- Thread Author
- #1
1. சஞ்சனா
புவனா
மிதுனா
ரிஷ்வந்த்
.....
கோடம்பாக்கம்...
ஃபிலிம் சிட்டியில் கம்போசிங் அறையில்.. ஹே யாருப்பா அங்க பாடகி வந்தாச்சா இல்லையா.. இன்னும் சிறிது நேரத்தில் டைரக்டர் வந்துருவாரு, என்று சொல்லி கொண்டே இருக்க...
சார் மியூசிக் டைரக்டர் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுவார். டைரக்டர் பத்து நிமிடத்தில் வந்து விடுவார் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்... அந்த அசிஸ்டன்ட் டைரக்டரின் அசிஸ்டன்ட்.
டேய் நான் கேட்டது பாட்டு பாடுவதற்கு அந்த பொண்ணு வந்துடுச்சா.. இவங்க எல்லாரும் சொன்ன நேரத்திற்கு வந்து விடுவார்கள், அது எனக்கு நல்லா தெரியும். நான் கேட்டது இது வரை அந்த பாட்டு பாடுற பொண்ணு தான் டா வரல என்று கோபமாக கத்திக் கொண்டு இருந்தான்.
சார் அந்த பொண்ணு சீக்கிரமா வந்துடும் சார். நீங்க பதட்டப்படாதீங்க. அந்த பொண்ணு இப்ப தான் வளர்ந்து வருகிறாள். மிகவும் நல்லா பாட்டு பாடுறா சார் கண்டிப்பா வந்துருவா... அவளுக்கு அவ கெரியர் முக்கியம் இல்லையா என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...
அவளுக்காக ரொம்ப வாசிக்கிறியே... ஏன் உனக்கு ஏதும் தெரிந்த பொண்ணா என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அந்த அசிஸ்டன்ட் டைரக்டருக்கு போன் வர.. அதை எடுத்துப் பேசியவன் கோபத்தில் காச் மூச் என்று கத்த ஆரம்பித்தான்.
பிறகு அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ... ஓஓஓஓ.. ஓ காட் ஓகே மா... தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு இன்னைக்கு எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ணிடு என்று அசிஸ்டன்டிடம் சொல்லி விட்டு,.. ஹாஸ்பிடல் நோக்கி சென்றான்.
அங்கு தான் மியூசிக் டைரக்டரின் மகன் ஆக்சிடெண்டில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்க அவனை காப்பாற்றி ரத்தம் கொடுத்து விட்டு தான் போன் பண்ணி இருந்தா அந்தப் பாடகி. அதைக் கேட்டதும் தான் அசிஸ்டன்ட் டைரக்டர் அனைத்து ப்ரோக்ராமையும் கேன்சல் செய்து விட்டு மருத்துவமனைக்கு சென்றான்.
அந்த மியூசிக் டைரக்டர் அவளிடம்.. எனக்கு இருப்பது ஒரே மகன் .. நல்ல சமயத்தில் அவனை காப்பாற்றி அவனுக்கு ரத்தமும் கொடுத்து காப்பாற்றி இருக்கிறாய்.. இனி எனக்கு நீயும் ஒரு பெண் தான்... கண்டிப்பா எனக்கு எனது படங்களில் நீ விருப்பப்பட்டால் பாடல் பாடலாம் என்று சொல்லி விட்டு நன்றிகளை சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஐயோ சார் போதும் போதும்.. சக மனுசியாக தான் உங்கள் மகனுக்கு உதவி செய்தேன், அவ்வளவு தானே தவிர நீங்கள் என்னை பாராட்டணும் வாய்ப்பு கொடுக்கணும் என்று எல்லாம் எதுவும் இல்லை.. என்று சொல்லி கொண்டு இருந்தவள் மீது ஒரு வாளி தண்ணீர் ஊற்றப்பட...
ஐயோ அம்மா என்று அலறி அடித்து எழுந்து அமர்ந்தாள். அவள் தான் நம் நாயகி சஞ்சனா. நிறைய மியூசிக்கில் இன்ட்ரஸ்ட் உண்டு பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசையும் உண்டு ஆனால் அவளோ தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போல் தந்தையின் ஆசைக்காக ஃபேஷன் டிசைனிங் முடித்து விட்டு, சென்னையில் ஒரு பிரபலமான கம்பெனியில் ஆடை வடிவ அலங்கார பிரிவில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள். அவளோடு மிதுனா, புவனா என்று இரு தோழிகளும்.. சேர்ந்து தங்களின் சொந்த உழைப்பில் மூன்று படுக்கை அறைகளை கொண்ட ஒரு வீட்டை வாங்கி அதில் இருக்கிறார்கள்.
ஆனால் மூன்று பேரும் கட்டி பிடித்து உருள்வது என்னவோ ஒரே பெட்ரூமில் தான்.
