• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
வள்ளியும், கந்தவேலரும், அவர்களது இல்லத்திற்கு, சூரிய உதயத்திற்கு முன்பே வந்து சேர்ந்தார்கள்.

காலையில் வாசல் தெளிப்பதற்காக சாணம் கரைத்துக் கொண்டு இருந்தார். கந்தவேலனின் தாயார் பூரணம் அம்பாள்.

கையில் குழந்தையோடு வந்து கொண்டிருந்த வள்ளியை கண்டதும்.

பூரணம், "கந்தனை தரிசிக்க சென்ற ஏழு நாட்களில், கையில் குழந்தையோடு வந்திருக்கிறீர்களே? கந்தனின் கருணை அளவிட முடியாதது மட்டுமல்ல. ஆச்சரியமானதாகும்." என்று பொடி வைத்து பேசினார்.

இந்தப் பேச்சு இயல்பானது என்று எண்ணிய கந்த வேலன், "ஆமாம் அம்மா, கந்தனின் கருணை அளப்பரியது. முதல் நாள் கனவில் வந்தவன், மூன்றாம் நாள் கையில் குழந்தையை கொடுத்து அனுப்பி விட்டானே!"

வள்ளி, கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சந்தோசமாக... மாமியாரிடம், "இந்த குழந்தையை பாருங்கள் அத்தை. எத்தனை அழகு.!"

பூரணம் அம்பாளுக்கு கோபம் தலைக்கு ஏறியது. வள்ளியை வெறுப்பாக பார்த்தவர், எத்தனை அழகான குழந்தையாக இருந்தாலும் என் குல வாரிசு இல்லையே! என்று நெருப்பாய் தாக்கினார்.

வள்ளி மிரண்டு போய் விழித்திருக்க.

கந்தவேலன், "அம்மா..."

பூரணம், "போதும் நிறுத்து உன் வாதத்தை. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத இவளை கொண்டாடியது போதும், எத்தனை காலத்தை அழித்து விட்டாயடா.... இனிமேலாவது ஒரு பெண்ணை மணந்து, குலத்திற்கு பெருமை சேர்க்க வாரிசை ஈன்று கொடுப்பாய் என்று காத்திருந்தேனே... ஆனால் நீ, என்ன ஒரு காரியத்தை செய்து வைத்திருக்கிறாய்? இவளை விலக்கி வைக்க முடியாத அளவுக்கு, இவளின் மயக்கும் மந்திர மொழி கேட்டு, கனவில் கந்தன் வந்தான் என்று கதை சொல்லி ஏமாற்றி. யாரோ பெற்ற குழந்தையை, பொன் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாயோ... உன்னை ஈன்றெடுத்த என்னுடைய வார்த்தை உனக்கு பெரிதாக தெரியவில்லை. ஒரு குழந்தை ஈன்று கொடுக்க தகுதியில்லாத இவள் சொல், உயர்வாகிப்போனதோ... நான் என்ன இவளை விலக்கி வைத்துவிட்டு, இன்னொரு பெண்ணை மணந்து கொள்ள சொன்னேனா... இவள் வீட்டில் ஒரு மூலையில் இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு தேவை என் குலத்தின் வாரிசு மட்டும் தான். அதை கொடுப்பதற்கு யார் தடையாக இருந்தாலும் எனக்கு அவர்கள் தேவையற்றவர்கள். இவளை இந்த குழந்தையோடு அனுப்பி வைத்துவிட்டு. நான் சொல்லும் பெண்ணை மணந்து கொண்டு இந்த குடும்பம் விளங்கச் செய்ய வழிவகை செய்."

பூரணம் அம்பாளின் ஒவ்வொரு வார்த்தையும், வள்ளியை கூர்மையாக காயப்படுத்தியது. அந்தப் பேச்சின் வீரியத்தை தாங்க இயலாமல் வள்ளி, குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தார். ஏழு நாட்கள் பயணம் செய்த களைப்பும், பூரணத்தின் பேச்சும், அவரை அதிகமாக சோர்வடையச் செய்தது. அதனால் வள்ளி குழந்தையோடு மயங்கி சரிய இருந்தார்.

