில் சிறிய மனிதனின் கை, உயர்த்தப்பட்டு. ஒரு இடத்தில் ஒரு குழந்தையின் கை பதியும் அளவிற்கு அழகாக கையில் வடிவத்தை அச்சடித்து இருப்பது போல் செதுக்கி இருந்தது. மூன்றாவதாக இரண்டு பெரிய முக்கோணம் செதுக்கப்பட்டிருந்தது. அதற்கு உள்ளிருந்து சூரியன் உதயமாவதைப் போல செதுக்கியிருந்தார்கள். கடைசி பாகத்தில் அந்த இரண்டு முக்கோணத்தையும் இணைத்து கோடு போட்டு இறந்தார்கள்.
அரசர், "இந்த ஓவியத்தை விளக்கி சொல்ல இயலுமா?"
"இந்த பெரிய மனித உருவம், ஒரு தலைவனையோ, அல்லது உயர் பதவியில் இருப்பவரையோ, அல்லது தங்களைப் போன்ற அரசரையோ குறிக்கும்.
அதை குறிப்பால் உணர்த்த பெரிய மனித ஓவியத்தை வரைந்திருக்கிறார்கள்.
அந்த அருகில் இருக்கும் சிறிய மனித உருவம், மக்களையோ, அல்லது அந்த மனிதரின் மகனையோ, மக்களையோ, குறிப்பதற்காக வரைந்து இருக்கலாம்".
அடுத்ததாக இருக்கும் ஓவியத்தை பார்க்கலாம்... என்று இருவரும் சற்று நகர்ந்து, அடுத்த ஓவியத்தை பார்த்தார்கள்.
இந்த பெரிய மனிதரின் வாரிசான சிறிய மனிதனின் கை, இதில் பொருந்தினால்... வாருங்கள் மூன்றாவது ஓவியத்தையும் பார்த்துவிடலாம்.
இந்த இரண்டு முக்கோணங்கள் இரண்டு மலைத்தொடர்களைக் குறிக்கிறது. மலைகளா??? அல்லது ஒரு மாலை குன்று பிளவுற்று இரண்டாக நிற்கிறதா? என்று விளங்கவில்லை. இந்த மலைக்கு இடையில் சூரியன் உதயமாவது. அல்லது ஒளி பிளம்பு வெளிப்படுவதைக் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார்கள்.
இறுதி ஓவியத்தையும் பார்த்து விடலாம். மலைக் குன்றுகளுக்கு சிகரத்தை இணைத்து கட்டிகளா??? சிகரங்களையும் இணைத்து அணையாய் மாற்றம்செய்ய சொல்லியிருப்பார்களோ???" என்று சிந்தித்த கந்தவேலன்.
“அரசே இப்போது எனக்கு தெளிவாக விளங்கிவிட்டது.இந்த மலை குன்றில்... தங்கள் தந்தை நின்று அழைத்ததாகச் சொன்னீர்கள் அல்லவா?இளவரசர். இளவரசரின் தற்போதைய கை வடிவம் புடைப்புக்குள் சரியாக பொருந்தி இருக்கும். அப்படி பொருந்தினால்... இந்த மலை இரண்டாக பிளவு படும். அப்படி பிளவுபடும்போது உள்ளே இருந்து ஒளிபிழம்பு வெளிப்படும். அதன் பிறகு இந்தக் குன்றை அணைக்கட்டி நீர்த்தேக்கமாக மாற்றிக்கொள்ளும் படி சொல்லி இருக்கிறார்கள்."
அரசர், "யார் ஆணையிட்டிருப்பார்?"
கந்தவேலன், "யாராக இருக்கும்? உங்கள் மூதாதையர்கள் தான்."
அரசர், "அப்படியானால் வல்லாளனை அழைத்து வந்து இதை சோதனை செய்து பார்த்து விடலாமா?"
கந்தவேலன், "அப்படியே செய்து விடலாம் அரசே!"
அரசர் வருண தீரரும், மந்திரி கந்தவேலரும், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு. வகுல ஆரண்யத்தில் இருக்கும் அரண்மனைக்குச் சென்றார்கள்.
அரசர், தாம் அறிந்து கொண்டதை, முதலில் தன் மனைவி கமலியிடம் தெரிவித்த பிறகு, காவலர்களை அழைத்து புதிய கோட்டம் சென்று வல்லாளனை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
அரசி கமலிக்கும், அங்கே அப்படி என்ன திரவியம் இருக்கும்? என்று காண ஆர்வமாக இருந்தது.