சஞ்சனா அலறி அடித்து எழுந்து அமர.. தன் கையில் பக்கெட் உடன் இருந்த புவனாவை அடியே வெள்ளை குரங்கு, ஏன் டி இப்படி பண்ணினாய் என்று அவளை இழுத்து அவள் சுதாரிப்பதற்குள் ஈர பெட்டில் தள்ளி அவள் மீது பாய்ந்தாள்.
ஏய் தடிமாடு நான் ஒன்றும் உன் மீது தண்ணியை ஊற்றவில்லை... இந்த வாரம் என்னுடைய டர்னிங். அதற்காக நம் அனைவரின் துணியும் துவைத்து காய வைத்து விட்டு இப்போது தான் மாடியில் இருந்து வருகிறேன்.. இப்போ மறுபடியும் இந்த டிரஸையும் ஈரமாக்கி விட்டாய் என்று அவளை கட்டி பிடித்து இருவரும் உருண்டு கொண்டு இருக்க...
அப்பாடா இன்று நான் தப்பித்தேன் என்று மிதுனா அங்கு வந்து சேர்ந்தாள்.
பெட்டில் உருண்டு கொண்டு இருந்தவர்கள் தங்களுக்குள்ளே சைகை செய்து கொண்டு வினாடிக்குள் அவளையும் இழுத்து, பெட்டில் தள்ளி அவள் மீது இருவருமே ஏறி அமர ... அடியே ராட்சசிகளா இறங்கி தொலைங்கடி மூச்சு முட்டுது...
அம்மா தாயே யாராவது என்னை காப்பாற்றுங்கள் ... என்னை கொல்ல பார்க்கிறார்கள் என்று அவள் திக்கி திணறி கத்திக் கொண்டு இருந்தாள்.
சரியாக அந்த நேரம் இவர்களுக்கு சமையல் செய்து போடும் லட்சுமி அம்மா அங்க வர..
தெய்வமே இவர்கள் இருவரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று மிதுனா கத்தினாள்.
ஆனால் உள்ளே வந்து எட்டிப் பார்த்த லட்சுமி அம்மாவோ... அங்கு அப்படி ஒரு சம்பவம் நடப்பது போலவே காட்டிக் கொள்ளாமல்.. இரவு குடித்து விட்டு வைத்து இருந்த பால் டம்ளர்களையும் வாட்டர் பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு வெளியே போனார்.
அதைப் பார்த்த மிதுனா ஐயகோ.. வெட்கம்.. அவமானம்... எனக்கு வந்த சோதனையா என்று அவள் புலம்ப,
இப்போது மேல் இருந்து இருவரும் கீழே இறங்கி படுத்தவர்கள்.. அசிங்க பட்டால் மிதுனா என்று இருவரும் கலாய்த்து சிரித்தனர்.
அப்போது உள்ளே வரலாமா என்று கேட்டுக் கொண்டே ரிஷ்வந்த் உள்ளே வந்தான்.
டேய் எருமை.. போடா வெளியே கொஞ்ச நேரம் கழித்து வா என்று வெளியே தள்ளி விட்டார்கள் மூவரும் சேர்ந்து..
வெயில் வந்து விழுந்தவனோ நேரே கிச்சனுக்கு சென்று.. என்ன லட்சுமி அம்மா இன்னைக்கும் வழக்கம் போல மூணு ராட்சசிகளும் அபிஷேகம் பண்ணிக் கொண்டார்களா என்று கேட்டான்.
ஐயோ தம்பி எனக்கு இவர்கள் மூன்று பேரோடவும்.. மல்லுக்கட்ட முடியாது. இவர்களைப் பெற்ற புண்ணியவான்கள் அமைதியாக ஜாலியா அவங்க வீட்ல இருக்காங்க. இவங்க மூணு பேரோடையும் என்னால மல்லு கட்ட முடியல... என்று புலம்பிக் கொண்டு இருந்த லட்சுமி அம்மா அவர்கள் மூவரும் வெளியில் வருவதை பார்த்து விட்டு,
கண்ணுகளா .. வாங்க வாங்க கிளம்பிட்டீங்களா?.. என்று அவர்கள் மூவரையும் வரவேற்றதைப் பார்த்து...
லட்சுமி அம்மா உங்களுக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம் என்று அமைதியாக சொன்னான்.
அங்கு ரிஷ்வந்த் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டு, பெண்கள் முவரையும் சாப்பிட சொல்லி விட்டு தட்டில் அவர்கள் மூவருக்கும் பிடித்த உக்காரை வைத்து பரிமாறினார்.
ரிஷ்வந்த் பாவமாக நின்று கொண்டு இருந்தான்.
மூவருக்கும் பரிமாறிய பிறகு ரிஷ்வந்தை பார்த்து ஐயோ தம்பி எப்போ வந்தீங்க.. வாங்க வாங்க நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க.. உக்காரை, வெண் பொங்கல் சாம்பார், தேங்காய் சட்னி செய்து இருக்கேன் வாங்க என்று சொல்லி ரிஷ்வந்த்க்கும் தட்டை வைத்து பரிமாறினார்.