கந்தவேலன், வள்ளியை தாங்கிப் பிடித்து, தரையில் அமர்த்தினார்.

பூரணம், "நான் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும், உன் மனைவிக்கு மயக்கம் எங்கிருந்துதான் வருகிறதோ..."

கந்தவேலன், வள்ளியின் கைகளில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு. திண்ணையில் சாய்த்து அமர்த்தி வைத்தார். "அம்மா சற்று நேரம் பேச்சை நிறுத்துங்கள். வள்ளி மயங்கி கிடக்கிறாள். முதலில் அவளை எழுப்ப ஏதாவது செய்யுங்கள்."

"உறங்குபவர்களை எழுப்பி விடலாம். உறங்குவதைப் போல பாவனை செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?" என்று புலம்பிக்கொண்டே, சாணம் கரைத்த தண்ணீர் கையை வள்ளியின் முகத்தை நோக்கி வீசினார். அதே நேரத்தில் அவர்கள் அண்டை வீட்டு மருத்துவச்சி மாடத்தி, கையில் குழந்தையோடு நின்று கொண்டிருக்கும் கந்தவேலனை பார்த்து, இது யார் குழந்தை விசாரிப்பதற்காக வந்து நின்றார்.

கந்தவேலன், மாடத்தியை பார்த்த மகிழ்ச்சியில், "வைத்தியர் அம்மா... வள்ளி மயங்கி கிடக்கிறாள். அவளை தயவு கூர்ந்து எழுப்பி விடுங்கள்." என்று கேட்க.

மாடத்தி, "என்ன வள்ளி மயங்கி கிடக்கிறாரா?" என்றவர், அருகில் வந்து வள்ளியின் கையைப் பிடித்து நாடியை சோதனை செய்தார். வள்ளியின் நாடித்துடிப்பில் மாற்றத்தை உணர்ந்தவர், தான் சோதித்தது சரிதானா என்று மறுமுறை கையை பிடித்து சோதித்துப் பார்த்தார். உண்மைதான் என்று உணர்ந்து,.

மாடத்தி, "மந்திரியாரே... உமது மனையாள், மசக்கை நோய் கண்டிருக்கிறார்கள்" என்று சொன்னதும்.

பூரணம், "மாடத்தியே... சரியாக சோதித்துப் பார்த்தாயா? ஒரு மாமாங்கம் குழந்தை பேரு இல்லாமல் இருந்தவள். எப்படி இப்போது மசக்கை கண்டிருப்பாள்."

மாடத்தி, "நான் சொல்வது முற்றிலும் உண்மை தாயே! உங்கள் மருமகள் தற்போது மசக்கையாய் இருக்கிறார்." என்றவர், பக்கத்தில் இருந்த தண்ணீர் பானையில், தண்ணீரை தொட்டு, வள்ளியின் முகத்தை துடைத்து விட்டார்.

வள்ளி, மெல்ல கண் திறந்து, "என்னை மன்னித்து விடுங்கள் அத்தை. நான் உங்களது மைந்தரின் வாரிசை சுமக்கும் தகுதி இல்லாதவள். நீங்கள் விரும்பியபடி, வேறொரு பெண்ணை, அவருக்கு மணமுடித்து வைத்துக் கொள்ளுங்கள்."

பூரணம், "நீ இப்போது என் குலத்தின் வாரிசை சுமந்து கொண்டிருக்கிறாய். இந்த நிலையில் எங்கே புறப்படுகிறாய்?"

வள்ளி ஒன்றும் விளங்காமல் விழித்துக் கொண்டிருக்க,.

கந்த வேலன், "ஆமாம் வள்ளி. வைத்தியர் அம்மா.. உன்னைப் பரிசோதனை செய்து பார்த்து சொல்கிறார்கள். அம்மா சொல்வது உண்மைதான். நீ தற்சமயம் கருவுற்று இருக்கிறாய்."