அரசர் வருண தீரருக்கும் அதே ஆர்வம் இருந்தாலும். கந்த வேலவர் மீது சற்று நம்பிக்கை குறைந்திருந்தது.
கந்தவேலருக்கு தான் சொல்லிய கூற்று. பொய்த்து விடுமோ என்ற நடுக்கம் மனதுக்குள் இருந்தது...
புதிய கோட்டம் சென்ற காவலர்கள், இளவரசன் வல்லாளனை அழைத்து வர, இரவு நேரம் ஆகிவிட்டது. அதனால் மறுநாள் சென்று சோதனை மேற்கொள்ளலாம் என்று நிறுத்தி வைக்கப்பட்டது.
மறுநாள் புதன்கிழமை அன்று, அரசர் வருணதீரர், அரசியார் கமலை நாச்சியார். மற்றும் இளவரசன் வல்லாளனோடு, மந்திரி கந்தவேலரும். மேலும் சில மந்திரிகளையும், சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு. மலை குன்றை நோக்கி புறப்பட்டு சென்றார்கள்.
கந்தவேலருக்கு, அடி வயிறு கலங்கிக் கொண்டிருந்தது.
குன்றின் அருகில் வந்தது, அனைவரும் ஒன்றாக பாறை இருக்கும் இடத்திற்கு சென்றனர். வல்லாளனுக்கு, தன்னை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
கமலியும், வருணரும், கண்மூடி பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் வருணர், தன் தோள் மீது வல்லாளனை ஏற்றி, கையின் புடைப்பு ஓவியம் இருக்கும் அளவுக்கு உயர்த்தி பிடித்தார்.
வல்லாளன், தந்தையின் அடுத்த கட்டளைக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தான்.
"செல்வமே... அங்கே கை வைக்கும் அளவுக்கு இருக்கும் புடைப்பில், உன்னுடையது கையை வைத்து சரி பார்". என்று வருணர் சொன்னதும்,.
வல்லாளன் ஆர்வமாக, தனது இடது கையை அதன் மேல் வைத்து பார்த்தான். கையின் பெருவிரல் மாறி இருப்பதை அறிந்ததும். மறுகரம் வைக்க, சற்று முன்புறம் திரும்பியது.
வருணருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. "மந்திரியாரே... தாங்கள் சொல்லியதில், உண்மை ஒரு துளியும் இல்லை. உங்களால் எனது ஒரு நாள் அலுவல் வீணடிக்கப்பட்டது. எல்லோரும் சொல்லியதைப் போல, தெரியவில்லை என்று சொல்லி இருந்தாலே, நான் அமைதியாக இருந்து இருப்பேன். இல்லாத ஒன்றை சொல்லி, ஆர்வத்தை அதிகப்படுத்தி, இப்படி ஏமாற்றம் அடைய செய்து விட்டீர்களே! உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்?"
கந்தவேலர், "அரசே... என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்." என்று வணங்கி நின்றார்.
தோள்மேல் அமர்ந்திருக்கும் வல்லாளன், "தந்தையே... அவசரப்பட வேண்டாம். நான் புடைப்பில், கையை சரியாகப் பொருத்திப் பார்க்கவில்லை. பார்க்க அனுமதி தாருங்கள். அதன் பிறகு தண்டனையைப் பற்றி முடிவு எடுத்துக் கொள்ளலாம்."
சரி என்று சம்மதித்த வருணர், புடைப்பின் அருகில் நெருங்கி நிற்க.
வல்லாளன், "தந்தையே எனது வலது கைப்புறம் திரும்பி நில்லுங்கள்." என்றதும்.
வருணர், வலதுகை புறம் திரும்பி நிற்க. குழந்தை வல்லாளன் தனது கையை அந்த படைப்புக்குள் பொருத்திப் பார்த்தான். சரியாக பொருந்தி இருந்தது. அதே நேரத்தில் உச்சந்தலையை பிளக்கும் அளவுக்கு அடித்த வெயில், அப்போது கூடிய கருமேகத்தால் மறைக்கப்பட்டது. வானம் இருந்தது. அதைக் கண்டதும் அங்கிருந்தவர்களுக்கு பீதி நெஞ்சை கவ்வியது. அவர்கள் நிற்கும் இடத்தில் பேரிடி முழக்கம் முழங்க. பூமி அதிர்ந்தது. பாறையின் அருகில் இருந்தவர்கள் எல்லாம் பயந்துபோய் வந்த வழியே ஓடினார்கள்.