அவனும் இது வழமையான விஷயம் என்பது போல் அமைதியாக சிரித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு
இவ்வளவு நேரம் அங்கு ஒருவன் இருப்பது போல காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த மூன்று பெண்களுமே.. டேய் அஞ்சு நிமிஷம் டா. ரூம்க்கு போய்ட்டு வந்துடுறோம். அதற்குள் சமத்தாக போய் காரை ஷெட்டில் இருந்து எடுத்து வைப்பியாம் என்று சொல்லி விட்டு மூவருமே தங்களை அறையை நோக்கி சென்றார்கள்.
ரிஷ்வந்த் வெளியில் சென்றதுமே.. வெளியில் வந்த மூன்று பெண்களும், என்ன லக்ஷ்மி அம்மா இவன் இந்த அளவுக்கு நல்லவனா இருக்கான்...
நீங்க என்ன பண்றிங்க நாளையில் இருந்து இன்னும் கொஞ்சம் டோஸ் அதிகமா போட்டு எங்களை திட்டுறீங்க என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, மறந்து வைத்து விட்டுப் போன தன் மொபைல் போனை எடுப்பதற்காக உள்ளே வந்தவனும் இவர்கள் உரையாடலில் கடைசி பகுதியை கேட்டு விட்டு,...
எதே லூசா டி நீங்க... மூவரும் யாராவது திட்டை கேட்டு வாங்குவார்களா.. விசித்திரமான பிறவிகள் தான் நீங்கள் மூவரும் என்று சொல்லி விட்டு, வேறு எதையும் பேசாமல் கருமமே கண்ணாக தன் மொபைல் ஃபோனை எடுத்துக் கொண்டு, சரி சீக்கிரமாக வாருங்கள் இன்று யாரோ புது சேர்மன் வரப்போகிறாரார் என்று நேற்று சொல்லி இருக்கிறார்கள்.
லேட்டா போன ஏதாவது பிரச்சனையாகி விடப்போகிறது என்று சொல்லிக் கொண்டே காரை எடுக்கப் போனான் ரிஷிவந்த்.
இப்போது சஞ்சனா, புவனா, மிதுனா மட்டும் இல்லாமல் லட்சுமி அம்மா உள்பட நான்கு பேருமே.. யாருடா இவன் என்பது போல் பார்த்து விட்டு சரி லட்சுமி மா கிளம்புகிறோம் என்று மூன்று பேரும் விடை பெற்று சென்றார்கள்.
நால்வரும் சேர்ந்து காரில் வீட்டை விட்டு வெளியில் வர, வழக்கம் போல் எதிர் வீட்டில் இருந்த கிழவி.. போராளுங்க பாரு மூணு மூதேவிங்க.. எங்க காலத்தில் கட்டினவனை கூட தழைச்சம் பிள்ளை பிறந்ததற்கு பிறகு தான் முழுதாக நிமிர்ந்து பார்ப்போம்.
ஆனா இந்த காலத்துல ஒரு ஆம்பள பிள்ளை பின்னாடி மூணு பொட்டச்சிங்க போறாளுங்க.. என்று திட்டிக் கொண்டு இருந்தது.
இதுவும் அன்றாடம் நடக்கும் காட்சி என்பது போல் அவர்கள் அந்தக் கிழவியைப் பார்த்து டாட்டா காட்டி கொண்டே சென்றார்கள்.
ரிஷி ஏன் டா நம்ம கம்பெனிய பாஸ் விற்றார். ரொம்ப நல்ல மனுஷன் டா. எதற்காக இப்படி பண்ணினார் என்று புவனா கேட்டாள்.
ரொம்ப நல்லவள் போல் பேசாதடி.... பாவம் அவரும் உன்னிடம் ஆறு மாசமாக தன் காதலை சொன்னார் நீ தான் கண்டுக்கவே இல்லை.. அது தான் அவர் பேரனோடு லண்டனில் செட்டிலாக கிளம்பி விட்டார். நீ மட்டும் ஓகே சொல்லி இருந்தால் இந்நேரம் நீயும் லண்டன் சென்று இருக்கலாம். ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்ட என்று சிரிக்காமல் சொன்னான்.
மற்ற இரண்டு பெண்களும் நீ சொல்றதும் சரி தான் ரிஷி.. புவனா கொஞ்சம் கூட மனசு இறங்கி வரவில்லை டா என்று சொன்னார்கள்.
ரிஷி சொல்லும் போதே காண்டாக ஆனவள்... இப்போது தன்னோடு இருந்த இரண்டு செல்ல குட்டி சாத்தான்களும் அதை கூறவும்... கடுப்பானவள்...
என்ன செய்யப் போகிறாள்? அதை அடுத்த பதிவில் சொல்லட்டுமா....
சொல்லவா?????.....
இணைந்திருங்கள் சொல்லவா??? வேண்டாமா???........