வள்ளி, "கந்தமாக பர்வதத்தில் இருந்த முனிவர் பெருமான் சொன்ன வார்த்தையும் இதுதானே சுவாமி." என்று மறந்து போனதை நினைவு படுத்தினார்.

மாடத்தியும், பூரணமும், "கந்தமாக பர்வதத்தில் இருந்த முனிவர் சொன்னாரா?" என்று ஒரு சேர கேட்க.

கந்தவேலன், "ஆமாம் அம்மா.... எங்களுக்கு கனவில் வந்த கந்தன், திருச்செந்தூர் தளத்திற்கு அழைத்து சென்றார் அல்லவா! புறப்பட்டு சென்ற போது, கந்தமகா! பர்வதத்தில் ஒரு மகா முனிவரை கண்டோம். அவர் நாங்கள் வந்த காரியத்தையும் எங்கள் பெயரையும் சொல்லி, எங்களை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்ல. கூடவே இந்த குழந்தையை கையில் கொடுத்து வழியனுப்பி வைத்தார். நீங்கள் வீடு சென்று சேரும் நாளில், வள்ளியின் வயிற்றில் கந்தன் உதயமாகி இருப்பான் என்று வாக்கு கொடுத்தார். அதன்படியே தற்போது நடந்து விட்டது."

பூரணம், "இந்தக் குழந்தை நமக்குக் கிடைத்த பெருவரம்.அரிய பொக்கிஷம்" என்று சொல்லிக்கொண்டே.... கந்தவேலன் கையில் இருந்த குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்தார்.

குழந்தையின் அழகைப் பார்த்த மாடத்தி, கன்னம் தொட்டு கொஞ்ச. பொழுதும் புலர்ந்துவிட்டது.

பூரணம், "மாடத்தி... எனது மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வா..."
என்றதும்.

மாடத்தி, அவரது வீட்டிலிருந்து ஆரத்தி கரைத்து எடுத்து வந்து இருவருக்கும் சுற்றி வீட்டுக்குள் செல்லச் சொல்லிவிட்டு. அவரது வீட்டிற்குச் சென்றார்.

பூரணம், தன்னுடைய வாசலை தெளித்து கோலமிட்டு முடித்து. மகனையும், மருமகளையும் ஓய்வெடுக்க சொல்லி விட்டு. அன்றைய வேலைகளை தொடங்கும் விதமாக அடுப்பை சாணம் இட்டு மெழுகி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காவலர்கள் இருவர் இவர்களது இல்லம் நோக்கி வந்து வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள்.

பூரணம் காவலர்களே மந்திரியார் தற்போதுதான் ஆலய வழிபாடு முடித்துவிட்டு வந்திருக்கிறார். பயணக் களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். என்ன காரியமாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

காவலர், தாயே! மன்னர், மந்திரியாரை, கையோடு அழைத்து வர கட்டளையிட்டு இருக்கிறார். எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது.

பூரணம் மனமே இல்லாமல் கந்தவேலரை எழுப்பி காவலர்களோடு அனுப்பி வைத்தார்.

அரண்மனை சென்ற கந்தவேலர், அரசர் வருண தீரரை கண்டதும், "மன்னர் மன்னனுக்கு வணக்கங்கள்" என்று தனது வணக்கத்தை தெரிவித்தார்.

வருண தீரர், "வாருங்கள் மந்திரியாரே... நீங்கள் ஊருக்கு சென்ற ஏழு நாட்களும் எனக்கு ஏழு யுகம் போல் கடந்து சென்றது. என் தந்தையார், கடந்து சென்றது பௌர்ணமியில் என் கனவில் தோன்றினார். அவர் ஒரு மலைக்குன்றில் நின்று கொண்டு என்னை அழைத்துக் கொண்டிருந்தார்."
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பூரணம் கிழவிபொல்லாதவள் என்னமா பல்ட்டிஅடிக்கிறாள் 🤧🤧🤧🤧
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
பூரணம் கிழவிபொல்லாதவள் என்னமா பல்ட்டிஅடிக்கிறாள் 🤧🤧🤧🤧
நன்றிபாப்பா அந்த காலத்தவர்கள் அப்படி தான்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top