அரசர் தனது தோளில் இருக்கும் குழந்தையோடு ஓடினார். அனைவரும் மூச்சிருக்கும் தூரம் ஓடினார்கள். சத்தம் அப்போது வரை வெகுவாகவே கேட்டுக்கொள்ளுங்கள், அங்கு இருந்த அனைவரும் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.
குன்று இரண்டாகப் பிளந்து, அந்த குன்றின் மேல் இருந்த பாறைகளும், மரம், செடி, கொடிகள், அனைத்தும். இவர்களை பின் தொடர்ந்து விரட்டுவது போல் உருண்டு வந்து கொண்டிருந்தது.
அவர்கள் அனைவரும் வந்திருந்த தேரில் பூட்டப்பட்ட புறாவிகள் அனைத்தும் மிரண்டு போய், தலைதெறிக்க எங்கு ஓடியது என்றே... எவரும் அறிந்து கொள்ள முடியாதபடி ஓடி மறைந்தது. இப்படியே இவர்கள் ஓட்டம் வகுல ஆரண்யத்தின் எல்லையை தொட்டிருந்தது.
அப்போது குன்று முழுமையாக பிளவுபட்டு, இருட்டாக இருந்த அந்த இடமே பிரகாசமாக ஒளிர்ந்தது.
அனைவரும் வகுல ஆரண்யத்தின் எல்லையில் நின்று, அங்கே தோன்றிய ஒளி பிழம்பு எதனால் என்று ஆர்வமாய் திரும்பிப் பார்க்க எண்ணினர். ஆனால் அருகில் செல்வதற்கும் பயமாக இருந்தது.
வருண தீரர், "இப்படியே எத்தனை காலம் நின்று கொண்டிருப்பது? வாருங்கள்." என்று கேட்டு.
விழுந்து கிடந்த பாறைகள், மரங்கள், அனைத்தையும் தாண்டி மெல்லவே நடந்து தொடங்கிவைத்தார்.
அனைவரும் குன்றை பார்க்க மெதுவாக நெருங்கி வந்தார்கள். இவர்கள் ஓடிய தூரத்தை, மெல்ல நடந்து வருவதற்கு. ஒரு நாழிகை பொழுது ஆகியிருந்தது.
குன்றின் அருகில் வர வர, கண் கூசும் அளவுக்கு ஒளியின் ஊடுருவல் தகித்துக் கொண்டிருந்தது.
அனைவரும் கண்களை, கை வைத்து மறைத்துக் கொண்டு நெருங்கி வந்தனர்.
குன்றை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் வியந்து போனார்கள்.
மலைக்குன்று இரண்டாகப் பிளந்து, அந்த நடுவே பெரிய குளம் போன்று, காய்ச்சி வார்க்கப்பட்ட பொன் போல், குழம்பு தென்பட்டது. இவர்கள் கண்ட அடுத்த நொடியே கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் பின்னால் வந்துவிட, பெருமழை கொட்டி தீர்த்தது.
எத்தனை பெரிய மழை பொழிந்தாலும் பொன்னை விட்டு யாருக்கும் செல்ல மனமில்லை. அனைவரும் அந்த மழையில் நனைந்து கொண்டே நின்றார்கள்.
பொற்குளம், மழை வெள்ளத்தால் குளிர்ந்து. அதிலிருந்து வழிந்த நீர் கொதித்து ஆறாக ஓடியது. அந்த பெருமழை நிற்பதற்கு, அன்று மாலை பொழுதானது.
காய்ச்சி வார்க்கப்பட்ட பொற்குழம்பு, மழை நீரில் குளிர்ந்து. திடப் பொருளாக மாறி இருந்தது.
அனைவரும் மழையில், குளிர், நடுக்கம், எதுவும் இல்லாமல் இருக்கும் வண்ணம். பொன்னை குளிப்பாட்டிய சுடுநீர் காலை நனைத்துக் கொண்டிருந்தது.
அரசர் உடன் அழைத்து வந்த வீரர்களை, பொன்னுக்கு காவலாக அங்கேயே இருக்க வைத்துவிட்டு. மற்ற அனைவரும் நடந்து கொண்டே வகுள ஆரண்யத்திற்கு சென்றனர்.